மழை, வெள்ளம் – சென்னை மக்கள் திருப்திப்பட்டுக் கொள்ள சில செய்திகள்….!!!

.

.

மழை, வெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்டுள்ள தமிழக மக்கள், இயற்கை தங்களை மட்டும் மிக மோசமாக வஞ்சித்து
விட்டதாக எண்ணி வருந்துகிறார்கள்….

எதிர்க்கட்சிகளோ – அத்தனைக்கும் காரணம் அரசின் அலட்சியம்,
முன்னெச்சரிக்கையின்மை, சொரணை கெட்ட தன்மை etc.etc.
என்று சொல்லி மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பில் எண்ணை, நெய், கெரசின், டீசல், பெட்ரோல்
எல்லாவற்றையும் ஊற்றி மேலும் வளர்க்கின்றனர்….!!!

நிவாரணங்கள், உதவிகள், மாற்று ஏற்பாடுகள் – என்று
காலப்போக்கில் மக்களின் மனக்காயங்களை ஆற்றும் செயல்கள்
நடக்கும். ஆனால் – இப்போதைக்கு –

ஏற்பட்ட துன்பங்கள் தங்களுக்கு மட்டும் தான் என்று
எண்ணி வருந்தும் மக்கள் – தாங்கள் தனித்து விடப்படவில்லை…
இன்னும் நிறைய பேருக்கு இதே கதி தான் என்று தெரிய வந்தால் –
மனதில் கொஞ்சம் ஆறுதல் பிறக்கும் அல்லவா …? 🙂

மக்களின் மனத்துயரைக் குறைக்க பெரிதும் உதவும்
கீழ்க்காணும் செய்திகள் —

சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் வெள்ளம் வந்து
தாக்கிய மாதிரியே, பிரிட்டனிலும் டிசம்பர் 5-ந்தேதி
ஒரே நாளில் 341.4 மி.மீ. மழை பெய்திருக்கிறது.
புயல், மழையின் விளைவாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு
இங்கிலாந்து பகுதிகள் மிகுதியான இழப்புகளை
சந்தித்திருக்கின்றன.

பாதிப்பு குறித்த புகைப்படங்கள் –

eng.flood-4

eng.flood-5

eng.flood-6

eng.flood-7

eng.flood-8

eng.flood-9

eng.flood-10

eng.flood-12

eng.flood-14

eng.flood-15

eng.flood-16

engl.flood-4

இந்த மழை, வெள்ளம் பற்றியும், அதனைத் தொடர்ந்து
அவர்கள் எத்தகைய நிவாரணங்களை மேற்கொண்டார்கள்,
என்னென்ன விதமான குறைகள், புகார்கள் சொல்லப்பட்டன
என்பதைப் பற்றியெல்லாம் விவரமாக வடித்திருக்கிறார் –
துக்ளக் வசந்தன் பெருமாள். அவரது கட்டுரையை
நமது நண்பர்களின் பார்வைக்காக – கீழே -கடைசியில் –
தந்திருக்கிறேன். அதையும் படியுங்களேன் …
ஒரு ஒப்பீடு கிடைக்கும்…!!!

இதில் வேடிக்கை என்னவென்றால் –
இங்கிலாந்தாக இருந்தாலும் – சென்னையில் கூறப்படும்
அதே விதமான புகார்கள் அங்கும் கூறப்பட்டிருக்கின்றன.
அவஸ்தைகளும், நிவாரணங்களும் கூட ….

மின்சாரத்தடை,
மின் நிலைய சப்-ஸ்டேஷனுக்குள் புகுந்த வெள்ளம்,
பல்கலைக்கழக கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தது,
தடுப்பணைகள் இருந்தும்-
தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது,
எதிர்பார்த்ததைவிட கடுமையான வெள்ளம் என்கிற காரணம்….(!!!),
வெள்ள பாதுகாப்பு வசதிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை….
(இங்கே -ஓடைகள், ஏரிகள் தூர் வாரப்படவில்லை ….! ),
மழை வெள்ளம் தேங்கியதால் -ரயில் போக்குவரத்து ரத்து,
வெள்ள அபாயம் உண்டு என்று கருதப்பட்ட இடங்களில் –
குடியிருப்புகளை கட்ட அனுமதித்தது ….(!!!)

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும்
பிரிட்டிஷ் அரசால் தலா 5000 பவுண்ட் நிவாரண உதவியும் அளிக்கப்பட்டிருப்பது….!!!

என்ன – அங்கே மக்கள் கூட்டம் பரவலாக இருப்பதால் –
பாதிப்பு அதிகம் வெளியில் தெரியவில்லை…. இங்கு
மிகக்குறுகிய நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர்
மாட்டிக் கொண்டோம். அவஸ்தை பயங்கரமாகிப் போனது.

