ஜல்லிக்கட்டுக்கு தானே தடை – நாம் ஏறுதழுவலுக்குப் போவோம் …!!!

ஏறு தழுவல் ... கல்வெட்டு

நேற்றைய தினமணி நாளிதழின் தலையங்கத்திலிருந்து
சில பகுதிகள் கீழே –

———————————————————————-

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்ற செய்தி வந்தவுடனேயே இதற்காக
அனைத்துக் கட்சிகளும் மனமாச்சரியங்களை மறந்து மத்திய அரசைப்
பாராட்டின. அதுவே கண் திருஷ்டியாக அமைந்துவிட்டது போலும்!
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குப் புகழ்மாலைகள்
சேர்ந்தன. அந்தப் பூக்கள் நிறம் மாறும்முன்பாக, தடை வந்து
முட்டித்தள்ளிவிட்டது.

அலங்காநல்லூர், சூரியூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு
நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில்,
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அளித்த அனுமதிக்கு
இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இப்படி அவசர
அவசரமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அதை உடனடியாக
உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பும் அளிக்கும்
என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழக அரசு தாக்கல்
செய்திருந்த “கேவியட்’ மனுவை உச்சநீதிமன்றம் ஏன் பொருட்டாக
எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்பது ஆங்கில நாளிதழ்களில் குறிப்பிடுவதைப்போல
காளையை அடக்குதல் (bull taming) அல்ல; காளையை விரட்டிச் சென்று
அதன் கொம்பில் கட்டப்பட்ட சன்மானத்தை வீரமுள்ளவர்
எடுத்துக்கொள்ளுதல் மட்டுமே.

இதில் காளையைக் காயப்படுத்துவது கிடையாது என்று வழக்குரைஞர்கள்
தெரிவித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில்
பதில் அளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் கொடுத்துள்ளது நீதிமன்றம்.
அதற்குள் மாட்டுப் பொங்கல் கடந்துபோய்விடும்.

இந்த விவகாரத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சரியான
அணுகுமுறையைக் கையாளவில்லை என்பதால்தான் இத்தனை குழப்பமும்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும்
அணுகவில்லை, சட்டரீதியாகவும் அணுகவில்லை.

காட்சிப்படுத்தலுக்குத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில்
இருந்து மத்திய அரசு காளையை நீக்கியிருக்க வேண்டும். “குரங்கு, புலி,
சிங்கம், சிறுத்தை, கரடி ஆகியன காட்டு விலங்குகள். காளை வீட்டுப்
பிராணி. மேற்கண்ட பட்டியலுக்குப் பொருத்தமில்லாதது’ என்ற நியாயமான
வாதத்தை முன்வைத்து இதைச் செய்திருக்கலாம்.

சட்டரீதியில் இந்தப் பிரச்னையை அணுகுவது என்ற முடிவை
மேற்கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் பலரும் ஜல்லிக்கட்டு வேண்டும்
என்கிறபோது, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் நீதிமன்றத்தை
அணுகி, தடையுத்தரவு பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே
எதிர்பார்த்திருக்க வேண்டும். மத்திய அரசின் அரசாணை என்பது
பா.ஜ.க. அரசின் விருப்பம்தானே. இந்த அரசாணையை
ஜனவரி 13-ஆம் தேதி மாலை வெளியிட்டிருந்தால், எதிர் மனுக்கள்
ஏற்கப்பட்டு, இடைக்காலத் தடை விதிக்கும் நேரத்துக்குள் ஜல்லிக்கட்டு
நடந்து முடிந்திருக்கும். அடுத்த ஜல்லிக்கட்டு 2017 ஜனவரியில்தான்.
இந்த நெளிவு சுளிவுகூட, அரசியல் சாதுர்யம்கூட பா.ஜ.க.வுக்குத்
தெரிந்திருக்கவில்லை.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியபோது,
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு
இதுகுறித்துத் தனது சுட்டுரையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆவது பிரிவின்படி விளையாட்டு,
பொழுதுபோக்கு ஆகியன மாநில அரசின் பட்டியலில் உள்ளன.
ஆகவே, முதல்வர் ஜெயலலிதா மாநில ஆளுநரிடம் ஜல்லிக்கட்டை
அனுமதிக்கக் கோரும் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோருவதே
போதுமானது.

