பாஜகவின் ஆ.ராசா ஆகப்போகிறாரா திருவாளர் கட்காரிஜி……..!!! ???

.

.

குற்றம் சாட்டும் திக்விஜய் சிங் ஒரு உளறுவாயர் என்பதால்,
அவர் சொல்லும் எல்லா விஷயங்களுமே உளறலாக இருக்க வேண்டிய
அவசியம் இல்லை அல்லவா …!!! ???

ஏற்கெனவே மஹாராஷ்டிர மாநில pwd அமைச்சராக இருந்தபோதே
திருவாளர் கட்காரிஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

பாஜக தலைவராக இருந்தபோதும், அவரது புர்தி நிறுவனம் தொடர்பாக
பல மோசடிப் புகார்கள் கூறப்பட்டன. பாஜக தலைவர் பதவியில்
தொடர முடியாத ஒரு சூழ்நிலை கூட ஏற்பட்டது.
ஆனாலும், தப்பித்துக் கொண்டார்…
அவரது புகழ் பரப்பக்கூடிய சில புராணங்கள் ஏற்கெனவே
இடுகைகளாக இந்த தளத்தில் வந்துள்ளன.

அண்மையில் புகழ்பெற்ற முன்னாள் இந்தி நடிகை ஆஷா பரேக்
குறித்து இவர் பேசியது இவரது ஆணவத்தை பட்டவர்த்தனமாக
வெளிப்படுத்திக் காட்டியது.

asha-parekh-gatkari

( இப்போது கிட்டத்தட்ட 75 வயதான – புகழ்பெற்ற முன்னாள்
இந்தி திரைப்பட கதாநாயகி திருமதி ஆஷா பரேக் இவரைத்தேடி வந்து
தனக்கு ” பத்மபூஷன் ” பட்டம் கிடைக்க பரிந்துரைக்குமாறு
இவரை கேட்டுக்கொண்டதாக இவரே ஒரு நிகழ்ச்சியில்
கர்வத்துடன் கூறிக் கொண்டார். இவரது பரிந்துரையைக் கோரி,
லிப்ட் வேலை செய்யாத நிலையில், 12-வது மாடியில் உள்ள
இவரது வீட்டிற்கு அந்த 75 வயது பெண்மணி அத்தனை படிகளையும்
ஏறியே வந்து பார்த்தாராம்.

பாவம் – இவரை நம்பி வந்து தனிப்பட்ட முறையில்
கேட்டுக்கொண்ட பாவத்திற்கு பலனாக, ஒரு பொது நிகழ்ச்சியில்
” இப்படி ஆஷா பரேக் போன்றவர்கள் கூட என்னை வந்து “பத்ம” பட்டம்
கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்…. நான் எவ்வளவு
பேருக்கு தான் செய்ய முடியும் …? ” என்று – தனது பேச்சு
அந்த பெண்மணியை எந்த அளவிற்கு அவமானத்திற்கு உட்படுத்தும்
என்று சற்றும் நினைக்காமல் கிண்டலடித்தார் இந்த பெரிய மனிதர் …!!! )

இப்போது திக் விஜய் சிங் இவர் மீது, இவரது இலாகாவில்
நிகழ்ந்துள்ளதாக, ஒரு ஊழல் குறித்து
Central Vigilance Commission- இடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.
மத்திய போக்குவரத்து அமைச்சரான இவரது இலாகா தொடர்புள்ள
“ஜோஜிலா” (காஷ்மீரில்) குகைப்பாதை ( Zojila tunnel ) காண்ட்ராக்டை
அவருக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாகவும்,
( 10,050) பத்தாயிரத்து அம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள
மிகப்பெரிய அந்த காண்ட்ராக்டை அளிக்கும் விதத்தில்,
உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை
என்று கூறுகிறார் திக் திக் விஜய் சிங்.