இன்னொன்று – அவர்கள் இருப்பது குளிர் பிரதேசத்தில்…
மக்கள் வெள்ளையாக இருக்கிறார்கள். ஊரும் வெள்ளையாக –
இருக்கிறது. எனவே – சேறு, சகதி, சாக்கடை effects
அதிகம் வெளித்தெரியவில்லை… 🙂

நாம் உஷ்ணப்பிரதேசம்… கருப்பு தான் நமக்குபிடிச்ச கலரு
என்று கலராகவே இருக்கிறோம். மண்ணும் கருப்பு –
ஊரே கருப்பு….. எனவே, சாக்கடை, மழைவெள்ளம் நமக்கு
பயமுருத்துகிற கலரில் ஓடுகிறது… அவ்வளவு தான்
வித்தியாசம்….!!! மற்றபடி நாம் எந்தவிதத்தில் தாழ்வு
மனப்பான்மை கொள்ளவேண்டிய தேவை இல்லை…

எதிர்காலத்தைப் பற்றிய அச்சமோ, கவலையோ இன்றி
துணிவுடன் நிகழ்காலத்தை எதிர்கொள்வோம். இதையும்
கடந்து செல்வோம். எதிர்காலத்திலாவது இயற்கையுடன்
இணைந்து வாழக் கற்றுக் கொள்வோம்.

” இடுக்கண் வருங்கால் நகுக ” என்பதை நமக்கு நாமே
நினைவுபடுத்திக் கொள்ளவே, மனதை லேசாக்கிக்
கொள்ளவே இந்த இடுகை….!!!

இதைப் பார்த்த பிறகு, படித்த பிறகு – உங்களுக்கு
கொஞ்சமாவது நிம்மதி பிறந்ததா இல்லையா என்பதை
அவசியம் பின்னூட்டங்கள் மூலம் தெரியப்படுத்துங்கள்.

கீழே இருப்பது திரு.வசந்தன் பெருமாளின் கட்டுரை –

british flood-1

british flood-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

37 Responses to மழை, வெள்ளம் – சென்னை மக்கள் திருப்திப்பட்டுக் கொள்ள சில செய்திகள்….!!!

 1. Chandrasekaran vg சொல்கிறார்:

  உங்கள் நோக்கம் பாதிக்கப்பட்டோரை ஆற்றஉப்படுத்துவதாக இருக்கலாம் ஆனால் மறைமுகமாக பலனடைய போகுபவர்கள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே இனி அவர்களது செயல்பாடுகளை விமர்சிப்பவர்களின் வாயை டெஸ்ட்மான்ட் வெள்ள பாதிப்பினை கொண்டு சமாளித்து விடுவார்கள் ஆனானப்பட்ட லண்டனே மிதக்குதாமா நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று சப்பைகட்டு கட்ட அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள் இனி லண்டன் நகர மக்களே மறந்தாலும் நமது கழக கண்மனிகளும் உடன்பிறப்புகளும் இன்ன பிற உதிரிகளும் இன்னும் ஒரு நூறு வருடங்களுக்கு பேசி திரிவார்கள் அதிகாரிகளும் ஆட்சியாளரும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து வரும் பொருட்டு இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்வார்கள் அவர்கள் வரும்வரை நாமும் அடையாற்றையும் கூவத்தையும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்போம் வாழ்க சனநாயகம்.

  • today.and.me சொல்கிறார்:

   //நாமும் அடையாற்றையும் கூவத்தையும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்போம்/ ///

   யார் கூறு போட்டது என்று கொஞ்சம் கூறு போடமுடியுமா?

   • today.and.me சொல்கிறார்:

    //அதிகாரிகளும்//

    உண்மையில் அதிகாரிகள் பயனடையலாம்… அதற்குத் தகுதியானவர்கள்தாம்.

    உதிரிக்கட்சிகளின் தொழிலாளர் சங்க உறுப்பினர்களைத் தவிர…
    வெள்ள இடர்ப்பாட்டு காலத்தில் வேண்டுமென்றே பல உறுப்பினர்கள் வேலைக்கு வரவில்லை…. கவனிக்கவும்… வெள்ளத்தில் பாதிக்கப்படாமலும், வேண்டுமென்று வராதவர்களையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    மற்ற பணியாளர்கள் அனைவருமே
    அரசு இயந்திரம் என்ற சொல்லை உண்மை‘யாக்கி
    இயந்திரம் போல உழைத்தார்கள்

    அவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

 2. Sampathkumar.K. சொல்கிறார்:

  K.M.Sir,

  This is a master piece article.
  I am surprised at your untired efforts to get our people
  come out of their grief and fear.
  No one from the Media has so far taken any efforts
  towards this direction.
  I am proud of being a Regular Reader of this Blog.
  I wish God gives you enough strength and health
  to continue in your efforts. Thanks.

 3. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  நான் வெள்ளத்தில் நேரடிப் பாதிப்புக்கு இழப்புக்கு உட்பட்டிருந்தாலும்கூட
  என் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடிந்தால் போதும், மீதி எல்ல்ல்ல்ல்ல்ல்லாவற்றையும் மீதி வாழ்நாளில் சம்பாதித்துக்கொள்ள முடியும் என்ற மனத்திண்மை எனக்கு உண்டு.

