நான் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ?

.

ஒரு வலைப்பூவில் சொந்தமாக எழுதுவது அவ்வளவு
சிரமமான காரியமா?

ஒரு வலைப்பூவில் எழுதப்பட்ட உண்மைக் கருத்துக்களுக்கு
ஆதரவான கருத்துகளை தெரிவிப்பது அவ்வளவு
பெரிய தவறா?

ஒரு வலைப்பூவில் தனது 70 வயது அனுபவத்தை,
தான் அனுபவங்களைப் பெற்ற இதே சமூகத்தோடு
பகிர்ந்துகொள்ளநினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பதும், கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்வதும் அவ்வளவு பெரிய பாவமா?

எதிர்க்கருத்துக்களையும் நாகரிமாக விவாதிக்கும் தளம்
இருக்கக்கூடாது என்று நினைக்கும் மனநல வியாதியஸ்தர்களின்
கூடாரமா தமிழகம்? இந்தியா?

இதனை அரசியல்சார் பிரச்சினையாகப் பார்க்கும்
அதேவேளையில், தமிழ் மொழியில் இயங்கும் வலைத்தளம்
என்பதால், நான் மொழிசார் பிரச்சினையாகவும் பார்க்கிறேன்,

– தமிழர்கள் –
படித்திருந்தும் முட்டாள்களாகவே,

– நல்ல அறிவிருந்தும் அரசியல் பற்றிய
நடைமுறை அறியாதவர்களாகவே,

– மனுநீதி தவறா பரம்பரையிலிருந்தாலும்
தற்காலநீதி அமைப்புகள் பற்றி அறியாதர்களாகவே …

விழிப்புணர்வு அடைந்துவிடக்கூடாது –
அடைந்துவிடவே கூடாது என்று எண்ணிசெயலாற்றும்
தமிழறிந்த கயவர்களாலேயே கோடாலிக் காம்புகளாலேயே
‘விமரிசனம்’ முடக்கப்படுகிறதா?

bharathi

தேடி சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?

……………………..மகாகவி சுப்பிரமணிய பாரதி

—————————————————

பின்குறிப்பு –

மேற்கண்ட இடுகையை எழுதியது நான் அல்ல –
நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் எழுதியது.

நண்பர் டுடேஅண்ட்மீ – இந்த விமரிசனம் வலைத்தளத்தில்
எழுப்பப்படும் பல பிரச்சினைகளில் மிகவும் ஆர்வத்துடன்
கலந்துகொண்டு – விவாதங்களில், கருத்தாழமும்,
புள்ளி விவரங்களும், சுவையும் சேர்த்து பின்னூட்டங்கள்
எழுதி வந்தார்.

சில நண்பர்களுக்கு இந்த வலைத்தளம் செயல்படும்
விதமும், இதில் பேசப்படும் பிரச்சினைகளும்,
அதில் பங்கு கொள்ளும் நண்பர்களின் போக்கும்
பிடிக்கவில்லை போலும். தங்களால் இயன்ற
தொல்லைகளை எல்லாம் வரிசையாக வெவ்வேறு
விதங்களில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகளை
சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

தவிர, அண்மைக்காலங்களில் நண்பரின் ஈமெயில் ID யை
போலியாக உருவாக்கிக் கொண்டு, அவர் எழுதுவது போல் –
தளத்தில் பின்னூட்டங்கள் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது குறித்து விளக்கமாக – விமரிசனம் வலைத்தளத்தில்,
தனது பின்னூட்டத்தின் மூலம் நண்பர் டுடேஅண்ட்மீ
தெரிவித்திருக்கிறார்.

என்னையும் கேவலமான மொழிகளில் தாக்கியும்,
வசைமொழிகளை வீசியும் சில நண்பர்கள் நிலைகுலைய
வைக்க முயற்சிக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான நண்பர்களையும்,
அவர்களது அன்பையும்-நம்பிக்கையையும்.
நான் இந்த விமரிசனம் தளத்தின்மூலம் பெற்றிருக்கிறேன்.
அவர்கள் எனக்கு தொடர்ந்து
துணையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையோடும்,
உறுதியோடும் – இந்த விமரிசனம் வலைத்தளம்
தொடர்ந்து இதேபோல் செயல்படும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
22 ஜனவரி, 2016
.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

