விஜய்காந்த் எங்கே போய்ச்சேருவார்…? என்ன பெறுவார்….? அப்புறம் என்ன நடக்கும்….?

DMDK-chief-Vijayakanth

தற்போதைக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும்
ஒரே விஷயம் நிகழவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்
திரு. விஜய்காந்த் இறுதியாக யாருடன் கூட்டு சேரப்போகிறார்….?
என்ன நிபந்தனைகளுடன்..?….. என்பதே….!!!

விஜய்காந்த் முடிவெடுத்த பின்னர் தான் மற்ற அனைத்து
அணியினரும் தங்கள் தரப்பு கூட்டணியை முடிவெடுக்க முடியும்
என்கிற ஒரு சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது….!!!

இந்த சூழ்நிலை –
தான் மிகவும் முக்கியமான ஒரு ஆசாமி என்றும்
தமிழக அரசியலே தன்னைச்சுற்றித்தான் நடக்கிறது என்றும்
ஒரு வலுவான கருத்தை விஜய்காந்த் அவர்களிடம்
ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பின்னணி பற்றிய என் கருத்தை முதலில் கூறி
விடுகிறேன்… இது குறித்து இந்த வலைத்தள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிய நான் ஆவலாக உள்ளேன்.

எனவே, நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களின்
மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் விஷயம் –
பின்னர் அதன் விளைவுகள் பற்றிய விஷயம்….

கூட்டணி குறித்து விஜய்காந்துக்கு இன்றைய சூழ்நிலையில்
மூன்று வாய்ப்புகள் உள்ளன –

பாமக, அதிமுக இரண்டும் இந்த பட்டியலில் இல்லவே இல்லை.

எனவே மீதி இருப்பவை –

பாஜக கூட்டணி –
மக்கள் நல இயக்கம் கூட்டணி –
திமுக கூட்டணி –

இந்த மூன்று பிரிவுகளுமே விஜய்காந்தை வேண்டி, விரும்பி,
வலியுறுத்தி – வெற்றிலை பாக்கு வைத்து ( ! )வெளிப்படையாக
வரவேற்கின்றன.

எந்த கூட்டணிக்கு போனால் அவருக்கு என்னென்ன கிடைக்கும்…?

பாஜக கூட்டணிக்கு போனால், (பாமக வரவில்லையென்றால்)
அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கவும் ஒப்புக் கொள்வார்கள்….
மரியாதை நிறையவே கிடைக்கும் (தேர்தல்
நடந்து முடியும் வரையில்….!!!)
அவருக்கு வேண்டிய மட்டும் சீட்டுகள் கிடைக்கும்…
நிதியுதவி கொஞ்சமாகவே கிடைக்கும்.
மனைவி அல்லது மைத்துனருக்கு ஒரு ராஜ்ய சபா சீட்
அல்லது எதாவது ஒரு கமிஷன் தலைவர் பதவி கிடைக்கலாம்….!

ஆனால் வெற்றி வாய்ப்பு ….?
எவ்வளவு இடங்களில் ஜெயிக்கலாம் ….?
அனேகமாக பெரிய பூஜ்ஜியம் தான்…!!!

மக்கள் நல இயக்கம் கூட்டணிக்கு போனால்…..?

முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொள்வார்கள்….
(என்ன – வைகோவிற்கு தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும்…)
“சீட்” பங்கீடு – அவர் எதிர்பார்க்கும் சில இடங்கள் அவருக்கு
கிடைக்காமல் போனாலும் கூட ஒட்டு மொத்தமாக நிலைமை
திருப்திகரமாகவே இருக்கும். அதிக எண்ணிக்கையில் “சீட்”
கிடைக்கும். கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே
இருக்கும். நிதியுதவி …? பெரிய பூஜ்ஜியம்… இவருக்கு வேண்டியதை

இவராகவே திரட்டிக் கொள்ள வேண்டியது தான்…!

எவ்வளவு இடங்களில் ஜெயிக்கலாம் ….?
தமாகாவும் இதே கூட்டணியில் சேர்ந்தால் –
அதிக பட்சமாக 10-15 இடங்களில் ஜெயிக்கக்கூடும்….!
தமாகா சேரவில்லை என்றால் …? ஒற்றை இலக்கத்தில் தான்…!!!

திமுக கூட்டணிக்கு போனால் ….. ?

முதலில் மக்கள் மத்தியில் தன் முடிவை நியாயப்படுத்த அவர் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.
வெட்கம்-மானம் போகும்… !!!
அவருக்கென்று உள்ள வாக்கு வங்கியில் (7 -8 % )
ஒன்றிரண்டு சதவீதத்தை
இழக்கவும் வேண்டி இருக்கும்.