  அதனாலேதான் 2004 சுனாமி பேரிழப்பின்போது கடற்கரையிலிருந்து தப்பிப்பிழைத்து 2015 வரை இருந்திருக்கிறேன்…..

  ஆகவே, என்னைப்போல
  பாதிக்கப்பட்ட – நேரிடையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

  இப்போதைய மழைவெள்ளம் மட்டுமல்ல சுனாமியாக இருந்தாலும் சரிதான். உதவிசெய்யவேண்டியது

  தனியார்நிறுவனங்களிலிருந்து சிறுதுளி உதவியையும் பணமாகவோ பொருளாகவோ சேவையாகவோ பெற்று மக்களுக்கு பகிர்ந்துகொண்டிருக்கும் அதிமுக அரசோ அல்லது

  சுனாமிக் காலத்தில் தனக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்க மத்தியஅரசின் பிரதமர் நிதிக்கு தானம் கொடுத்த திமுக அரசோ அல்லது

  மேன்ஹோலை தம்கட்டி தூக்கி மழைநீரை வடியவிடும் போலிஸ்காரர்முதல் குப்பை அள்ளுவதற்காக வீதிவீதியாக இறங்கி மனிதமலம் முதற்கொணடு அப்புறப்படுத்தும் தன்னார்வ சுகாதாரப் பணியாளர் கொண்ட அரசு இயந்திரமோ அல்லது

  யாரிடமோ இருந்து நன்கொடை பெற்று இருபது வீடுகளுக்கு ப்ரெட் பாக்கெட் வாட்டர் பாட்டில் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளும் தன்னார்வ அமைப்புகளோ அல்லது

  தங்கள் வாசகர்களிடம் இருந்து கறந்து தாம் அளித்தபோன்ற இலச்சினையுடன் தமக்கு சாதகமாகப்பேசும் மக்களிடம் பிச்சைபோட்டு வாங்கித் தின்ற வாய் காயுமுன் மைக்கை வாயுக்குள்ளே நீட்டி உண்ட உப்புக்கு இரண்டகம் பேசா எம் மக்களை திசைதிருப்பும் ஊடகங்களோ அல்லது

  அவன் கோடி கொடுத்தானா? இவன் லட்சம் கொடுத்தானா? இதுத சரிதானா? என்று வெற்று வாயால் வெளிவரப்போகும் தங்கள் படங்களுக்கு விளம்பரம் தேடும் திரைப்பிரபலங்களோ

  செய்கிற
  உதவிகள் எல்லாம்
  உண்மையில் கிடைத்தாலும்
  கிடைப்பது போன்றவை தான்.

  நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுவோம்.
  ஆமாம்.
  நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுவோம்.
  என்ன ?
  ஒரு மாதம் ..
  ஒரேயொரு மாதம்
  நாட்டில் இருக்கும் எல்லா ஊடகங்கள் – அச்சு – ரேடியோ – டிவி – சினிமா – எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டால் போதும்..

  அவைகள்தாம்
  தங்கள் பரபரப்புக்காக
  தங்கள் இருப்புக்காக,
  தாங்கள் உயிர்வாழ்வதற்காக
  எங்களை தினந்தினம் சாகடிக்கின்றன.
  எஙகளை வறுமையிலேயே வீழ்த்துகின்றன.

  எம்மக்கள் உழைக்கத் தெரிந்தவர்கள்
  பிழைத்துக் கொள்வார்கள்.

  • ரிஷி சொல்கிறார்:

   //தனியார்நிறுவனங்களிலிருந்து சிறுதுளி உதவியையும் பணமாகவோ பொருளாகவோ சேவையாகவோ பெற்று மக்களுக்கு பகிர்ந்துகொண்டிருக்கும் அதிமுக அரசோ அல்லது

   சுனாமிக் காலத்தில் தனக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்க மத்தியஅரசின் பிரதமர் நிதிக்கு தானம் கொடுத்த திமுக அரசோ அல்லது//

   🙂 🙂

   • today.and.me சொல்கிறார்:

    பின்னே…. அவதிப்பட்டவய்ங்க நாங்க…

    சொல்லவேணுமானா….எல்லாத்தையும்தான் சொல்லவேணும்.

    வேணுமானால் ஆப்பர்சூனிட்டியே இல்லாம திமுக பொருளாளர் கோடிகோடியா செலவுபண்ணி நடத்துன நமக்கு நாமே ட்ராமாவ
    கிடைச்ச வெள்ளம்ங்க்ற ஒரே ஆப்பர்சூனிட்டியில ஒரே ஒரு கோடிய வெள்ளநிவாரண நிதியாகக் குடுத்து ஆஃப் பண்ண திமுகதலைவரின் சாணக்யத்தணத்தையும் சொல்லிடுவோம்..

    அப்புடியே வெள்ளநிவாரணம் கொடுக்கவேண்டிய நன்கொடைகளையெல்லாம் அறிவாலயத்துக்கு அனுப்புங்கங்னு சொல்லி தக்காளியா போட்டோ எடுத்துப் போட்டாங்களே … அதையும் சொல்லிடுவோம்.