35 Responses to நான் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ?

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  மிகவும் வருத்தமாக இருக்கிறது. தமிழ் நண்பர்கள், தமிழில் வரும் பதிவுகளை, தமிழ் சமூக வலைத்தள தளங்களை, தவறாது படித்து வரவேண்டும் என நானும் என் நண்பர் குழுவும் முடிவெடுத்து கடந்த 1 வருடமாக செய்து வருகிறோம். தமிழ் பதிவுகள் அனைத்தும், ஆம்-அனைத்தும் படிப்போம். ஒத்த கருத்தாக இருந்தால் கருத்துரை எழுதுவோம். மாற்று கருத்து கொண்டதாயின் அல்லது பதிவிடும் அன்பர் அவரது எண்ண ஓட்டத்திற்கு மாற்று கருத்துகளை ஒத்துக்கொள்ளாதவர் எனின், பதிவை வெறுமே படித்து விட்டு செல்வது, என்பதை கடைபிடித்து வருகிறோம். மற்ற மொழிகளில் பதிவுகள் மற்றும்கட்டுரைகள் மிகவும் பல்கி பெருகி வரும் நேரத்தில் தமிழ் பதிவுகள், கதை கட்டுரை, கவிதைகள் ஒரு தேக்க நிலை கொண்டு உள்ளது. Viewership அதிகரிக்க வில்லை. எனவே இதனை செய்து வருகிறோம். எங்கள் எண்ண ஓட்ட குழு பெருகுவது, சிறிது மகிழ்ச்சி தான். இன்னும் இரண்டு வருடங்கள், தமிழ் நண்பர்கள், இதனை கடைபிடிக்க முயற்சித்தால் என்ன? தமிழ் வளர்ந்த மொழி, கணிசமான பார்வையாளர்கள் கொண்டது என மற்றவர்களுக்கு உணர்த்தினால் என்ன? மாற்று கருத்து கொண்ட பதிவாயினும், படிப்போம்-பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்போம்-கருத்து ஏதும் இடாது அடுத்த தமிழ் பதிவு படிப்போமே! உட்குத்து தவிர்ப்போமே! நான் ஆரம்பித்தில் கூறியது போல், தங்களின் இந்த அப்பாடக்கர் பதிவு படித்து, வேதனை தான் நாங்கள் அடைகிறோம். தமிழரும் ஒற்றுமையும் – கானல் நீரோ?

 2. thiruvengadam சொல்கிறார்:

  தங்கள் உறுதிப்பாடு கண்டு மகிழ்ச்சி. முகநூல் குழு பதிவுகள் அட்மின் பார்த்தபின்னும் , விகடன் தளத்தில் நெறியாளர் பரிசீலனைக்கு பின் பதிவு அனுமதிப்பது போல் அல்லது வேறு முறையில் தடுக்கலாம்.

 3. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,
  டுடேஅண்ட்மீ –

  நீங்கள் ஆற்றும் பணி அற்புதமானது.
  அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.
  நீங்கள் தொடர்ந்து இதே போல் எழுதுங்கள்.
  எதுவரை தான் போகிறார்கள் பார்த்து விடுவோமே.
  நாங்கள், என்னைப் போன்று இன்னும் எத்தனையோ
  வாசகர்கள் இருக்கிறோம் உங்கள் துணைக்கு.

  டுடேஅண்ட்மீ சார்,
  தவறாக நினைக்க வேண்டாம்.
  சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையால் கேட்கிறேன்.
  அப்பாடக்கர் என்கிற வார்த்தை எப்படி வந்தது ?
  அதற்கு சரியான அர்த்தம் என்ன ?
  பெரிய இவரோ …? என்று சொல்கிறோமே அது போன்றா ?

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  மனப்பக்குவம் இல்லாதவர்களின் செயல்கள் அது. நம்பிக்கையோடு இருங்கள், நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் எழுத வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் பரமசிவம், திருவேங்கடம்,
   இளங்கோ மற்றும் புதுவசந்தம் அன்பு,

   உங்கள் கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும்
   என் உளமார்ந்த நன்றி.

   இளங்கோ –

   ஓரளவு தெரிந்திருந்தாலும் –
   உண்மையில் எனக்கு கூட கொஞ்சம் சந்தேகமாகத்தான்
   இருந்தது. வலையில் பார்த்து தெளிந்தேன்.
   நீங்கள் கேட்ட விவரம் இதோ –

   ——————————-

   அப்பாடக்கர் என்றால் என்ன?

   இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.

   ————————————–

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. KuMaR.S சொல்கிறார்:

  Dear K.M Sir..

  வாசகர்களின் கருத்துக்களை தாங்கள் ஓப்புதல் அளித்த பிறகே பிரசுரிக்கப்படும் வகையில் அமையுங்கள்.

  தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  தட்ஸ் த ஸ்பிரிட்!
  பழுத்த மரம்தான் கல்லடிபடும்.
  வென் காரவான் மூவ்ஸ் டாக் பார்க்ஸ்!
  காமை மற்றும் டுடேஅன்ட்மீ, கவலை வேண்டாம். நம் பணி தொடர்வோம்!
  நம்மில் அனைவரும் மாறுவதற்கு தயாராக உள்ளோம். மாறாதவர்கள் தேங்கி நாற்றமடித்து காணாமல் போவார்கள்!
  இக்னோர் தெம்.

 7. உண்மை சொல்கிறார்:

  யாருடனும் போர் தொடுக்க வரவில்லை. தெரிந்து கொள்வதற்காக மட்டும். அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தால் நீக்கி விடவும்.

  வலைப்பூ என்பது blog இன் தமிழாக்கம் அல்ல. Blog இன் தமிழாக்கம் வலைப்பதிவு என்பதாகும். ஆரம்பத்தில் சிலர் வலைப்பூ என தவறாக பயன்படுத்தினார்கள். Blog (Weblog) தமிழில் வலைப்பதிவு,blogger – வலைப்பதிவர்.
  Website – இணையத்தளம்,வலைத்தளம்.

  வலைபதிவு -WebLog – என 17.12.1997 இல் Jorn Barger ஆல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழில் வலைப்பதிவு சனவரி 1 ,2003 இல் தமிழ் நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் இராமசுவாமியால் முதலில் உருவாக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஆகஸ்ட் கடைசி நாள் வலைப்பதிவர் நாளாக கொண்டாடப்படுகிறது.

  மின் அஞ்சலை முதலில் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த சிவா ஐயாதுரை ஆவார்.

