” துக்ளக் ” ஆண்டுவிழவில் ஆசிரியர் “சோ” அவர்களின் உரை –

கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து துக்ளக் ஆண்டு விழாவின்போது
தவறாமல் கலந்துகொண்டு, சோ அவர்களின் கலகலப்பான உரையை
கேட்டுக் கொண்டிருந்தேன்.

இந்த வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால், பொங்கல் சமயத்தில்
சென்னையில் இல்லை. அடடா, சோ அவர்களை காணக்கூடிய
வாய்ப்பை – முக்கியமாக அவர் நீண்ட காலம் உடல்நலக்குறைவால்
அவதிப்பட்டு – மீண்டு வந்து கலந்து கொள்ளும் முதல் நிகழ்வில்
கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருந்தியபோது,
சரியான நேரத்தில், நண்பர் “உண்மை” அவர்கள்
அனுப்பியுள்ள வீடியோ கிடைத்தது.

அதனை மறுமொழி இடத்தே போடாமல், இங்கு பதிவு செய்தால்
இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும் என்பதால் கீழே பதிவு
செய்கிறேன். நண்பருக்கு மிக்க நன்றி.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உரை.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ” துக்ளக் ” ஆண்டுவிழவில் ஆசிரியர் “சோ” அவர்களின் உரை –

 1. Arasu சொல்கிறார்:

  வணக்கம் காவிரி மைந்தன்:

  துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுத்த மனம் திறந்த மடல் சனவரி 13ம் தேதி துக்ளக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கீழே பதிவிட்டிருக்கிறேன். சோ அவர்களைப்பற்றி இவ்விமர்சனங்களுக்கு உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

  – அரசு

  ——————————————————————————————————————–

  ‘இதுதான் தங்களின் நடுநிலைக் கண்ணோட்டமா?’

  ‘துக்ளக்’ ஆசிரியர் நண்பர் திரு.சோ. இராமசாமி அவர்களுக்கு, வணக்கம்.

  தாங்கள் முழுமையாக உடல்நலம் பெற்று மீண்டும் பழைய தெம்புடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்பது எனது விருப்பம்.

  தங்களிடம் பெரும்பாலும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஜோதிடம், ராசிபலன், சினிமா போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் ‘துக்ளக்’கை நடத்துவது வரவேற்கத்தக்கதே. பாராட்டுகள்!

  தங்கள் எழுத்தில் கேலி இருக்கும், நையாண்டி இருக்கும் – அவற்றைச் சுவைத்த துண்டு. ஆனாலும் தமிழ், தமிழி னம், சமூக நீதி, பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றால் கடுமையான துவேஷம் பெரிய அளவில் பொங்கி வழிவதை சுட்டிக் காட்டுவது எனது கடமையாகும்.

  தமிழ்மீது உங்களுக்கு ‘இனம்’ தெரியாத வெறுப்பு உண்டு என்று சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அது நூற்றுக்கு 110 உண்மையாகும்.

  “தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களில் ‘இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற போர்டுகள் தூண்களில் தொங்குகின் றன. ஆனால் கோவில்களிலுள்ள பல்லிகூட தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வ தில்லை. தமிழ் அர்ச்சனை என்பது நூற் றுக்கு நூற்றுப் பத்து சதவீதம் தோற்றுப் போன ஒரு சமாச்சாரம். எல்லோரும் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழியில் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப் படுவதுபோல் கோவில்களில் சமஸ்கிருதத் தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப் பம் அது”. (‘துக்ளக்’ 24.7.2013)

  இது உண்மைதானா? கடவுள் நம்பிக்கை உள்ள சகோதரர் பழ.நெடுமாறன் அவர்கள் மதுரை, இராமேசுவரம், சிதம் பரம், பழனி, குமரி, வடபழனி, சிறீரங்கம், தஞ்சாவூர், கோவை ஆகிய பெரிய கோயில் களில் பக்தர்களிடையே வாக்களிப்பே நடத்தினார். 18,700 பக்தர்கள் கலந்து கொண்டனர். (27.11.1998) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தமிழுக்கு ஆதர வாக 17,695 பக்தர்களும், சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக 823 பக்தர் களும் ஆதரவு தெரிவித்தனரே – இதுதானே மக்கள் விருப்பம் – நீங்கள் கூறும் ‘அந்த மக்கள் யார்?’ என்பது மக்களுக்கே தெரியும்.

