அதிகப்படியான சமாதிகளை திறந்து வைத்தவர் கலைஞர் …!!! திமுக அமைப்பு செயலாளர் எச்சரிக்கை – திமுக ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறிகள் கிடைத்து விட்டன….!!!

rs bharathi with kalaignar

திருச்சியிலிருந்து –

திமுக அமைப்புச் செயலாளரும், சட்டப்பிரிவு செயலாளருமான
திரு.ஆர்.எஸ்.பாரதி நேற்றிரவு திருச்சியில் பேசினார்….
உற்சாக மழையில் திளைத்த அவரது உரையிலிருந்து
இந்த தலைப்புக்கு தொடர்புடைய சில பகுதிகள் மட்டும் கீழே –
(முழு உரையையும் கேட்டால் புல்லரித்துப் போகும்….!!!)

————————-

கருணாநிதியை தள்ளுவண்டி என்று அதிமுகவினர் பேசுகிறார்கள்..
ஜெயலலிதாவும் இதை ரசிக்கிறார்….
ஒன்று சொல்கிறேன்…. கருணாநிதியின் ஜாதகம் மோசமானது.
அவரை பழித்து பேசியவர்களுக்கு, கருணாநிதி தான் முதல் மலர்வளையம்
வைப்பார். தமிழகத்தில் உள்ள பல சமாதிகளை திறந்து வைத்தவரும்
அவர்தான். இன்னும் எத்தனை பேருக்கு மலர் அவளையம் வைத்து
சமாதிகளை தீறக்கப் போகிறாரோ தெரியவில்லை….!!!

விஜய்காந்த்தின் “த்தூ” குறித்து –

விஜய்காந்த் நம்முடன் வரப்போகிறார். அதனால் இனிமேல் யாரும்
அவரைத்திட்டி பேச வேண்டாம்.
விஜய்காந்த் நிருபர்களைப் பார்த்து
“த்தூ” என்று துப்பி விட்டார் என்று போராடுகிறார்கள். நிருபர்கள்
அவரிடம் கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டார்கள். பதில் சொல்ல
விஜய்காந்த் வாயைத்திறந்தபோது “கொசு” புகுந்து விட்டது ……
கொசுவை வெளியில் துப்பாமல் நிருபர்கள் மூஞ்சியிலா துப்ப முடியும் ?

ராசியான நம்பர் -6 –

1996, 2006 என்று 6-ல் முடியும் ஆண்டுகளில் எல்லாம் முதல்வராக
பொறுப்பு ஏற்பார் கருணாநிதி. 2016-லும் 6-வது முறையாக பதவியேற்பார்.
6-ம் நம்பர் கருணாநிதிக்கு ராசியான நம்பர்.

போலீஸ் ” சல்யூட் ” –

திமுக தலைமையில் வலுவான கூட்டணி உறுதியாகி விட்டது.
காங்கிரஸ் வந்தாச்சு. விஜய்காந்த்தும் வந்து விடுவார்…!

சென்னையில் போலீசார் எனக்கு இப்பவே ” சல்யூட் ” அடித்து வழி விட
ஆரம்பித்து விட்டார்கள். எப்ப போலீஸ் நமக்கு சல்யூட் அடிக்க
ஆரம்பிக்கறாங்களோ – அப்ப ஆட்சி மாற்றத்திற்கு தமிழகம் தயாராக
ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அதிகப்படியான சமாதிகளை திறந்து வைத்தவர் கலைஞர் …!!! திமுக அமைப்பு செயலாளர் எச்சரிக்கை – திமுக ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறிகள் கிடைத்து விட்டன….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  விகடன் இன்று பொருத்திப்போட்ட திரியான நாஞ்சில் சம்பத் நிலை , நடராஜுக்கு ஒத்தநிலை என்றால் , அதிமுகவில் இது போன்ற பேச்சுக்கள் கேட்கலாம். அம்மா பாராமுகம் காட்டினால் , அப்பாவின் அரவணைப்பில் , நிகழ்வுகள் ஆலந்தூர் பாரதி பேச்சுக்கள் வழிமொழியப்படும்.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  ஆமா … ஆமா … // தமிழகத்தில் உள்ள பல சமாதிகளை திறந்து வைத்தவரும்
  அவர்தான். இன்னும் எத்தனை பேருக்கு மலர் அவளையம் வைத்து
  சமாதிகளை தீறக்கப் போகிறாரோ தெரியவில்லை….!!! // … இதில் குறிப்பிட தக்கவர்கள் தி.மு.க. வை சேர்ந்தவர்கள் தான் — என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது …. மச்சான் ” முரசொலி மாறன் உட்பட “

 3. today.and.me சொல்கிறார்:

  500 C கூட்டணி அறிவிப்புக்கும்
  வென்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச அமைச்சர் பதவி-3ம்,
  தினசரி 1C பேட்டாவும் என்று பேச்சுவார்த்தை தகைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. (அப்பாடா.. துணைமுதல்வர் பதவி தப்பித்தது, அது ஸ்டாலினுக்குத்தான்.)

  விரைவில் முகவும் வி.காந்த்தும் ஒரே மேடையில் பிரச்சாரம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  ஒருவேளை, இதைவிட அதிகமாக பாஜகவிடம் எதிர்பார்க்கிறரோ என்னவோ?

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  எப்படியோ ” கல்லா ” நிரம்பிவிடும் … அப்படித்தானே …. !!!

 5. thiruvengadam சொல்கிறார்:

  இது போன்ற பேரம் சென்றமுறை தனித்து நின்றவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்களா ?

 6. shiva சொல்கிறார்:

  பகுத்தறிவுத் திலகங்கள்! ஜாதகம், நம்பர் ராசி. இன்னும் என்ன பாக்கி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.