கருப்புப்பண கோடீஸ்வரர்களுக்கும், கற்பழிப்பு சாமியார்களுக்கும் ஒரு GOD FATHER ?

subramanian-swamy

“விராட் இந்துஸ்தான் சங்கம்” என்று ஒரு அமைப்பை நிறுவி, இந்து மதத்தை காப்பாற்றவும், உய்விக்கவும் புறப்பட்டுள்ள
புதிய வீரத்துறவியாக தன்னைத்தானே உருவகப்படுத்திக்
கொண்டு – அதற்கென்று அலையும் ஆயிரக்கணக்கிலான –
இந்துமத ஆர்வலர்களை ஏமாற்றும் கயமை ஒருபுறம் ……

தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பலர் மீது வழக்கு தொடுத்து –
லஞ்ச ஊழல்களை ஒழிக்கவும், கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு
வரவும் புறப்பட்டுள்ள அஞ்சாநெஞ்சர் என்கிற உருவத்தை
உருவாக்கிக் கொண்டுள்ள சாமர்த்தியம் ஒருபுறம் ….

பாஜக ஆட்சியைப் பிடிக்கப் போகிறது, மோடிஜி பிரதமராகப்
போகிறார் என்பதை public sentiments மூலம்
உணர்ந்து கொண்டு, புத்திசாலித்தனமாக ( எப்படி கூட்டினாலும்,
ஆயிரம் உறுப்பினர்களுக்கு மேல் தேறாத ) தன் கட்சியை
தேர்தலுக்கு முன்னர் பாஜகவுடன் இணைத்து –

இன்று வரை – பாஜகவுக்கு உள்ளேயே –
– பல அவமானங்களுக்கு உள்ளானாலும் –
மந்திரிப் பதவியை எதிர்பார்த்து –
தொடர்ந்து மோடிஜியை மட்டும் விடாப்பிடியாக
பிடித்துக் கொண்டு அலைவது ஒருபுறம் …

இந்துமத காப்பாளர், கருப்புபண-ஊழல் முதலைகளை
ஒழிக்க புறப்பட்டிருக்கும் உத்தமர் போன்ற
இத்தகைய “உயர்ந்த” உருவகங்களுக்கு
அவர் தகுதியானவர் தானா ?

அப்படியானால் –
கற்பழிப்பு மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி –
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலிச்சாமியார்
ஆசாராம் பாபு வழக்கில் விடாமல் ஆஜராகி –
அந்த போலிச்சாமியாரை தப்பிக்க வைக்க அசராமல்
ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்குவது ஏன்…?

கிரிக்கெட் நடத்துவதே சூதாட்டம் என்பது போய்,
ஒரு நாள் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டுவதன் மூலம்
கோடிக்கணக்கில் கருப்புப்பணம் சம்பாதிக்கும்
கருப்புப் பண திமிங்கிலங்களுக்கு ஆதரவாக –
நீதிமன்றங்களில் வெட்கப்படாமல் ஏறி இறங்குவது ஏன்…?

தன்னை ஒரு சட்டநிபுணர் என்று சொல்லிக் கொண்டு
திரியும் இந்த மனிதருக்கு –
சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன்
கொடுத்த தண்டனையை, ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில்
அப்பீல் செய்து நிவாரணம் பெற முடியாது என்கிற
அடிப்படை உண்மை கூடவா தெரியாது..?

அதையும் மீறி வழக்கு தொடர்ந்ததும் –
“மீண்டும் சென்னை கிரிக்கெட் அணிக்கு உயிர் கொடுப்பேன்”
என்று சவால் விட்டதும் எதற்காக ..?
( சீனியிடம் இருக்கும் கருப்பில் –
கோடிகள் சிலவற்றை கவரத்தானே ..? )

வழக்கை “டிஸ்மிஸ்” செய்து உயர்நீதிமன்றம் நேற்று
தீர்ப்பு கொடுத்த பிறகும், இந்த ஆசாமிக்கு சவடால்
குறையவில்லை. ட்விட்டர் சவாலை பாருங்களேன்…

ss tweet on cricket

இப்போது உச்சநீதிமன்ற சவால் எதற்கென்று நினைக்கிறீர்கள்..?
சீனியின் இன்னும் சில கோடிகளை கவர –
இந்த சவடால் அப்பீல் உதவுமே..!

சில அப்பாவி நடுத்தட்டு, படித்த இளைஞர்களும்,
இந்துமத பற்றாளர்களும் –
இன்னமும் இவரை பெரிய ஹீரோ என்று
புகழ்ந்து கொண்டு இவர் பின்னால் அலைவது தான்
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது …..!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கருப்புப்பண கோடீஸ்வரர்களுக்கும், கற்பழிப்பு சாமியார்களுக்கும் ஒரு GOD FATHER ?