 8. பதில் சொல்கிறார்:

  ஒரு மாதிரி எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு விரைவாக இல்லை.

  நாங்கள் எந்த கட்சி சார்பாகவும் இல்லை. ஆனால் திரு. காமை ஒரு கட்சி எதை செய்தாலும் அதை சமாளித்தும், மற்றவர்களை மட்டும் விமர்சித்ததால் வந்த கோபம். ஏனென்றால் விமரிசனம் எங்களது அன்பிற்கு உரிய தளம். இதை நான் முதலில் நாகரீகமான முறையில் பின்னூடம் இட்டேன். ஆனால் எனது பின்னூட்டம் நீக்க பட்டதும் அல்லாமல் எனது மெயில் ஐடி-ம் தடை செய்ய பட்டது. வேறு முகவரியில் எனது நண்பர்கள் வந்தாலும் தடை. இதில் நாகரீகமற்ற பின்னூட்டம் மட்டுமே தடை செய்யப்படும் என்று காமை சொன்னார்.

  சரி டுடேஅண்ட்மீ முகவரி எதற்காக எடுக்க பட்டது,
  1. இவர் மட்டும் தான் காமை என்ன சொன்னாலும் அமோதித்து பதில் தருவர்.
  2. சரியான ஆதராம் இல்லாமல் தரவுகள், செய்திகள் அள்ளி தருவர். இதற்கு என்ன ஆதாரம் என்றால் அந்த பின்னூட்டமும் நீக்கப்படும்.

  மத்திய அரசில் காங்கிரஸ் தவறு செய்தாலும், மோடி தவறு செய்தாலும் நடுநிலையோடு தட்டி கேட்டு, வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் ஐயா, ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கட்சி சார்பு? தவறு செய்பவன் நண்பன் என்றாலும் தட்டி கேட்பவன் தான் உண்மையான நண்பன். இல்லை எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி என்று சொல்வீர்கள் என்றால், நீங்கள் மோடிஇடமோ, ராகுலிடமொ இதை செய்ய வேண்டி இருக்கும்.

  ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பது நடுநிலை பதிவுகள் தான். கட்சி சார்பாக எழுத 1000 பேர் உள்ளார்கள். ஆனால் நடுநிலையாக எழுத உங்களை போல சிலர்(இன்னும் நம்புகிறேன்) தான் உள்ளார்கள். எனவே அனைத்து மக்கள் விரோத செயல்களையும் நீங்கள் எதிர்த்து எழுதி எங்களுக்கு உண்மையை உரைக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

  இதற்கு நீங்கள் பதில் தரலாம், தராமல் போகலாம். இது எங்கள் நிலைப்பாடு. பின்னூட்டம் தான் இந்த தளத்தின் பலம் என்று சொன்னதை இன்னும் நம்புகிறோம். நடுநிலையோடு செயல்பட்டால் இனி ஆக்கமான முறையில் விவாதம் செய்வோம். இல்லை எனில் நாங்கள் விலகி செல்கிறோம்.

  இனிமேல் நண்பர் டுடேஅண்ட்மீ பெயரில் பின்னூட்டம் வராது. இதை நானும் எனது நண்பர்களும் உறுதி செய்கின்றோம்.

  • உண்மை சொல்கிறார்:

   உங்கள் நியாயமும்,ஆதங்கமும் புரிகிறது. ஒருவர் தவறு செய்யும் போது மற்றவர் பாதிக்கப்படுவதும்,மற்றவர் மேல் சந்தேகமும் இயற்கையாக எல்லாரிடமும் ஏற்படுவது இயற்கை.இதில் விதிவிலக்கு ஆண்டவனுக்கும் கிடையாது.
   தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஆளும் கட்சி உட்பட சாக்கடையாகவே உள்ளது. ஓரிரு சிறிய கட்சிகள் வலுவிழந்து மக்கள் இன்னமும் அவர்களைப் புரிந்து கொள்ளாத நிலையில், சாக்கடையில் எந்த சாக்கடை சிறந்தது-எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?-தெரியாமல் வழி தவறி செல்கிறார்கள்.

   மோசமான கல்விக் கொள்கையால் படித்தவர்களும் படிக்காதவர்களும் தமிழ் நாட்டில் போதையேறியவர்களாகவே இருக்கின்றனர்.

   இந்த நிலையில் இருப்பதில் நல்ல கொள்ளியை தேடி தர வலைப்பதிவர் முயற்சிக்கிறார் என கருதுகிறேன்.
   நாம் எல்லாவற்றையும் எழுதி விடலாம். அவையெல்லாம் மக்களிடம் போய் சேராது. ஆவேசத்துடன் இன்றே மாற்ற முயற்சித்தால் மக்கள் ஆட்சியில் மக்கள் மனம் மாறாது. இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலில் சிறிது நடு நிலை தவறுவதில் தவறு கிடையாது. முழுதான நடு நிலை நாட்டை தவறானவர் கையில் கொடுத்துவிடும்.மத்தியில் அரசை தவறானவர் கையில் கொடுத்துவிட்டு அல்லல்படும் மக்களின் நிலை நாம் அறிவோம்.