ஆனால் – சில விஷயங்கள் பிரகாசமாக இருக்கும்….!!!
பேரம் பேசி – குறைந்த பட்சம் 55-60 சீட்டுகள் பெற முடியும்…
கணிசமான அளவில் ( 100 கோடி அளவிற்காவது )
நிதியுதவி கிடைக்கும். அதில் பாதியை தேர்தலுக்கு
செலவழித்தாலும் போதுமானது. மீதியை சொந்த
எதிர்காலத்திற்கு வைத்துக் கொள்ளலாம். தனக்கும்,
மனைவிக்குமாக இரண்டு இடங்களில் கர்ச்சீப் போட்டு
வைத்து விடலாம்….!

கூட்டணி ஜெயித்து ஆட்சியமைத்தால் ….. ?
துணை முதலமைச்சர் பதவிக்கு கலைஞர்
ஒப்புக் கொள்ள மாட்டார். இவர் அதிகம் வீம்பு பிடித்தால் –
கூட்டணி ஆட்சியமைக்கவும், 4 மந்திரி பதவிகள் கொடுக்கவும்
கலைஞர் ஒப்புக்கொள்ளலாம்..
(தேர்தலுக்கு முன்னர் மட்டுமே….!)
ஆனால் – தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கே தனி மெஜாரிட்டி
கிடைத்து விட்டால் … கலைஞர் இவரை கைகழுவி விடுவார்…!

அதற்கு முன்னதாகவே –
தேர்தலின் போது –
55-60 சீட்டுகள் கொடுக்க கலைஞர் முன்வந்தாலும் –
அதில் பெரும்பாலான இடங்களில் இவரது கட்சி தோற்கவும்
கலைஞரே ஏற்பாடு செய்து விடுவார்…!
எனவே கூட்டணி-அமைச்சரவையில் பங்கு என்றெல்லாம்
பேசும் அளவிற்கு விஜய்காந்த் போகாதபடி கலைஞர்
தகுந்த ” பாதுகாப்பு ” “ஏற்பாடு”களை செய்துகொண்டு விடுவார்…!

திமுகவுடன் சேருவதன் மூலமே சட்டமன்றத்தில்
சில இடங்கள் பெற முடியும் என்பதோடு, கணிசமாக
நிதிவசதியும் கிட்டும் என்பதால் –

அனேகமாக விஜய்காந்த் இறுதியாக திமுக வுடன் கூட்டு
என்கிற முடிவிற்கே வரலாம்…..!

ஆனால் இந்த முடிவை இப்போதே அறிவிப்பது
ராஜதந்திரம் அல்ல (!!!) என்பதால், முடிந்த வரை இழுத்தடித்து –
பிறகு அறிவிக்கக்கூடும்.

முதலாம் பாகம் இத்துடன் முடிகிறது….!!!

அடுத்த பாகம், விஜய்காந்த் – கூட்டணி பற்றிய தன் முடிவை அறிவித்தவுடன் தொடங்குகிறது…!!!

ஒரு பக்கம் – பாஜக அணி ( ஆமாம் அணி தான் .. எதாவது இரண்டு மூன்று சிறிய கட்சிகளாவது .கூட வருமே…!
விஜய்காந்த் இல்லை என்கிற பட்சத்தில் பாமக கூட சேரலாம்… )

அடுத்த பக்கம் – மக்கள் நல கூட்டணி …!

இன்னொரு பக்கம் – பாமக -ராமதாஸ்-அன்புமணி…!

அமர்க்களமாக அர்ச்சனைகள் நடக்கும்….!
இவ்வளவு நாட்களாக
விஜய்காந்தை கேப்டன் கேப்டன் என்று தூக்கி வைத்து
பேசிய இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் –
முக்கியமாக,
மநகூட்டணியின் புதிய முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கப்படக்கூடிய வைகோ அவர்களும் சேர்ந்து
விஜய்காந்த் அவர்களுக்கு செய்யக்கூடிய அர்ச்சனைகள்
சென்ற தேர்தலில் வடிவேலு செய்த அர்ச்சனைகளுக்கு
சற்றும் குறையாமலே இருக்கும் என்று நம்பலாம்…!!!

ஆனால் எது எப்படி இருந்தால் என்ன …
கேப்டனைப் பொருத்த வரையில் –
கையில் கணிசமான காசு,
குறைந்த பட்சம் சில எம்.எல்.ஏக்கள்…
கலைஞரை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் –
ஆளும் கட்சி உறவால் வரக்கூடிய சில வசதிகள்….!!!