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  இந்திய நீதி மன்றங்களின் சிறப்பே “அப்பீல்” செய்யும் உரிமை தான். இந்திய பாராளுமன்றத்தை தாக்கி தண்டனை அறிவிக்கப் பட்டவனுக்கு தனி பெஞ்ச் அமைத்து வெளிப்படையான விசாரணை நடக்க இருக்கிறது. தூக்கு தண்டனை பெற்ற யாகூப் அப்பீல் ஏற்று இரவு 1 மணிக்கு விசாரணை நடக்கிறது. ஆகவே அப்பீல் செய்வது ஒருவரின் உரிமை. அதே போல், வழக்கறிஞர் அதில் ஆஜராவதும் அவர் தொழில் தர்மம். இதில் கறுப்பு சிவப்பு பணம் என எதுவும் இல்லை.
  தி.மு.க. அரசின் ஊழலுக்கு வழி வகுக்கும் சேது சமுத்திர திட்டத்தையும், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சிதம்பரம் கோவிலை அரசு எடுக்க முடிவு செய்ததையும், உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்து, தி.மு.க. அரசை வென்றவர் சு.சா. என்பதை எப்படி மறந்தீர்கள்.
  நீதி மன்றம் எனில் அப்பீலும் இருக்கும், தள்ளுபடியும் இருக்கும், தண்டனையும் இருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பரமசிவம்,

   நான் இதற்கு முன்னதாக குளச்சல் துறைமுகம் பற்றி
   எழுதியதை தவறாகப் புரிந்து கொண்டு – எசகுபிசகாக
   ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீர்கள். நான் விளக்கம்
   எழுதியதற்கு பின் அதைப்பற்றி உங்களிடமிருந்து
   response எதுவும் இல்லை.

   இங்கும் தவறாகவே புரிந்துகொண்டு, எழுதுகிறீர்கள்.

   இங்கு நான் எழுதியிருப்பது –

   – கிரிக்கெட் சூதாட்டத்திற்கு திரு. சு.சுவாமி ஏன் இத்தனை
   ஆர்வம் கொண்டு வக்காலத்து வாங்க வேண்டும்…?
   இது என்ன பொது நலன் சம்பந்தப்பட்டதா…?
   கிரிக்கெட் விஷயத்தில் கருப்புப்பணம் பேயாட்டம் ஆடுகிறது
   என்று கூறுவது உங்களுக்கு ஏற்புடையதில்லையா ?
   ( முக்கியமான விஷயம் – நீங்கள் நினைப்பது போல்
   திரு. சு.சுவாமி வக்கீல் அல்ல – இது அவர் தொழிலும் அல்ல ….! )

   – அடுத்து போலிச்சாமியார் ஆசாராம் வழக்கில் இவருக்கு
   என்ன interest ..? அதுவும் பொது நலன் என்று
   கூறுவீர்களா … ?

   – மத விஷயத்தில் அவரது தீவிர மனோபாவம் உங்களுக்கு
   ஏற்புடையது தானா ? அவரது பேச்சும் செயலும்
   இரு மதங்களையும் சேர்ந்தவர்களிடையே வெறுப்பு
   உணர்ச்சியையும், குரோதத்தையும் தூண்டுவதாக இல்லையா ?

   – இந்த இடுகையில் கூறப்பட்டுள்ள எந்த குறைகளை
   பற்றியும் கருத்து கூறாமலே திரு. சு.சுவாமியை நீங்கள்
   போற்றுவது எப்படி ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Sanmath AK சொல்கிறார்:

   Dear Mr.Paramasivam,

   I think I must be much younger to you….. But with the experience of interacting with people in high powers, I got to know only one thing – this man is not a trustworthy guy and none is ready to trust him….. going to him is like holding a two-sided gun….. Hope you wud try to explore and know more about him…..

   Coming to sethusamudram project, it is not going to bring big profits to our country….. if very big macro economic activity takes place bcoz of good growth-oriented leaders, there are ways and means this project will make karnataka, andra and tamil nadu to flourish….. at this stage of economic activity going on, this project is not a viable one….. though this project is not going to be profitable, MARK MY WORDS – time may come, bjp will speak “FOR” this sethusamudram project…… the reason behind is universal – trade & economic advantage(not for the people of the country – but for the richer and richest)……

 2. Shakthi சொல்கிறார்:

  The way you carry on with your hate-brigade campaign against Subramanian Swamy only leads one think you have no idea about this man.Half baked brain is dangerous !!
  You should read his full life history, what good activities he has done for the country.
  He is one who follows Bhagavad Gita in practical life; he is reasonably powerful in his own way more so because he is not selfish, is well informed] utilises his capabilities to bring down relentlessly, corrupts in high places. You cannot find another genius like him. (Cho is somewhat like him but works in his own milder ways ).

