கலைஞர் கருணாநிதியும் – திருவிளையாடல் தருமியும் ….!!!

dharumi -nagesh

எதிர்பாராமல் திடீரென்று ஒரு செயல் நிகழ்கிறது.
அதனால் தனக்கு சாதகமும் ஏற்படலாம் – பாதகமும் ஏற்படலாம்….
சாதகமா அல்லது பாதகமா என்பது இப்போதைக்கு தெரியவில்லை…
தெரிந்து கொள்ளவும் முடியவில்லை…!!!
அது தனக்கு சாதகமாக ஆனால் தேவலையே,
ஆனால் ஆகுமா என்கிற ஆவல்…

ஒரு வேளை பாதகமாகி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ..
தான் வேண்டுவது இதனால் நடக்குமா – நடக்காதா என்கிற
அச்சம், கவலை, பயம், பரபரப்பு –

திருவிளையாடல் படத்தில், தருமியின் வேடத்தில் – நாகேஷ் அவர்கள்
“அய்யோ – அய்யோ – ஆயிரம் பொற்காசுகள் பரிசு கிடைக்குமோ-
கிடைக்காதோ ” என்று புலம்பும் காட்சியை நம்மில் ரசிக்காதவர்களே
இருக்க முடியாது…

இதோ கலைஞரின் வடிவில் இன்னொரு தருமி சீன் –
( பாவம் இந்த வயதில் கலைஞருக்குத்தான்
பொது விஷயங்களில் எத்தனை கவலை…!!! )

நீதிபதிகள் மாற்றம் குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள நீண்ட
ஆவல் -அறிக்கையிலிருந்து இறுதிப்பகுதி –

( கீழே அறிக்கையினூடே சொல்லப்படும் எந்த கருத்துக்களையும்
தான் கூறுவதாக ஆகி விடக்கூடாதே என்கிற கவனத்துடன்,
“பேசப்படுகிறது” “சொல்லப்படுகிறது” ” நம்பப்படுகிறது” etc. etc……)

——————————————————————–

…….இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில்
7-1-2016 அன்று இந்த வழக்கு விசாரணை குறித்து வெளியிடப்பட்ட
அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே. அகர்வால் அவர்கள் மாற்றப்பட்டு,
அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவராய் நியமிக்கப்பட்டிருப்பதாகக்
கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த
நேரத்தில், இந்த முக்கியமான வழக்கில் நீதிபதி மாற்றம் என்பது
வழக்கறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப்
பேசப்படுகிறது.

மாற்றப்பட்டுள்ள நீதிபதி ஆர்.கே. அகர்வால் அவர்கள் சென்னை
உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்றும்,
நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்த அவர், தற்போது இந்த
வழக்கில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால்தான்,
அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் மத்தியில்
ஒரு உரையாடல் நிலவுகிறதாம்.

நீதிபதிகள் மாற்றம் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தின் சார்பில்
6.1.2016 அன்று “Elimination List” பட்டியல் ஒன்று வெளியானது.
உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிக்
கிடப்பதால், நீதிபதிகளுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால்,
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு
விசாரணை 8-1-2016 அன்று நடைபெறாது என்றும் உச்ச நீதிமன்றப்
பதிவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாகவும்
செய்தி வந்தது.

ஆனால் 7.1.2016 அன்று இந்தச் செய்தியைத் தொடர்ந்து
“Supplementary List for Friday the 8th January, 2016” என்ற பட்டியலில்,
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கினை,
விசாரணைப் பட்டியலிலே இணைத்து உச்ச நீதிமன்றம்
வெளியிட்டிருக்கிறது.

இதுபோன்ற செயல்பாடுகள் என்ன காரணத்திற்காக
இப்படியெல்லாம் நடைபெறுகின்றன? எதற்காக 8ஆம் தேதி
விசாரணைக்காகப் போடப்பட்டிருந்த வழக்கினை நீக்கினார்கள்? 🙂
பிறகு எதற்காக அதே நாளில் அந்த வழக்கினைச் சேர்த்தார்கள்? 🙂

முதலிலே இரண்டு குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
இந்த வழக்கினை விசாரிப்பார்கள் என்று அறிவித்து
விசாரணையையும் தொடங்கினார்கள். பிறகு தற்போது
திடீரென்று ஏன் ஒரு நீதிபதியை மாற்றியிருக்கிறார்கள்? – 🙂
என்பதையெல்லாம் பார்க்கும்போது
சற்றுக் குழப்பமாகத்தான் இருக்கிறது….!!!