    அடுப்பும் உடுப்பும் இல்லாம அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும்போது ஒரே நாள்ள அழுகிபோற தக்காளிய சமைச்சி சாப்பிடுங்கப்பா, அதையும் போட்டோவிலதான் காட்டுவோம்ன்னு காட்டு காட்டுன்னு காட்டுனாங்களே தண்ணி அதையும் சொல்லிடுவோம்.

    டிவிஎஸ் ஹோண்டா மாருதி கம்பெனி டொனேஷன் குடுத்தா அதை மட்டும் வாங்கி நிவாரண நிதியில சேத்துட்டு சும்மாருக்காம,,, அவங்கள்ட்டயே நீங்க ஜனங்களுக்கு என்ன செய்யமுடியும்… பழுதுபாக்கும் முகாம் நடத்துறீங்களான்னு கேட்டு ஆர்கனைஸ் பண்ணுனதையும் சொல்லவேணும்….

    🙂 😀

    • ரிஷி சொல்கிறார்:

     அதிமுகவினர், திமுகவினர் எல்லாருமே சேர்ந்து நடத்துங்க நடத்துங்க..
     மீ எஸ்கேப்ப்ப் 😉 😀

     • today.and.me சொல்கிறார்:

      உங்களுக்கெல்லாம் தண்ணியே வரலையா ஜி..

     • today.and.me சொல்கிறார்:

      வருண பகவான் அதிமுகவினர் திமுகவினர் இவர்கள் இருக்கும் இடமாகப் பார்த்து ம‘ட்டும் பெய்யவில்லை..

      என்னைப்போன்ற மக்கள் வாழுமிடங்களில் கொட்டித்தீர்த்துவிட்டான்
      என்ன செய்ய?

      நாங்கள் எதையும் சமாளிப்போம்..சென்னை மக்கள்.

     • ரிஷி சொல்கிறார்:

      எங்க பகுதி அவ்வளவாக பாதிக்கவில்லை. சேலையூர் ஏரியா. இரு சிறு ஏரிக்களுக்கு இடையில் இருக்கும் பகுதியில் இருந்தபோதிலும் பாதிப்பில்லை.

    • today.and.me சொல்கிறார்:

     //எங்க பகுதி அவ்வளவாக பாதிக்கவில்லை. சேலையூர் ஏரியா. இரு சிறு ஏரிக்களுக்கு இடையில் இருக்கும் பகுதியில் இருந்தபோதிலும் பாதிப்பில்லை.//

     நல்ல வேளை
     நீங்கள் அதிமுகவா இருந்திருந்தா ஏரித் தண்ணீரில் மூழ்கிப்போயிருப்பீர்கள்,,தினமும் பத்திரிகையாளர்களும் டிவிசேனல்களும் வந்து உங்கள் தொண்டைக்குள் மைக்கை நுழைத்திருப்பார்கள்… தப்பித்தீர்கள்.

     திமுகவா இருந்திருந்திருந்தீர்களானால்….
     அறிவாலயத்துக்கு ஹெல்ப்லைனைப் போட்டுப்போட்டுப் பார்த்து டவர்கிடைக்காமல் கஷ்டப்பட்டிருப்பீர்கள்…

     நீங்கள் அதிமுகவும் இல்லை திமுகவும் இல்லை
     நன்றாகப் போயிற்று 🙂

     சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரத்திற்கு நீங்கள் குடியிருந்த ஏரியில் ஐந்துநாள் படகு சவாரி….. என்ஜாய்… 😀

     • today.and.me சொல்கிறார்:

      //மீ எஸ்கேப்ப்ப் 😉 😀 //
      அப்புடியெல்லாம் விடமாட்டோம்.
      ஏரிக்குள்ள அதுவும் ரெண்டு ஏரிக்கு நடுவில எப்புடி ஜி வீடு கட்டுனீங்க?
      எந்த ஆட்சியில பெர்மிஷன் குடுத்தாங்க.
      எப்படி வாங்குனிங்க

      அந்த சீக்ரெட்ட கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாப் பொழுது போகும். 😀

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப டுடேஅண்ட்மீ,

  நீங்கள் சொல்வது உண்மையே…
  மக்களை தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து எழ விடாமல்
  தடுப்பது இந்த வெட்டி ஊடகங்களும், சில எதிர்க்கட்சித்
  தலைவர்களும் தான்.

  இந்த பிரச்சினைகளை ஊதி வளர்த்தால் தான்
  அவர்களுக்கு வியாபாரம்…பொழுதுபோக்கு, எதிர்காலம் எல்லாம்.

  நடக்கட்டும்…
  திமுக கூட்டம் ஒன்று வதந்தியை பரப்புவதையே
  வேலையாகக் கொண்டு திரிகிறது.

  இப்போதே பலர் இதை புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள்.
  இவர்கள் இதே பஜனையை பாடிக் கொண்டிருந்தால்
  மிச்சம் பேரும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Ns raman சொல்கிறார்:

   Really very efficient state administration in arranging stickers in very short time inspite of floods.