  சமஸ்கிருதத்தில்தான் வழிபாடு வேண் டும் என்று எந்தப் பல்லி-பூரான் சொன்னது என்று நீங்கள் தெரிவிக்கவில்லையே!

  தமிழ்நாட்டு உரிமை என்று வரும்போது கூட அதில் தங்களின் மனப்பான்மை எது?

  மதுராந்தகம் ஏரி தண்ணீரை சென்னைக் குக் கொண்டு போகக்கூடாது என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே எதிர்க்கிறார்கள். கருநாடகத்துக்காரர்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க எதிர்க்க மாட்டார்களா என்று ‘துக்ளக்’ 34ஆம் ஆண்டு விழாவில் பேசினீர்களே! கிச்சுவும் பிச்சுவும் இங்கே சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

  பாகிஸ்தான் இந்தியாவோடு சண்டை போடக் கூடாதா என்று கேட்பீர்களா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் நாட்டுக்கு விரோத மாக உங்களால் எழுதுகோல் பிடிக்க முடிகிறது.

  சமூகநீதிப் பிரச்சினை என்பது உங்க ளுக்கு ஒவ்வாமையாகவே இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான ஏணிப்படி அது என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள்.

  பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தபோது அவரைப் பேட்டி கண்டீர்கள். (‘துக்ளக்’ 15.1.1986) அவரிடம் அரசியல் நிர்ணய சட் டத்திலேகூட இடஒதுக்கீட்டுக்கு காலவரம்பு விதிக்கப்பட்டது என்று உங்களால் கேட்கப்பட்ட கேள்வி சரி யானதுதானா? கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட் டுக்குக் காலவரம்பு அரமைப்புச் சட்டத்தில் எங்கே சொல்லப்பட்டுள்ளது?

  சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலுக் குத் தான் காலவரம்பு உண்டு. அதுவும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட் டுள்ளது. அதையும் இதையும் போட்டுக் குழப்புவது எந்த நோக்கத்தில்? (இவ்வள வுக்கும் நீங்களும் ஒரு வக்கீல்)

  ஏதாவது குழப்பமாகச் சொல்லி, பிரதமரி டம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்தை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா? கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடுவீர்கள்; “குழப்புவது எனது பிறப்புரிமை” என்று. (துக்ளக் 1-12-1987)

  காஞ்சி சங்கராச்சாரியார் விரும்பியதால் எழுத்தாளர் சின்னக்குத்தூசி, ஞானி ஆகி யோர் அவரைச் சந்தித்தனர். “ ‘சோ’ ராம சாமியை நான்தான் வீரமணியிடம் அனுப்பி னேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார்” என்று ஜெயேந்திர சரஸ்வதி கூறியதை ‘எதி ரொலி’யில் சின்னக்குத்தூசி எழுதிவிட்டார்.

  நீங்கள் என்ன எழுதினீர்கள்? “நடக்காத ஒன்றை நடந்தது போல் கூறவேண்டிய அவசியம் கட்சி சார்புள்ள பத்திரிகை களுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரி சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை” என்று எழுதி னீர்களே.

  அதனை மறுத்து சின்னக்குத் தூசியுடன் சென்றிருந்த எழுத்தாளர் ஞானி எழுதிய கடிதத்தை உங்கள் ‘துக்ளக்’கில் வெளியிடாதது ஏன்? இதுதான் நீங்கள் போற்றும் பத்திரிகை தர்மமா? மேலும் ‘I have respect for that Institution’ என்று எழுதினீர்களே (‘துக்ளக்’ 15.4.1983)

  “சங்கராச்சாரியாரை, விமர்சனம் செய்வது இல்லைதான். செய்ய மாட்டேன். அந்த அருகதை எனக்கில்லை” (‘துக்ளக்’ 15.2.1986) என்று தாங்கள் எழுதினீர்கள்.