அந்த காண்ட்ராக்டை, மும்பையை சேர்ந்த தனக்கு மிகவும்
வேண்டப்பட்ட Dattatreya Mhaskar, என்கிற நபரின் நிறுவனமான
IRB Developers என்கிற கம்பெனிக்கு வழங்கி இருக்கிறார் என்பது
குற்றச்சாட்டு. மஹாராஷ்டிராவில் கட்காரிஜி pwd அமைச்சராக
இருந்தபோதே இந்த நபருக்கு நிறைய காண்டிராக்டுகள்
கொடுத்ததன் மூலம் இருவருக்கும் நல்ல (!) பரிச்சயம் உண்டு
என்றும், அமைச்சரின் மகன் இந்த IRB Developers நிறுவனத்தின்
துணை நிறுவனமான Ideal Energy Project என்கிற நிறுவனத்தின்
பங்குகள் வைத்திருந்தார் என்றும் இரண்டு குடும்பத்திற்கும்
உள்ள நெருக்கம் காரணமாக, இந்த டெண்டருக்கு போட்டிகள்
எதுவும் வராமல் IRB Developers -க்கே கிடைக்கும்படி
பார்த்துக் கொண்டதாகவும் புகார் கூறி இருக்கிறார் திக் திக் சிங்…….!

( முதல் ரவுண்டில் போட்டியிட முன்வந்த இரண்டு கம்பெனிகளை –
தனது இலாகாவின் மற்ற காண்டிராக்டுகள் கிடைக்க வேண்டுமென்றால்
மரியாதையாக இதிலிருந்து விலகி விடுங்கள் என்று இந்த மனிதர்
“அன்பாக” வேண்டிக்கொண்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. )

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதே தவிர எதுவும் இன்னும்
விசாரணை நிலைக்கு கூட போகவில்லை. இருந்தாலும் இந்த
“மாண்புமிகு” வின் பழைய சரித்திர புராணங்களும்,

2016-ஆம் ஆண்டுக்குள்ளாக இவரது கட்டுப்பாட்டிலிருக்கும்
போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து சுமார் ஐந்து லட்சம் கோடி
( 5 லட்சம் கோடி…! ) ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள்
வெளியிடப்படவிருக்கின்றன – அதற்கான பணிகள் ஏற்கெனவே
துவங்கி விட்டன என்கிற செய்தியும் சேர்ந்து –

நமக்கு மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்குகிறது.

இதே அளவிற்கும், இதைவிட அதிகமாகவும் கூட
பொது டெண்டர்கள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை நிர்வாகம்
செய்யும் பாஜக அரசின் வேறு சில அமைச்சர்களான
திரு.பியூஷ் கோயல் மற்றும் திரு.பிரபு ஆகியோர் எந்தவித
புகாருக்கும் இடமின்றி சிறப்பாக செயல்படுகிறார்கள்…

ஆனால் –கட்காரிஜியின் நிலவரம் தான் –
கலவரம் அளிப்பதாக இருக்கிறது…!

மோடிஜிக்கு இவை குறித்தெல்லாம் தெரியுமா -தெரியாதா
என்று கேட்டால், பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக
வரும் அளவிற்கு போன பிறகும் அவருக்கு தெரியாமலா இருக்கும்…?
ஆனால் அவரால் கட்காரிஜியை அசைக்ககூட முடியாத அளவிற்கு
ஆர். எஸ்.எஸ். அமைப்பின் மிக பலத்த ஆதரவிலும், அணைப்பிலும்
இருக்கிறார் திருவாளர் கட்காரிஜி.

வெவ்வேறு நிலைகளில் உள்ள இந்த பணிகள் குறித்த
டெண்டர்கள் எல்லாம் முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி,
முடிவடைந்து – தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தான்
இவை குறித்த விவரங்கள் எல்லாம் வெளிவரும்…

மிகவும் சாமர்த்தியமாக, (விஞ்ஞான ரீதியாக …? ) ஊழல் செய்யக்
கற்றுக் கொண்டவர்கள் – தணிக்கையாளர்களை ஏமாற்றும்
வழிவகைகளையும் உண்டு பண்ணி வைத்திருப்பார்கள்.