   வலைப்பதிவர் அப்படியான மெல்ல அசைப்பதன் மூலம் நாளையாவது மாறும் என எண்ணி இருக்கலாம்.அது நம் கண்களுக்கு கட்சி சார்பாக தெரியலாம் அல்லவா!
   நீங்கள் ஜே கட்சியை சொல்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஜே அகங்காரம் சர்வாதிகாரம் கொண்டவர் என்பதில் சந்தேகம் கிடையாது . தவறானவர் கையில் ஆட்சி செல்வதை விட இவர் பரவாயில்லை என கருதுகிறார் போலும்.

   • ஜோதி சொல்கிறார்:

    //ஜே அகங்காரம் சர்வாதிகாரம் கொண்டவர் என்பதில் சந்தேகம் கிடையாது . // உண்மைதான்.

    ஆனால்

    கருணாநிதிக்கு நான் எனும் அகங்காரம் கிடையாதா?
    வைகோவுக்குக அகங்காரம் கிடையாதா?
    ராமதாசுக்குக் கிடையாதா?
    ஏன், விஜயகாந்த்க்குக் கிடையாதா?

    பதவியில் இருப்பதாலும் பெண் என்பதாலும் அகங்காரம் இருக்கக்கூடாதா?

    என்னைப்பொறுத்தவரை பெண் என்பவளுக்கு இன்னும் அதிகமாகவே இந்த அகங்காரம் தேவைப்படுகிறது. மற்ற ஆண்களிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள…

    ஆண்கள் மொழியில் அகங்காரம்
    பெண்கள் மொழியில் தற்காப்பு.

    பெண்கள் வீட்டைக் கட்டிலில் மட்டுமே இருக்கத் தலைப்பட்டவர்கள் என்ற ஆணாதிக்க எண்ணமாகவே எனக்குப் படுகிறது.

    புதுமைப் பெண்ணின் குணங்களாக பாரதி சொன்ன
    நிமிர்ந்த நன்னடை,
    நேர்கொண்ட பார்வை,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்,
    திமிர்ந்த ஞானச் செருக்கு
    போன்றவை இன்றைய ஆண் தலைவர்களுக்குக் கூட கிடையாது என்பதை நினைவூட்டவிரும்புகிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப ஜோதி,

     //ஆண்கள் மொழியில் அகங்காரம்
     பெண்கள் மொழியில் தற்காப்பு.//

     புதிய நோக்கு…!
     நான் கூட இந்த கோணத்தில் யோசித்ததில்லை.

     //கருணாநிதிக்கு நான் எனும் அகங்காரம் கிடையாதா?
     வைகோவுக்குக அகங்காரம் கிடையாதா?
     ராமதாசுக்குக் கிடையாதா?
     ஏன், விஜயகாந்த்க்குக் கிடையாதா?

     பதவியில் இருப்பதாலும் பெண் என்பதாலும்
     அகங்காரம் இருக்கக்கூடாதா?

     என்னைப்பொறுத்தவரை பெண் என்பவளுக்கு இன்னும்
     அதிகமாகவே இந்த அகங்காரம் தேவைப்படுகிறது.
     மற்ற ஆண்களிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள…//

     நல்ல அற்புதமான விளக்கம். பாராட்டுகிறேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

  • Sharron சொல்கிறார்:

   If you and your friends don’t like KM sir and his news better avoid coming over his. Instead don’t use fake id s. If you want to fake go to Dinamalar and puts faking stars for somebodys comments. Many people are hired to do this. If u don’t want to use your originality go there. DON’T HURT OTHERS. DON’T BE A CHEAT.

  • ஜோதி சொல்கிறார்:

   பதிலுக்கு பதில்

   //சரியான ஆதராம் இல்லாமல் தரவுகள், செய்திகள் அள்ளி தருவர். //
   இது அடிப்படையிலேயே தவறு. ஆதாரம் இல்லாமல் TAM எதையுமே குறிப்பிட்டதில்லை.

   //இவர் மட்டும் தான் காமை என்ன சொன்னாலும் அமோதித்து பதில் தருவர்.// ஒத்த கருத்துக்கள் இருந்தால் ஆமோதிக்க வேண்டியதுதானே. அது அவர் இஷ்டம். உங்களுக்கு இதிலே என்ன கஷ்டம்.

   உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மறுப்புக் கருத்துக்கள் இருந்தால் உங்கள் பெயரிலோ அல்லது உங்களுக்கென்ற தனி அடையாளத்துடனேயோ எழுதவேண்டியதுதானே.. நாகரிமாக எழுத்துகளில்

   அதை காமை எப்போதுமே ஆதரித்துவந்திருக்கிறது.

   //நாங்கள் எந்த கட்சி சார்பாகவும் இல்லை. // என்றுசொல்லிவிட்டு கீழே அடுத்த பாராவிலேயே யார் யார் சார்பாக என்று விளக்கிவிடுகிறீர்களே. இந்த ஒரு பதிலிலேயே நீங்கள் உங்கள் முகத்தை மறைக்கமுடியவில்லையே.. மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக என்று..