  கொலை வழக்கில் காஞ்சி சங்கரா ச்சாரியார் வழக்குப் பற்றிக் கூறுகையில் சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எழுதினீர் களே. இதுதான் தங்களின் நடுநிலைக் கண்ணோட்டமா? கொலை வழக்கில் சம்பந் தப்பட்டிருந்தாலும் விட்டுக் கொடுக்காத அந்த இனவுணர்வு மற்றவர்களுக்கு இருந்தால் மட்டும் “இனத்துவேஷம்” என்று தாங்கள் முத்திரை குத்துவது என்ன நியாயம்?

  கேள்வி: ‘அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டால் ஜெயிக்க லாம்’ என்ற எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு எப்படி வந்தது?

  பதில்: ‘சேற்றில் புரண்டால் சுகமாக இருக் கும்’ என்ற எண்ணம் எருமைகளுக்கு ஏன் வந்தது? இதெல்லாம் இயற்கை. (‘துக்ளக்’ 28.7.1999 பக்கம் 9) அந்த நிலைப்பாடு இப்பொழுதும் தங்களிடம் உண்டா என்பதை அறிய விரும்புகிறோம்.

  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பிரச்சினையில் நாங்கள் அக்கறை காட்டுவது பற்றிக் கேலி செய்து கார்ட்டூன் போட்டுள் ளீர்கள். (‘துக்ளக்’ 6.1.2016)

  திராவிடர் கழகத்தினர் அர்ச்சகராவ தற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை – அது உங்களுக்கே தெரியும் – கொள்கைக் கும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாடு அது – திசைதிருப்புவது தங்களின் வாடிக்கையான வேடிக்கை.

  எங்களை விட்டுத் தள்ளுங்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நீதியரசர் எஸ்.மகரா சனும், ஏ.கே.ராஜனும், கிருஷ்ணசாமி ரெட்டி யாரும், சத்தியவேல் முருகனார் (வாரியாரின் உறவினர்) போன்றோர்களும் இந்தக் கோரிக் கையை முன்வைத்துள்ளார்களே – அதற்கு என்ன பதில்?

  பகுத்தறிவு என்றாலே பித்தலாட்டம் என்று பதில் அளித்தீர்கள். (‘துக்ளக்’ 4.3.2009)

  இதன்மூலம் உங்களை நீங்களே அடையா ளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். இதற்கு விமர்சனம் தேவையில்லை. இன்னொன்று ‘நான் பார்ப்பது அரசியல் தரகு வேலை’ என்றும் ஒப்புக் கொண்டீர்கள். (ஆனந்த விகடன் 1-2-2012) இதற்கு விமர்சனம் தேவையில்லை.

  “என் பேச்சைக் கேட்டு யாரும் உருப் பட்டதில்லை” என்று ரஜினி பற்றிய ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் பேசினீர்கள். எப்பொழுதாவது இதுபோல உண்மையைப் பேசுவீர்கள். இதை மட்டும் துக்ளக் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

  இன்னும் உண்டு! இடநெருக்கடி கருதி முடித்துக்கொள்கிறேன்.

  நான் தொடக்கத்தில் கூறியதையே மீண் டும் கூறி முடிக்கிறேன். தனியே பழகும் போது பண்பாடு உள்ளவரான தாங்கள் உடல் நலம் பெற்றிட அன்பான வாழ்த் துக்கள்!

