கேட்பது திரு.கமல்ஹாசன்….. தசரதனுக்கு 60,000 மனைவிகள் இருந்தனரே…!!!

.

.

இரண்டு நாட்கள் முன்னதாக எதேச்சையாக இந்த
வீடியோவை பார்த்தேன். “கைராளி” மலையாள
சேனலுக்காக அவர்கள் சார்பில் சில இளம்பெண்கள்
திரு.கமல்ஹாசனுடன் பேட்டி – கேள்விகள் கேட்கிறார்கள்…

பேட்டி மலையாளமும், ஆங்கிலமும் கலந்து
இருந்தாலும், நமக்கு நன்றாகவே புரிகிறது.

இவர் இப்படி பேசுவதில்
அதிசயமென்ன இருக்கிறது….இவர் கடைசி வரை
இப்படித்தான் இருப்பாரென்று அடுத்த விஷயத்திற்கு
போய் விட்டேன்.

ஆனால் நான் இன்று எழுதிய –
கருப்புப்பண கோடீஸ்வரர்களுக்கும்,
கற்பழிப்பு சாமியார்களுக்கும்
ஒரு GOD FATHER ? என்கிற தலைப்பிலான
இடுகைக்கு ( இடுகை திரு.சு.சுவாமி பற்றியது…)
பின்னூட்டம் போட்ட ஒரு நண்பர் வேண்டுமென்றே-

இடுகைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் –
நீங்கள் “மேதை” கமல்ஹாசனை
பொறாமை காரணமாக அடிக்கடி விமரிசிக்கிறீர்கள் என்று
நான் எப்போதோ விமரிசித்திருந்ததை இங்கு நினைவுபடுத்தி
எழுதி இருந்தார்.

சரி. நாம் பண்ணிய பாவத்திற்கு உடனே பரிகாரம்
பண்ணி விடுவோம் என்று மீண்டும் அந்த வீடியோவை
தேடியெடுத்து கீழே பதிவிட்டிருக்கிறேன்.

( பின்னூட்டம் எழுதிய நண்பர் திருப்தியடைய
கமலை பாராட்டி ஒரு கருத்தும் தெரிவித்து விடுகிறேன்..! )

“கமல் ஒரு ஜீனியஸ்… இத்தகைய யோசனைகளோ,
பதில்களோ – அவரைத்தவிர வேறு யார் சிந்தனையில்
உதிக்கும்…!!! ”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கேட்பது திரு.கமல்ஹாசன்….. தசரதனுக்கு 60,000 மனைவிகள் இருந்தனரே…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  K.M.sir,

  இதைவிட சிறப்பாக அந்த பின்னூட்ட “ஷக்தி”க்கு
  கற்றுக் கொடுக்க முடியாது… நீங்கள் சொல்வது போல்

  // “கமல் ஒரு ஜீனியஸ்… இத்தகைய யோசனைகளோ,
  பதில்களோ – அவரைத்தவிர வேறு யார் சிந்தனையில்
  உதிக்கும்…!!! ”//

  உங்கள் உடனடி இடுகைக்கு காரணமான அந்த” சக்தி” க்கு
  மிக்க நன்றி.

 2. today.and.me சொல்கிறார்:

  தல நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.
  (நீங்க மட்டும் தான் பராட்டுவீங்களா… எங்களுக்கும் தெரியும்…)

  • today.and.me சொல்கிறார்:

   கா.மைஜி மற்றும் விமரிசனம் நண்பர்களுக்கு

   காமைஜியின் பதிவுகளை,காமைஜியை ஊக்குவிக்கும்விதமாக இங்கே நான் எழுதுவது சிலருக்கு என்மீது கோபத்தை உண்டாக்கியிருக்கிறது என்று தான் நினைத்தேன்,

   நான் எழுதாத இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபின்,

   லிங்க் முதற்கொண்டு எனது பிளாக்குக்கு செலுத்துகிற முறை என்று பார்த்தபின் கொஞ்சம் புரிகிறது,

   என்மீதல்ல, என் பெயரின் மீதான காதல் இது என்று…

   ஏனென்றால் தன்னைக் கண்டுகொள்ளவேண்டும் என்று நினைக்கிற குழந்தையின் பிடிவாதம். வறட்டுக் கத்தலாகவாவது கத்தி, மற்றவர்களை தன்பக்கம் கவனிக்கவைக்கிற உத்தி.

   அப்படியெல்லாம் இல்லை, இது சீரியஸாகவே என்னை என் அடையாளத்தை முடக்கச் செய்யும் ஆரம்பநிலை சதி – அல்லது – சிறுகச்சிறுக சிறுசிறு பின்னூட்டங்கள் வழியாக என்னை முடக்கச் செய்யும் நீண்டகாலத்திற்கு, என் கணக்கின்படி தேர்தல்வரையாவது, திட்டமிடப்பட்ட, நீண்டகாலச் சதி என்று கொண்டால்

   முகம்தெரியா வம்(நண்)பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

   நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் ஒர்த் இல்லை, நண்பர்களே.

   இதுநாள்வரை என் பின்னூட்டத்தை நண்பர்கள் கவனித்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.
   1, நான் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னுட்டம் இடுவதில்லை
   2. தேவைப்படுகிற இடத்தில் கூட பின்னூட்டம் இடுவதில்லை.
   3. என் கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால் மட்டும் அதுவும் என் பாணியில்.

   ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. அதை மாற்றமுடியாது. காப்பியடிக்கவேண்டுமானால் செய்யலாம், அதிலும் கொஞ்சம் தேறவேண்டும். அட்சரம் பிசகாமல் காப்பியடிக்கும் தொழிலைச் செய்யும் திறமை உள்ளவரால் சொந்தக் கருத்தை தன்பெயரில் சொல்ல முடியாதா?