மனிதருக்கும் காளைகளுக்கும் துன்பம் ஏற்படாத சில விதிகளை
சேர்த்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான்
புத்திசாலித்தனமாக, சட்டத்தின் ஓட்டையை சரியாக பயன்படுத்தும்
முடிவாக இருக்கும்.

மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் ஜல்லிக்கட்டு எவ்வாறு
நடத்தப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியர் எத்தகைய நெறிமுறைகளை
கடைப்பிடிக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதையொட்டி, தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தனியாக
ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், காளைகளைப்
பரிசோதித்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல் ஆகிய
அனைத்துப் பணிகளும் தொடங்கி விட்டன.

கடைசி நேரத்தில் தடை விதிப்பதன் மூலம் தென் மாவட்டங்களில்
தேவையற்ற, கொந்தளிப்பான சூழல் ஏற்படும். மதுரையில்
கடையடைப்பும், அறவழிப் போராட்டங்களும் இப்போதே தொடங்கி
விட்டன. இதைக் கருத்தில்கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை
அனுமதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி
மாநில ஆளுநரைத் தமிழக முதல்வர் கோருவது
மட்டுமே இப்போதுள்ள ஒரேயொரு வாய்ப்பு.

———————————————————————————————-

தமிழக மக்களின் உணர்வுகளையும், பண்பாடு, பழக்க வழக்கங்களையும்
சற்றும் உணர முடியாதவர்களிடம், தமிழர்களை கட்டுப்படுத்தும்
அதிகாரம் மட்டும் போய்ச் சேர்ந்திருப்பதால் –
அவர்களால் முடிந்ததை – “ஜல்லிக்கட்டை” தடை செய்வதை –
அவர்கள் செய்யட்டும்….

அவர்களுக்கு உணர்வுகள் புரியாது; பண்பாடு புரியாது;
சட்டம் மட்டும் தான் புரியும் என்றால் – அதுவும்
அவர்களுக்கு வேண்டிய வகையில் மட்டும் தான் புரியுமென்றால் –

அவர்களுக்கு புரிகின்ற அதே சட்டமொழியில் –
புரிய வைத்தால் போயிற்று …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்,
மக்களுக்கு தங்கள் மொழி, பண்பாட்டைக் காத்துக் கொள்ள
இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை
பாதுகாக்கும் விதத்திலும்,

இன்று(வியாழன்) மாலைவாக்கில் –
பொங்கல் விளையாட்டுக்களை – ஏறுதழுவலை –
முறைப்படுத்தி – தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என்று விரும்புவோம்…

எந்த கொம்பன் (ர்,,,?) ( ! ) மாட்டுப்பொங்கலுக்குள்
இதற்கு தடை கொண்டு வருகிறாரென்றும் பார்ப்போமே…!

இந்த விருப்பம் நிறைவேற உளமாற வேண்டுவோம்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஜல்லிக்கட்டுக்கு தானே தடை – நாம் ஏறுதழுவலுக்குப் போவோம் …!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  தாங்கள் எடுத்துக்காட்டாத கடைசிப்பத்திப்படி இந் நிகழ்ச்சி நடைபெற அவசரச்சட்டம் பிரேரித்து எந்த அரசு தமிழக மக்களிடம் நல்லபெயர் பெறப்போகிறது ?

