வருங்கால ஊடக துறை அமைச்சர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேச்சு …!!!

m.puthiran selfie

திருவாளர் விஜய்காந்த்தின் “தூ” வை ஆதரித்து,
வருங்கால ஊடகத்துறை அமைச்சர் (…? – அவரே தான்
தனது facebook-ல் போட்டுக் கொண்டிருக்கிறார்…!!!
பயங்கரமான எச்சரிக்கை உணர்வு …..”அடுத்த” என்று
போட்டுக் கொள்ளாமல் – “வருங்கால” என்று
போட்டுக் கொண்டிருக்கிறார்…!!! )

திருவாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உரை கீழே –

இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர்
சங்கம் வெளியிட்ட அறிக்கை கீழே –

press notification onmnushyaputhran

இந்த அறிக்கையை பார்த்தவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திருவாளர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள குறிப்பு கீழே –

apology by m.puthran

இந்த ஆசாமியைப் பற்றி நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்
என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில்
தனது ஸ்டாலில் உட்கார்ந்திருந்த இந்த ஆசாமியை
பார்த்தபோதே எனக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது…
இருந்தாலும், கையில், தோளில், பெரிய புத்தக மூட்டை
இருந்ததால், பொறுமையின்றி …..வேறொரு சமயத்தில் –
மறுபடி பார்க்கும்போது கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டு
பேசாமல் நகர்ந்து விட்டேன்…

அந்த கேள்வி –
பெரிதாக ஒன்றுமில்லை….!
“ஏன் சார்… ஏன் இப்படி மனுஷ்யபுத்திரன் என்று பெயர்
வைத்துக் கொண்டீர்கள்…? அதன் பின்னணியைச்
சொல்லுங்களேன்…!!! “

நண்பர்கள் யாருக்காவது
அதன் பின்னணி தெரிந்திருந்தாலும்
சொல்லலாம்…!!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to வருங்கால ஊடக துறை அமைச்சர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேச்சு …!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  அவரையும் ஒரு ஆள் என நினைத்து, அதற்கு ஒரு பதிவு போட்டது தவறு என்பது என் கருத்து.

 2. உண்மை சொல்கிறார்:

  மனுஷ்யபுத்திரன் மிகவும் நல்ல மனிதர். நடு நிலையாளர்,எழுத்தாளர்,கவிஞர். இதைவிட சிறந்த அரசியல்வாதி,விமர்சகரும் கூட.????

  மனுஷ்யபுத்திரன் என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் இவரது இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது . திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகப் பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி எனப் பல்வேறு முகங்களில் இலக்கியத் தளங்களில் இயங்கி வருகிறார்.

  சென்னையில் உயிர்மைப் பதிப்பகம், உயிர்மை இதழ் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

  மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற கருத்து இது என ??? பலரும் சொல்கிறார்கள்.

 3. thiruvengadam சொல்கிறார்:

  நண்பர் பரமசிவம் கருத்து மிகச்சரி. இருப்பினும் விஜய்காந்த் ( முறை தவறு ) இளங்கோவன் தந்தி பாண்டேயிடம் கேட்டதற்கான தக்க பதிலை ஊடகவியலார்கள் தரவேண்டுமல்லவா.? As regards his name may be to hide his identity & to show he only as per the name denotes , others are cattle.

 4. avudaiappannavudaiappan சொல்கிறார்:

  sembu thooki avanai neglect pannuka

 5. என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது சிலரது கொள்கை
  ஐயா எனது தளத்தில் ஒரு அரசியல் காமெடி எழுதி இருக்கிறேன் நேரமிருப்பின் காணவும் – கில்லர்ஜி
  இதோ இணைப்பு

  http://killergee.blogspot.ae/2016/01/blog-post_2.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கில்லர்ஜி,

   பார்த்தேன். நன்றி. மிக நன்றாக இருக்கிறது.
   நிறைய உழைத்திருக்கிறீர்கள்..

   இதே போல் திருவாளர் மனுஷ்யபுத்திரனுக்கும்
   ஒன்று – பதிவைத்தான் சொல்கிறேன் – போடுங்களேன்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. உண்மை சொல்கிறார்:

  //நண்பர்கள் யாருக்காவது
  அதன் பின்னணி தெரிந்திருந்தாலும்
  சொல்லலாம்…!!!// …………………அவரே சொன்ன பதில்…….