அதையும் மீறி, தவறுகளை கண்டுபிடிக்க நமது தணிக்கைத்துறை
மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால், அத்தனையும் நடந்து முடிந்த பின் –
கண்டுபிடித்து தான் என்ன பயன் …?
ஆ.ராசா வழக்கில் – என்ன நடக்கிறது
என்பதைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோமே…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to பாஜகவின் ஆ.ராசா ஆகப்போகிறாரா திருவாளர் கட்காரிஜி……..!!! ???

 1. thiruvengadam சொல்கிறார்:

  தென்னைமரம் பற்றி கட்டுரை எதிர்பார்த்த மாணவன் பசுமாடு பற்றிய கேள்விக்கு பதறாமல் தான் படித்ததை எழுதி கடைசியில் அதில் பசுமாட்டை கட்டலாம் என்று முடித்த நகைச்சுவை போல் கிடைத்த வாய்ப்பில் ஆ .ராசா பற்றிய குறிப்பு காட்காரியும் ராசாபோல் தன்செயல்கள் மோடிக்கு தெரியும் என்று கூற வழிபிறந்துள்ளது.

 2. ravi சொல்கிறார்:

  குற்றம் சாட்டும் திக்விஜய் சிங் ஒரு உளறுவாயர் என்பதால்,
  அவர் சொல்லும் எல்லா விஷயங்களுமே உளறலாக இருக்க வேண்டிய
  அவசியம் இல்லை அல்லவா …!!! ???
  அன்னை சோனியாவின் உத்தரவு வாங்கி கொண்டு , ஒரு கேசை போட வேண்டியது தானே … ஒரு சுப்ரமணியன் சுவாமி இவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி கொண்டு இருக்கிறார்.. வெறும் வெட்டி பேச்சு ..

  • உண்மை சொல்கிறார்:

   அன்னை என்ற வார்த்தை சோனியாவிற்குப் பொருந்தாது என்பது என் கருத்தாகும். தமிழில் அன்னை என்பதற்கு பொருள் வேறு.
   அன்னை தெரேசா சொல்லலாம். சோனியாவிற்கு அன்னை எந்த விதத்திலும் தமிழில் உள்ள வார்த்தையுடன் பொருந்தாது.
   இந்த வலைப்பதிவிலும் திருமதி சோனியா காந்தி என்றே பாவிக்கப்பட்டிருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ரவி,

   Central Vigilanace Commissioner- யிடம் புகார் மனு கொடுத்ததன் மூலம்
   முதல் கட்ட நடவடிக்கையை திக் விஜய் சிங் சரியாகவே
   செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ரவி தந்திருக்கும் லிங்க் -கை இங்கேயே படிக்க –

   ————————————————————————————————
   Press Information Bureau
   Government of India
   Ministry of Road Transport & Highways
   12-January-2016 18:09 IST
   Zojila Tunnel Tendering Process was as per Procedure: Ministry of Road Transport & Highways

   Reports have appeared in a section of press alleging irregularity in the award of contract for building Zojila tunnel. In this regard it is stated that the Ministry of Road Transport & Highways follows due procedure while maintaining complete transparency in the award of any contracts. In the instant case also the contract was awarded after due diligence after the bid was found technically responsive. Financial bid was opened and the quoted Semi Annuity amount found in line with the approval of CCEA for award of the work.

   It is further stated that E-Tendering process was adopted for award of Zojila Tunnel contract with the mode of BOT (Annuity) and concession period of 22 years including 7 years construction period.