  தங்களின் அன்பான கொள்கை எதிரி,

  (கி.வீரமணி)
  தலைவர், திராவிடர் கழகம்

  நன்றி: ‘துக்ளக்’ 13.1.2016

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அரசு,

   இந்த கடிதம் குறித்து தன் கருத்தை தனியே கூறுவதாக
   ஆசிரியர் சோ அவர்களே கூறி இருப்பதால் –
   அவர் தன் கருத்துக்களை கூறும் வரை நாமும் காத்திருப்போமே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Arul சொல்கிறார்:

  தன்னை தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் அமெரிக்க அடிமை கூலி வருண் தன தளத்திற்கு யாரும் வராததால் இங்கு வந்து வாந்தி எடுத்துள்ளது. நண்பர்கள் புரிந்து கொள்ளவும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   I dont understand why and how certain person(s) suddenly
   got provoked by seeing the article related to Cho in this Blog
   and made very indecent and irrelevant comments ….
   I have deleted such pinnoottams ….

   If anyone has reasonable arguments,
   they are always welcome to present the same in a decent way.

   -with best wishes,
   Kavirimainthan

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா…! அந்த வீனாப்போன ஓரறிவில் கூட சேர்க்க தகுதியற்ற …. நபருக்கான எங்களின் மறுமொழியையும் ஏன் சேர்த்து நீக்க வேண்டும…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   மன்னிக்க வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. thiruvengadam சொல்கிறார்:

  அமெரிக்க அடிமை வருண்,
  உம்முடைய தஹர டப்பா சத்தத்தை இங்கேயே அடக்கு. KM தளத்திற்கு திரும்ப வந்தால் தகுந்த சூடு போடப்படும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் “நடுநிலை”, “வருண்”, “ஜின்னா”

   – என்று இன்னமும் ஒரு டஜன் பெயர்களில்
   இங்கு பின்னூட்டம் போட முயலும் இரண்டு அல்லது
   மூன்று குறிப்பிட்ட நண்பர்களுக்கு –

   உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டதாக மீண்டும் மீண்டும்
   இங்கு எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது
   உங்களுக்கே தெரியும்.

   நான் பலமுறை இங்கு எழுதி விட்டேன்.
   இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
   நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
   இங்கு இடம் உண்டு.
   விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
   நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
   மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
   வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
   நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

   மாறாக – என்னையோ,
   இங்கு பின்னூட்டமிடும் தங்களுக்கு பிடிக்காத
   மற்ற நண்பர்களையோ – தரக்குறைவாக எழுதும் உரிமை
   எவருக்கும் கிடையாது. நான் அதை நிச்சயம் அனுமதிக்க
   மாட்டேன். விவாதங்களும், பின்னூட்டங்களும் –
   இடுகைக்கான பொருளைப்பற்றியே
   இருக்க வேண்டுமே தவிர,
   பின்னூட்டம் இடும் தனிப்பட்ட நண்பர்களைப் பற்றி அல்ல..

   இதில் “வருண்” எழுதியவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை ?
   வருண் என்கிற நபர் –
   வழக்கமாக இங்கு பின்னூட்டங்கள் எழுதும் நண்பர்
   டுடேஅண்ட்மீ அவர்களின் பெயரில் –
   அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு “போலி id”-யை
   உருவாக்கி போலியாக சில பின்னூட்டங்களை
   டுடேஅண்ட்மீ என்கிற பெயரில் எழுதியது
   பச்சை அயோக்கியத்தனம்.
   இந்த மாதிரி நபர்களை
   நான் ஏன் இங்கே அனுமதிக்க வேண்டும்…?

   அதிமுக ஆட்சியைப் பற்றி நான் தீவிரமாக
   விமரிசிப்பது இல்லை தான்… அது என் priority -யில்
   இல்லை… இப்போதைக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்
   என்று பலமுறை இங்கே வெளிப்படையாகத் தெரிவித்து
   விட்டேன். மீண்டும் மீண்டும் இதைப்பற்றி
   குறைகூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
   நான் எதை அவசியம் என்று கருதுகிறேனோ அதைத்தான்
   இங்கு எழுத முடியும்…. என்னை யாரும் இப்படித்தான்
   எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது.