ஆகவே – திருவாளர் விஜய்காந்த் அவர்கள் கலைஞருக்கு
பொன்னாடை போர்த்தும் நிகழ்வு தை பிறந்ததும்
நடக்கலாம் என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் தங்கள் கருத்தை பின்னூட்டங்களின் மூலம்
சொல்ல கேட்டுக்கொள்கிறேன்..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

42 Responses to விஜய்காந்த் எங்கே போய்ச்சேருவார்…? என்ன பெறுவார்….? அப்புறம் என்ன நடக்கும்….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  Ithu ponraோன்ற ஆய்வை விஜய்காந்த வேண்டாமென்று கருதும் அணியின் சாதக பாதகமான ஆய்வும் எதிர்பார்க்கலாமா ?. பணம் என்பது திமுக விடம் மட்டும் இருக்கிறதா.? நா.சம்பத் பேட்டியில் கூறியதுதான் யதார்த்தம். தான் வெற்றி பெறாவிட்டாலும் யார் தோற்கவேண்டும் என்ற அடிப்படை கொண்டு செயல்படுகிறார்கள்.

 2. Prakash சொல்கிறார்:

  நிதி எங்கு அதிகமா கிடைக்கிறதோ அங்கே செல்வார். திமுக அதில் தாரளமாக உள்ளதால் எவ்வளவு என்பதில் தான் இழுபறி. மற்ற கூட்டணியில் சேர்வது தற்கொலைக்கு சமம் அதில் பிரேமா அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  அப்புறம் என்ன நடக்கும் … ? விஜயகாந்தின் பேரம் முடிந்து பெட்டி பெற்று — கல்லாக்கட்டி அவர் வாழ்க்கையில் ” வசந்தம் ” வீசும் — யாராவது ஒருவர் ஆட்சி அமைத்து ஆள் அம்பு — சேனை — படையோடு பவணி வருவார்கள் … ஓட்டு போட்டவன் விட்டத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டு — இலவசங்கள் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு — அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு யார் அதிக பணம் கொடுப்பார்கள் என்று விவாதிக்க ஆரம்பித்து விடுவான் —- அப்புறம் — அந்த ஊழல் — இந்த ஊழல் என்று வழக்குகள் பதிவாகும் — ஊடகங்கள் ஜால்ரா தட்டிக்கொண்டு நான்கு ஆண்டுகளை ஓட்டுவார்கள் — நான்கு ஆண்டுக்கு பிறகு உப்புசப்பில்லாத ” விவாதங்களும் ” கருத்துக்கணிப்புகளும் போட்டு நம்முடைய கழுத்தை அறுப்பார்கள் … !!! வேறு என்ன புதுமையான ” மாற்றம் ” வந்துவிட போகிறது ….?

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் எதிர்பார்த்தது போலவே
  இருக்கிறது நண்பர்களின் re-action…!!!

  இந்த இடுகையை இதுவரை படித்தவர்களில் யாருக்குமே
  இந்த விஷயம் வித்தியாசமாகவோ,
  அதிர்ச்சியாகவோ இருக்கவில்லை….
  இந்த மாதிரி தான் நடக்கப் போகிறது
  என்று கிட்டத்தட்ட எல்லாருமே தீர்மானித்து விட்டார்கள்…!

  எல்லாருக்கும் ஏற்கெனவே தெரிந்து விட்ட
  ஒரு முடிவைத்தான் இன்னமும் எடுக்காதது போல்
  விஜய்காந்த் நடிக்கிறார்….!

  வர மாட்டாரென்று தெரிந்தே பாஜக வும் நடிக்கிறது….!
  சான்ஸே இல்லையென்று தெரிந்தும் ம.ந.கூட்டணியும் நடிக்கிறது…!

  கலைஞர் ஏமாற்றுவார் என்று தெரிந்தும்
  விஜய்காந்த் ………+…… க்காக அங்கே போய்ச்சேரப் போகிறார்…!!!

  “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ”
  என்று கவுண்டமணி சொன்னது மக்களிடம்
  நன்றாகவே போய்ச் சேர்ந்திருக்கிறது….!

  இங்கு – விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை போல்
  ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது…

  இங்கு யார் புத்திசாலி …?
  விஜய்காந்த்தா, கலைஞரா, பாஜகவா, மநகூட்டணியா…?
  இல்லை பொது மக்களா…?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  விமரிசனம் நண்பர்களின் பார்வைக்கு
  இன்று ரிலீஸான இப்படம் எந்தநேரமும் திரையரங்கை விட்டு தூக்கப்படும்.