 2. LVISS சொல்கிறார்:

  The solution mooted by Mr Markandeya Katju can be tried this year —
  The lifting of ban by the central govt helped similar bull related sports in some other states like Maharashtra ,Karnataka Punjab Kerala Gujarat also –They are also affected by the stay —

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தமிழக அரசு இதைச் செய்யாது. இதற்கு சோம்பேரித்தனம் காரணம் அல்ல. எந்தக் காரணம் கொண்டும் உச்ச நீதிமன்றத்தையோ, மத்திய அரசையோ வெளிப்படையாக எதிர்த்துப் போராடாது. காரணம் Rocket Science அல்ல.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Even if TN process for an ordinance there is a chance that it will be stuck down by SC as explained in the hindu dt.14.1.16. besides, time is very short to comply the formalities, it
  said.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  நேற்றைய ஒன் இந்தியா தமிழ் பத்திரிக்கையில் : — “ஏறுதழுவுதலும் கலாச்சார அரசியலும்”….ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோருபவர்களின் பின் உள்ள அரசியல் …. சு.தியடோர் பாஸ்கரன் (2013 பிப்ரவரி உயிர்மை இதழில் வெளியான கட்டுரை)
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/behind-the-politics-jallikkattu-244397.html#cmntTop என்கின்ற பதிவில் : நியூயார்க் நகரத்தில், மெட்ரொபாலிடன் அருங்காட்சியகத்தின் கிரேக்க பிரிவில் உள்ள ஜாடிகளில் —- கி,மு 2ஆம் நூற்றாண்டு காலத்திய இந்த ஒரு மீட்டர் உயரமுள்ள ஒயின் ஜாடிகளின் மேற்புறத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டிருந்தன. என்றும் சிந்து சமவெளி நாகரிக இடமான மொஹஞ்சதரோவில் கிடைத்த ஒரு முத்திரையில் ஜல்லிக்கட்டு காட்சி சித்தரிக்கபட்டுள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று டில்லி அருங்காட்சியகதிலிருக்கும் இந்த கல்லாலான முத்திரை 2000, கி,மு, காலத்தைச் சார்ந்த்து. (ஹிந்து 13.8.1008) என்றும் பண்டைய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் இந்த நிகழ்வு பற்றி குறிப்புகள் உள்ளன. அன்று இதற்கு ” ஏறுதழுவுதல் ” என்று பெயர். கலித்தொகையில் 103வது பாட்டின் ஒரு பகுதி ஒரு ” ஏறுதழுவல் “நிகழ்விற்கு வந்திருந்த பலவகை காளைகளையும் பங்கெடுத்த வீர்ர்களையும் விவரிக்கின்றது….என்றும் செய்தியாக கூறப்பட்டு இருக்கிறது …. இதெல்லாம் வழக்கு தொடுத்த ” கொம்பு இல்லாத — கொம்பன் { ர் } களுக்கும் ” — தீர்ப்பும் — தடையும் கொடுக்கும் நீதி துறைக்கும் — காளையை பட்டியலில் சேர்த்த காங்கிரசுக்கும் — அப்போது அங்கே கூட்டணியிலும் — இங்கே ஆட்சியில் இருந்த தி.மு.க. விற்கும் தெரியாயல் போனது எப்படி …. ? அதனால் தான் ஜல்லிக்கட்டுக்குக்காக ” உண்ணா விரத ….? போராட்டம் ” என்று கூறி — பிறகு பின்வாங்கிக்க்கொண்டாரா ” தானை தலைவர் “… ?

 6. today.and.me சொல்கிறார்:

  கேவியட் மனு நிலுவையில் இருக்கும்போது மாநில அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே.

  அதேவேளையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம்,

  அல்லது பீட்டா அமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ள மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்று வழக்கைச் செல்லாததாக்கலாம்.

  அல்லது
  காளைகள் பெயரை இப்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கச் செய்தால் ஒழிய இது இப்போதைக்கு சட்டப்படி சரியாவதில்லை.