இருந்தாலும், சட்ட நெறிமுறைகளின் தலைமைப்பீடமான உச்ச நீதி மன்றம்
– ஏதோ ஒரு காரணத்திற்காக – ( !!! ) 😦
இந்த நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவே செய்திருக்கும் என்பதிலும்,
சட்டத்தின் வழிமுறைகளில் எந்த முனையிலிருந்தும் எவ்விதத்
தலையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்காது என்பதிலும்,
நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கெல்லாம் ( ??? ) 😦
நம்பிக்கை இருக்கவே செய்கிறது. (…!!! ) 😦 😦

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கலைஞர் கருணாநிதியும் – திருவிளையாடல் தருமியும் ….!!!

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  கலைஞர் = தருமி
  கவிதைப் போட்டி – சுப்ரீம் கோர்ட் வழக்கு
  ஆயிரம் பொற்காசுகள் பரிசி = கலைஞருக்கு சாதகமான தீர்ப்பு

  கொன்னுட்டீங்க கே.எம்.சார்.
  ஆனாலும் இந்த மனிதரை 92 வயதில் இந்த அளவிற்கு
  எக்சைட் ஆக விடக்கூடாது – சட்டு புட்டென்று தீர்ப்பு வந்து விட்டால் –
  ஒரு முடிவு வந்து விடும் 😀

 2. thiruvengadam சொல்கிறார்:

  தங்களின் முதல் இரண்டு பத்திகள் ஜெ வுக்கும் பொருந்துமல்லவா ?. மேலும் நடப்பை விரிவாக கூறியுள்ளார். பல்திசை வாய்ப்புள்ள ஊடகமூலம் உறுதிபெறாத செய்திகளில் ஒன்று : அகர்வால் சுயவிருப்பம் இந்த நிகழ்வு . என் டிடிவி பிரணாய் ஆரம்பித்து வைத்த ” ஸ்விங் ” என்பது தமிழக இருபெரும் கட்சிகளுக்கும் அவர்கள் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை நோக்கி.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  இரண்டு லட்சம் டன்னுக்கு மேலான குப்பைகளை சென்னையில் மட்டுமே அகற்றியது — தொற்றுநோய் பரவாமல் தடுத்தது — போக்குவரத்து வழித்தடங்களை மறு சீரமைத்தது — உண்ண உணவு – இருக்க இடம் – உடுக்க உடை போன்றவைகளை துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தது — மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் — சீருடைகள் — சான்றிதழ்கள் — ரேஷன் கார்டு — பத்திரங்கள் — பட்டாக்கள் போன்ற அதிமுக்கிய ஆவணங்கள் இலவசமாக கிடைக்க செய்தது — இலவச போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தது — முத்தாய்ப்பாக முதல் தவணையாக பதினான்கு லட்சம் பேருக்கு — 700 — கோடி ரூபாய் நிவாரணம் ஒரே குறிப்பிட்ட நாளில் கிடைக்க நடவடிக்கை எடுத்தது இன்னும் எவ்வளவோ …. செய்ததை பற்றி …. ? இந்த துரித ஏற்பாடுகளை செய்த அரசையும் — அரசு அதிகாரிகளையும் ” ஒரு வரி ” பாராட்ட ஈர மனம் இல்லாத — குறைகளை மட்டுமே பெரிதாக கூறிகொண்டுள்ள ” பல அமைப்புகளையும் — ஊடகங்களையும் — அரசியல் தலைவர்களையும் ” — என்னவென்று … கூறுவது … ?

  • ravi சொல்கிறார்:

   ///சான்றிதழ்கள் — ரேஷன் கார்டு — பத்திரங்கள் — பட்டாக்கள் போன்ற அதிமுக்கிய ஆவணங்கள் இலவசமாக கிடைக்க செய்தது !!
   முத்தாய்ப்பாக முதல் தவணையாக பதினான்கு லட்சம் பேருக்கு — 700 — கோடி ரூபாய் நிவாரணம் ஒரே குறிப்பிட்ட நாளில் கிடைக்க நடவடிக்கை எடுத்தது
   ///

   சான்றிதழ்கள் — ரேஷன் கார்டு — பத்திரங்கள் — பட்டாக்கள் போன்ற அதிமுக்கிய ஆவணங்கள் இலவசமாக கிடைக்க செய்தது —> அய்யா எந்த உலகத்தில் உள்ளார் .. ?? போய் பாருங்கள் அய்யா ஒவ்வொரு அலுவலகத்திலும் நடக்கும் கூத்துக்களை ..