   Public ready to kick out this “sticker” government.

   • today.and.me சொல்கிறார்:

    உண்மையாக என் மனசாட்சியைத் தொட்டு சொல்லுகிறேன்.
    ஐந்து நாட்களாக எங்களுக்கு வந்த எந்த வெள்ளநிவாரணப் பொருளிலும் எந்தவிதமான ஸ்டிக்கரும் இல்லை… அரசுத் தரப்பிலிருந்தும் சரி,,,, தொண்டு நிருவனங்களிடந்தும் சரி…

    இங்கே ஸ்டிக்கர் ஸ்டிக்கர் என்று கூறுபவர்கள்,,, பரவலாக எல்லாஇடங்களிலும் பகிரப்படும் ஆதாரத்தைத் தவிர…….. தவிர……. வேறு ஏதேனும் உண்டா? நான் நேரிடைப் பயனாளி என்ற முறையில் கேட்கிறேன்…

    நண்பர் ராமன் தங்களிடம் இருந்தால்
    வேறு ஏதேனும் இருந்தால் இங்கே பகிரவும்…

    • today.and.me சொல்கிறார்:

     இதைத்தான் சொல்லுகிறேன்,,
     விபச்சார ஊடகப் பணி.. என்று

     எந்த ஊடகமாவது தவித்த மக்களுக்கு உதவி செய்யப்போனார்களா?

     அவன் தண்ணீரில் தத்தளித்துக்கொணடு இருநதபோது போட்டோ எடுத்துப்போட்டு விற்பனையை அதிகரித்துக்கொண்டிருந்தவர்கள் நீங்கள்…

     அவன் சாப்பாட்டுக்கு யாராவது ப்ரெட் கொண்டுவருவானா என்று பார்த்துக்கொண்டு இருந்தபோது…. அவன் வாய்க்குள் மைக்கைத் திணித்து உங்க வார்டு கவுன்சிலர் ப்ரெட் கொண்டுவந்து தரலையே ஏன்? என்று அவன் வயிறில் எண்ணைய் வார்த்த பாவிகள் நீங்கள்

     அவன் உடுப்பெல்லாம் நனைந்து யாராவது வந்து காய்ந்த உடுப்பு கொடுத்துவிடுவார்களா என்று இருந்தபோது அவனை இன்னும் மழையில் இழுத்துவிட்டு…….. காமராவை குடைக்குள் பிடித்து மைக்கை அவன் வாய்க்குள் திணித்த கயவர்கள் நீங்கள்

     நியூஸ் 7 சேனல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது என்று சொல்லி காமராவை பாலத்தின் அடியில் காட்டும்போது அங்கே உள்ள மக்கள் எந்தவித பரபரப்புமின்றி உங்களுக்கு பேட்டிகொண்டிருந்தபோது…….

     உள்ளம் பதைக்காமல்
     இவர்களை காக்க நம்மிடம் உள்ள பொறுப்பை சரிவரசெய்யவேண்டுமே என்கிற மனிதாபிமான எண்ணம் கூட இல்லாமல்
     மானாடவும் மார்பாடவும் போட்டுக்கொண்டு
     சீரியல்களில் எம்மக்களை சிதைத்தவர்கள் நீங்கள்…..

     தொலைந்துபோங்கள் மீடியாக்களே…
     ஊடகக் கயவர்களே…..

     இதையும் எவனாவது கேள்விகேட்டால்
     பத்திரிகை சுதந்திரம் என்று
     பந்திவைப்பீர்கள்
     எவளுக்கோ….

   • today.and.me சொல்கிறார்:

    உண்மையிலேயே ஜெயலலிதா என்னும் பெண் முதலமைச்சரா?
    என்பதுதான் உங்கள் பிரச்சினை என்றால்

    அதற்கும்தான் சொல்கிறேன்..
    குறைந்த காலத்தில் ஸ்டிக்கர்களோடு கூடிய நிவாரணப்பணிகளை திறம்படச் செய்யவும் முடிந்ததே….
    efficient government தான்…

    PRESSTITUTION இல்லையே…
    திருப்திப்பட்டுக்கொள்கிறோம்…

    எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்ற அளவில்தான் நாங்கள் இருக்கிறோம்….

    ஆனால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்கும் Mr. NS Raman….
    மோடிஜியின் உருவபொம்மை எரிப்பு மாதிரி ஆகிவிடப்போகிறது உங்கள் கதை…

    எதற்கும்
    ஊடகங்கள் ஜாக்கிரதை….

    • today.and.me சொல்கிறார்:

     ஆமாம்……….. நினைவுக்கு வந்துவிட்டது….
     தினமணியும் ஒரு ஊடகம்தானே….