   //ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பது நடுநிலை பதிவுகள் தான். கட்சி சார்பாக எழுத 1000 பேர் உள்ளார்கள். ஆனால் நடுநிலையாக எழுத உங்களை போல சிலர்(இன்னும் நம்புகிறேன்) தான் உள்ளார்கள்.//
   இவ்வளவு நீள பதிலை தமிழில் எழுத முடிந்த உங்களால்
   நடுநிலை பதிவுகளை விரும்புகிற உங்களால்
   இன்னொருவர் முகமூடியைப் போட்டுக்கொண்டு
   அவர் சொல்லா கருத்துகளை சொல்வதுபோல
   மற்றவர்களை நம்பவைக்க முயன்ற உங்களால்

   எல்லாவற்றுக்கும் மேலாக

   TAM இனி எழுதமாட்டேன் என்றதற்குப் பின்னரும் நாங்கள் தான் அதைச் செய்தோம், இனி செய்யமாட்டோம் என்று ஒப்பு(க்கு) அறிக்கை விடுவதைப் பார்த்தால் நீங்களும் உங்கள் நண்பர்களும் நேர்மையை ரொம்பவே விரும்புகிறவர்கள் போலத் தெரிகிறது. எனவே அந்த ஆயிரத்தில் ஒருவராக நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து ஏன் ஒரு பிளாக்கை ஆரம்பிக்கக்கூடாது. இனியாவது உங்களுக்கென்ற ஒரு அடையாளத்துடன் ஆரம்பித்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

   //எனவே அனைத்து மக்கள் விரோத செயல்களையும் நீங்கள் எதிர்த்து எழுதி எங்களுக்கு உண்மையை உரைக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.// உண்மையை உரைக்க ஆயிரத்தில் ஒருவராக – இல்லை – ஒரு குழுவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து மக்கள்விரோத செயல்களைப் பற்றி எழுதுங்களேன்.

   //நடுநிலையோடு செயல்பட்டால் இனி ஆக்கமான முறையில் விவாதம் செய்வோம். இல்லை எனில் நாங்கள் விலகி செல்கிறோம்.//
   காமை நடுநிலையோடு என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிவிட்டார் . உங்களுக்கு ஒத்துப்போகாத கருத்துக்கள் என்றால் வராமல் விலகிப்போயிருக்கலாமே. ஏன் இந்த விளையாட்டு?

   //இனிமேல் நண்பர் டுடேஅண்ட்மீ பெயரில் பின்னூட்டம் வராது. இதை நானும் எனது நண்பர்களும் உறுதி செய்கின்றோம்.//

   இதன் மூலம் நீங்கள் முடக்க நினைப்பது யாரை?
   உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பிடிக்காதவற்றை எழுதும் காமையையா?
   ஆதரித்து மட்டும் பின்னூட்டம் இடுபவர்களையா? அல்லது டுடேஅண்ட்மீ என்னும் ஐடியையா?

   இதற்கும் பதில் சொல்லுவிரகள் என எதிர்பார்க்கிறேன்.
   ————
   நான் இதுநாள் வரை விமரிசனத்தில் படித்து வந்தவரை, நான் புரிந்துகொண்டது, காமையை ஆதரித்துக் கருத்துக்கள் எழுதவேண்டிய விடயத்தில் ஆதரித்தும், ஒத்துப்போகாத கருத்துக்களில் நாகரிமாகவோ அல்லது ஒரு ஸ்மைலியோடோ முடித்திருக்கிறார் TAM என்றே எண்ணுகிறேன்.

   ————
   என்னுடைய ஞாபகசக்தி சரியென்றால் TAM -இன் முதல் கமெண்ட் இன் விமரிசனமே – ஒரு எதிர்க்கருத்துதான். அதுவும் மிகநீண்ட கருத்து – வயதானவர்களை முடியாத நிலையிலும நீண்டநாள் வாழவைக்கும் மருத்துவ முறைகளை எதிர்த்து “அவர்களை சாகவிடுங்கள்” என காமை ஒரு கட்டுரை எழுதியிருப்பார். ரொம்ப விரக்தியாக… அதிலே பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாருமே ஆதரித்துத்தான்… ஆனால் TAM ஒருவர் தான் எதிர் கருத்து இட்டவர்.

   இது சும்மா ஒரு தகவலுக்காகத்தான்.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   அடுத்தவன் ஐடி போன்று உருவாக்கி பதில் எழுதுவது, கேடுகெட்டதனம். இவர்களுக்கு சொந்தக் கருத்தோ நியாயமான சிந்தனையோ இருக்க முடியாது. இத்தகைய புல்லுருவிகளைக் களைந்துவிடுவதுதான் சரி. சொந்த ஐடியில் எந்தக் கருத்து சொன்னாலும் (அடுத்தவர்களைப் புண்படுத்தாமல்) அது சரியானதுதான் என்று நினைக்கிறேன்.

   கா.மை. அவர் எண்ணங்களை எழுதுகிறார். மற்றவர்கள் பதிலளிக்கவும் வாய்ப்புக்கொடுத்திருக்கிறார். எழுத்து கருத்துள்ளதாகவும், ஓரளவு ரீஸனபிளாகவும் இருக்கிறது. தொடரட்டும் அவர் எழுத்து.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   “பதில்” என்கிற பெயரில் இந்த பின்னூட்டத்தை எழுதி
   நிகழ்ந்த “அயோக்கியத்தனங்களுக்கு” பொறுப்பேற்றிருப்பது
   யாராக இருந்தாலும் – அவர்கள் தங்கள் செயலுக்காக
   வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள்.

   மாறாக, ஏதோ இங்கு பெரிய போட்டி நடந்தது போலவும்,
   அதில் தாங்கள் ஜெயித்து விட்டது போலும்
   இனி பெரிய மனது பண்ணி விட்டுக் கொடுப்பது போலவும்
   எழுதுவது அதைவிட பெரிய அசிங்கம்.

