கலைஞர் கருணாநிதி கூறுவது போல் வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி …..?

.

.

இன்று கலைஞர் கருணாநிதி தமிழக வாக்காளர் பட்டியலில்
ஒரு மிகப்பெரிய மோசடி நிகழ்ந்திருப்பதாக குற்றம்
சாட்டி இருக்கிறார்….

அவரது அறிக்கையிலிருந்து சில பகுதிகள் –

KARUNANIDHI

” தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்ப்பில் மிகப் பெரிய மோசடி
நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது வாக்காளர் பட்டியல் மூலம்
வெளி வந்திருக்கும் புள்ளி விவரங்களிலிருந்தும்,
இந்தப் புள்ளி விவரங்களை, மக்கள் தொகை புள்ளி விபரங்களோடு
ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் தெரிகிறது.

“டைம்ஸ் ஆப் இந்தியா”(21-1-2016) – “2016இல் தமிழ்நாட்டில்
ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பில் ஒரு செய்தி
வெளியிட்டுள்ளது. அதில் நான்காண்டுகளில் அதாவது
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத்
தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22
சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில்
தற்போது 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர்
பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது

75.56 சதவிகிதம் பேர். இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக்
கூடியதாக இல்லை.

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள்
23.4 சதவிகிதம் பேர்.
15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள்
6 சதவிகிதம் பேர். எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது
வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள்
23.4 + 6 = 29.4 சதவிகிதம் பேர்.
மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 சதவிகிதத்தினரே,
வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது
வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 சதவிகிதம் பேர்
வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும்,
பெருத்த மோசடியாகவும் உள்ளது.

இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர், வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள்,

வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள். இந்தக்
கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள்
தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி
வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

—————————

டைம்ஸ் ஆப் இந்தியா வெறும் பரபரப்புக்காக பொறுப்பற்ற
முறையில் பல தடவை செய்திகளை வெளியிட்டிருக்கிறது –
என்பதை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த
செய்தியை சீரியஸாகவே எடுத்துக் கொண்டு பார்த்தால் –

முதல் கேள்வி – 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்
2014-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்ததே…
அப்போது இருந்த வாக்காளர் பட்டியலுக்கும் இப்போதைக்கும்
எவ்வளவு வித்தியாசம் என்பதை ஏன் யோசிக்கத்
தோன்றவில்லை…?

ஒப்பீடு செய்வதானால் – கடைசியாக நிகழ்ந்த பாரளுமன்ற
தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன்
தானே ஒப்பிட வேண்டும்…? கலைஞரின் கருத்துப்படி
2014 பாராளுமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட
வாக்காளர் பட்டியல் சரியானதா – இல்லையா ..?

இரண்டாவது கேள்வி – மாதம் தவறாமல், தேர்தல் கமிஷனர்
அறிக்கை விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது
என்றும் யாருக்காவது குறைகள் இருந்தால், தேர்தல் கமிஷனுக்கு
தெரிவிக்கலாமென்றும்.

மூன்றாவது – அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்
தேர்தல் கமிஷனால் தொகுதி ரீதியாக, வார்டு ரீதியாக,
வாக்காளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல்
அளிக்கப்படுகிறதே – அது எதற்காக…?

இதை அவ்வப்போது verify செய்து – குறைகள் இருந்தால்
பட்டியல் போட்டு, தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்காமல் போனது யார் குற்றம் …?

நான்காவது – இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை.
ஐந்து முறை முதல் அமைச்சராக பதவி வகித்து அளவுகடந்த
அனுபவங்களைப் பெற்றவர் – இந்த போலி வாக்காளர்களை
அடையாளம் கண்டு பிடித்து அகற்றும் வழியை பார்க்காமல் –
திகில் அறிக்கை விடுவது ஏன்…?

இந்த அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளுக்கு தேர்தல்
கமிஷனை ஏன் குறை சொல்ல வேண்டும்…?

ஒவ்வொரு தொகுதியிலும், ஏன் – ஒவ்வொரு பூத்’திலும் –
முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் கமிட்டி
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின்
முக்கிய பணியே, வாக்காளர் பட்டியலில் உள்ள
வாக்காளர்கள் அனைவரையும் நேரில் தொடர்பு கொண்டு –
கட்சிக்காக ஓட்டு சேகரிப்பது தான்.
( வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் புகைப்படம், வயது,
முழு விலாசம் ஆகியவை தரப்பட்டுள்ளன.)