   நல்ல காமெடி ஜி .. மத்திய அரசு ,நேரடி பண விநியோகம், அதுவும் வங்கிகள் மூலம் செய்ததால் , இங்கே ஆளும் கட்சிகளுக்கு மற்றும் கட்சிகாரர்களுக்கு கடுப்பு .. ஆளும் கட்சி மூலம் பணம் கொடுத்தால் 10 % முதல் , எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆட்டையை போடலாம் .. இப்போது அதற்கு ஆப்பு .. வங்கிகளில் நல்ல கூட்டம் ..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப பாமரன் செல்வராஜன்,

  “வதந்தி”களை சுலபமாக நம்புகின்றார்கள் மக்கள்.
  “தீ”யைப் போல் பரவுகிறது வதந்தி…!
  வதந்திகளை நம்பும்போது ஈகோ குறுக்கிடுவதில்லை…!

  ஆனால் ” உண்மை ” …?
  யாரும் லேசில் நம்ப மறுக்கிறார்களே…!
  முன்னதாகவே மனதில் புகுந்து கொண்ட கருத்து என்கிற ஈகோ
  புதிய உண்மைகளை/கருத்துக்களை ஒப்புக்கொள்வதைத் தடுக்கிறது….

  இன்னும் காலம் பிடிக்கும்…
  ஈகோவை எல்லாம் மறந்து விட்டு,
  தான் ஏற்கெனவே தீர்மானித்ததை எல்லாம் ஒதுக்கி விட்டு,
  அமைதியாக, புதிதாக -சிந்தித்தால் –
  உண்மை புரியும்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. thiruvengadam சொல்கிறார்:

  நண்பர் பாமரன் பதிவு அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் ஜெ வுக்கு பாராட்டு தீர்மானமாக பிரேரிக்ககூடிய அளவு சிறப்பானது. அரசுத்தலைமை அதுவும் ஜனநாயகமுறையில் உள்ள ஒன்று குடிமக்கள் அணுகக்கூடிய நிலை இருக்கிறதா ? பலமொழி அறிந்தவர். எந்தகேள்விக்கும் பதில் அளிக்கும் திறமை உள்ளவர். விகாந்த் எழுப்பிய பிரட்சனைக்கு பின் தொலைக்காட்சி நேரலை மூலம் அவர் முகத்தில் கரிபூசியிருக்கலாம். குதிரை வெளியேறியபின் லாயத்தை பூட்டுவது போல் அதிமுகவினர் அச்சமயம் விளம்பர ஆர்வச்செயல் தடுக்காமை. கா.மை அவர்களின் முத்தாய்ப்பு வார்த்தை ” தீர்மானித்து ” என்பதில் புதிய சிந்தனை ஆதரவு மற்றும் குறைகாண்போர் இருதரப்பிலும் வரவேண்டும்.

  • paamaranselvarajan சொல்கிறார்:

   அய்யா … திருவேங்கடம் அவர்களே … ! // நண்பர் பாமரன் பதிவு அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் ஜெ வுக்கு பாராட்டு தீர்மானமாக பிரேரிக்ககூடிய அளவு சிறப்பானது. // நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல — இருக்குமானால் நன்றி ….? அதாவது நடந்ததை குறிப்பிட்டு எழுதுவதில் தப்பு எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன் — தாங்கள் நிறைய படிக்கிறீர்கள் — நிறைய நடைமுறைகளை பார்க்கிறீர்கள் — பார்த்தும் இருப்பீர்கள் ….! அப்படி இருந்தால் நடு நிலையோடு — வேறு எங்காவது — ஏன் இதே தமிழ்நாட்டில் பல இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்ட போது —
   பலர் முதல்வராக இருந்து இருப்பார்கள் — அவர்களில் இவ்வாறாக சிறப்பாக செயலாற்றியவர்கள் யாராவது இருந்தால் நீங்கள் குறிப்பிட்டாலும் தவறு ஒன்றும் இல்லை —- !! உங்களுடைய பெரும்பாலான ” பின்னூட்டங்கள் ” இடுக்கைக்கு எதிராகவோ அல்லது என்ன கூற வருகிறீர்கள் என்பதும் புரியாததாகவோ தான் இருக்கின்றன …. மற்ற முதல்வர்கள் எல்லோரையும் மக்கள் இலகுவாக சந்திக்க முடிந்ததை போலவும் — நேரலையில் சட்டசபை நிகழ்சிகளை ஒளிபரப்பி வெளிச்சம் போட்டு காட்டியதை போலவும் — ஜெயா அவ்வாறு செய்யாமல் இருப்பதை போலவும் ” ஒருதலை ” பட்சமான கருத்தை நீங்கள் தெரிவிப்பது — உங்களின் சொந்த கருத்து — அதைபற்றி கூற ஒன்றுமே இல்லை …. நல்லது நடந்தால் பாராட்டுங்கள் …. மக்களுக்கு பயன்படும் …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.