   தாங்கள் விரும்பும் கொள்கைகளை, கட்சிகளை ஆதரித்து
   எழுத வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றினால் –
   தனியே ஒரு “ப்ளாக்” உருவாக்கி, அதில் என்ன வேண்டுமானாலும்
   எழுதிக்கொள்ளலாமே… யார் தடுக்கப் போகிறார்கள்…?

   அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன்.
   இந்த விமரிசனம் வலைத்தளம் இத்தனை நாள் செயல்பட்டு
   வந்தது போல், இனி எதிர்காலத்திலும் –
   அதற்கென்று உள்ள வெளிப்படையான – நேர்வழியில் தான் செல்லும்.

   இவ்வளவு நாட்களாக இந்த வலைத்தளத்தை
   நான் தான் நடத்திக் கொண்டிருந்தேன் என்று நினைப்பது மடமை.
   இந்த வலைத்தளத்தை, இதில் எழுதப்படும் கருத்துக்களை,
   இதில் நிகழும் ஒளிவுமறைவற்ற – நாகரிகமான விவாதங்களை
   பல தரப்பு மக்களும் பரிமாறிக்கொள்ளும் செய்திகளை –
   புள்ளி விவரங்களை –

   விரும்பி, ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்
   ஆயிரக்கணக்கான வாசக நண்பர்கள் தான்
   நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் துணையும்,
   ஒத்துழைப்பும் இருக்கும் வரையில் –
   இந்த வலைத்தளம் எந்தவித தடங்கலுமின்றி
   இனிதே தொடரும்.

   -காவிரிமைந்தன்

 9. gopalasamy சொல்கிறார்:

  நான் தமிழ் மனம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சமுதாயத்தை பிளவு படுத்த நினைப்பவர்கள் தங்களை கண்மூடித்தனமாக எதிர்த்து எழுதுகிறார்கள் என்பது ஏன் கருத்து. அவர்கள் எந்த தாழ்ந்த நிலைப்பாட்டுக்கும் தயாராக உள்ளனர். அதை பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடரவும்.

 10. உண்மை சொல்கிறார்:

  போற்றுபவர் போற்றட்டும்.புழுதிவாரி தூற்றுபவர் தூற்றட்டும்.தொடர்ந்து செல்வேன்,ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் நில்லேன் அஞ்சேன். இது பாரதிதாசனுக்கு மட்டுமல்ல, நடு நிலையுடன் மக்கள் நலனுக்காக உண்மையுடன் பதிவிடும் அனைவருக்கும் ஏற்றதே!

  • nimiththigan சொல்கிறார்:

   “போற்றுவார்” கவிதை எழுதியது கண்ணதாசன் என்று நினைக்கிறேன்.

   • ஜோதி சொல்கிறார்:

    நிமித்திகன் சொல்வது சரி.

    போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்
    –கவிஞர் கண்ணதாசன்

    • உண்மை சொல்கிறார்:

     ஐயா! நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் நான் எழுதியவரைக் கருத்தில் கொண்டு சொல்லவில்லை. தமிழ் நாட்டில் தமிழர்கள் மனிதக்கழிவை எடுக்கிறார்கள்,மலையாளியோ ஆட்சி செய்ய எண்ணுகிறான் என பாரதிதாசன் ஒருமுறை சொன்ன கருத் தும் கவிதையும் பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது.
     அப்போது அவர் இதே போல் போற்றுவோர் போற்றட்டும் என உரத்த குரலில் ஒலித்து தயங்க மாட்டேன் என முழக்கமிட்டார்..

     அவர் அதை எழுதினாலும் கூட,கண்ணதாசனுக்கு உள்கட்சி எதிர்ப்பே தவிர சமூகத்தில் எதிர்ப்பு பெரிதாக கிடையாது.

     பாரதிதாசன் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத நிலையுடன் செயல்பட்டது போல் , காமை ஐயா செயல்படல் வேண்டும் என்பதே என் கருத்தாகும்.எதிர்ப்பைக் கண்டு அஞ்சினால், தப்பானவர் கையில் ஆட்சி போய் விடும் என்ற அவரின் அச்சத்தை நான் வரவேற்கிறேன்.காமை அவர்களை ஓரளவிற்காவது பாரதிதாசன் நிலையில் பார்த்தே அப்படி எழுதினேன்.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  தவறான பின்னூட்டங்களை தவிர்க்க “உங்களால்
  அனுமதிக்கப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே
  பதிவுக்கு வரும்படி மாற்றி அமையுங்கள் ” என்று
  சில நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.

  நான் சற்றே மாறுதலாக யோசிக்கிறேன்.
  பின்னூட்டங்களை நான் முன்கூட்டியே வடிகட்டப்
  போவதில்லை. எந்தஒரு பின்னூட்டத்தையும் அனுமதிப்பதோ,
  மறுப்பதோ வலைப்பதிவாளருக்குள்ள பிரத்தியேக உரிமை
  என்பதை அனைவரும் ஏற்பர். அந்த உரிமையை நான்
  இனி சிறிது தீவிரமாக பயன்படுத்துவதாக இருக்கிறேன்.