  எனவே
  உடனடியாக இதைப் பார்த்து விடுங்கள்.. ஜென்மசாபல்யம் பெறுவீர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   உங்கள் உதவியாலும்,
   கலைஞர் செய்த புண்ணியத்தாலும் –
   ஜென்ம சாபல்யம் பெற்றேன். மிக்க நன்றி.

   “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
   என்று எல்லாரும் இதைப்பார்க்க இங்கு பதிந்த
   உங்கள் பெருந்தன்மையும், சமயோசிதமும் பாராட்டத்தக்கது…!!!. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    இது போதாது..உங்கள் தனிபதிவு ஒன்று இதற்குத்தேவை கா.மை ஜி.அதில் முதல் பின்னூட்டம் today.and.me இடவேண்டும்.என் வேண்டுகோள்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கண்பத்,

     நண்பர் டுடேஅண்ட்மீ அனுப்பினால் – நான் அதை நான் தனிப்பதிவாகவே
     போட்டு, முதல் பின்னூட்டத்தை எனதாக வைத்துக் கொள்கிறேன்.
     இன்னும் நன்றாக இருக்கும்…. 🙂

     நண்ப டுடேஅண்ட்மீ –
     உங்கள் ஸ்பெஷல் இடுகையை வரவேற்கிறேன்….!!!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      வராதுவந்த மாமணி கண்பத்ஜியும்
      காமைஜியும் ஓரணியில் நின்றுவிட்டால் என்னசெய்வது?

      சச்சின் என்றுவேறு பாராட்டிவிட்டார் கண்பத்.
      பேட்டிங் மட்டும்போதுமா? பவுலிங் போட்டே ஆகவேண்டும் என்று களத்தில் இழுத்துவிட்டுவிட்டார் காமை.

      பந்தைப் போட்டே ஆகவேண்டும்.. 🙂

      மெயில் அனுப்பியிருக்கிறேன். காமைஜிக்கு…

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப டுடேஅண்ட்மீ,

      பின்னூட்டம் தான் வந்தது…

      விஜய்காந்த் பற்றிய தனி இடுகை குறித்து
      மெயில் எதுவும் இன்னமும் உங்களிடமிருந்து வரவில்லையே…
      காத்துக் கொண்டிருக்கிறேன்…..!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      விஜயகாந்த் குறித்த இடுகைக்கு பதில் எதுவும் சொல்லவேண்டாம் என்றுதான் இருந்தேன்… சுவையான பின்னூட்டம் ஒன்று சிக்கியவுடன் விட மனதில்லை. நண்பர்கள் கண்டு மகிழ இணைத்திருக்கிறேன்.

      https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1003601_10207225723235060_6146419231599055501_n.jpg?oh=72dd34e1f166b381baa60dba58c27d94&oe=5740A5D9

     • ரிஷி சொல்கிறார்:

      இந்தப் போஸ்டர் பறையருக்கும், நாயுடுவிற்கும் இடையே உள்ள சாதிச்சண்டையைக் காட்டுகிறது. இதில் வெகுஜன அரசியல் இருப்பதாய்த் தெரியவில்லை.

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  தமிழின காவலர் … ? திருமலை தேவஸ்தானத்தோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் விளவைு… காசு என்றால் மொழி காணாமல் போக வேண்டியது… தானே…?

 7. gopalmohan சொல்கிறார்:

  kalaigar veedu theedivantha kadavul
  sankara madam aagatum saibaba aagatum
  kalaingar oru kadavul

 8. LVISS சொல்கிறார்:

  Mr Vijayakanth committed a mistake by antogonising the AIADMK– He had every thing going for him — There was not much criticism when he aligned with AIADMK –Now if he aligns with DM he will lose whatever cridibility he had built about himself — He would not get anything by aligning with BJP– He may still land a Rajya Sabha seat –He started off well as a possible alternative for the main parties but lost his way in the electoral waters —

 9. Ns raman சொல்கிறார்:

  #ஆனால் எது எப்படி இருந்தால் என்ன …
  கேப்டனைப் பொருத்த வரையில் –
  கையில் கணிசமான காசு,
  குறைந்த பட்சம் சில எம்.எல்.ஏக்கள்…
  கலைஞரை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் –
  ஆளும் கட்சி உறவால் வரக்கூடிய சில வசதிகள்….!!!#….

  have you already concluded DMK is the next ruling party?

  All we need the majority of middle class should come out for voting then only we can expect some changes in TN.