     மழைவெள்ளத்தின்போது அது மக்களுக்கு என்ன செய்தது?
     அல்லது வெள்ள அபாய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டதா?
     அல்லது வெள்ளத்தில் தவித்த மக்களின் வாய்க்கு தண்ணி ஏதாவது தந்ததா?
     அல்லது வாய்க்கரிசி போட்டதா?
     அல்லது இது எதையுமே செய்யாமல்
     மற்றவர்கள் உதவிய பொருட்களின்மேல் ஸ்டிக்கர் இருந்ததா? என்று போட்டோ எடுத்துககொண்டிருந்ததா?
     அல்லது அவர்களது ஆங்கிலப்பத்திரிகையை கேடிசகோதரர்களுக்கு விற்றமாதிரி இதுவும் விலைபோய்விட்டதா? விளக்குவாரா?
     நண்பர் என்எஸ் ராமன்

   • Sampathkumar.K. சொல்கிறார்:

    Ns raman,

    யார் நீங்கள் இதைச்சொல்ல ?
    நீங்கள் தான் “பப்ளிக்” கா ?
    நீங்கள் சொல்லி விட்டால் ஆகி விடுமா ?
    நானும் தான் ” பப்ளிக் “.
    நான் சொல்கிறேன் –
    “பப்ளிக் தயாராக இருக்கிறார்கள் – தின்ன சோறு இல்லாமல்,
    ஒண்ட இடமில்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும்
    மனிதனிடம் கூட ஓட்டு வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கும்
    இந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு “மரண அடி” கொடுக்க .

    வெள்ளம் வரக்காரணம் யார் ?
    ஏரிக்கரையை எல்லாம் பட்டா போட்டு விற்ற
    கலைஞரின் அடிவருடிகள் தானே ?
    இன்னமும் திருநின்றவூரில் தண்ணீர் நிற்க காரணம் யார் ?
    93 வயதில் முதல்வராக காத்திருக்கும் பெருமகனார் தானே ?
    போங்க சார் போய் வேறு இடம் பாருங்க.

    • Sampathkumar.K. சொல்கிறார்:

     Ns raman,

     திரு.today.and.me சொல்வது போல்
     ஒரு பெண் முதல் அமைச்சராக இருக்கிறாரே
     என்கிற ஈகோ தானே உங்களுக்கெல்லாம் ?

     வீட்டில் பெண்டாட்டிக்கு தான் மரியாதை கொடுக்க மாட்டீர்கள்.
     “அம்மா”வை கூட பெண் என்பதால் மதிக்க மாட்டீர்களோ ?
     “சொந்த மகளை” கூட பெண் என்பதால் மதிக்க மாட்டீர்களோ ?
     உங்கள் “உடன் பிறந்த சகோதரியை”யும் பெண் என்றால்
     ஏற்றுக் கொள்ள மாட்டீர்களோ ?
     சே – என்ன ஜென்மம் இதெல்லாம் ?
     உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் மனைவியிடம் காட்டுங்கள்
     பார்க்கலாம் நீங்கள் இங்கு எழுதியதையும் உங்களுக்கு கிடைக்கும்
     பதில் மரியாதை யையும்;

     • Ns raman சொல்கிறார்:

      Mr Sampath
      The question is not about JJ is a male or female. It is about governance. Why unnecessary questions about me. No need for your lessons about respecting others. For your info my entire family including 80+ old parents reading this having the same opinion about this government. So pl reply only to arguments.

 5. Sampathkumar.K. சொல்கிறார்:

  Ns raman,

  கே.எம்.சார் ஊர் உலகத்தில் நடக்கும் உண்மையை எங்கிருந்தெல்லாமோ
  தேடி எடுத்து வந்து இங்கே போடுவதால் மக்கள் மனம் மாறி விடுவார்களோ
  என்று எரிகிறதொ ?
  பொறுக்கி விகடன், போக்கிரி விகடன், தினமலர், நக்கீரன் ஒவ்வொன்றிலும்
  எவ்வளவு புளுகுகளை அவிழித்து விடுகிறீர்கள். பொய்களுக்கு வாழ்வு
  கொஞ்ச காலம் தான். உண்மை தான் என்றும் நிலைத்து நிற்கும்.
  நீங்கள் உண்மையான மனிதராக இருந்தால் உங்கள் மனைவியிடம் இந்த வலைத்தளத்தை காட்டி, இந்த பின்னூட்டங்களையும் பார்க்கச் சொல்லி பின்னர் அவர் என்ன சொல்கிறார் என்பதை மறைக்காமல் இங்கே எழுதுங்கள் பார்க்கலாம்.
  உங்களுக்கு ஒரு பெண் தாயாக இருக்க, ஒரு பெண் மனைவியாக இருக்க, ஒரு பெண் மகளாக இருக்க, ஒரு பெண் சகோதரியாக இருக்க அத்தனையையும் மறந்து விட்டு பெண்களைக்கண்டு பொறுக்காமல் இப்படி ஈகோவால் அலைவதேன் ?