  இன்னுமொரு விஷயம் – நான் இதைத்தான் எழுத வேண்டும்-
  இதையெல்லாம் எழுதக்கூடாது என்று என்னை கட்டுப்படுத்தும்
  உரிமை யாருக்கும் இல்லை என்கிற என் நிலையை –
  விமரிசனம் தளத்தின் நண்பர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வர்.
  இந்த வலைத்தளத்தில் எதையும் எழுதவோ,
  எழுதாமல் போகவோ – எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.

  நான் அதிமுக ஆட்சியை விமரிசித்து எழுதாமல் இருப்பது
  தான் இங்கு கிளம்பும் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும்
  மூல காரணம் என்பது எனக்கு புரிகிறது.
  அதிமுக என் priority-யில்இல்லை என்பதையும் நான்
  பல தடவை இந்த தளத்திலேயே கூறி விட்டேன்.
  தமிழகத்தில் அடிப்படை அரசியல் மாற
  வேண்டுமானால் – ஒரு பலமான புதிய சக்தி
  உருவாக வேண்டும்….அது இப்போது திமுக இருக்கும்
  இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும்… அதிமுகவை
  விமரிசிப்பதால் – திமுக தான் அதன் பயனைப்பெறும்
  என்பதால் – நான் அதனை இப்போதைக்கு செய்ய மாட்டேன்.
  இந்த விளக்கம் போதுமானது என்றே நினைக்கிறேன்.

  நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Ns raman சொல்கிறார்:

   I hope the same time you should also respect other comments not supporting views and not to brand them as a “Modi Bakthar” and personal attacks from your supporters. Keep continue your good work.

   • ஜோதி சொல்கிறார்:

    ராமன்,
    TAM மற்றும் காமை போன்றோர் நீங்கள் மோடி பக்தர் என்று சொன்னபோது, ஆம் என்றால் ஆம் என்பதில் பெருமைதானே அதில் என்ன கஷ்டம் உங்களுக்கு. அதில் உண்மையில்லை என்றால், நான் மோடி பக்தர் இல்லை என்று சொல்லிவிட்டுப்போகலாமே.

    TAM யைப் தொடர்ந்து படித்துவந்திருக்கிறேன், அவரது திமுக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு நிலையைப் சுனாமி-பினாமி வசனங்கள் மூலமாகப் புரிந்திருக்கிறேன். நீங்களும்புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    Anti-Modi அல்லது Anti-DMK டுடே அன்மீ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே… அது உங்கள் உரிமைதானே..

    அப்புறம் இன்னொன்று,
    பர்சனல் அட்டாக் ப்ரம் யுவர் பாலோயர்ஸ்
    என்பது தவறு

    இங்கே வருகிற ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை விவாதித்திருக்கிறார்களே தவிர யாரும் யாருக்கும் பாலோயர்ஸ் ஆக இருந்ததில்லை என்பதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.

    அப்படி இருக்கவும் முடியாது.

    • Ns raman சொல்கிறார்:

     I commented for KM and expecting a reply from him. Why you are reply to every one comment explaining KM stand. If I am supporting Modi / JJ need not be ” Modi Bakthar” or “Jaya Adimai”. People visiting here enough matured to put their opinion which may differ issue to issue. Blind supporting and blind opposition should not be there.

  • ஜோதி சொல்கிறார்:

   சார்,
   விமரிசனத்தையும் இங்கு வரும் பின்னூட்டங்களையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

   //திமுக தான் அதன் பயனைப்பெறும்
   என்பதால் – நான் அதனை இப்போதைக்கு செய்ய மாட்டேன்.//

   இந்த இடத்தில் நீங்களும் TAM ம் எண்ணங்கள் ஒத்துப்போகிறதோ என்னவோ?

   நீங்கள் கலைஞரை அவருடைய திறமைகளுக்காக பாராட்டி எழுதியிருந்தபோது கூட அவருடைய பின்னூட்டங்களில் திமுக எதிர்ப்புநிலைப்பாட்டை எப்பொழுதும் காண்கிறேன்.

   இதை மற்ற நண்பர்கள் உணரத்தவறியது ஏன்?
   அதாவது உங்களுக்கும் TAM-க்கும் கருத்து வேறுபாடு உண்டு என்பதை.

   நீங்கள் கலைஞரிடமும் நல்லது கண்டவிடத்து பாராட்டியிருக்கிறீர்கள். ஆனால் கலைஞர் என்றாலே விழுந்து பாய்கிறார். 😀

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப ஜோதி,

    புரிகிறது …..!

    என் வழி …. தனி வழி…! ( ? )

    followers என்று சொல்லப்படுவோர், இந்த வலைத்தளத்தின்
    இடுகைகள் தங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்
    என்பதற்காக இணைந்தவர்கள். நான் எழுதுபவற்றை எல்லாம்
    ஏற்றுக் கொள்பவர்கள் என்று சொல்வது தவறு.
    அதை நானும் எதிர்பார்ப்பதில்லை..

    யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடாதே…
    படிப்பவற்றை எல்லாம் உன் சொந்த வழியில் சிந்தித்துப் பார்…
    உண்மையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள் …

    -இது தான் நான் தொடர்ந்து இந்த வலைத்தளத்தின் மூலமும்
    வலியுறுத்துவது. அரசியல் கட்சிகளுக்கோ, அதன் தலைவர்களுக்கோ
    யாரும் அடிமைகளாக இருக்காதீர்கள் என்று நான் வலியுறுத்துவதும்
    இந்த சிந்தனையில் தான்.

