சன் TV/ FM நிறுவனங்கள் விற்பனைக்கு வருகின்றனவா ….?

sun logo

சன் நிறுவன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்
சிபிஐ மற்றும் அமுலாக்கப் பிரிவினரின் விசாரணையில்
இருப்பது தெரிந்த விஷயம்.

திருவாளர் தயாநிதி மாறன், மத்திய தொலை தொடர்பு
அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட
தொலைதொடர்பு வசதிகள் – சன் டிவியுடன் இணைக்கப்பட்டு –
தவறாக பயன்படுத்தப்பட்டதாக உள்ள ஒரு வழக்கை
ஏற்கெனவே சிபிஐ தீவிரமாக தொடர்ந்து வருகிறது.

இதைத்தவிர, 2ஜி தொடர்புள்ள வழக்காக ஏர்-செல் மேக்சிஸ்
நிறுவனத்திலிருந்து சன் நிறுவனங்கள் பெற்ற சட்டவிரோதமான
முதலீடுகள் தொடர்பாக ஒன்றும்,

அந்நிய முதலீடுகள் மூலம் சட்டவிரோதமான
பணபரிவர்த்தனைகளில் (money laundering ) ஈடுபட்டது
தொடர்பாக இன்னொரு வழக்கும் –

ஆக மூன்று கிரிமினல் வழக்குகள் சன் நிறுவனத்தின் முக்கிய
நிறுவனர்களான திருவாளர் கலாநிதி மாறன், அவரது மனைவி
திருமதி காவேரி கலாநிதி மாறன் மற்றும் சகோதர் தயாநிதி
மாறன் ஆகியோர் மீது தீவிர விசாரணையில் இருக்கின்றன.

இந்த நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளரும்,
ராஜ்யசபா பாஜக உறுப்பினரும், மூத்த பத்திரிக்கையாளருமான –
எம்.ஜே.அக்பர் அவர்களை நிறுவனராகக் கொண்ட
sundayguardian என்கிற செய்தி நிறுவனம் –
ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது….

இது யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது
என்றாலும் கூட – செய்தி கிளம்பும் இடம் எது என்பதும்,
நெருப்பில்லாமல் புகையுமா என்கிற கேள்வியும் சேர்ந்து
இந்த தலைப்பிற்கு வலுவைக் கொடுக்கின்றன…!

Sun TV may be sold – என்கிற தலைப்பில்
வெளியாகியிருக்கும் மேற்படி கட்டுரையில் –
உள்துறை அமைச்சகம் ( based on considerations of “adverse
impact on economic security” ) – “security clearance ” தர மறுப்பதால் இவர்கள் உரிமையாளர்களாக தொடரும் வரை –
சன் நிறுவனத்தின் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோக்களை
தொடர்ந்து நடத்துவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பதால் –

சன் நிறுவனத்தில் மாறன் சகோதரர்களுக்கான உரிமைகள்
விரைவில் வேறொரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்படலாம்
என்று செய்திகள் அடிபடுவதாக இந்த கட்டுரை கூறுகிறது.

(If the buzz in the political corridors is to be believed, Sun TV, which has been denied security clearance by the Ministry of Home Affairs (MHA), may sell its ownership to another business house.
-http://www.sundayguardianlive.com/opinion/2424-buzzword-sun-tv-may-be-sold )

அப்படி உரிமையாளர்கள் மாறும் பட்சத்தில் –
“security clearance ” கிடைப்பதில் உள்ள சிக்கல்கள்
தீரக் கூடும்…..சன் டிவி/ FM ரேடியோக்கள் தொடர்ந்து
செயல்படலாம்…

பின்னர் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு –
உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும்
மீண்டும் இடம் மாறிக்கொள்ளலாமே…!
மாறன் சகோதரர்களுக்கு தெரியாத பிசினஸா ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சன் TV/ FM நிறுவனங்கள் விற்பனைக்கு வருகின்றனவா ….?

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. ஆகவே, மாறனுக்கு மேல் “பெருமாறன்” வருவதற்கும் வாய்ப்பு உண்டே!

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ….2ஜி தொடர்புள்ள வழக்காக ஏர்-டெல் மேக்சிஸ்
  நிறுவனத்திலிருந்து சன் நிறுவனங்கள் பெற்ற சட்டவிரோதமான….
  ஏர் டெல்-ஆ ஏர் ஸெல்-ஆ ஐயா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஏர்செல் தான் சரி… நான் தான் கவனக்குறைவாக
   எழுதி விட்டேன். நன்றி அஜீஸ்.
   (தவறு இப்போது சரி செய்யப்பட்டு விட்டது )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தொந்தரவு படுத்துகிறார்களா? கொஞ்சம் பங்கை அவர்களுக்கு அளித்துவிடு. (பா.ஜ.கா அல்லது காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு). நடுனிலை என்று படுத்துகிறார்களா? அல்லது நம்மைப் பற்றி பாஸிடிவாக செய்திகள் வரவழைக்க வேண்டுமா? பங்குகளை வாங்கிவிடு. இதைத்தானே மாறன் சகோதரர்கள் செய்வார்கள்.

  200 ரூபாய்க்கு பங்குகளை விற்று, 50 ரூபாய்க்கு வாங்கும் வித்தைகளும் அவர்களுக்குத் தெரியும்.

  • எழில் சொல்கிறார்:

   ஏற்கனவே ஜெட்லியை சரி செய்து விட்டதாக சொல்கிறார்கள். ராஜ்நாத் சிங் தான் முரண்டு பிடிக்கிறாராம். 😉

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Yes எழில்…
    எனக்கும் அப்படித்தான் தெரிகிறது…!
    ஆனால் சாமி (சுப்ரமணிய…!)அருள் ராஜ்நாத்சிங்குக்கு தான்
    இருப்பதாக தெரிகிறது….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 4. thiruvengadam சொல்கிறார்:

  அரசியலுக்கு வந்து அதிகாரிகள் வழிகாட்டலில் முடிந்தஅளவு அடுத்தடுத்த தலைமுறை அனுபவிக்க சேர்ப்பவர் ஒருரகம். ஏற்கனவே ( தந்தை மூலம் ) உள்ளதை விதைநெல் போல கூடையிலிருந்து தெளித்து அறுவடையை பலசாக்குகளில் சேர்ப்பவர் சிலர். கவுண்டமணியின் பிரபல வசனத்தை நினைவு கொண்டு நாளை வேறு ஒருவர் பற்றி வருவதற்கு காத்திருப்போம். An ordinary citizen has to run to Pillar to Post in getting transfer of Properties. But for like these Corporate transfers it is soundless by just meet by Directors & recording their decisions. Auditors on their part show the way ( of course allowable ) to escape. Take for example another politician wards dealings are worth for a commerce doctorate project.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  பயிற்சி கொடுத்தவர் என்ன ” சாதாரண ” ஆளா … ?

 6. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  The CBI should twist the arms of Maran Bros&Evil power(theeya sakthi)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.