 6. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,
  பதிவை வேண்டுமென்றால் ஆதரிக்கலாம்.
  இல்லையென்றால் ஆதாரத்துடன் மறுக்கலாம்

  பதிவுக்கு சம்பந்தமில்லாமல் எதையாவது BACK TO BACK கமெண்ட்டும் பைத்தியக்கார உளறல்களுக்கு இங்கே இடம் தேவையா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   திரு.ஸ்டாலின் அவர்களின் தொண்டர் ஒருவர் விடாப்பிடியாக
   இதுவரை தொடர்ந்து 13 வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு
   e-mail ID- க்களை பயன்படுத்தி இங்கு உளறல் வார்த்தைகளில்
   பின்னூட்டம் போட்டு வருகிறார். அவர் ஒரு சதம் போலி
   e-mail ID-க்களில் உலா வந்தாலும் வரட்டும். அதை சட்டை
   செய்யாமல் விடுவதே சரியான வழி ….!!!

   let’s just ignore…

   ( உரிய சமயத்தில் அத்தனை e-mail ID -க்களையும்
   வெளியிட்டு, நடவடிக்கை எடுப்போம்.)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Ns raman சொல்கிறார்:

   Mr T&T
   Only you want supporting comments for Mr KM, pl ask Mr KM to put in his blog so I will stop my feed backs. If you feels this government done good job it is up to you. You cannot expect everyone to support your views. I am not a blind supporter of Modi or any one. But you should have a courage to fight aganist attracity of ADMK government rather than comparing with DMK every time.
   I do not know what special proof you guys need for “stickers” and if you are not received any such one doesn’t mean it was not happened.

 7. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களே,

  ஊடகங்களின் நிலையையும், ஊளையிடும் நரிகளின் நிலையையும், ஊதாரிகளின் நிலையும் மறந்துவிடாதீர்கள்………….

  பார்த்துவைத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஓரிரு நாட்களில் தேவைப்படும்.

  தட்….படுத்தே விட்டானைய்யா …….. மொமண்ட்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   அற்புதமான வீடியோ… எப்படி பிடித்தீர்கள் இதை …?

   நேற்று – திமுக, அதிமுக இரண்டையும் ஒழித்துக் கட்ட
   வேண்டுமென்று
   விஜய்காந்த் சொன்ன பிறகு கூட –
   இன்று மாலை கலைஞர் “விஜய்காந்த் திமுக கூட்டணி”க்கு
   வரவேண்டுமென்று மீண்டும் விருப்பத்தை புதிப்பித்திருக்கிறார்….

   வீடியோவில், வடிவேலு கேப்டனை வாரும்போதெல்லாம் –
   அட்டகாசமாக அண்ணன் அழகிரி, தளபதி ஸ்டாலின் உட்பட
   அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்களே..

   விஜய்காந்த் இந்த வீடியோவை பார்க்காமலா இருந்திருப்பார்…?

   இன்று காலை தான் வைகோ, திருமா உட்பட ம.ந.கூட்டணி
   போய் விஜய்காந்த்தை கூட்டணிக்கு அழைத்து விட்டு வந்திருக்கிறது…

   திருமா-வும் அமர்க்களமாகச் சிரித்திருக்கிறார் – வீடியோவில்…!!!

   அரசியலில் வெட்கமாவது, மானமாவது என்கிறீர்களா …?
   அதுவும் சரி தான்..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ரிஷி சொல்கிறார்:

    சென்ற சட்ட மன்ற தேர்தலில் திமுக மரண அடி வாங்குனதுக்கு இந்த வடிவேலுவும் ஒரு காரணம். அவரது பிரச்சாரம் ஓவர்டோஸ் ஆகி சேம் சைட் கோலாகிவிட்டது. விஜயகாந்த் ஜெ. விரும்பினால் இன்னொருமுறை அவர்கூட கூட்டணி வைத்தாலும் வைப்பாரே ஒழிய திமுகவுடன் சேருவதற்கு வாய்ப்பேயில்லை.

   • today.and.me சொல்கிறார்:

    கா.மைஜி,

    இன்னும் இந்த ‘கேப்டனை’ விடமாட்டீர்களா?

    கலைஞர் பரவாயில்லை, கலைத்துறையில் எதையோ செய்து இருக்கிறார்
    அம்மா பரவாயில்லை, பெண்-முதிர்வயது வேறே
    டாக்டர் ஐயா சின்ன டாக்டர் கூடப் பரவாயில்லை..- டாக்டருக்குப் படித்திருக்கிறார், ஐயாவுக்கு வயதும் ஒரு காரணம்
    புரட்சிப் புயல் கூடப் பரவாயில்லை – புயலடித்ததுபோன்று ஆவேசமாகப் பேசுவார்

    மக்களாட்சியில் தளபதி என்பதும், போர்வாள் என்பதும் பரம்பரைவாரிசு என்பதும் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமாகத் தோன்றுகிறது இந்த தண்ணியில் மிதக்கும் ‘கேப்டனை’ விமரிசனத்தில் பார்த்தால்…

    ஏன்? உங்களுக்கு விஜயகாந்த் என்ற பெயர் பிடிக்கவில்லையா? புரட்சிக்கலைஞர் என்றுகூட முதலில் சினிமாக்களில் போட்டிருந்தாரே அதுகூடப் பிடிக்கவில்லையா? இல்லையென்றால்,, எல்லாரும் கூட்டணிக்கு வரிந்து கட்டி அழைத்துக்கொண்டிருப்பதால்…

    கேப்டனை விட்டுவிட்டு காமராஜரின் கிங்மேக்கரை வேண்டுமானால் இவருக்குக் கொடுத்துவிடுங்களேன்…(காமராஜரின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க).