    -உங்கள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி நண்பரே.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • ஜோதி சொல்கிறார்:

   கா.மை.

   நீங்கள் முன்பு பாஜக-மோடியை ஆதரித்து எழுதியபோது அதை பாராட்டிக்கூட உங்களை ஊக்குவித்துக்கூட

   பின்னூட்டம் எழுதாத இதே நடுநிலைவியாதிகள் தான்

   இப்போது மோடியை எதிர்த்து எழுதும்போது போராடும் போராளிகளாக மாறிவிட்டார்கள் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

   எப்பொழுதும் கருணாநிதியை கலைஞர் என்று அன்போடு அழைத்து அவர்தம் திறமைகளை பாராட்டி எழுதும்போதெல்லாம்

   உங்களை ஊக்குவித்துக்கூட பின்னூட்டம் எழுதாத இதே நடுநிலைவியாதிகள் தான்

   இப்பொழுது ஜெஜெவை எதிர்த்து எழுதாதற்காக
   அன்போடு மற்றவர் முகமூடியைப் போட்டுக்கொண்டு வந்து

   போராடும் போராளிகளாக மாறிவிட்டார்கள் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

 12. R.Subramanian சொல்கிறார்:

  Dear KM
  You continue to write without fear and favor. We r with u.

  Paiya

 13. paamaranselvarajan சொல்கிறார்:

  ‘ பதில் ” என்பவரின் பின்னூட்டத்தில் கூட்டாக செய்ததை — ஏதோ … குண்டுவைத்த தீவிரவாதிள் ” பொறுப்பு ” ஏற்று கொள்வது போல் பொறுப்பேற்று கொண்டுள்ளது அவரது பாணியில் // ஒரு மாதிரி எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு விரைவாக இல்லை. நடுநிலையோடு செயல்பட்டால் இனி ஆக்கமான முறையில் விவாதம் செய்வோம். இல்லை எனில் நாங்கள் விலகி செல்கிறோம்.
  இனிமேல் நண்பர் டுடேஅண்ட்மீ பெயரில் பின்னூட்டம் வராது. இதை நானும் எனது நண்பர்களும் உறுதி செய்கின்றோம்.// என்றும் கூறியிருக்கிறார் …! ” இன்னொருவர் வேதனை இவர்களுக்கு — வேடிக்கை … இதயமற்ற மனிதருக்கோ இவையெல்லாம் — வாடிக்கை ” என்று எண்ணி உங்கள் பணியை …. தொடருங்கள் …. !!!

  • ஜோதி சொல்கிறார்:

   //குண்டுவைத்த தீவிரவாதிள் பொறுப்பு ஏற்று கொள்வது போல் பொறுப்பேற்று கொண்டுள்ளது// செம்ம டேக் லைன்..

   ஆக்சுவலி, அது உண்மையும் கூட.
   குண்டுகூட வெடிச்சா உடனடி அழிவு நாசம்
   இந்தமாதிரி சைலண்ட் கில்லர்ஸ் தான் ரொம்ப டேஞ்சரஸ்.
   தன்னோட எதிர்பபச் சொல்லணும்னா தனக்கென்ற ஒரு அடையாளத்தோட வந்து சொல்லணும்.

   அதை விட்டுட்டு யார், எவரொருத்தரையும் ஹர்ட் பண்ணாம எழுதுவாங்களோ அவிங்க முகமூடிய போட்டுட்டு வந்து இவர்தான் அப்டிச் செஞ்சார்ன்னு நம்பவைக்க ட்ரைபண்றது எப்படியிருக்குன்னா

   “நீ இவ்ளோ நாள் நல்லவன்னு நெனச்சவ TAM நல்லவன் இல்லை பார்” அப்டின்னு மூஞ்சில சேறு பூசறது

   இல்லைன்னா

   ” ஓ, நம்பள இவ்ளோ நாள் ஆதரிச்சு கமெண்ட் போட்டவரே ஏதோ எதிர்க்கிறாருன்னா நம்ம நம்ப எழுத்துல கொஞ்சம் காரத்தைக் குறைக்கணும்போலயே” அப்டின்னு காமையை நினைக்கவைக்கிற உத்தி

   முன்னவர் இனிமேல் என் ஐடியில நான் எழுதமாட்டேன், அப்டி எதுனா வந்தா என்னுதுல்லைன்ட்டாரு
   பின்னவர், நான் இப்டித்தான் எழுதுவேன், என்னிஷ்டம்ன்னுட்டாரு.

   இது ரெண்டும் ரெண்டுபேருக்கிட்டயுமே நடக்கலைன்ன உடனே தடால்னு சரணம்.

   பாக்கப்போனா இது TAM சொன்னமாதிரி
   “கவனிக்கப்படவேண்டிய குழந்தைச் செயல்”
   இல்லைன்னு நினைக்கிறேன்.

   சீரியசாக கவனிக்கப்படவேண்டிய, தேர்தல்நேரத்து
   “அரசியல் கைக்கூலிகளின்” வேலையாக இருக்கலாம்

   கூலின்னா காசுக்கு மட்டுமா மாரடிப்பாங்க
   வேற பொருளுக்கு மாரடிக்கிறவங்க
   அதிகாரத்துக்கு மாரடிக்கிறவங்க
   புகழுக்கு மாரடிக்கிறவங்க-ன்னு பலவகை இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.