அந்தந்த வார்டுகள்/பூத்’களில் உள்ள கட்சி பொறுப்பாளர்களை கொண்டு –
தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை
practical ஆக verify செய்து, எங்கே தவறுகள்
நிகழ்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்து, தேர்தல் கமிஷனிடம்
அறிக்கை/ரிப்போர்ட் கொடுப்பது தானே நியாயம்..
முனைந்து செய்தால் – ஒரே வாரத்தில் இந்தப்பணியை
முடிக்க முடியும்.

அதை விட்டு விட்டு – செய்தியை sensational ஆக்க
வேண்டுமென்பதற்காக இப்படி “திகில்” அறிக்கை விடுவது
6-வது முறை முதலமைச்சராக பொறுப்பேற்க ஆவலுடன்
காத்திருக்கும் ஒருவருக்கு பொருத்தமான செயலா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கலைஞர் கருணாநிதி கூறுவது போல் வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி …..?

 1. thiruvengadam சொல்கிறார்:

  தாங்கள் கூறிய யோசனைகள் கட்சியினராகச்செய்ய விழிப்புணர்வுக்கு இந்த அறிவிக்கை. தேர்தல் கமிஷன் ( குறிப்பிட்ட தொகுதி என்ற வழக்கத்திற்கு மாறாக) மாநிலமுழுதும் தடையுத்திரவு நினைவுக்கு வருகிறது. In addition லயோலா கருத்துகணிப்பு திமுகவுக்கு பூஸ்டராகவும் அதிமுகவுக்கு கூட்டணி அவசியத்தையும் காட்டியுள்ளது.

  • உண்மை சொல்கிறார்:

   லயோலாவின் இன்னொரு கணிப்பு திமுக விற்கு நாமம் போட்டிருக்கிறதே,பார்க்கவில்லையா?

 2. உண்மை சொல்கிறார்:

  நீதிபதி குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கே இன்னமும் கருணாநிதிக்கு புரிய வில்லையாம். அன்பழகனுடன் இரவு பகலாக இருந்து கூட்டிக் கழித்துப் பார்த்து தினம் ஒரு பதில் மனு தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  இந்த நிலையில் இன்னொரு கூட்டல் கணக்கு . இப்போது அன்பழகன் இல்லை பதிலாக இன்னொருவர். கூட்டிக் கழித்து தேர்தலுக்குப் பின்னர் சொல்லி விடுவார். வேறு வேலை இருக்காது என்பதால் அப்போது ஸ்டாலினும் சேர்ந்துவிட வாய்ப்புண்டு..
  நான்கு கேள்விகளும் தொடர்ந்து வந்த விளக்கமும் தொண்டர்களுக்குப் புரியாது. நிச்சயம் ஆமா கோசம் போடத்தான் போகிறார்கள்.
  கருணாநிதிக்கு ஏன் இந்த விளக்கமில்லாத விளக்கம். 2009 இல் பார்த்தது போல் பேசாமல் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கலாமே !
  பாவம் ரொம்ப குழம்பிப் போய் இருக்கிறார்.கடைசி ஆட்சிக் கனவு.

  • ஜோதி சொல்கிறார்:

   //நீதிபதி குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கே இன்னமும் கருணாநிதிக்கு புரிய வில்லையாம். அன்பழகனுடன் இரவு பகலாக இருந்து கூட்டிக் கழித்துப் பார்த்து தினம் ஒரு பதில் மனு தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். //

   இன்றைக்கு கர்நாடகாவில் குன்ஹா செய்தி தான் ஹாட் டாபிக்.

   ரெஜிஸ்ட்ரார் பதவியில் இருந்ததுபோது போலி சர்ட்பிகேட்டுகள், போலி ரப்பர்ஸ்டாம்புகள் உபயோகிறத்து தன் பதவியை தவறாகப் பயன்படுத்தி நில அபகரிப்பு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் என ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகிறது. கர்நாடக அரசே இவர்மீது வழக்குபதியவேண்டும் என நீதிமன்றைக் கேட்டுள்ளது. தானே பதவிவிலகுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்…

   கர்நாடக பாஜகவும் இந்தவிசயத்தில் காங்கிரசை அங்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

   நீதிபதி குன்ஹா மீது பல்வேறு முறைகேடு புகார்களில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரனையை துவக்குமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது நாட்டிற்கே தலைகுனிவான சம்பவம்.