   முடியும்… ஆனால் கவனிக்கப்பட கொஞ்சம் நாள் ஆகும்.
   அதுவரை பொறுமை இல்லாத வறட்டுக் கத்தல் கத்தும் குழந்தை.
   அவ்வளவுதான்.

   ……………………
   எனது பெயரில் பொய்யான பின்னூட்டங்களைத் தவிர்க்க
   என்னால் முடிந்த பாதுகாப்பு கவசமாக
   இனிமேல்
   எனது கருத்துக்கள் எதுவாக இருப்பினும்
   காமைஜியின் இமெயில் ஐடிக்கு அனுப்புகிறேன்.
   அவர் அவரது பதிவில் இணைத்துக்கொள்ளட்டும்,

   ஒருவேளை இந்த எக்ஸ்ட்ரா வேலை அவருக்கு சிரமமில்லை எனில்.

   ………………

   இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.

   இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் வம்பர்களே…. கொடுத்துவிட்டேன். பிழைத்துப்போங்கள். என்னையும் பெரிய ஆளாக்கியதற்கு நன்றி.

   ……………

   இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.
   வெளியாகும் பட்சத்தில் கா.மைஜியிடம் இருந்து முறையான அறிவிப்பிற்குப் பின்னரே. அதுவரை today.and.meஇன்வழி வெளியாகும் பின்னூட்டங்கள் என்னுடையதில்லை.

   இதை எதிர்பார்க்கவில்லை, இல்லையா வம்பர்களே….
   கேட்காததையும் கொடுக்கவைத்து என்னை வள்ளலாக்கிய வம்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
   ………………………………..

   இத்தனைநாள் எதையாவது காரணம் சொல்லிவிட்டு அடிப்பார்கள், ஏன் அடிக்கிறார்கள் எதற்கு அடிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

   இப்படி எதையுமே சொல்லாமல் அடித்தால் எப்படி, காரணத்தை சொல்லிவிட்டு அடிங்களப்பா வம்பர்களே… கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும். நானும் தெரிந்துகொண்டு சிரிப்பேன்.

   • paamaranselvarajan சொல்கிறார்:

    என்ன நண்பரே .. திடீரென்று இந்த முடிவுக்கு வந்து விட்டிர்கள் … ? விமிரிசன நண்பர்களுக்கு எது – யார் இடுகின்ற பின்னோட்டம் என்று நன்றாக தெரியும் ,,, எவனோ ஒருவன் ” கொண்டை … மண்டை ” என்று கிறுக்கினால் அதை நாங்கள் பொருட்படுத்தவும் இல்லை — எடுத்த எடுப்பில் அவ்வாறு கா.மை .பற்றி தரம் தாழ்ந்து தாங்கள் எழுத மாட்டிர்கள் என்று நன்றாக புரிந்தவர்கள் நாங்கள் … நிறைய கட்சி சார்புடைய — கைகூலிகள் திடீர் பிரவேசம் செய்து —- ஒருதலை பட்சமான கருத்துக்களை வாந்தி எடுத்துவிட்டு — காணாமல் போய்விடும் கபோதிகளை பற்றி — நீங்கள் இந்த முடிவுக்கு வந்தது ” வியப்பளிக்கிறது ” — தொடருங்கள் எப்போதும் போல – தங்களை நேரில் காணா- பாமரன் …!!!

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  1—- கமல்ஹாசன் படம் – பிரச்சினைக்கு யார் காரணம் ……?
  Posted on ஜனவரி 25, 2013 by vimarisanam – kavirimainthan …..2— கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !!
  Posted on ஜனவரி 30, 2013 by vimarisanam – kavirimainthan ….
  3 — “விஸ்வரூபம் தமிழ் பிரிண்டை தமிழக அரசு அலுவலகம் முன்பு எரிப்பேன்” -சொல்லி இருப்பது கமல்ஹாசன் தான்…!!!
  Posted on பிப்ரவரி 1, 2013 by vimarisanam – kavirimainthan …… 4 — கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள் …..!!!
  Posted on ஜூன் 27, 2014 by vimarisanam – kavirimainthan ….. 5– திரு.கமல்ஹாசனும் 16 கோடியும் – எது வரை உண்மை ….?
  Posted on ஒக்ரோபர் 3, 2015 by vimarisanam – kavirimainthan …. 6– கமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் ….
  Posted on ஒக்ரோபர் 12, 2015 by vimarisanam – kavirimainthan …..7— திருவாளர் கமல் நடித்தால் ரசிக்கலாம் – ஆனால் உளறிக் கொட்டினால் …?
  Posted on நவம்பர் 9, 2015 by vimarisanam – kavirimainthan …. 8—- இந்த கஞ்ச நாயகனிடம் கால் காசு பெறுவது கூட தமிழ் மக்களுக்கு அவமானம்….
  Posted on திசெம்பர் 4, 2015 by vimarisanam – kavirimainthan …. 9 — கேட்பது திரு.கமல்ஹாசன்….. தசரதனுக்கு 60,000 மனைவிகள் இருந்தனரே…!!!
  Posted on ஜனவரி 21, 2016 by vimarisanam – kavirimainthan ….. அப்பாடா … ஒரு இரண்டு ஆண்டு இடைவெளியில் ” ஒரு உலக மகா நடிகருக்கு …. ? ” ஒன்பது ” இடுக்கைகள் ” உண்மையில் திரு . கா . மை . கூறுவது போல அவர் ஒரு ” ஜீனியஸ் தான் ” இதைஎல்லாம் நண்பர்கள் படித்து — அவரது புராணங்களை தெரிந்து ” இன்புற ” வேண்டும் என்பது தானே — சரியாய் இருக்கும் …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.