 10. G N சொல்கிறார்:

  Good Observation and Analysis Done.

 11. Narasimhan சொல்கிறார்:

  மண்டபத்தை இடித்தார்கள் என்று கூக்குரலிடும் இவர் அதற்கு எவ்வளவு நஷ்டஈடு கிடைத்து என்று சொல்லியிருக்கிறாரா ? மஞ்சள்துண்டுதான் இவரை சமாளிக்க சரியான நபர். தன் பக்கத்தில் இருத்திகொண்டே இவரை கவிழ்த்துவிடுவார் . ஆடுகிற மட்டும் ஆடவிட்டு பிறகு தான் யாரென்று தெரியப்படுத்துவார் . ஆனால் இவரை சேர்ப்பதால் மட்டும் திமுக கரை எறிவிடுமா ?

 12. Gopy சொல்கிறார்:

  enakkennavo 1980 sattamandra therdhal ninaivukku varudhu ! thimukavukku appavum sangu ippavum sangu

 13. paamaranselvarajan சொல்கிறார்:

  கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….
  Posted on மார்ச் 14, 2013 by vimarisanam – kavirimainthan …என்கிற இடுக்கையில் — அய்யா அவர்கள் …..ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டியிருப்பார் — இதில் என்ன விசேஷம் என்றால் அதை எழுதியவர் — இன்று கலைஞர் மற்றும் தி.மு.க. அரியணை ஏற துடியாய் துடிக்கும் ” திருமாவேலன் ” அவர்கள் …! அதில் அவர் ” ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான் , யார் காலையும் நக்குவான் , இதற்கு யாரம் விதி விளக்கு இல்லை — என்று தந்தை பெரியார் சொன்னார் — அதற்காக ஈழ தமிழர்களின் பிணங்களையுமா “– என்று முடித்து இருப்பார் ….!! இதை தற்போது படிக்கும் போது என்ன தோன்றுகிறது …. ? காலம் மாறி போச்சா …?

 14. உண்மை சொல்கிறார்:

  //என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போது -சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும்- கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

  இதோ! என் துணைவி ஆம்- உன் அண்ணி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் “கன்னா பின்னா” கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது. அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?//
  ………….இது அன்று தலைவர் சொன்னது.
  (அன்றைய ஆனந்த விகடன் இன்று மாறி விட்டது. )

  இன்று வேதம் ஓத வந்து விட்டார்கள் .தலைவர் சொன்ன தமிழ் போயிற்று. ஒரு சமயம் சோதிடர்களின் எச்சரிப்பு காரணமாக இருக்கலாமா? ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள் எவரையும் காணொளியில் காணவில்லையே!
  (முத்துவேல் கருணாநிதி -சூன் 3 1926-நேரம் 9:00-திருக்குவளை-80E18/13N5 -இராசி கும்பம்.)

  தலைவர் ஐயா கொள்கையை கைவிட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. பாச மனைவி நெற்றியில் இட்ட திரு நீற்றுடன் அன்று ஆரம்பமாகி தொடருகிறது.

  அரசியலில் கொள்கை என்னடா,குடும்பம் என்னடா,சொந்தம் என்னடா,சுற்றம் என்னடா,மக்கள் என்னடா, மகேசன் என்னடா..பணம் -பதவி இது தவிர வேறொன்றும் அறியேன் பராபரனே!

 15. உண்மை சொல்கிறார்:

  காணொளி திசைமாறியது.கருணாநிதி எழுதிய ராமானுஜர் தொலைக்காட்சித்தொடர் உரிமையை பெற்று தெலுங்கு தொலைக்காட்சித் தொடராக வெளியிட வந்தவர்கள் நிகழ்த்திய ரிகர்சல் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராமானுஜர் தொடரின்
   வசனத்தை கருணாநிதி எழுதுகிறார் சரி.
   தெலுங்கில் அதே தொடரை மொழிமாற்றம் செய்து வெளியிடுவதானால்,
   யாரிடம் உரிமம் பெற வேண்டும்…? யாருக்கு காசு கொடுக்க வேண்டும்…?

   கதையை மொழிமாற்றம் செய்ய கதாசிரியரின் அனுமதி தேவை – சரி.
   ஆனால், நாடகத்தை மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர்களிடம்
   தானே அனுமதி பெற வேண்டும்…? அதை படமாக்குபவர்கள்,
   அந்த தொடரின் உரிமையாளர்கள் யார் …?

   இதை தெலுங்கில் வெளியிட எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்
   என்று எங்காவது செய்தி வந்திருக்கிறதா …?
   “உளியின் ஓசை” லாட்டரி மார்ட்டின் கொடுத்தது போல்
   50-75 லட்சங்கள் …?

