திரு.நிதின் கட்காரிஜியின் “குளச்சல்” பேச்சில் ஒளிந்துள்ள பல செய்திகள்….!!!

gatkariji

நேற்று மத்திய போக்குவரத்து துறையின் சார்பாக பல
திட்டங்களை தென் மாவட்டங்களில் துவக்கி வைக்க வந்த
மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி சந்தடி சாக்கில்
பேச்சினிடையே ஒரு செய்தியையும் சொல்லி விட்டுச்
சென்றார்….

அவர் சொன்னது ஒரே ஒரு விஷயம் தான் என்றாலும் –
அதன் பின்னால், சொல்லாத அல்லது சொல்ல முடியாத
பல விஷயங்களும் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை
நண்பர்கள் கவனித்திருக்கலாம்.

திரு.கட்காரிஜி சொன்னது –
” தமிழகத்தின் குளச்சல் துறைமுகத்துக்கு
வருகிற மார்ச் 8-ந் தேதிக்குள் பிரதமர் மோடி,
மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்
தலைமையில் அடிக்கல் நாட்டப்படும். ”

சொல்லாத விஷயங்கள் –

மார்ச் 8ந்தேதி என்ன கணக்கு ….?
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல்கள் நடைபெற
இருப்பதாலும், தேர்தல் அறிவிப்பு வந்த பின்
புதிய திட்டங்கள் எதையும் துவங்க முடியாது என்பதாலும் –
அதன் முன்னரே இந்த திட்டம் துவக்கி வைக்கப்படவிருக்கிறது…!

சரி – அதில் சொல்லாத விஷயம் என்ன …?
தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்கிற
விஷயம் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால்,
தேர்தல் தேதிக்கு 42 நாட்கள் முன்னதாகத்தான்
தேர்தல் கமிஷன் தேதிகளை வெளிப்படையாக அறிவிக்கும்…

ஏப்ரல் 1 முதல் மே 15 வரைக்குமான காலகட்டத்தில்
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்கிற
நிலையில் –
மார்ச் 8-ந்தேதி வரை தேர்தல் அறிவிப்பு வராது என்பது
கட்காரிஜிக்கு எப்படி தெரிய வந்தது …? தேர்தல் கமிஷனை
கலந்து ஆலோசித்திருப்பார் என்று தானே பொருள்…?

அடுத்து –
முதல்வர் ஜெ. அவர்களும் பிரதமர் மோடிஜி அவர்களும்
சேர்ந்து “குளச்சல்” துறைமுக திட்டத்தை துவக்கி
வைப்பார்கள் என்று தீர்மானமாக இவர் அறிவித்ததால் –
இதற்கான ஒப்புதல்கள் முதல்வரிடமும், பிரதமரிடமும்
ஏற்கெனவே பெறப்பட்டு விட்டது என்று தான் அர்த்தம்….!!!

அடுத்து –
இந்த துறைமுகத்தை கொண்டு வந்ததற்கான பெருமையை மத்திய அரசு, மாநில அரசோடு பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது என்றும் அர்த்தம்….!!!

அடுத்து –
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மாநில முதல்வருடன்
பிரதமர் மோடிஜி மேடையை பகிர்ந்து கொண்டால் –
முதல்வரை பாராட்டி பிரதமர் இரண்டு வார்த்தைகளாவது
பேச வேண்டியிருக்கும்……

பாஜக தனியே தனது தலைமையில் ஒரு கூட்டணியை
தமிழகத்தில் உருவாக்குவது நிச்சயமானால் –
இத்தகைய ஒரு சூழ்நிலை,
பின்னணி அதற்கு தோதாக இருக்காதே…!
– திரு.விஜய்காந்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு,
ஜெ.வைப் பாராட்டி பேச முடியுமா …?