   The construction of Zozila tunnel will establish all-weather connectivity from Srinagar to Kargil/ Leh of NH: 1D (new NH-1). The DPR for Zozila tunnel was prepared in 2012-13. The project was approved by CCEA in its meeting held on 17.10.2013 with Total Project Cost (TPC) of Rs. 9090 crore on BOT (Annuity) mode. The National Security Council (NSC) meeting was held on 06.04.2010 under Chairmanship of Prime Minister on “Border Infrastructure” development. In the light of NSC meeting, an Empowered Committee on Border Infrastructure (ECBI) has also been constituted under Chairmanship of Cabinet Secretary vide Cabinet Secretariat OM dated 02.06.2010 to monitor the Border Infrastructures projects including Srinagar –Kargil –Leh Section. The development of this road including construction of this tunnel is strategically important and hence the strategic construction of this tunnel is enormous.

   The RFQ was invited in April, 2013. Four agencies purchased the RFQ documents. However, only one agency submitted the RFQ document. Being single tender at RFQ (Technical bid) stage, the tender process was cancelled without going to RFP (Financial stage).

   Subsequently, RFQ was again invited and four agencies were technically pre-qualified to participation at RFP stage. Out of this four pre-qualified agencies only one Agency participated at RFP (Financial stage). Being a single tender, the Financial bid was not opened as per Ministry’s Circular No.NH-14019/4/2008-P&M dated 27.04.2008 [Single tender received in first call shall be cancelled without opening the bid and the tender shall be re-invited].

   Based on the above experience, it was decided to adopt change in system of calling bid i.e. from two stage (RFQ & RFP) system to single stage (RFP) system. Accordingly, a fresh bid adopting single stage (two cover) system for wider participation by the Agencies was called. Considering the geographical & strategic location of the project, a wider publication through leading Newspapers (The Hindu, The Times of India, The Economic Times, Dainik Jagran & Dainik Hindustan) and also through Ministry of External Affairs to foreign countries, Indian Road Congress, International Association of Bridge & Structural Engineers (IABSE), Ministry of Railways was adopted. Further sufficient time more than 90 days was given (invited on 30th July, 2015 with last date of receiving 2nd November, 2015).

   In response only one bidder participated. Being a single tender under single stage (two cover system) was cancelled without opening the bid as per Ministry’s Circular No.NH-14019/4/2008-P&M dated 27.04.2008 [Single tender received in first call shall be cancelled without opening the bid and the tender shall be re-invited].

   Subsequently, tender was re-invited giving the last date for submission of the bid on 10th December, 2015. In response only single bid was received from M/s. IRB Infrastructure Developers Ltd. The bid was opened and evaluated. Found technically responsive and its financial bid was opened and found the quoted Semi Annuity amount in line with the approval of CCEA for award of the work.

   ———————————————————————————————————————-

   // Subsequently, RFQ was again invited and four agencies were
   technically pre-qualified to participation at RFP stage.
   Out of this four pre-qualified agencies only one Agency
   participated at RFP (Financial stage). //
   இது நிகழ்ந்த தேதி மட்டும் குறிப்பிடப்படவில்லை…!!!

   இது மே 2014-க்குப் பிறகு நடந்தது என்றால் –

   இந்த தகவல்கள்-
   திருவாளர் திக் திக் விஜய் சிங் கிளப்பிய திகிலை
   இன்னும் கூட்டவே செய்கிறது…..!!!
   அல்லவா நண்பர்களே….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    the project was also retendered twice , govt will say that we have followed the procedure.
    a project of this stature can be easily covered under the garb of national security/CCEA /PMO etc etc..

    a serious opposition party MP/Leader, would have taken it to the court, but our diggy has taken it to CVC, which itself proves it is just to attract some eyeballs. ….
    if the congress party is really serious, they should take it to court.. but , they will not !!

    For ex. In Barak missile controversy, Congress party claimed , the missile is not proper during bjp rule . but they also bought the same missile during UPA under antony … and slowly this issue was pushed aside..

 3. உண்மை சொல்கிறார்:

  ஆஷா பரேக், சமீபத்தில் அமைச்சரின் இந்த கருத்தை வன்மையாக கண்டித்து,எனது உடல் நிலையில் சென்றிருக்க முடியுமா என்றதுடன்,மேலதிகமாக எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறி அமைச்சரின் கருத்தை மறுத்திருக்கிறார்.
  இப்படி ஒரு கருத்தை பொதுமேடையில் தெரிவிக்கும் அமைச்சரின் மிகப்பெரிய நற்குணங்களுக்கு ஒரு ஓஹோ!

