“சோ” அவர்களின் ஒரு சுவையான பேட்டி …..

.

.

ஆசிரியர் “சோ” அவர்களை ஓரளவு நன்றாகப் புரிந்து கொள்ள
இந்த பேட்டி உதவும். “சோ” அவர்களின் கருத்துக்கள்
எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை……

கொள்கையளவில் பல விஷயங்களில் நான் மாறுபடுகிறேன்…
அவரது நிலை சில சமயங்களில் மிகவும் வெறுப்பூட்டும்
அளவில் கூட இருந்திருக்கிறது. பல சமயங்களில் அவர் மீது
எனக்கு கோபம் கூட ஏற்பட்டிருக்கிறது….

இருந்தாலும் கூட –
அவரது நேர்மையையும், உண்மையையும்,
யாருக்கும் அஞ்சாத துணிச்சலையும்,
மத நல்லிணக்கத்தில் அவர் உறுதியாக இருப்பதையும் –
நான் மிகவும் மதிக்கிறேன். சிறந்த மனிதர்;

எந்த விஷயத்திலும் –
அவருக்கு இணையாக இன்னொருவரை
நம்மால் உதாரணம் காட்டவே முடியாது….
எவ்வளவு விஷயங்களில் மாறுபட்டாலும்,
அவர் மீது எனக்குள்ள மதிப்பு மாறாது….!!!

பேட்டியின் முதல் பகுதியை மட்டும் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
அடுத்தடுத்த பகுதிகளுக்கான தொடர்புகள் அங்கேயே கிடைக்கும்….

பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களையும் -பின்னூட்டத்தில்
பகிர்ந்து கொள்ளுங்களேன் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to “சோ” அவர்களின் ஒரு சுவையான பேட்டி …..

 1. SSK சொல்கிறார்:

  வருண், மலர்வண்ணன் – KM சார் தங்களுக்கு தக்க விளக்கம் தருவார் என நம்புகிறேன். நான் அவருடைய நெடு நாளைய வாசகன். ADMK சரியான அளவு விமர்சிப்பதில்லை என்ற குறையும் எனக்கு படுகிறது

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் “நடுநிலை”, “வருண்”, “ஜின்னா”

  – என்று இன்னமும் ஒரு டஜன் பெயர்களில்
  இங்கு பின்னூட்டம் போட முயலும் இரண்டு அல்லது
  மூன்று குறிப்பிட்ட நண்பர்களுக்கு –

  உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டதாக மீண்டும் மீண்டும்
  இங்கு எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது
  உங்களுக்கே தெரியும்.

  நான் பலமுறை இங்கு எழுதி விட்டேன்.
  இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
  நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
  இங்கு இடம் உண்டு.
  விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
  நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
  மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
  வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
  நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

  மாறாக – என்னையோ,
  இங்கு பின்னூட்டமிடும் தங்களுக்கு பிடிக்காத
  மற்ற நண்பர்களையோ – தரக்குறைவாக எழுதும் உரிமை
  எவருக்கும் கிடையாது. நான் அதை நிச்சயம் அனுமதிக்க
  மாட்டேன். விவாதங்களும், பின்னூட்டங்களும் –
  இடுகைக்கான பொருளைப்பற்றியே
  இருக்க வேண்டுமே தவிர,
  பின்னூட்டம் இடும் தனிப்பட்ட நண்பர்களைப் பற்றி அல்ல..

  இதில் “வருண்” எழுதியவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை ?
  வருண் என்கிற நபர் –
  வழக்கமாக இங்கு பின்னூட்டங்கள் எழுதும் நண்பர்
  டுடேஅண்ட்மீ அவர்களின் பெயரில் –
  அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு “போலி id”-யை
  உருவாக்கி போலியாக சில பின்னூட்டங்களை
  டுடேஅண்ட்மீ என்கிற பெயரில் எழுதியது
  பச்சை அயோக்கியத்தனம்.
  இந்த மாதிரி நபர்களை
  நான் ஏன் இங்கே அனுமதிக்க வேண்டும்…?

  அதிமுக ஆட்சியைப் பற்றி நான் தீவிரமாக
  விமரிசிப்பது இல்லை தான்… அது என் priority -யில்
  இல்லை… இப்போதைக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்
  என்று பலமுறை இங்கே வெளிப்படையாகத் தெரிவித்து
  விட்டேன். மீண்டும் மீண்டும் இதைப்பற்றி
  குறைகூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
  நான் எதை அவசியம் என்று கருதுகிறேனோ அதைத்தான்
  இங்கு எழுத முடியும்…. என்னை யாரும் இப்படித்தான்
  எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது.