அடுத்து –
மத்திய உளவுப் பிரிவின் ரிப்போர்ட் ஏற்கெனவே
பிரதமருக்கு கிடைத்திருக்கும். விஜய்காந்த் கடைசியில்
திமுக வோடு தான் சேரும் உத்தேசத்தில் இருக்கிறார் என்பதும்
இதற்குள்ளாக, பாஜக தலைமைக்கு தெரிய வந்திருக்கும்…

இத்தகைய சூழ்நிலையில் – அதிமுகவும் பாஜகவும்
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கக்கூடிய –
வாய்ப்பும், யோசனையும் இருக்கிறது என்கிற யூகத்தை
பாஜக தலைமை வேண்டுமென்றே கட்காரிஜியின் மூலம்
விதைக்க விரும்புகிறதா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to திரு.நிதின் கட்காரிஜியின் “குளச்சல்” பேச்சில் ஒளிந்துள்ள பல செய்திகள்….!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Kulatchal Kudaichal than.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Chandramouly Venkatasubramanian,

   I am forced to edit your pinnoottam.
   Hope you understand the reason.

   with best wishes,
   Kavirimainthan

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  குளச்சல் துறைமுகம் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம். கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் தமிழ் நாடு பெறவில்லை. ஆகவே வரிகளுக்கு இடையில் (in between lines) நீங்களாக அர்த்தம் செய்து கொண்டு கருத்து உரைக்க வேண்டாம். காங்கிரஸ் ஆளும் கேரளம் மற்றும் கர்நாடகா வில் அரசுகள் மோதியிடம் திட்டம் பெற கட்சி வேறுபாடு இன்றி போட்டியிடும் சமயம், நாம் அமைதி காத்தல் முக்கியம். இதே நிட்கரி அவர்கள், கர்நாடகாவில், சென்ற வாரம் , வெளிவட்ட சாலை இணைப்புக்கு அனுமதி வழங்கிய பொது அங்கு யாரும் இதனை அரசியல் ஆக்கவில்லை. ஆகவே, பொறுமையுடன் நல்ல ஒரு , முன்னேற்ற திட்டமான குளச்சல் திட்டத்தை, மனதார வரவேற்போம். நாமே அரசியல் கண்ணோட்டத்தை இதில் திணிக்க வேண்டாம் என எண்ணுகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பரமசிவம்,

   நான் குளச்சல் திட்டத்தை எதிர்ப்பதாக எப்படி நீங்கள்
   தவறாகப் புரிந்து கொண்டீர்கள்…?
   மீண்டும் ஒரு முறை இடுகையை படித்துப் பாருங்கள்….
   நான் திட்டத்தை எதிர்த்து எழுதவே இல்லை.
   யார் நிறைவேற்றினாலும் சரி –
   இந்த திட்டத்தை முழுமனதுடன் வரவேற்பவன் நான்.

   மேலும், திரு.பொன்.ரா. அவர்கள் இந்த திட்டம் குறித்து
   அறிவித்த அன்றே இதை மனமாற வரவேற்று ஒரு இடுகை
   எழுதி இருந்தேனே – நீங்கள் பார்க்கவில்லையா …?

   ( முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் –
   Posted on செப்ரெம்பர் 4, 2015 by vimarisanam – kavirimainthan )

   நான் கூற வந்தது, அதிமுக வுடன் பாஜக கூட்டணி
   அமைக்க வாய்ப்பும், சூழ்நிலையும் உள்ளது என்று
   சிலர் உணர்ந்து கொள்ள பாஜக இந்த சந்தர்ப்பத்தை
   பயன்படுத்திக் கொள்ள முயல்கிறதா ? – என்பதைத்தான்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr Paramasivam, from what one could observe from the way the govt has been functioning it has not been discriminating between states where it comes to development — The govt has cleared many projects in non BJP states —

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தேர்தலுக்காகவென்றாலும், குளச்சல் துறைமுகத்தை வரவேற்போம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.. ஜெ பா.ஜ.காவுக்கு (மத்திய அரசுக்கு) அனுசரணையாக இருப்பார்… ஆனால் எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார். இது அவருக்கு இஸ்லாமிய வாக்குகளை இழக்கச்செய்துவிடும்.

  திமுகா, காங்கிரஸ், தே திமுக, வி.சி கூட்டணி நிச்சயம் அமையும். போற போக்கைப்பார்த்தால், கம்யூனிஸ்டுகளும் இந்தக் கூட்டணியில் சேர்ந்துவிடுவார்கள். அப்போ, வாசன், வேல்முருகன், மனிதனேயம் மட்டும் அதிமுகவுக்குப் போதாது.