  அவர் தெரிவித்தது உண்மையானால்?……………..
  இறுதிக் காலத்திலும் ஒருவர் பணம்,பதவி,விருது ஆசையுடன் தான் வாழ்கிறாரா?
  அதைவிட அமைச்சரின் கருத்துப்படி, விருதுகள் பெற சிபார்சு மற்றும் அரசியல் செல்வாக்கும் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் விருது புகழ் தேடி அலையும் வைரமுத்து போன்றவர்கள் உண்மையில் அப்படித்தான்?? விருது பெற்றார்களா?

  மோடி -பாஜக வும், கருணாநிதி திமுக வும் கை சுத்தமான கட்சி என்று சிலர் கருத்துகள் வைக்கிறார்களே இவை எல்லாம்??

  எல்லாம் குப்பைத்தொட்டிக்குப் போய்விடும். குற்றம் நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என கைவிரிக்கப்பட்டு வெளியே வருவார்கள்.
  நீர்மேல் எழுத்துப் போல் அவை மறைந்து விடும். மக்களும் மறந்து விடுவார்கள். அவர்கள் தலை நிமிர்ந்து அரசியல் செய்யத்தான் போகிறார்கள்.இதுதான் இந்தியாவின் தலைவிதி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை,

   முற்றிலும் உண்மை….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • ravi சொல்கிறார்:

   எல்லா கட்சியும் , தேர்தலுக்கு , பணம் கொடுக்கின்றனர் .. இது என்ன அவர்களின் கைகாசா .. எல்லாம் வியாபாரிகள் , மற்றும் தொழில் அதிபர்களின் பணம் தானே..
   தமிழ் நாட்டில் , அதிமுக, திமுக, டெல்லி பாஜாகா , காங்கிரெஸ் அனைவரும் இதில் அடக்கம் ..

   //, கருணாநிதி திமுக வும் கை சுத்தமான கட்சி// அய்யா உமக்கே சிரிப்பு வரவில்லையா ..
   காங்கிரஸ் என்ன கை சுத்தமானவர்களா ??
   அதிமுக, பாஜாகா , என்ன நேர்மையின் சிகரங்களா ?? இவனுக்கு அவன் பரவாயில்லை .. அவ்வளவு தான் நம் அளவு ..

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இறுதிக் காலத்திலும் ஒருவர் பணம்,பதவி,விருது ஆசையுடன் தான் வாழ்கிறாரா? – ஆமாம். விருது என்பது Recognition என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. தன்னைவிட குறைந்த தகுதி பெற்றவர்களுக்குக் கிடைத்திருப்பதால், மூத்தவர் எந்த வயதானாலும் கிடைக்காததைப் பற்றி ஏங்கத்தான் செய்வார்கள். அதில் தவறு இல்லை.

   அதைவிட அமைச்சரின் கருத்துப்படி, விருதுகள் பெற சிபார்சு மற்றும் அரசியல் செல்வாக்கும் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் விருது புகழ் தேடி அலையும் வைரமுத்து போன்றவர்கள் உண்மையில் அப்படித்தான்?? விருது பெற்றார்களா? – அரசியல் செல்வாக்கு, பெரிய மனிதர்களின் செல்வாக்கு இல்லாமல், ஆதாயம் இல்லாமல் (அரசியல் ரீதியாகவோ, நட்பு ரீதியாகவோ, மா’நில ரீதியாகவோ, சாதி/சமய ரீதியாகவோ, பண ரீதியாகவோ) யாருக்கும், யாருக்குமே விருது வழங்கப்படுவதில்லை. இதில் exception என்று எதுவும் கிடையாது. நீங்கள் யாரைக் குறிப்பிட்டுக் கேட்டாலும், விருது வழங்கியதன் காரணம், தாமதம்/வெகு விரைவாக (Early) என்று காரணம் மிகச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

   கவிஞர் – எத்தனை பெரியவர்கள், திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இல்லாமல், வைரமுத்துவுக்கு மட்டும் ஏன் விருது கொடுத்துள்ளார்கள்? அவருக்கு எப்போது கொடுத்தார்கள் என்பதைப் பார்த்தால் காரணம் விளங்கும்.