   இதுகுறித்த மேலதிக தகவல்களை யாராவது பார்த்திருந்தால்,
   கிடைத்தால் தயவுசெய்து இங்கு சொல்லுங்களேன்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 16. paamaranselvarajan சொல்கிறார்:

  பணம் எதுவும் வாங்காமல் டப்பிங் உரிமையை இலவசமாக கொடுப்பாத பத்திரிக்கை செய்தி —- உண்மையா … என்பது போக — போக வெளிவருமா …. ? //திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர் உள்ளிட்டவைகளை கருணாநிதிக்கு பரிசளித்த அவர்கள், ஸ்ரீராமானுஜரின் காவியத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய அனுமதி கோரினர். அதற்கு சம்மதம் தெரிவித்த கருணாநிதி, ராமானுஜர் தெலுங்கு டப்பிங் உரிமையை இலவசமாக கொடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி அனந்தகுமார், ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றினை நல்ல முறையில் டப்பிங் செய்து, அவரின் வாழ்க்கை வரலாறு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கும் வகையில் கொண்டு சேர்ப்போம் என்று தெரிவித்தார்.
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sri-ramanujar-serial-telugu-dubbing-on-ttd-tv-channel-243967.html#ச்லிடெ182365 //

 17. உண்மை சொல்கிறார்:

  ராமானுஜர் தொடரை குட்டி பத்மினியின் வைஷ்னவி மீடியா தயாரித்து வெளியிடுகிறது. தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்ப அனுமதி கோரி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்திக்க,
  ராமானுஜர் தொடர் உரிமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு சொந்தமானது என்பதாலும் தொடரை கலைஞர் தொலைக்காட்சி வெளியிடுவதாலும், அதன் உரிமையாளர் கருணாநிதி பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் அனுமதி கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

 18. உண்மை சொல்கிறார்:

  பணப்பரிமாற்றம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அரசியலில் இவையெல்லாம் சகசம் என மக்கள் ஒதுங்கி விடுகிறார்கள். இரண்டு வேட்டி சட்டையுடனும்,64 ரூபாய் சம்பளம் பெறும் நாடக நடிகையுடனும் திருக்குவளையில் இருந்து வந்தவர் பெரிய குடும்பத்தை கதை வசனம் எழுதி காப்பாற்றி இருக்கிறார். அதுவும் மேலே சொன்னது போல் சில சினிமாக்களுக்கு தான் பணம் வாங்கவில்லை என்றும் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

  அப்படியானால் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? கோபாலபுரம் வீடு மட்டுமே என் சொத்து என்று சொல்வதை மக்கள் நம்புகிறார்கள்.மக்களே நம்பி கண்ணை மூடிக் கொள்ளும் போது– இதன் முடிவு பிரபலங்களின் சாதாரண லஞ்ச ஊழல் சொத்துச் சேர்ப்பு இன்று scientific corruption ஆக மாறி இருக்கிறது.

 19. உண்மை சொல்கிறார்:

  சாரதா குழுமம் ஊழலை வழக்காக மக்கள் பார்க்கிறார்கள். அதன் பின்னே எத்தனை தற்கொலைகள், கண்ணீர்,மன உழைச்சல் இதையெல்லாம் மக்கள் கண்டு கொள்வதில்லை. அரசியலில் இவையெல்லாம் சகசம் என்று படித்து விட்டு கண்ணை மூடிக் கொள்கிறார்கள்.

  தேர்தலின் போதாவது மக்கள் கண்களைக் திறக்க வேண்டும்.

 20. ரிஷி சொல்கிறார்:

  என்னுடைய கணிப்பைப் பாருங்கள். என்னைப் பொறுத்தவரை விஜயகாந்த் ம.ந.கூட்டணி பக்கம் சாயவே அதிக வாய்ப்புள்ளது.
  பின்வருமாறு அணிகளும், ரிசல்ட்டும் அமையும்.

  அதிமுக = 130
  திமுக + காங் = 40
  மதிமுக + கம்யூ + விசி + தேமுதிக + தமாக = 60
  பாஜ + பாமக = 4

  இந்த நான்கு அணிகள்தான் களத்தில் இருக்கும். இத்தனை நம்பர்தான் வெல்லும்.