  மீண்டும் கூறுகிறேன்…
  இடுகையில் கூறப்படும் பொருளைப்பற்றியும்,
  பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை பற்றியும் –
  விவாதம் செய்வதே சரியாக இருக்கும்…
  எழுதுபவரைப் பற்றியோ, பின்னூட்டங்கள் போடுபவர்களைப்
  பற்றியோ நாகரிகமற்ற முறையில் பின்னூட்டங்கள்
  எழுதுபவர்களுக்கு இந்த தளத்தில் வேலை இல்லை…
  அவர்கள் அதை தங்களது சொந்த தளங்களில்
  வைத்துக் கொள்ளலாம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • நடுநிலை சொல்கிறார்:

   இதெல்லாம் சுத்த பொய். உங்களுக்கு சாதகமாக எழுதினால் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் நீக்க மாட்டீர்கள் . இல்லையெனில் நீக்கிவிடுவீரகள். இது தான் உண்மை…. இது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்……
   மேலும் பொது கருத்துக்கள் பல வகைகளில் விமர்சிக்கவே படும். இதை ஏற்றுக் கொள்ளாமல்…. நீக்குவது என்பது நேர்மை அல்ல. அரசியல் தனம்……

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு,

    இப்போது இங்கு “நடுநிலை” என்கிற பெயரில்
    பின்னூட்டம் எழுதியிருக்கும் இந்த நண்பர்
    இதே மெயில் ID -யிலேயே இது வரை
    பல பெயர்களில் பின்னூட்டம் போட்டிருக்கிறார்.
    அவற்றில் சில –

    நடுநிலை
    தமிழ்
    பெரியார் பித்தன்
    குமார்

    அதன் பின், மெயில் ID -யை மாற்றி,
    வெவ்வேறு அடையாளங்களில் இன்னும் பல…

    இவருக்கெல்லாம் நாம் இங்கு
    இடம் கொடுக்க வேண்டுமா ?
    நீங்களே சொல்லுங்கள்…

    அரசியல் மற்றும் சமூக நலன் சம்பந்தப்பட்ட
    விஷயங்களில், பரஸ்பரம் கருத்துக்களை
    பரிமாறிக் கொண்டு,
    நாகரிகமான முறையில் விவாதம் நடத்தத்தான்
    இந்த விமரிசனம் வலைத்தளம் செயல்படுகிறது.

    அடாவடியாக வம்பு வளர்க்கவும்,
    பண்பற்ற முறையில் எழுதி தனிநபர் தாக்குதல்
    நடத்தவும் அண்மைக்காலத்தில் சில திமுக அடியார்கள்
    முனைந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
    தேர்தல் காலம் – சீரியசாக செயல்படுகிறார்கள்…
    புரிகிறது ….!!!

    நான் இத்தகைய பின்னூட்டங்களை விலக்கும்
    காரணத்தை நமது பழைய நண்பர்கள் ஏற்கெனவே
    அறிவார்கள். புதிதாக இந்த வலைத்தளத்திற்கு
    அறிமுகமாகும் நண்பர்களுக்காகவே இந்த விளக்கம்.
    நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நான் கா.மை அவர்களின் தளத்தை வாசித்தமுறையில், அவர் தனக்குள்ள விருப்பத்தின்படி இடுகை இடுகிறார். (ie his priority or things that interest him). அதில் மற்றவர்களின் கருத்தை வரவேற்கிறார். இதில் தனிமனிதத் தாக்குதலோ (வரம்புமீறிய), மத வெறுப்பு உணர்வோ உள்ள பதில்களை நீக்குகிறார். வித்தியாசமான கோணங்களில் உள்ள பதில்களைப் பிரசுரிப்பதுமட்டுமல்லாமல், தன் விளக்கத்தையும் தருகிறார். இதில் அவரைக் குறை சொல்வது எப்படி ஏற்புடையதாகும்?

    அவர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவியேற்பு நிகழ்சிகளின் புகைப்படங்களைப் பிரசுரித்தால், ஏன் கிளைவ் பற்றி ஏதும் எழுதவில்லை, உங்களுக்கு கிளைவ் மேல் என்ன வெறுப்பு என்றெல்லாம் விமரிசித்தால் அதற்கு ஏதாகிலும் எல்லை உண்டா? அவர் கி.வீரமணி கேட்டதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிப் போட்ட பதிலையும்தான் பிரசுரித்திருந்தார்.