   நடிகர் – சிவாஜிக்கு ஏன் கிடைக்கவில்லை. நடிப்புக்கு எம்.ஜி.யாருக்கு ஏன் கிடைத்தது. நாகேஷுக்குக் கிடைக்காத விருதுகள் ஏன் விவேக்குக்குக் கிடைத்தது. எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் ஆகியவர்களுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதற்கு, நாம் யோசித்தாலே விடை கிடைத்துவிடும்.

   அரசின் பத்ம விருதுகளுக்கு, ஒருவர் விளம்பரப் படுத்திக்கொள்ள வேண்டும். தன் ரெஸ்யூமே அனுப்பவேண்டும்.

   விளம்பரப்படுத்திக்கொள்வதற்கு வெட்கப்படுபவர்களுக்கு விருது கிடைக்காது.

   2004-2014 வரை, யாருக்கு ‘பாரதரத்னா’ விருதுக்கு முயற்சியெடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கலாம் அவர்களால் அந்த முயற்சி தடைபட்டது. எம்.ஜி.யாருக்கு பாரத ரத்னா விருதுக்கு, அவர் இலங்கை விஷயத்தில் மத்திய அரசை வெளிப்படையாகச் சங்கடப்படுத்தாமைக்கும், சச்சினுக்கு, காங்கிரஸுக்கு உதவும் என்றும், இதைப்போலத்தான் ஒவ்வொருவர் தேர்வும் இருக்கிறது. இதில் அப்பாவியாக (உண்மையைச் சொன்னால் விருது பெறும்(?) திறமை இல்லாமல்) இருந்தது ‘நடிகர் திலகம் அவர்கள்தான். காங்கிரஸில் இருந்தும் எப்போதோ விருது வாங்காமல் இருந்ததற்கு அவரது ‘விருது வாங்கும் திறமை’ இல்லாததுதான் காரணம்.

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  1 . மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……
  Posted on மே 24, 2015 by vimarisanam – kavirimainthan —- 2… ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!!Posted on ஜூன் 23, 2015 by vimarisanam – kavirimainthan —– 3 … கட்காரிஜியிடமிருந்து – பயமுறுத்தும் செய்திகள் …!!! ” நா காவூங்கா – நா கானே தூங்கா “
  Posted on ஜூலை 11, 2015 by vimarisanam – kavirimainthan” —— 4 …. என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “
  Posted on திசெம்பர் 22, 2015 by vimarisanam – kavirimainthan —– 5 … பாஜகவின் ஆ.ராசா ஆகப்போகிறாரா திருவாளர் கட்காரிஜி……..!!! ???
  Posted on ஜனவரி 13, 2016 by vimarisanam – kavirimainthan —- ஒரு 7 — மாத இடைவெளியில் — ஒரே அமைச்சருக்கு ஐந்து இடுக்கைகள் … ! { கொசுறாக இன்னும் சில இடுக்கைகளிலும் அவ்வப்போது தலை காட்டுகிறார் } வளர்க அவரது தொண்டு … !! நல்ல அமைச்சர் ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   “மாண்புமிகு” கட்காரிஜியின் சரித்திர-புராணங்களை
   வரிசைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. LVISS சொல்கிறார்:

  Mr Gadkari has clarified that every thing was done in a transparent way –Let us see what happens — So many charges have been made against him –How many of the charges have been proved – The PM must be aware of these charges —If they are proved definitely action will be taken against him —

 6. LVISS சொல்கிறார்:

  From the link provided it is known that the project was approved in 2013 and NDA is only carrying forward the project –And E Tendering process was adopted —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.