  It is not understood why you hate Subramanian Swamy, and attributing to him your own imaginary motives! Your hatred against
  Subramanian Swamy is unfounded unless you wish to side with evil mongers !!
  Whereas it is not going to affect S. Swamy in any way, it is better if you do not try to degrade good-doers.
  I with things with totally neutral mind and all neutral will agree with me.

  Another good person you hate (for what reasons excepting jealousy !) is Kamalahasan.
  He is just an actor, entertainer, producer and so on. He does his job excellently.
  No one in his category can even be compared with him ! While this itself is good enough,he has his Fans Club through which he does some public service like organ donations and similar good activities.
  Possibly you are jealous of this man also ! Otherwise there is no reason to hate him and write articles on some imaginary charges !
  He can have his own idea of religion, life, and how to conduct himself as long as it is not affecting others liberties.
  Jealousy only affects one’s own health !! If we are unable to praise worthy people, let us atleast not condemn them !!
  I know you will try to trample me by giving a hot reply with more imaginary stories.
  Some minds will never change! And I do not expect any change in you also !!

  Shakthi

  • இளங்கோ சொல்கிறார்:

   Mr.Shakthi –

   -நீங்கள் இந்த வலைக்கு புதிதா என்ன ? ஏதோ காவிரிமைந்தன் அவர்கள் இன்ரு தான் சு.சு.வைப்பற்றி எழுதுவது போல் எழுதி இருக்கிறீர்கள்.

   //Half baked brain is dangerous !!// – இது உங்களுக்கு தான் நன்றாகப் பொருந்துகிறது. அரைகுறையாக
   எதையாவது படித்து தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்தவர் போல் உளறுவது.

   இந்த வலையில் ஒன்றல்ல இரண்டல்ல 12 பாகங்கள் எழுதப்பட்டதே “சாமியின் சாகசங்கள்” – இவரது
   வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி.
   அப்போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் ?
   இதுவரை படிக்கவில்லை என்றால் முதலில் அதை படித்துவிட்டு பிறகு இங்கு வந்து அதைப்பற்றி கமெண்ட் எழுதுங்கள் பார்க்கலாம்.

   //He is one who follows Bhagavad Gita in practical life;//

   நெஞ்சம் பூராவும் வஞ்சமும், பொய்யும், வெறுப்பும் பொறாமையும், சூதும் கொண்ட ஒரு தீய சக்தி,
   ஒரு நம்பர் ஒன் ப்ளாக்மெயிலரை சந்நியாசி என்று கூறும் அதிசயம் நம்மூரில் மட்டும் தான் நடக்கும்.

   போய் முதலில் “சாமியின் சாகசங்களை” படித்து விட்டு வாருங்கள். அதன் பிறகும் உங்களுக்கு இதே
   அபிப்பிராயம் இருக்கிறதா பார்க்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஷக்தி,

   உங்கள் திருப்திக்காகவே திரு.கமல்ஹாசன்
   அவர்களை பாராட்டி ஒரு ஸ்பெஷல் இடுகை
   போட்டு விட்டேன்.

   இனி என்னை ஏச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  If you assess Mr Swamy without bias you will see a person with deep knowledge of law– That is why he is sought after by many persons — His credentials are awesome — He could have continued as an educationist and earned any amount of money just by delivering lectures abroad but he chose this lawyer’s profession -=-He would not spare any one who tries to shield the corrupt even if he is from his own party — This is what he told in a recent interview —
  Mr Swamy’s name never appeared as a possible contender for any minister’s post –Arun Jaitley , Sushma Swaraj ,Venkaiah Naidu were the only senior persons whose names appeared as possible cabinet ministers –Most of the other persons from BJP are surprise choices —
  Mr Swamy is a reputed lawyer and so people approach him for legal help –What is wrong in that — It is the court which should decide whether a person is guilty or not -A lawyer fiathfully defends his clients–

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப LVISS,

   நான் இதை சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்.
   வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும்
   ஒரு அப்பாவியாக நீங்கள்இருக்கிறீர்கள்.
   இந்த மனிதர் ஒரு வக்கீல் அல்ல என்கிற விவரம்
   கூட உங்களுக்கு தெரியவில்லை பாருங்கள்.

