கைதிலிருந்து தப்பினார்கள் கே.டி.சகோதரர்கள்….!!! (ஒரு வழக்கில்)

maran brothers

எதிர்பார்த்தது போலவே –
நினைத்ததை சாதித்துக் கொண்டார்கள் ….!

கடைசி வரை கைது செய்யப்படுவதை தவிர்த்த
கே.டி.சகோதரர்கள் மீது ஒருவழியாக 2ஜி வழக்கு சிறப்பு
நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்திருக்கிறது அமலாக்கப் பிரிவு –

இது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.
இன்னொரு வழக்கு – சட்டவிரோதமாக BSNL தொலைபேசியை
சன் டிவிக்கு இணைப்பு கொடுத்தது தொடர்பானது….
அது இன்னமும், சிபிஐ விசாரணையில்-
நிலுவையில் தான் இருக்கிறது…!!!

இது குறித்து இன்றிரவு வெளியான பத்திரிகைச் செய்தி இதோ –

—————————————–

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
By DN, புதுதில்லி
First Published : 08 January 2016 09:35 PM IST

2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில்
மாறன் சகோதரர்கள் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்தது அமலாக்க இயக்குநரகம்.

தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காலநிதி மாறன்
மனைவி காவேரி மாறன் உள்பட 6 பேர் மீது அமலாக்க
இயக்குநரகம் தனது குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது.

2011- ஆம் ஆண்டு ஏர்செல் உரிமையாளர் சி.சிவசங்கரன்,
மேக்சிஸ் நிறுவனத்துக்கு பங்குகளை விற்குமாறு தனக்கு
அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்
தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐ-யிடம் புகார்

அளித்ததையடுத்து இந்த வழக்கில் ஏர்செல்-மேக்சிஸ்
ஒப்பந்த விவகாரம் விசாரணை அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது.

இதனையடுத்து அதே 2011-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.
அதாவது அலைவரிசை உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்த
ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் தனது நிறுவனத்தை
மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க கடும் நெருக்கடி
கொடுத்ததாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

மார்ச் 2006-ல் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை
வாங்கியிருந்த மேக்சிஸ் நிறுவனம் 2007-2009 ஆம்
ஆண்டுகளுக்கிடையே சன் டைரக்ட் நிறுவனத்தில்
ரூ.742 கோடி முதலீடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை குறித்த
பரிசீலினை வரும் 18 ஆம் தேதி செய்யப்படும் என்று
சிபிஐ அமைப்பை இது குறித்த ஆவணங்களை தயாராக
வைத்திருக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

( http://www.dinamani.com/india/2016/01/08/
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE
%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE
%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE
%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE
%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE
%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE
%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D
%E0%AE%B1/article3218152.ece )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கைதிலிருந்து தப்பினார்கள் கே.டி.சகோதரர்கள்….!!! (ஒரு வழக்கில்)

  1. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Why no comment for this issue so far This is something fishy.Mr KM will you please explain

    m

  2. Vicky சொல்கிறார்:

    I had bet with my friend that justice cannot be established in this case. This is proving it right.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.