    எனக்குப் பிடித்தமாதிரி, எனக்குப் பிடித்த இடுகைகளை கா.மை அவர்கள் எழுதவேண்டும் என்று நினைத்தால், அல்லது, என் எண்ண அலைகளோடு அவர் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர்பார்த்தால், அது என்னுடைய மடத்தனம்தான்.

    அவர் கருத்தை அறிந்துகொள்ளுங்கள். ஏன் ஒத்துப்போகவில்லை என்பதை எழுத நினைத்தால் எழுதுங்கள். எல்லோருக்கும் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப நெல்லத்தமிழன்,

     மிகச்சரியாக விளக்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே.

     நண்பர் “நடுநிலை” கூறிய ஒரு குற்றச்சாட்டுக்கு விளக்கம்
     அளிக்க மறந்து விட்டேன்.

     //உங்களுக்கு சாதகமாக எழுதினால் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் நீக்க மாட்டீர்கள் . இல்லையெனில் நீக்கிவிடுவீரகள்.//

     இது பாதி உண்மை – பாதி தவறு…!
     எனக்கு சாதகமாக எழுதி இருக்க
     வேண்டுமென்று அவசியமே இல்லை.

     இடுகைக்கு சம்பந்தம் இல்லாத சமயங்களில் கூட –

     பின்னூட்டத்தில் அவர்கள் தரும் விஷயம் சுவையாகவும்,
     அர்த்தம் உள்ளதாகவும் இருந்தால் – அதை அப்படியே ஏற்கிறேன்.
     அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
     இடுகைக்கு அவை சுவையும், விருவிருப்பும் ஊட்டுகின்றன அல்லவா …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  தொழிலுக்கும் — சேவை என்பதற்கும் கொடுத்த விளக்கம் சபாஷ் …. நாடகம் — சினிமா — வக்கீல் — பத்திரிகையாளன் எல்லாமே என் தொழில் — சேவை அல்ல என்றது —- இன்றுள்ள குடும்ப — வாரிசு — பேரம் பேச — பிழைப்பை நடத்த — கொள்ளையடிக்க — மக்களை ஏமாற்ற நினைப்பது போன்றவை அரசியல்வாதிகளின் முக்கிய ” தொழில் ” தானே தவிர மக்கள் சேவை அல்ல என்பதை சொல்லாமல் சொன்னது — ! நடுநிலை என்றால் : நல்லதிற்கும் — தீமைக்கும் நடுவில் இருப்பது தான் என்றால் எது மேலோங்கி உள்ளதோ அதை ” விமிரிசித்து ” எழுதுவதோ — பேசுவதோ தவறில்லை என்று கூறியது — மத்திய — மாநில அரசுகளை பற்றியும் அரசியலை பற்றியும் கூறியது — முதல் பேட்டியில் கேட்ட அதே கேள்விகளை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேட்டது — அதற்கான பதில்கள் எல்லாமே — நடைமுறை எதார்த்தம் …. !! மதவாதம் — இந்துத்வா — பாபர் மசூதி பற்றிய கருத்துக்கள் அவரது சொந்த விருப்பத்தையே காட்டுகிறது …. !!!

 4. nparamasivam சொல்கிறார்:

  நானும் இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகன். எனது கருத்து பதிவின் கருத்தோட்டத்தில் இருந்து மாறு பட்டு இருந்தால்–அமைதியாக அடுத்த பதிவிற்கு சென்று விடுவேன். அதிலும் அரசியல் பற்றிய பதிவுகள் எனில் இது மிக மிக அவசியம். ரிலாக்ஸ் ப்ளீஸ் பதிவின் வாசகனும் நான் ஆவேன். நண்பர்கள் இதனை ஒரு முறை செயல் படுத்தி பார்க்க விரும்புகிறேன். பதிவின் கருத்துகளை ஒட்டி/வெட்டி, அதிகப்படியான தகவல்கள் அளிப்பது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பரமசிவம்,

   நீங்கள் சொல்லும் பதிவை நான் பார்த்ததில்லை.
   லிங்க் கொடுங்களேன் – கூடவே, உங்கள் ஆலோசனையை
   இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
   தளத்திற்கு சுவை கூடுமானால், யோசிக்கலாமே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.