 4. thiruvengadam சொல்கிறார்:

  பரமசிவம் பதிவு நிதர்சனம். இத்திட்டத்திற்கு சிறியஅளவில் லோக்கல் எதிர்ப்பு இருந்தது. எவர் மூலமாகவோ நமக்கு நன்மை கிடைப்பதை வரவேற்போம். இன்னொரு விதத்தில் அம்மா விசுவாசிகளுக்கு பிளக்ஸ் போர்டு வைப்பதா என்று குழப்பத்திற்கு வித்தாகியது.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் –
  Posted on செப்ரெம்பர் 4, 2015 by vimarisanam – kavirimainthan — என்கின்ற இடுக்கையில்……. // எந்தவித பரபரப்போ, விளம்பரமோ இன்றி –
  மிகுந்த முனைப்போடு தமிழ் நாடு அரசும், மத்திய அரசும்
  ஒருங்கிணைந்து செயல்பட்டு,
  21,000 கோடி ரூபாய் செலவில்
  மூன்றாண்டு காலத்திற்குள் –
  குளச்சல் துறைமுகத்தை உருவாக்குவது என
  ஒரு திட்டத்தை அறிவித்து,
  உடனடியாக அதற்கான செயல்பாடுகளையும்
  துவங்கி விட்டமைக்காக –
  தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களையும்,
  மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும்
  மனதாரப் பாராட்டுகிறோம் – வாழ்த்துகிறோம் // என்பதின் தொடர் நிகழ்வுகளா … அய்யா … இன்றைய இடுக்கை …… ? மேலும் ஒரு செய்தி : —ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » // தமிழகம் கறார் கன்டிஷன் போடும் விஜயகாந்த்.. அலட்டல் தாங்காமல் கழற்றிவிட அறிவாலயம் முடிவு? Posted by: Veera Kumar Published: Tuesday, January 19, 2016, 15:34 [IST]
  ead more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-plans-cut-it-s-relationship-with-vijayakanth-s-dmdk-244822.html? … என்கிற செய்தியில் ” திமுக, அதிமுக கண்டுகொள்ளாமல்விட்டால், விஜயகாந்த் தானாகவே வீழ்ச்சியடைந்துவிடுவார். அவரை தகுதிக்கு மீறி உயர்த்திபிடிப்பது உத்தமம் இல்லை என்பதுதான், இப்போது அறிவாலயத்தின் ஹாட் டாப்பிக். எனவே, விஜயகாந்த்குக்கு ஈடான வாக்கு வங்கி கொண்ட கட்சிகளை வலைவீசி தேடும் முயற்சியில் திமுக புள்ளிகள் இறங்கியுள்ளார்களாம். ” என்று கூறியுள்ளது பற்றி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாமரன் செல்வராஜன்.

   உரிய நேரத்தில், இடத்தில் – குளச்சல் துறைமுகம்
   பற்றிய முந்தைய இடுகையை நினைவுபடுத்தியமைக்கு
   நன்றி.

   திரு.விஜய்காந்த் குறித்து – திமுக கருத்தாக கூறியிருப்பது
   இவர்களாக வெளியிடும் ஒரு யூகம் தான்… சும்மா….
   ஒரு பயமுறுத்தலுக்காக இருக்கலாம்….!!!!

   எனக்கென்னவோ – கலைஞர் கடைசி நிமிடம் வரை –
   விஜய்காந்த்தை உள்ளே இழுத்துக் கொள்ளத்தான் விரும்புவார் –
   கடும் முயற்சியும் செய்வார் என்றே தோன்றுகிறது.

   முடிந்தால் இன்னும் சிலரையும் கூட இழுக்க முயற்சி செய்வார்.
   எப்படியாவது ஒரு பெரிய்ய்ய்ய கூட்டணி அமைப்பதில்
   கலைஞர் குறியாக இருக்கிறார். அதற்காக
   எந்தவித adjustment க்கும் மனதளவில் தயாராகி விட்டார்
   என்றே தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. LVISS சொல்கிறார்:

  Probably the PM would be free some time during March –He is always seen visiting states inaugurating some thing or the other — The BJP did not benefit from any of its allies in Lok sabha polls — So it may be looking for a winning combination this time -As things stand AIADMK is the best choice —If this alliance does fructify how will MR K M react or think about it —

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப LVISS,

  நான் இந்த விஷயத்தில் கொஞ்சம் சுயநலவாதி…..!!!???