  வித்தியாசமான பெயர்கள் தமிழ்க் கவிஞர்களுக்குப் புதிதல்ல. ஆனால் நான் என்னை கவிஞனாக அடையாளம் காணும் முன்பே இந்தப் பெயர் என்னைப் பிடித்துக்கொண்டது. மனுஷ்ய புத்திரன் என்ற பெயரை ஒரு நாள் ஒரு வானொலி நாடகத்தில் கேட்டபோது அந்தப் பெயர் என் கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்தது போலிருந்தது.

  மனித குலத்தின் மகன் என்று என்னை கண்டுகொண்ட அந்த நாளில் எனக்கு வயது 14. அந்தப் பெயரில் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதி, அதை அச்சில் கண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு 16 வயதில் “மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ என்ற பெயரில் எனது புத்தகம் வெளிவந்தபோது அந்தப் பெயர் எனது பெயராக மாறியது.

  பின்னாளில் அறிந்தேன் மனுஷ்யபுத்திரன் என்பது கிறிஸ்துவின் பெயர் என்று. அந்தப் பெயருக்கு நான் தகுதியற்றவன் என்பது எனக்கு அப்போதும் தோன்றியது; இப்போதும் தோன்றுகிறது. ஆனாலும் அந்தப் பெயரை விட மனம் இல்லை.

  இந்தப் பெயர் வடமொழிச் சொல்லாக இருப்பதால் இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு மறுபெயர் சூட்டு விழா நடந்தது. தொல்.திருமாவளவன் ஒரு கூட்டத்தில் பேசும்போது மேடையிலிருந்த என்னை “மானுட மகன்’ என்று அழைக்க விரும்புவதாகக் கூறினார்.

  இன்னொரு கூட்டத்தில் பேராசியர் க. அன்பழகன் எனது வட மொழிப் பெயரால் மிகவும் எரிச்சலடைந்து, “மாந்த மைந்தன்’ எனப் பெயர் சூட்டினார். அருகிலிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், “”கூட்டதிற்கு வரும்போது பெயரோடு வந்தீங்க.. போறப்ப பெயரில்லாம திரும்பிப் போறீங்க” என்று கிண்டல் செய்தார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் உண்மை,

   நிறைய தகவல்கள் தருகிறீர்கள்…
   தொடருங்கள்…. நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Sampathkumar.K. சொல்கிறார்:

  இது ம.பு. தனக்குத் தானே வைத்துக்கொண்ட பெயர்.

  காரணம் சிம்பிள்.
  இவர் தன்னை மட்டும் அறிவின் சிகரம்,
  ஆறறிவுள்ள மனிதன் என்றும் மற்றவர்கள் எல்லாரும்
  சிந்திக்கத் தெரியாத ஜந்துக்கள் என்றும் கருதி
  தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர்.
  உண்மையோ இதற்கு நேர்மாறானது.

 8. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம். சார்,

  நீங்கள் இந்த ஆள் டிவியில் விவாதத்தில் கலந்து கொண்டு
  கத்துவதை கேட்டதில்லையா ?அய்யோ, தாங்கமுடியாது.
  இரண்டு நிமிடங்களுக்கு மேல் கேட்டால் பைத்தியம்
  பிடித்து விடும். சரியான வெறியர்.
  இவருக்கென்றே ஸ்பெஷலாக டிசைன் பண்ணப்பட்ட
  காடி கலர் டீ ஷர்ட்டுகள் ஒரு டஜன் இருக்கும். மாற்றி மாற்றி
  போட்டுக் கொண்டு வந்து விடுவார். முகத்தை மறைக்கும் முடி வேறு.
  மேலே நீங்கள் போட்டிருக்கும் போட்டோ, அவரை அவரே
  எடுத்துக் கொண்டது. மொத்தத்தில் சகிக்க முடியாத ஆசாமி.
  நல்ல வேளை நீங்கள் அவரிடம் பேசாமல் வந்தீர்கள் !
  திமுக ஜெயித்தால் அமைச்சர் பதவிக்கு கர்ச்சீப் போடுகிறார்.

