சிபிஐ வளையத்துக்குள் திருமதி நளினி ப.சிதம்பரம்….!!!

.

.

A battery of Lawyers ரெடியாக காத்துக் கொண்டிருப்பார்கள்
– பிரைவேட் கம்ப்ளெயிண்ட் கொடுத்து உள்ளே தள்ள…!
எனவே, நானாக எதையாவது எழுதி உள்ளே போக
நான் தயாராக இல்லை.

பின்னர் எதற்கு இந்த இடுகை என்கிறீர்களா …?
ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழ் செய்தித்தளங்கள் எதுவும் போடுவதாக இல்லை. அப்புறம் நம் தமிழ்ச்சாதி எப்படித்தான் இந்த செய்தியை தெரிந்து கொள்வது …? எனவே ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் செய்தியை அப்படியே தமிழில் சுருக்கமாக வெளியிடுவதே இந்த இடுகையின் நோக்கம்….

சரி செய்தி தான் என்ன …?

திங்களன்று கொல்கத்தாவில் “சாரதா ஊழல்”
வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட்டில்
திருமதி நளினி சிதம்பரம் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது
சாட்சிகள் பட்டியலில் சேர்ப்பதா என்பது உறுதியாகவில்லை
என்று தெரிகிறது……! இப்போதைக்கு சில முக்கியமான
தகவல்களை அறிந்தவர் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ கையாண்டு வரும் “சாரதா ஊழல்” வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மனோரஞ்சனா சிங் என்பவரின்
வழக்கறிஞராக பணியாற்றி இருந்தார் திருமதி நளினி சிதம்பரம்.
ஆனால், அவருக்கான ஊதியம் சாரதா நிறுவனத்தின்
கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதால், திருமதி நளினி சிதம்பரம்
அவர்களின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது சாட்சிகள்
பட்டியலில் சேர்ப்பதா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று
தெரிகிறது.

இந்த வழக்கைப் பற்றி மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க
விசாரணை ஏஜென்சிக்கள் விரும்பவில்லை. இந்த வழக்கை CBI, ED and SFIO ஆகிய மூன்று மத்திய ஏஜென்சிக்களும்
புலனாய்வு, விசாரணை நடத்தி வருகின்றன.

சாரதா நிறுவனத்திற்கும், மனோரஞ்சனா சிங் அவர்களுக்கும்
இடையே போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை திருமதி
நளினி சிதம்பரம் அவர்களின் நிறுவனமான சென்னையை
சேர்ந்த NC Associates தான் தயாரித்துக் கொடுத்துள்ளது.
இது மனோரஞ்சனா சிங் அவர்களுக்கு சாதகமாக அமையும்படி
தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் இதற்கான ஆலோசனை
கட்டணம் சாரதா நிறுவனத்திலிருந்து தான்
கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு எவ்வளவு தொகை
கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரியான தகவல் இன்னும்
வெளியிடப்படவில்லையாம்.

விசாரணை ஏஜென்சிக்கள் வசம் கிடைத்திருக்கும்
வங்கி பரிமாற்றங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களின்படி –
அவருக்கு ரூபாய் 65.85 லட்சம் ( அறுபத்தி ஐந்து லட்சத்து
எண்பத்தையாயிரம் ) கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறதாம்.

ஆனால், சாரதா நிறுவனம் வருமான வரி இலாகாவிற்கு
அளித்துள்ள TDS ரிப்போர்ட்டின்படி திருமதி நளினி
சிதம்பரம் அவர்களுக்கு March-June 2011 -ஆன
காலகட்டத்தில் 1.5 கோடி (ஒன்றரை கோடி) ரூபாய்
கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 15 லட்சம் ரூபாய்
வருமான வரியாக பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும்
கூறப்பட்டிருக்கிறதாம்….!!!

ஆக …….இப்போதைக்கு – இவ்வளவு தான் செய்தி….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சிபிஐ வளையத்துக்குள் திருமதி நளினி ப.சிதம்பரம்….!!!

 1. Sharrom சொல்கிறார்:

  As usual nothing will happen.

 2. thiruvengadam சொல்கிறார்:

  இந்திராகாந்தி தேர்தல் வழக்கின் தீர்ப்பு சமயம் ரேடியோவில் இரண்டு நிமிட இந்தி / ஆங்கில செய்தியில் வாசிப்பாளர் அச்சமயம் அவருக்க கிடைத்த தேர்தல் செல்லாது என்று வாசித்தார். அடுத்தமொழி வாசிப்பில் தீர்ப்பில் அப்பீலுக்கு அனுமதி , பதவி தொடரலாமென்ற தகவல் வாசித்தார். முதலில் வாசித்தவர் நடவடிக்கைக்கு உட்பட்டார். இத்தகவல் ஜெடிவி இன்றைய முக்ய செய்தியாகலாம். உப்பை தின்றவர் தண் ணீர் குடிக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாது.

 3. gopalmohan சொல்கிறார்:

  cinema style threatning mr, chidambaram
  media buildup to malign him
  by pointing karthik chidambaram son of chidambaram
  now nalini w/o of chidambaram

 4. seshadri சொல்கிறார்:

  no chance. she is big fish we cannot catch….. (very very big fish we need strong high steel net needed to catch!)

  seshan

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  படித்தவர்கள்தான் சூது வாது செய்கிறார்கள். கா.மை அய்யா… 2 கோடிக்கு மேல் உள்ள பணத்தை வைத்து என்ன விதமாய் வாழ்ந்துவிட முடியும்? ஏன் 100 கோடி, 500 கோடி, 1000 கோடி, 5000 கோடி என்று மனித மனம் ஆசைப்படுகிறது?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நெல்லைத்தமிழன்,

  இந்த இடுகையின்போது நாம் இருவரும் ஒரேவித
  மன ஓட்டத்தில் தான் இருந்திருக்கிறோம்….

  இந்த இடுகையை எழுதும்போதே, நான் நினைத்தேன்….
  வாழ்க்கையின் அவசியத் தேவைகள் முடிந்த பின்னரும்
  மனிதன் மேலும் மேலும் பணத்தின் பின் ஓடுவது ஏன் ..?
  அதுவும் முறையற்ற வழிகளில் சம்பாதிக்க …?

  விடை …?
  உண்மையான சந்தோஷம் எது என்பது அவர்களுக்கு
  தெரியவில்லை என்று தானே கொள்ள வேண்டும்…?
  துரதிருஷ்டவசமாக இத்தகைய மனிதர்களின் கையில்
  ஆட்சியும் அதிகாரமும் வேறு கிடைத்து விடும்போது –
  சமுதாயமும் மக்களும் அதன் விளைவுகளை
  எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.