  தமிழ்நாட்டின் எந்த முக்கிய கோரிக்கைகளையும்
  இதுவரை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

  இன்றைய நிலையில் –
  பாஜக வுடன் கூட்டணி சேர்வதால் –
  அதிமுக கட்சிக்கோ –
  தமிழ் நாட்டிற்கோ அதனால் எந்த வித பயனும் இல்லை
  என்பது என் கருத்து.

  பாஜக தமிழகத்தில் காலூன்ற விரும்பினால்-
  தேர்தல் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் –
  முதலில் தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினைகளில்
  உண்மையான அக்கரை காட்டி, அவற்றை தீர்த்து வைக்க
  முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.

  இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பரே…?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. உண்மை சொல்கிறார்:

  பதிவுக்கு சம்பந்தம் இல்லாவிடினும் எல்விஸ் உங்களிடம் -பாஜக அனுதாபி என்பதால்-ஒரு கேள்வி.
  பாஜக-மத்திய அரசு மற்றும் தமிழக பாஜாக வினர் இன்றுவரை பல விசயங்களுக்கு சல்லிக்கட்டில் இருந்து,பெற்றோல் விலையேற்றம்,என அனைத்திற்கும் முன்னைய காங்கிரஸ் அரசே காரணம் என்று கூறி தப்பித்து வருகின்றனர். காங்கிரஸ் விட்ட தவறுகளை சரி செய்து ஆட்சி நடத்தவே மக்கள் பெரும்பான்மையுடன் தெரிவு செய்தார்கள். ஆனால் அவற்றில் எதையும் சரி செய்யாது முன்னைய அரசை குற்றம் சாட்டி ,அதையே தொடர்ந்தால் முன்னைய அரசை அப்படியே தொடர விட்டிருக்கலாமே! ஏன் பாஜகா அரசு ஆட்சியில் தொடர வேண்டும்?
  தீர்க்கப்பட்ட தமிழ் நாட்டின் கோரிக்கைகள் என்ன? தேர்தலின் போது இலங்கை தமிழர் பிரச்சனை,ராஜீவ் குற்றவாளிகள் விடுதலை,சல்லிக்கட்டு என கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகள் என்னவாயிற்று?

 9. உண்மை சொல்கிறார்:

  இது வலைப்பதிவரிடம்……………
  தொழில்நுட்ப ரீதியில் இந்த வலைத்தளம் பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்தேன். கருத்தில் இணைக்கலாமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நீங்களே உண்மை….!
   நீங்கள் சொல்லப்போவதும் உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன்…!!!

   ஆனால், என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் விஷயம்
   எதாவது அதில் இருக்குமேயானால், முதலில் என்
   personal மெயில் ID -க்கே ( kavirimainthan@Gmail.com ) அனுப்பி விடுங்கள்.. நான் முதலில் பார்த்து என்னை தயார் பண்ணிக்கொண்டு பிறகு ரிலீஸ் பண்ணுகிறேன்.

   அப்படியொன்றும் இல்லையென்றால் – தாராளமாக
   நேரடியாகவே இணைக்கலாம். நானும் தெரிந்து கொள்ள
   ஆவலாகவே உள்ளேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. உண்மை சொல்கிறார்:

  உங்களைப்போல் நானும் இந்த வலைப்பதிவிற்கு வந்து போகும் பயணர். அந்த முறையில் இந்த வலைப்பதிவின் தரம் எப்படி என ஆய்வொன்றை செய்த போது கிடைத்த தகவல் உங்களுக்காகவும்,வலைப்பதிவருக்காகவும்…………..