  ஏனென்றால் சட்டப்படி
  இதை
  தமிழர்களின் கலாச்சாரத்தை அடகு வைத்தவர்
  முத்தமிழ் வித்தவர்
  தமிழர்களின் காவலர்
  மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி

  • ravi சொல்கிறார்:

   அல்லது பீட்டா அமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ள மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்று வழக்கைச் செல்லாததாக்கலாம்.///

   எதற்கு அய்யா பொல்லாப்பு !!! அப்புறம் சகிப்பின்மை அது, இது என்று ஒரு கூட்டம் கிளம்பும் .. அது சரி, மாட்டுக்கறி பிரச்சனையில் குதித்த பலரும் இப்போது பம்முவது ஏன்??

 7. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு

  இது ச்ச்ச்ச்சும்மா
  ஒரு ப்ளாஷ்பேக்…
  அம்புட்டுத்தேன்.

  https://vimarisanam.wordpress.com/2015/01/17/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

 8. உண்மை சொல்கிறார்:

  மன்னிக்கவும். பதிவுடன் சம்பந்தப்படாத இணைப்பு.
  பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டு பார்ப்பதற்கு இந்தக் காணொளி.

  https://www.youtube-nocookie.com/embed/1DtLe92AzCI?rel=0&controls=0&showinfo=0

 9. today.and.me சொல்கிறார்:

  காமைஜி மற்றும் ஏறு தழுவுதலை விரும்பிய தமிழுள்ளங்களுக்காக

  https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12472676_1555854204733710_8641515198350369220_n.jpg?oh=d09e447295a1f1dbe42ef4350fd2b1e2&oe=570A1DB7&__gda__=1460446600_14dafa9890d4225595e46aef5924dcd8

  நடத்திட்டாங்களாம்..

 10. செ. இரமேஷ் சொல்கிறார்:

  அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது. ஆனாலும் நம் மக்கள் இதை விட மாட்டார்கள் என்று நம்புகிறேன். இதை இப்படியே விட்டால் மாடு வைத்து ஏறு பூட்டி உழுதாலே தப்பு என்று அடுத்து இந்த மிருக ஆர்வலர்கள் சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த பன்னாட்டு கைகூலிகள் எந்த அளவிற்கும் செல்வதற்கு தயாராகவே இருப்பார்கள்.

  டுடே அண்ட் மீ அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பாராட்டுக்கள். சென்ற ஆண்டில் நீங்கள் சல்லிகட்டை பற்றி மேற்கோள் காட்டியிருந்த கலித்தொகை, முக்கூடற்பள்ளு, மலை படுகடாம் மிகவும் அருமை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ரமேஷ்,

   இதற்காக மட்டுமல்ல – இன்னும் பல விஷயங்களுக்காக –
   நண்பர் டுடேஅண்ட்மீயை பாரட்டுவதில்
   உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

   —————-
   “ஜல்லிக்கட்டு” குறித்து – நீதிமன்றங்களுக்கு இந்த விஷயத்தை
   எப்படிச் சொன்னால் புரியும் என்றே தெரியவில்லை…

   நான் ஏற்கெனவே சொன்னது போல், பல சமயங்களில் –
   பண்பாடு, கலாச்சாரம், மக்களின் அவசியத்தேவைகள் எது
   என்பது குறித்தெல்லாம் என்னவென்றே தெரியாதவர்களிடம்
   அதிகாரம் மட்டும் போய்ச்சேர்ந்து விடுகிறது.

   கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை, காவிரி ஆணையம்-
   முல்லைப் பெரியாறு போன்ற இன்னும் பல பிரச்சினைகள்
   ஆண்டுக்கணக்கில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கின்றபோது –
   எந்தவித அவசரமும் தேவைப்படாத விஷயங்களுக்கு
   மட்டும் சட் சட்டென்று முடிவுகள் வந்து விடுகின்றன.

   இதற்கு இயற்கையாகப் பார்த்து ஒரு முடிவு
   கொண்டு வந்தால் தான் உண்டு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.