  விஜயகாந்த் ம.ந.கூ பக்கம் சாயும்போது வாசனும் அவர் பக்கமே சாய்வார். ஒருவேளை திமுக பக்கம் விஜயகாந்த் போனால் (அப்படி நடக்க 100% வாய்ப்பில்லை), வாசன் நிச்சயம் அதிமுகவுடன் இணைவார், ஜெ. வெறும் பத்து சீட்டுகள் கொடுத்தால் கூட.

  ஒருவேளை அவ்வாறு அமைந்துவிட்டால்? பின்வருமாறு ரிசல்ட் அமையும்.

  அதிமுக + தமாக = 155
  திமுக + காங் + தேமுதிக = 67
  மதிமுக + கம்யூ + விசி= 4
  பாஜ + பாமக = 8

  இதில் தனித்து நிற்கப்போகின்ற நாம் தமிழர் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும். சீமான் மட்டும் டெபாசிட் வாங்கலாம்.

  சமக, முலீ, மூமுக,இஜக போன்றவை சில்லறைகள் பெரிய கட்சிகளின் சின்னத்தில் நிற்கப்போவதால் தனித்த கட்சிகளாக பார்க்கவில்லை.

  அடுத்த ஐந்தாண்டுகளில் ம.ந.கூ சரியான அரசியல் செய்தால், இதற்கடுத்த தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடிக்க நெருங்க வர வாய்ப்புள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   உங்கள் கருத்துக் கணிப்பு ஓரளவு நன்றாகவே வந்திருக்கிறது….

   அதில் இரண்டாவது option தான் நடைமுறையில் நடக்கும் என்று எனக்கு தோன்றுகிறது…
   விஜய்காந்த் ” தனக்கு ” எது “லாபகரமானதோ ” அதைத்தானே செய்வார்…?

   விஜய்காந்த் திமுக பக்கம் போனால் –
   தமாகா மட்டுமல்ல, மக்கள் நலக்கூட்டணியிலிருந்து
   இன்னும் ஒன்றிரண்டு கட்சிகளும் கூட அதிமுக கூட்டணிக்கு போகக்கூடும்…!

   எண்ணிக்கைகள் குறித்து ….. இன்னமும் கொஞ்சம் போகட்டுமே…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    500 C கூட்டணி அறிவிப்புக்கும்
    வென்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச அமைச்சர் பதவி-3ம்,
    தினசரி 1C பேட்டாவும் என்று பேச்சுவார்த்தை தகைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. (அப்பாடா.. துணைமுதல்வர் பதவி தப்பித்தது, அது ஸ்டாலினுக்குத்தான்.)

    விரைவில் முகவும் வி.காந்த்தும் ஒரே மேடையில் பிரச்சாரம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ஒருவேளை, இதைவிட அதிகமாக பாஜகவிடம் எதிர்பார்க்கிறரோ என்னவோ?

   • ரிஷி சொல்கிறார்:

    ம.ந.கூ உடையுமானால் கீழ்க்கண்டவாறு கூட்டணியும், ரிசல்ட்டும் அமையும்.

    அதிமுக + தமாக + இ.கம்யூ = 80
    திமுக + காங் + தேமுதிக + மார்சிஸ்ட் + விசி = 154
    மதிமுக தனித்து விடப்படும்.
    பாஜ, பாம – அட்ரஸ் எங்கே என்று தேடவேண்டும்

    ஆகவே இவ்வாறு நடக்க ஜெ. விட மாட்டார். ம.ந.கூ. இருக்க வேண்டும். ஆனால் வலுவின்றி இருக்க வேண்டும். இதைத்தான் அவர் விரும்புவார்.

 21. ரிஷி சொல்கிறார்:

  என் தனிப்பட்ட எண்ணம் ம.ந.கூ. இன்னும் வலுப்பெற வேண்டும். அது திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக விளங்க வேண்டும். அது தொடர்ச்சியாக நல்ல அரசியல் செய்ய வேண்டும். அப்போது அடுத்த தேர்தலில் மகத்தான சக்தியாக உருவெடுக்கலாம். மேலும் பல ஜனநாயக சக்திகள் தங்கள் அளவில் உத்வேகம் பெற அது நல்வழி வகுக்கும்.

  ஒருவேளை டுடேஅன்ட் மீ சொல்வதுபோல விஜயகாந்த் திமுக பக்கம் சென்றால், ம.ந.கூ உடைந்தால்!!!??

  அரசியல் பேசுவதே சுத்த வேஸ்ட்!!!!

