விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை – அதிசயம் – ஆனால் உண்மை …!!!

.

.

விகடன் செய்திகள் தளத்தில் இந்த கட்டுரையைப் படித்து
விட்டு பலமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

கலைஞர் கருணாநிதியின் தலைமையில்
திமுக சார்பில் நேற்று சென்னையில் ஒரு “பிரம்மாண்ட”
பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கான காரணம் – கோரிக்கை –
செம்பரம்பாக்கம் ஏரியை கால தாமதமாக திறந்து
சென்னையை வெள்ளக்காடாக்கியதைக் குறித்து
விசாரிக்க உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு
“நீதி விசாரணை” நடத்தப்பட வேண்டும்…!!!

கலைஞர் பேரணி நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் – மதியம் 12 மணிக்கு – அதற்கு நேரெதிராக
” செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதில் எந்த வித தவறும்
நிகழவில்லை ” என்று ஆதாரபூர்வமாக, விவரமாக விளக்கும்
ஒரு கட்டுரையை விகடன் செய்திதளம் வெளியிடட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதிமுக அரசுக்கு
மிகவும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை
விகடன் வெளியிட்டிருப்பது – அதன் பின்னணியைப் பற்றி
பலமாக யோசிக்கத் தூண்டுகிறது. இதன் பின்னால்
நிச்சயமாக ஒரு காரணம், ஒரு உள்நோக்கம் இருந்தேயாக
வேண்டும்.

அது என்னவாக இருக்க முடியும் …?

விகடன் – திமுகவின் சொந்தப் பத்திரிகை என்கிற விஷயம்
வெளியில் பரவலாகப் பரவி விட்டதால்,

– மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை
முற்றிலுமாகப் போய் விட்டது என்கிற பேச்சிலிருந்து
வெளியே வர முயற்சியா …?

– அல்லது சரிந்து விட்ட சர்குலேஷனை மீட்கும் முயற்சியா …?

– அல்லது தேர்தல் சமயத்தில் அனைத்து தரப்பினரும்
படிக்கின்ற மாதிரி ஒரு இமேஜை தனது நிறுவனத்திற்கு
வைத்துக் கொண்டால் தான் –
தாங்கள் சொல்வது அனைவரையும் reach ஆகும்.
இல்லையேல் வெறும் முரசொலி மாதிரி திமுக வினர் மட்டுமே
படிக்கும் பத்திரிகையாகி விடும் என்கிற காரணமா …?

– இவை அனைத்தையும் தாண்டி இன்னொரு காரணமும்
மனதில் தோன்றுகிறது … ஆனல் அதை இப்போது விவாதிக்க
வேண்டாம். தேவைப்படும்போது பார்ப்போம்….!!!!

நண்பர்கள் தங்களுக்கு தோன்றும் காரணங்களையும்
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

இனி நேரே கட்டுரைக்கு போவோமே …!!!

( கீழே க்ளிக் செய்தால் கட்டுரைக்கு போய் விடலாம் )

விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை ……!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை – அதிசயம் – ஆனால் உண்மை …!!!

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே தெரிந்துவிடும் விகடனின் எண்ணம். அவர்கள் திமுகா ஆதரவிலிருந்து வெளிவரமுடியாது. இன்றைக்கு வழக்குகளுக்காகப் பயந்து ஒரு கட்டுரை வெளியிட்டாலும், தலைப்பில் தன் ஒரு சார்பு நிலையை விகடன் காண்பித்துள்ளது. விகடன் கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதில்லை. அது ஜூவி வேலை. அதன் எஜமானன் சொல்லும் வேலையை அது சரியாகச் செய்யும். நல்ல பத்திரிகையாக இருந்தது, பாலன் அவர்கள் காலத்தோடு (அவர் வேலைசெய்த காலம் வரை) போயிற்று. எப்போது பணத்துக்காக ‘விகடன் மீடியாஸ்’ ஆரம்பித்து சன் தொலைக்காட்சியிடம் கையேந்தியதோ அப்போதே அதன் நம்பகத்தன்மை அகன்றுவிட்டது. பணத்தேவைக்காக தன் பங்குகளை திமுக குரூப் வாங்க ஆரம்பித்ததும், அதன் முகம் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.

 2. today.and.me சொல்கிறார்:

  இபு ஞானப்பிரகாசம் உள்ளிட்ட விகடன் ஆதரவு நண்பர்களுக்கும், திமுக ஆதரவு நண்பர்களும், விமரிசனம் நண்பர்களுக்கும் மற்றும் கா.மைஜி ……!

  https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12507683_10205643852403984_6930360775945383880_n.jpg?oh=725847a2f67b59584bcb0e8abacb0020&oe=5713B0CD&__gda__=1464236928_7009233dabf68f8b41101e6a4fb4e34d

  இதில் குறிப்பிட்டுள்ள மஞ்சள் துண்டால் விரவியுள் விவரங்கள் ஏதாவது புரிகிறதா? புரிந்தால் விளக்கலாம்.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  in our family(large) almost all of us stopped buying and reading entire vikatan group journals
  Now a days I am thinking about reading ‘the hindu’ also. But the decades of reading the same
  prevents me to think further

  • விவேக் காயாமொழி சொல்கிறார்:

   ஹிந்து வுக்கு பதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அல்லது தினமணி க்கு மாறலாம்..

 4. bandhu சொல்கிறார்:

  குடும்பத்துக்குள் நடக்கும் குடுமி பிடி சண்டை நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறது! 2G விவகாரத்தை சன் டிவி ஒரு காலத்தில் பெரிது படுத்தியது போல!

 5. sivakumar சொல்கிறார்:

  This is what is called being neutral and unbiased. Vikatan always points out mistakes whoever it may be. All issue based not person based. Not like this blog. Calling ourself neutral, criticising everybody except Jaya.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.