  1.விமரிசனம் வலைப்பதிவின் பதிவு- கைபேசிக்கான வேகம் – 64 %
  கணினியில் வேகம் 71 %
  செயல்திறன்-Performance 24/30- தற்போதய பதிவு ஒன்று 1.5 MB ற்கு குறைவாகவே இருப்பதால் மிகவும் நன்று.
  ………………..
  பதிவு ஒன்று 3MB ற்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.பதிவுடன் video நேரடியாக இணைக்காமல் embed முறையால் இணைப்பது சிறந்த முறையாகும்.படங்களைப் பொறுத்தவரை upload செய்வது மேல்.கோப்பு அளவைப் பொறுத்தவரை Jpg சில KB அளவுடைய மிகச் சிறியது. தொடர்ந்து png,gif ஆகும். பெரிய அளவிலான படங்கள் வேகத்தைக் குறைப்பதுடன் தாமதமாக பயணரை சென்றடையும்.வீடியோ embed முறையில் இணைப்பதும், சிறிய அளவிலான படங்கள் இணைப்பதும்- Performance,speed -சிறப்பாக இருக்கும்.தற்போதய முறையை தொடரலாம். (WordPress blog இன் இலவச சேமிப்பு 3 GB ஆகும்.)
  தேவையற்ற படங்கள் media இல் இருந்தால் நீக்கலாம்.

  இந்தத் தளத்தைப் பொறுத்தவரை Video embed/image upload அனைத்தும் இந்த நிமிடம் வரை சிறப்பாக உள்ளது. இப்படியே தொடர்வது நல்லதாகும்.

 11. உண்மை சொல்கிறார்:

  2.பதிவுகள்- கைபேசிகளில் தரம் – 30/30 மிகவும் நன்று. (Responsive and view Ports -Fantastic)
  Security -பாதுகாப்பு தரம் – 10/10 (Safe and secure – Nice job)
  Headings -பதிவுகளின் தலைப்பு பிரமாதம்- Head of the class
  Browser caching – Wowee,Your web blog caching is world class.
  Page Redirects – Perfect. (இந்த வலைப்பதிவில் கிடையாது என்பதால் சிறப்பைப் பெறுகிறது.)
  Page speed – 2.8 sec – மிகவும் நன்று.
  Page Titles – எப்போதும் 70 எழுத்துகள்-(70 characters-) பார்த்துக் கொள்வது நல்லது. …. தலைப்பின் முடிவில் வரும் …….. dots களை தவிர்க்கலாம்.
  ஒட்டுமொத்தமாக-overall – 74 %
  ……………….
  74% வந்ததற்குக் காரணம் Sitemap, Page requests ,Render blocking ,Backlinks போன்றவை. இவற்றில் Sitemap, Page requests ,Render blocking போன்றவற்றை wordpress blog என்பதாலும் பணம் பெறும் நோக்குடன் செயல்படாததாலும் வலைப்பதிவரால் சரிசெய்ய முடியாது,சரி செய்ய வேண்டிய அவசியமும் பொதுவாக கிடையாது. Backlinks போன்றவை இந்த வலைபதிவிற்கு -SEO- தேவை அதிகம் கிடையாது- பணத்திற்காக நடத்தப்படும் தளங்கள் தான் இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதனால்…………… 74% என்பது மிகப் பெரிய சிறப்பாகும்.

  வாழ்த்துகள்! சரிசெய்ய எதுவும் கிடையாது.
  Congratulations! சரி செய்ய – No issues found.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் “உண்மை”,

   நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.
   என் கணிணி அறிவு 0+ தான். ஏதோ அடிப்படையை
   மட்டும் தெரிந்து கொண்டு இந்த வலைத்தளத்தை
   ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

   உங்கள் தொழில் நுட்பம் சார்ந்த மதிப்பீடுகள்
   எனக்கு ஓரளவு புரிகின்றன. மீதியையும்
   புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.

   மொத்தத்தில் உங்கள் குறிப்பு –

   // வாழ்த்துகள்! சரிசெய்ய எதுவும் கிடையாது.
   Congratulations! சரி செய்ய –
   No issues found.//

   நன்றாகவே புரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

   நான் இந்த தளத்தை எந்த விதத்திலாவது
   improve பண்ண முடியும் என்றால் –
   அதுவும் என் அறிவுத்திறனை ( ? ) மட்டும்
   வைத்துக் கொண்டு – இப்போதில்லாவிட்டாலும்,
   எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை
   கொடுக்கலாம். முடிந்தால் செய்கிறேன்.

   உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் என்
   மனமார்ந்த நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. உண்மை சொல்கிறார்:

  இது பயணர்களுக்கு…………..
  கருத்துகள் சுருக்கமாகவும் படங்களை இணைக்காமலும் இருப்பது சிறப்பு. படங்கள் இணைப்பதானால் சிறிய அளவிலான படங்கள் அல்லது embed முறையில் அல்லது url-link கொடுப்பது சிறப்பு.
  காணொளிகள் இணைக்க விரும்பினால் embed முறையில் கொடுப்பது சிறப்பு.

  வேறொரு தளத்தில் இருந்து நீண்ட பதிவை ஆதாரமாக இணைக்கும் போது url link ஐ மட்டும் கொடுப்பது சிறந்தது. நீண்ட பதிவை கருத்தாக இணைப்பதால் download வேகம் குறைய வாய்ப்புண்டு. உதாரணமாக…

  சில தினங்களுக்கு முன்னர் KM_Adimai என ஒருவர் கருத்திட்டார். அநேகமாக முழுவதும் உண்மைக்கு மாறானதாக இருந்தாலும் கூட,பதிவை விட மிக நீண்ட கருத்தாக அவர் கருத்து இருந்தது. இப்படியான -தேவையற்ற- நீண்ட கருத்தை தவிர்ப்பது வலைப்பதிவருக்கும்,உங்களுக்கும் சிறந்த முறையாகும்.

  இந்த வலைப்பதிவு தொழில்நுட்ப ரீதியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருவதால், தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட ஒத்துழையுங்கள்.

 13. உண்மை சொல்கிறார்:

  3.வாசகர் எண்ணிக்கையில் முதல் மூன்று இடத்தை பெற்ற நாடுகள் -இந்தியா,அமீரகம்,சுவிற்செலாந்து.

  பயணர் எண்ணிக்கை நேரடியாக 39.89 % , பரிந்துரைகளினால் வந்த பயணர்கள் – 57.05 % ஆகும். அதிக பரிந்துரைகள் – தமிழ்மணம், த,இண்ட்லி,திரைமணம் மூலம் கிடைத்தன.

  சமூக இணையங்கள் மூலம் வந்த பயணர்களில் முகநூல் முதல் இடத்தைப் பெறுகிறது. இதன்படி முகநூல் மூலம் 90.06 % ,கூகிள்+ 5.96 % வாசகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

  Backlinks – 343
  தொடரும் தளங்கள் – 339

  • thiruvengadam சொல்கிறார்:

   Accept Unmai’s opinion on this subject as a qustion to a frnd. Thanks a lot on his analysis which paved way to update me reg basics .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப உண்மை,

   என் கணிணியில் dashboard தரும் தகவல்களை
   தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
   அதன்படி பார்த்தால் –
   வாசகர் எண்ணிக்கையில் முதல் மூன்று இடத்தை
   பெறும் நாடுகள் முறையே –
   இந்தியா, அமெரிக்கா, அமீரகம் – அதன் பிறகு சிங்கப்பூர்.

   உங்கள் புள்ளி விவரங்கள் இதிலிருந்து மாறுபடுகிறது…
   டெக்னிகலாக காரணங்கள் எதாவது இருக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • உண்மை சொல்கிறார்:

    Dashboard இல் உள்ள உங்கள் தகவல் சரியாகவே இருக்கும். கடந்த மூன்று மாதங்களில் கூகிள் தேடுபொறி மூலம் வந்த வாசகர் எண்ணிக்கை தான் நான் கொடுத்த தகவல். நான் கூகிள் தேடுபொறி பாவிப்பதில்லை. என்னைப்போல் பலர் கூகிள் தேடுபொறியை பாவிக்காமல் வேறு தேடுபொறி மூலம் விமரிசனம் தளத்திற்கு வந்திருக்கலாம். அதனால் வாசகர் வரவைப் பொறுத்தவரை உங்கள் தகவல் சரியாகவே இருக்கும்.

 14. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM Some how I have a feeling for a couple of months that your articles are not so electrifying
  as before. I may be wrong. More over there is a photo session for a couple of days in a week. It
  is not so interesting for me. When I used to be abroad, I first read your article everyday at 7 AM
  daily.Then only I carry out other routine where ever I am. In India I read it by 2.30 pm every day
  due to time zone. Also some times your articles are very short. Is there any specific reason.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Gopalakrishnan,

   Thank you for your blunt comments.