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   கா.மை அவர்களுடைய analysis சரிதான். என்னுடைய எண்ணம்.. மக்கள் நலக் கூட்டணி என்பது ஒரு எலெக்ஷன் consideration கிடையாது. தமிழ் மக்கள் ஒரு தலைவருக்கு ஒரு கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். திரு.ரஜினி அவருடைய கிரெடிபிலிடியை இழந்துவிட்டார். ஒருவேளை, சகாயம் தலைமை தாங்கினால், ம.ந.கூட்டணி புதிய வாக்காளர்களைக் கவரும். ஆனாலும் எந்தத் தொகுதியிலும் வெற்றி கிட்டாது (1-2 தொகுதிகளை நான் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை). அவர்கள் 20 தொகுதிகளில் (சகாயம் அல்லது ரஜினி தலைமை தாங்கினால்) வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் வாங்கியிருப்பார்கள். பாமக, 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். அது, வன்னியர் வாக்குகளைத்தவிர, நடுனிலை வாக்குகளை இந்தத் தொகுதிகளில் வாங்கும். ஜெ ஆட்சிக்கு எதிராக பொதுவாகக் கிளர்ந்து எழும் வாக்குகளையும், வெள்ளச்சேதத்தினால் எழுந்த அதிருப்தி காரணமாகவுள்ள வாக்குகளையும் இழப்பார். அவர் த.மா.கா (10 தொகுதிகள்), இஸ்லாமியக் கட்சிகளுக்கு 3-5, கொங்கு கட்சிகளுக்கு 3-5 கொடுத்துக் களம் இறங்குவார் என நினைக்கிறேன். அவருக்கு ம.ந.கூட்டணி உடையக்கூடாது. கம்யூனிஸ்டுகளால் வரும் 3 சதவீத ஓட்டுக்கள் தேவையில்லை. திமுக+விஜயகாந்த்+காங்கிரஸ்+முஸ்லீம் கட்சிகள் என்று களத்தில் இறங்கும். கருணானிதிதான் முதல்வர் என்ற முழக்கம் இருக்கும். விஜயகாந்த்-55, காங்கிரஸ் 20, உதிரிகள் 10 போக, 140+ தொகுதிகளில் திமுக போட்டியிடும். அதிமுக அணிக்கு-110-140, திமுக-70-90 என்றுதான் ரிஸல்ட் இருக்கும். தலைமைகளுக்குச் சிக்கல் இல்லையெனில் (உடல் நலத்தில்), அதிமுக ஆட்சி அமைக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். தேர்தல் முடிந்தவுடன் முதல் ஆளாக திருமா திமுகவுடன் சேர்வார்.

   இந்தத் தேர்தலுடன், த.மா.க, தே.தி.மு.க போன்றவை மிகவும் வலுவிழக்கும் என்று நம்புகிறேன்.

 22. today.and.me சொல்கிறார்:

  2ஜிக்களும் மற்ற நண்பர்களுக்கும் வணக்கம்.

  பாட்டாவே பாடிட்டேன்..
  கருத்துச்சொல்ல விழைவோர் சொல்லலாம்.
  🙂

  https://todayandme.wordpress.com/2016/01/11/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8/

  • ரிஷி சொல்கிறார்:

   வாழ்க வாழ்க 🙂

   ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன். மந்திரங்களுக்கு உயிர் உண்டோ இல்லையோ, ஆனால் எஸ்பிபியின் குரலுக்கு எப்பேர்ப்பட்ட மந்திரங்களுக்கும் உயிர்ப்பு வந்து விடும் போலிருக்கு. வாவ்…

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப ரிஷி
    அதனால் தான் ‘மயக்கும் குரலில்……….’ என்று சொன்னேன். ஆனால் அவர் அதைப் பாடி வெளியிட்டபோது வந்த விமரிசனங்கள் கொஞ்சமல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   உங்கள் உழைப்பை என்ன சொல்லி, எப்படி பாராட்டுவது
   என்று தெரியவில்லை…

   எங்கெல்லாமோ பயணம் செய்து, எதை எதையோ தேடி,
   அதில் மிகப் பொருத்தமானதை இங்கு கொண்டு வந்து சேர்த்து,
   நாங்கள் அனைவரும் பார்க்க தந்தமைக்கு
   வந்தனங்கள் பல.

   நான் ஏற்கெனவே பலமுறை சொன்னது போல் –
   நீங்கள் விமரிசனம் தளத்திற்கு கிடைத்துள்ள ஒரு கொடை…
   உங்கள் பணி தொடர்ந்து சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.

   நன்றியுடன்,
   காவிரிமைந்தன்

 23. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Hats off to U Mr.Today & me. Who R U and where were U so long before coming to this site. It is
  unfortunate that U people have not come to lime light so far. But I know for sure that it is not too
  far away.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.