   உங்களால் ஒரு ப்ளாக் மெயிலரை, ஒரு க்ரூக்கை
   அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
   அவர் நடை, உடை, பாவனைகளை வைத்து அவரை
   ஒரு பெரிய தேசியத்தலைவர் என்று நினைக்கிறீர்கள்.
   அவரிடம் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்புடைய,
   அவருக்காக பல சின்ன சின்ன காரியங்களை
   செய்து கொடுக்கும் ஒரு நபரை நான் அண்மையில்
   சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

   அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது
   உங்களுக்கு தெரியுமா.. ? இரண்டு பெரிய துப்பறியும்
   ஏஜென்சிக்களுடன் அவருக்கு தொடர்பு உண்டு.
   பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை
   எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்கிறார்.
   சமயத்திற்கு தகுந்தபடி பயன்படுத்திக் கொள்கிறார்.
   இன்னும் வெளிப்படுத்தாத பல தகவல்கள் அவரிடம்
   உண்டு. அவை பணம் பறிப்பதற்கு பயன்படுகின்றன.

   அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை இவர் எந்த
   அளவிற்கு கேவலப்படுத்தினார் என்கிற கதையெல்லாம்
   உங்களுக்கு தெரியவில்லை. நான் சொன்னால் நம்ப
   மாட்டீர்கள்… அந்த கதைகள் எல்லாம் வலைத்தளத்திலேயே கிடைக்கின்றன… தேடி, கண்டுபிடித்து படித்துப் பாருங்கள்.
   மிக மோசமான சரித்திரத்திற்கு சொந்தக்காரர் இவர்.

   இந்த மனிதரை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
   என்பதற்காகத்தானே “சாமிகளின் சாகசங்கள்” எழுதப்பட்டது.
   12 வால்யூம்கள் வந்தனவே – நீங்கள் படிக்கவில்லையா?
   நேரம் கிடைத்தால், விமரிசனத்தில் வெளிவந்த
   அந்த இடுகைகளை படித்துப் பாருங்கள்.

   இவரை போற்றுவதாலும் சரி, தூற்றுவதாலும் சரி –
   எனக்கென்ன லாபம் …? நான் ஏன் இவற்றை எல்லாம்
   எழுத வேண்டும் ? எனக்கு தெரிய வந்ததை,
   மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
   என் கடமை என்று நினைப்பதை நான் செய்கிறேன்.
   நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப LVISS,

    முந்தியதில் எழுத மறந்து விட்டேன்..
    இடுகையை படித்தீர்கள் அல்லவா ?
    “ஆசாராம் பாபு” உத்தமரா …?
    அவருக்காக இவர் ஏன் வாதாட வேண்டும் ?

    கிரிக்கெட்டில் ஊழல் இல்லையா ?
    கருப்புப் பணம் இல்லையா ?
    சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி
    ஜஸ்டிஸ் லோதா அவர்கள் ஒன்றும் தெரியாதவரா ?
    அவர் கிரிக்கெட்டில் நடைபெறும் சட்டவிரோதமான
    விவகாரங்கள் பற்றி தனது ரிப்போர்ட்டில் கூறியிருப்பது
    எல்லாம் பொய்யா ?

    நீங்கள் திரு. சு.சுவாமியை நம்புவீர்கள் ஆனால்
    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவரை
    நம்ப மாட்டீர்களா ? கொஞ்சம் யோசியுங்களேன்.

    நீங்கள் பாஜக ஆதரவாளராகவே இருந்து விட்டு போங்கள்.
    ஆனால் – தயவுசெய்து உண்மைகளை புரிந்து கொள்ள
    முயற்சி செய்யுங்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M yes I was wrong in saying that Mr Swamy is a lawyer –But correct me if I am wrong , a petitioner can argue his own case –The link below throws some light on this-
    People approach Mr Swamy for his advice as he has a good knowledge of the law—

    http://timesofindia.indiatimes.com/india/In-courts-you-can-argue-your-case-but-not-for-others-SC/articleshow/9217943.cms

 4. இளங்கோ சொல்கிறார்:

  Mr.LVISS,

  Please see above in reply to Mr.Paramasivam –

  // ( முக்கியமான விஷயம் – நீங்கள் நினைப்பது போல்
  திரு. சு.சுவாமி வக்கீல் அல்ல – இது அவர் தொழிலும் அல்ல ….! )//

 5. chandraa சொல்கிறார்:

  Anbargale nanbargale we all know the indispensable truth THEETHUM NANDRUM PIRAR THARA VVAARAA ………

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.