“துக்ளக்” ஆசிரியர் “சோ”வின் இன்றைய அரசியல் கருத்துக்கள் …!!!

cho

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையிலிருந்த
ஆசிரியர் சோ அவர்கள் மீண்டும் உற்சாகமாக துக்ளக் வார இதழில்
கருத்துகள் கூற ஆரம்பித்து விட்டார்…

இன்றைய தினம் வெளிவந்துள்ள துக்ளக் இதழில் அவரது சில
முக்கிய கருத்துக்கள் கீழே –
( இந்த பதில்கள் மிகவும் யதார்த்தமாக ( practical- ஆக) இருப்பதாகவே
நான் கருதுகிறேன்…! )

———————————-
கேள்வி – அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜய்காந்த்
தலைமையில் மக்கள் நலக்கூட்டணி, பாஜக+பாமக கூட்டணி என்று
நான்கு கூட்டணி அமைந்தால், எந்த கூட்டணி வெற்றி அடையும் என்று
கணிக்கிறீர்கள்..?

பதில் – நான்கு கூட்டணி என்றால், எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறும்.
அது ஆளும் கட்சிக்குத்தான் லாபம். ஆகவே, நீங்கள் சொல்கிற மாதிரி
கூட்டணிகள் அமைந்தால், அப்போது அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள்
கூடும்.
————————————

கேள்வி – அதிமுக அரசின் மீது மக்களுக்கு கோபம் இருப்பதாக
நினைக்கிறீர்களா ? வரும் தேர்தலில் அது எதிரொலிக்குமா ..?

பதில் – கோபம் இருக்கலாம். ஆனால் “இந்த அரசு போக வேண்டும்”
என்று தீர்மானிக்கும் அளவுக்கு இருக்காது. அப்படி மக்கள் தீர்மானத்துக்கு
வர, எதிரே ஏற்கத்தக்க ஒரு நபர் இருக்க வேண்டும். இன்று அப்படி
யாரும் இல்லை. ஆகையால் அதிமுகவுக்கு கவலை இல்லை.

—————————————

கேள்வி – 2016 சட்டசபைத் தேர்தலில், நீங்கள் எந்த கட்சிக்கு
ஆதரவு அளிப்பீர்கள்…?

பதில் – பலவீனமாக காட்சி அளிக்கும் திமுகவுக்கு –
எந்த கட்சி மீண்டும் உயிரூட்டாதோ – அந்த கட்சிக்கு …!!!

———————————————–

இன்றைய இரண்டு கார்ட்டூன்கள்-

thug-2

thug-1

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

“துக்ளக்” ஆசிரியர் “சோ”வின் இன்றைய அரசியல் கருத்துக்கள் …!!! க்கு 2 பதில்கள்

  1. johan paris சொல்கிறார்:

    //ஆகையால் அதிமுகவுக்கு கவலை இல்லை//- சோவின் தாகமும் அதுதானே!

  2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    சோ என்ன சொல்லியிருக்கிறார் என்று எல்லோரும் பார்க்க வைக்கிறார். அதுதான் அவரது கிரெடிபிளிடிக்கு சாட்சி. நலமுடன் இருக்கட்டும். நேர்மையான கருத்துக்களைத் தொடர்ந்து கொடுக்கட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.