   I agree that nowadays the articles are not so electrifying ..!!!
   But you will find it funny – if I tell you the reason –
   Earlier I used to write covering all india politics – particularly delhi…!
   But many friends /readers wanted me to concentrate more
   on Tamilnadu politics….and I also followed their demand/request…
   Since the election tone has set in Tamil nadu politics much ahead –
   7-8 months ahead of the polls – the scenerio is very dull now.

   Until the alliance matters are settled – this stale situation
   is likely to continue…!

   Reg. photo session – I have to tell you again the factual situation ..
   There are good number of friends who are much keen in
   these… ofcourse I am also very much interested in collecting such
   different type of photographs – old videos etc.

   Having understood the reasons behind, I hope now you will
   not feel much as before.

   -with best wishes,
   Kavirimainthan

 15. paamaranselvarajan சொல்கிறார்:

  // சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
  Posted on மார்ச் 5, 2010 by vimarisanam – kavirimainthan // – என்றதுக்கும் — இன்று அரசுகளுக்கு எதிராக ” ஊடகங்களிலும் — வாட்ஸ்அப் — ட்விட்டர் போன்றவைகளிலும் வரும் செய்திகளுக்கும் — வீடியோக்களுக்கும் — கலைஞர் ஆட்சியில் இருந்தால் —- அவரது ரி- ஆக்க்ஷன் எப்படியிருக்கும் .? அடுத்து :–// இளையராஜா சங்கீத அகாடமி அமைக்க இலவச நிலம்!- கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவிப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/india/kerala-honours-maestro-ilaiyaraaja-244953.html . என்ற செய்தியை பற்றியும் .?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாமரன் செல்வராஜன்,

   கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நாளிதழ்களில்
   அரசுக்கு விரோதமான தலைப்புகளில் செய்திகள் பிரசுரம் ஆகும்போது,
   பல சமயங்களில் அவரே – நேரடியாக செய்தி ஆசிரியருடன்
   தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன இப்படியெல்லாம்
   தலைப்பு/செய்தி போடுகிறீர்கள் என்று உரிமையுடன் ( ! )
   கண்டிப்பது வழக்கம்….
   (இது அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்ட விஷயம்…)
   முதலமைச்சர் நேரடியாக தன்னிடம் பேசிய பின்னரும் அந்த ஆசிரியர்
   அந்த நிலை தொடர அனுமதிப்பாரா …?

   ஆனால், அப்போதெல்லாம் எதிர்ப்பு விவகாரங்கள் வெறும் செய்தி பத்திரிகைகள் என்ற அளவில் நின்றது. அதுவும் விரல்விட்டு
   எண்ணிவிடக்கூடிய அளவிலான அமைப்புக்களே.

   ஆனால் இன்றைய டெக்னாலஜி உலகில் – எந்த அரசும் –
   தனக்கு எதிராக செய்திகள் வருவதை முற்றிலுமாகத் தடுப்பது
   என்பது இயலாத காரியம்…. அதனால் தான்…….நீதிமன்ற நடவடிக்கைகள்…!!!

   ———————

   திரு.இளையராஜா அவர்களைப் பொருத்த வரையில் –
   மலையாள அரசு அவரைக் கொண்டாடுவதும், பாராட்டுவதும்
   நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமே.

   ஆனால் – ஒன்று சொல்வேன் –
   தமிழகத்திலும், ராஜாவுக்கு எந்த குறையும் இல்லை.
   அவரை விரும்பும் மக்கள், அவர் இசையை வாழ்நாள் முழுவதும்
   கொண்டாடும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
   எனவே, இங்கு அவருக்கு மதிப்பில்லை என்று சொல்ல முடியாது.

   யாராவது சிலர், எப்போதுமே -எதிலுமே அரசியல்
   பண்ணிக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்களால்,
   ராஜவுக்கு சில அவமதிப்புகள் நிகழ்கின்றன. ஆனால், அவர்கள்
   மிகச்சிறுபான்மையினர்… ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

   சந்தேகமே இல்லாமல் தமிழ் நாட்டில்
   என்றுமே ராஜா ராஜா தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.