 9. எழில் சொல்கிறார்:

  பேசாமல் கவிதைகளோடு இருந்திருக்கலாம். இப்போது இவர் திமுகவின் சி ஆர் சரஸ்வதி. இதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 10. ravi சொல்கிறார்:

  ஸ்ரீ ல ஸ்ரீ சொம்படி சித்தர் மஹா சந்நிதானம் .. அவ்வளவே

 11. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  முன்னால தி.மு.கா ஆசையை மனதில் வைத்துக்கொண்டு, நடு’நிலை என்ற பெயரில் தி.மு.கா வையும், அதன் கொள்கைகளையும் ஆதரித்துக்கொண்டிருந்தார். அவருடைய சகோதரி (?) கவிஞர் சல்மா, தேர்ந்த திமுக உறுப்பினர். ஆரம்ப கால கனிமொழியை பல்லக்குத் தூக்கியதில் அவரும் ஒருவர். அதன் பயன்’கள் நன்றாகப் புரிந்துவிட்டதால், தன் சகோதரனையும் தி.மு.காவில் சேரச் சொல்லிவிட்டார். அப்போதுதான், இந்துத்வா கொள்கைகளை எதிர்த்துப் பேசும்போது கட்சி ஆதரவு கிடைக்கும் என்பதால். நடுனிலை என்ற பெயரில் அவர் நிறையமுறை தன் மதத்திற்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருக்கிறார். இவருக்கு திமுகாவில், அதிமுக நாஞ்சில் சம்பத் போல வரவேண்டும் என்பது ஆசை. அதுவும் தவிர, தன் பதிப்பக புத்தகத்தை அரசு நூலகங்களுக்குத் தள்ளிவிட வாய்ப்பு கிடைக்குமல்லவா?

 12. paamaranselvarajanp சொல்கிறார்:

  ” செய்தி — மக்கள் தொடர்பு துறை மந்திரி ” என்பதை கொடுத்தால் வேண்டாம் என்றா கூற போகிறார் …. ? மனுஷ்ய புத்திரன் ….? போல இன்னும் நிறைய பேர்வழிகள் வக்காலத்து வாங்கிகொண்டு தான் இருக்கிறார்கள் —– அது புறம் இருக்க —— இன்றைய தினமலர் தலைப்பு செய்திபதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016—— // யார் ? விஜயகாந்தின் கூட்டணி ‘டிராமா ‘ வுக்கு பின்னணி … இதோ… அதோ … என போக்குகாட்டுவது ‘ பற்றி ‘ பகீர் தகவல் … என்கிற செய்திக்கு கட்டம் கட்டி போட்டுள்ள செய்தி :—- விஜயகாந்திற்கு சாமி சொன்ன யோசனை:
  விஜயகாந்திடம் சாமி கூறியதாவது:ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜன., 8ம் தேதிக்குப் பின் சுப்ரீம் கோர்ட்டில் துவங்கிவிடும். அப்போது கர்நாடக ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை கோர உள்ளேன். தடை கிடைத்துவிட்டால் ஜெயலலிதாவுக்கு சிக்கலாகிவிடும். ஒருவேளை தடை கிடைக்கவில்லை எனில், வழக்கு விசாரணை வேகமாக நடந்து முடிந்து தேர்தலுக்கு முன் தீர்ப்பு வரலாம்.அதே போல தி.மு.க., பிரமுகர்கள் மீதான, ‘2ஜி’ வழக்கு விசாரணையும் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அதில் அக்கட்சியினர் கடும் சோதனைகளை சந்திக்கும் நிலை உருவாகலாம்.இந்தச் சூழலில் தமிழகத்தின் மூன்றாவது சக்தியான நீங்கள், பா.ஜ.,வுடன் பேரம் பேசி கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வராகப் பாருங்கள். அதுவரையில் கூட்டணி குறித்து யாருக்கும் பிடி கொடுக்காதீர்கள்; அமைதியாக இருங்கள்.இவ்வாறு விஜயகாந்திடம் சாமி கூறியுள்ளார்….// இது எப்படி இருக்கு ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   விஜய்காந்த்-சு.சுவாமி பற்றி தனியாகவே ஒரு இடுகை போட்டு
   விவாதிக்கலாமே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Manushya puthran oru SATHHAN Puthran, Komali komali Kariyak komali Baffffoooon

 14. Prakash சொல்கிறார்:

  இவர் ஏன் ஆதரித்தார் என்பது நமக்கு தெரியாதா என்ன?

 15. Narasimhan சொல்கிறார்:

  “வருங்கால ஊடகத்துறை அமைச்சர் “. இது அவர்களுக்கு தெரியுமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.