   மீண்டும் கூறுகிறேன்…
   இடுகையில் கூறப்படும் பொருளைப்பற்றியும்,
   பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை பற்றியும் –
   விவாதம் செய்வதே சரியாக இருக்கும்…
   எழுதுபவரைப் பற்றியோ, பின்னூட்டங்கள் போடுபவர்களைப்
   பற்றியோ நாகரிகமற்ற முறையில் பின்னூட்டங்கள்
   எழுதுபவர்களுக்கு இந்த தளத்தில் வேலை இல்லை…
   அவர்கள் அதை தங்களது சொந்த தளங்களில்
   வைத்துக் கொள்ளலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    என்னாங்கய்யா நடக்குது இங்க? ஒண்ணுமே புரியலை.

    நான் பொங்கதின்னுட்டு ஒரு மூணுநாள் கழிச்சு வரலாம்ன்னு வந்தா டுடேஅன்மீல fake id யா?

    இனிமே ஊருக்குப் போனாக்கூட விமரிசனத்தில கண்ணை வச்சுக்கிட்டே இருக்கணம் போலயே?

    எனக்குகூட பேக் ஐடி போட்டு தாக்குற அளவுக்கு என்னை அகில உலக பேமஸ் ஆக்குற நண்(வம்)பர்களுக்கு………..

    நன்றி 😐
    நன்றி நன்றி 🙂
    நன்றி நன்றி நன்றி 😀

    • today.and.me சொல்கிறார்:

     இதுதான்
     நண்(வம்)பர்களின்
     உச்சகட்ட ஆதங்கம்….

     ///////////////
     ஏன்ப்பா இவர்களுக்குள்ளே கருத்து வேறு பாடே வராதா??
     ////////////

     இவர்கள் எல்லாம்
     ஒரே மாதிரியான வேவ்லென்த் இருக்கும் மனிதர்களுடன் வாழக் கொடுப்பினை இல்லாத மாக்கள்

     ஒருவகையில் மனநலக் குறைபாடுள்ளவர்கள்..
     சிகிச்சை எடுக்கவேண்டிய நிலையில் உள்ள மனநலக் குறைபாடுள்ளவர்கள்.

     அவர்களின் குறைபாடுகளை கவனித்து சீர்செய்ய
     ஒரேமாதிரியான வேவ்லென்த் உள்ள உறவினர்கள் நண்பர்கள் கிடைக்கப்பெறாத துரதிர்ஷடசாலிகள்….

     வேறென்ன சொல்ல…

     விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சோ அவர்கள், எப்போதும் அவர் மனதிற்கு உகந்தது என்று பட்டதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியதில்லை. உலகத்தில் நடுனிலை என்று ஒன்று கிடையாது. உண்மை என்று மட்டும்தான் உண்டு. அதுவும்கூட, பார்ப்பவரைப் பொறுத்து மாறுபடும். நியாயம் என்பது, அவரவர்க்குத் தோன்றுவதுதான். If level headed people opines, it becomes the correct நியாயம்.

  இதில், சோவின்மேல் பாய்வதற்கு என்ன இருக்கிறது?

  வீரமணி அவர்கள் சோவிடம் கேட்டதுபோல், நிறைய கேள்விகள் வீரமணியிடமும் கேட்கலாம். அதற்கு அவரிடம் ஒரு பதிலும் இருக்காது. வீரமணியின் நிலைப்பாடுகளுக்கு, அவரிடமும் ஒரு நியாயம் இருக்கும். அது தன் நலனா அல்லது பொது நலனா என்பதில்தான் சோ அவர்கள் தனித்து நிற்கிறார் என்று நினைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நெல்லைத்தமிழன்,

   துணிச்சல், நேர்மை, உண்மை ஆகிய நல்ல குணங்களுக்காக
   ஒருவரைப் பாராட்டுவது என்பது வேறு.
   அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது வேறு –
   என்பது கூட பலருக்கு புரிய மாட்டேனென்கிறதே – என்ன செய்வது …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.