 8. ஆவி சொல்கிறார்:

  ஒரு பதிவுக்கு நேர்மறை-எதிர்மறைக் கருத்துகள் இருக்கும் போதுதான் உண்மைகள் பயணர்களை சென்றடையும். ஆனாலும் இந்தப் பதிவில் பலரும் தேவையற்ற கருத்துகளை வைத்திருப்பதாகவே தெரிகிறது.

  பதிவின் நோக்கத்தை கண்டு கருத்திடுவதே மேலானதாகும்.

  கொஞ்சமாவது நிம்மதி பிறந்ததா இல்லையா என்ற வினாவிற்கு எதிர்மறைக் கருத்துகளை வைக்காது பதில் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
  அப்படிப் பார்க்கும் போது நீக்கப்பட்ட கருத்துகளை பார்க்கும் போது, நீக்கப்பட்டது சரி என்றே வைத்துக் கொண்டாலும், கடைசியாக நீக்கப்பட்ட கருத்துக்கு பதில் கொடுத்திருக்கலாம்!

  இடுக்கண் வருங்கால் நகுக… சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. நகுக.. தற்போதுள்ள நிலையில், மனதை லேசாக்கி கொள்ளவே இந்த இடுகை….!!! ,மகிழ்வுடன் இருக்கும் மனம் வருவதற்கு சாத்தியமில்லை என்பதால்,இடுக்கண் களைக …. என் சிறிய அறிவுக்கு எட்டியவரை..

  நீக்கப்பட்ட கருத்தில் பிரித்தானிய மழை பற்றிய தகவலில் அவர் தவறான தகவலை தந்துள்ளார்.

  விரும்பியவர்கள் subtitles தமிழில் பார்க்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஆவி,

   “இடுக்கண் வருங்கால் நகுக” என்பதற்கு ஏகப்பட்ட விதங்களில்
   அர்த்தமோ, அனர்த்தமோ – அவரவர் விரும்பிகிற மாதிரி
   வைத்துக் கொள்ளலாம். ஒரு நக்கலுக்காக –
   “அடுத்தவருக்கு துன்பம் நேர்கையில் நீ சிரி” என்று
   சொல்வதாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

   எழுதியவர் எந்த நோக்கில் சொல்கிறார் என்பதை கருத்தில்
   எடுத்துக் கொள்வதே நியாயமானது.

   ” துன்பம் வரும்போது, அஞ்சி நடுங்காமல் – துணிந்து
   அதை எதிர்த்து நில் ” -என்கிற பொருளில் தான் நான் எழுதி
   இருக்கிறேன்.

   படிப்பவர் அனர்த்தம் தான் செய்து கொள்வேன் என்றால் –
   அது அவர் விருப்பம்…. நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. LVISS சொல்கிறார்:

  Though we cannot derive any pleasure by saying others also suffered the fact is any government would have found it difficult to manage a crisis of this magnitude immediately — Not only in Britain even california ,basically a desert ,was flooded See the video link below

 10. paamaranselvarajan சொல்கிறார்:

  தாரை தப்பட்டை பாடல்களை கேட்டிர்களா …. ? இளையராஜாவின் 1000 — மாவது ” ருத்ர தாண்டவம் ” …. ! இனி ஒருவர் இல்லை …. !! அதைப்போலவே இந்த இடுக்கைக்கும் —- ஏகப்பட்ட ருத்ர தாண்டவங்கள் …. அப்படித்தானே …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாமரன்,

   பயணம் கிளம்பும் முன், அற்புதமான இசையை
   அனுபவிக்க ஒரு வாய்ப்பை கொடுத்தீர்கள் …
   உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவில்லையென்றால் –
   இந்த அற்புதத்தை அனுபவிக்காமலே கிளம்பி இருப்பேன்…!

   நீங்கள் சொல்வது போல் பிச்சு உதறுகிறார் இளையராஜா…
   இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும்
   அளிக்க வேண்டுவோம். இசைத்தமிழுக்கு அவரை விட்டால்
   வேறு யார் இருக்கிறார்கள் இன்று…!

   -வாழ்த்துக்களுடனும், நன்றியுடனும்,
   காவிரிமைந்தன்

 11. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM I have read almost read all your blogs followed by comments of our friends.For a change
  wish you write your views about the beep song and of course your lengthy comments Mr.today and me sir. Thanks. If it is not worth it. just leave it.

  • today.and.me சொல்கிறார்:

   Dear friend R. Gopalakrishnan
   I know KMjis priority on writting is diffeent from me.. but i comment on what I should make. Not to all his postings.

   But, my thirst of writing is different, yet.
   If I want to register my views on particular subject or incident, I definitely do in my own…. never wait for KMji’s postings.

   By the way, for your information, I gave the importance not to beep, but the response to that beep….in my place. 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.