   • இளங்கோ சொல்கிறார்:

    சின்ன லாபத்துக்கே ( மிகச்சில லட்சங்கள் )இத்தனை மோசடி
    செய்திருக்கும் இந்த ஆசாமியை ஜெ.வழக்கில்
    எவ்வளவு சுலபமாக கலைஞர் விலைக்கு வாங்கி இருப்பார் ?
    எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது –
    ஜெ.வுக்கு சிறைத்தண்டனை, பதவிபறிப்பு, நியாயமின்றி
    சுமத்தப்பட்ட அவமானம், எத்தனை பேர் தற்கொலை;
    எவ்வளவு மனவேதனை ?
    இந்த குன்னா சமாச்சாரம் ஏன் இன்னும் தமிழ்நாட்டில்
    பரவலாக தெரியப்படவில்லை ?
    எதற்கெடுத்தாலும் கருத்து கூறும் கலைஞர் கந்தசாமி
    இந்த விஷயத்தில் ஏன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார் ?
    ஜோதி அவர்கள் குன்னா குறித்த தனக்கு தெரிந்த
    எல்லா விவரங்களையும் இங்கு பதியும்படி கேட்டுக்கொள்கிறென்.
    குறைந்த பட்சம் இந்த வலையின் மூலமாவது செய்திகள் பரவட்டும்..
    நீங்கள் தந்துள்ள மற்றும் தரப்போகும் செய்திகளுக்காக
    மிக்க நன்றி நண்பரே.

    • ravi சொல்கிறார்:

     இதை தான் தலிவரும் சொல்கிறார்.. கனிமொழி அப்பாவி என்று ?? லாலு கூட சொல்கிறார் , தான் அப்பாவி என்று …
     //ஜெ.வுக்கு சிறைத்தண்டனை, பதவிபறிப்பு, நியாயமின்றி சுமத்தப்பட்ட அவமானம், எத்தனை பேர் தற்கொலை;
     எவ்வளவு மனவேதனை ? //
     ஜெ, பெயரை எடுத்து விட்டு மற்ற அரசியல் தலைவர்கள் பெயரை போட்டு பாருங்கள்.. அனைவருக்கும் பொருந்தும்..
     ஆகவே, என்ன செய்யலாம், ஊழல் வழக்கு இனிமேல் அரசியல்வாதிகள் மேல் போட கூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வரலாம் ..

   • ஜோதி சொல்கிறார்:

    evidence 1

    https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11140110_10204844817508611_4150326553130668634_n.jpg?oh=8ffe687e41759f9018b7f39513637d25&oe=56FB85F0&__gda__=1463984852_91dec81b20ef132b8484035b7daa1407

    evidence 2

    https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11855681_10204844817788618_2358533204641226363_n.jpg?oh=57db7ae1b2d9e4c870a6d6c892640581&oe=57412FE3&__gda__=1462571607_3c067e68ad5d6f4e4fcbe5a28d7789ff

    சுருக்கம்:
    ஒரு விவாகரத்து வழக்கில் , ஒரே நீதிமன்றம் , ஒருவர் இறந்து விட்டார் என்பதால் அவரது விவாகரத்து வழக்கை முடிக்கிறோம் என்று அக்டோபர் 7 2005 இல் ஆணை பிறப்பிக்கிறது , அதே நீதிமன்றம் ஜூன் 10 2005 அன்று விவாகரத்து அளிப்பதாக ஆணையும் பிறப்பித்துள்ளது … இதை வைத்து அந்த நபரின் சொத்தை இரண்டாவது மனைவி ஆட்டையைப் போட்டு விடுகிறார் … பாதிக்கப் பட்டவர் அப்பொழுதைய உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்புத் துறை பதிவாளரான ஜான் மைக்கேல் குன்ஹாவிடம் முறையிடுகிறார் … அவரோ .. நீதிமன்றத்தின் மீது எந்தத் தவறுமில்லை , தவறான சான்றிதழ் கொடுத்தவர் மீது விசாரணை செய்யலாம் என்று சொல்கிறார் …. அது எப்படிங்க ஒரே நீதிமன்றத்துல இரண்டு விதமான ஆணை பிறப்பிக்கப் படும்/? அதில் எதோ ஒன்று பொய் என்பதை மறைக்கிறார் பதிவாளர் … ஏன் என்றால் , அப்படியான ஆணையை பெற்ற வக்கீல் , இவர் வக்கீலாக இருந்தப் பொழுது இவருடன் இணைந்து பணியாற்றிய்ள்ளார் , நெருங்கிய நண்பர் …

    MANU என்பது அவர்களது நிறுவனத்தின் பெயர் ….
    M – மைக்கல் த குன்ஹா
    A – அம்ருத் கினி
    N – நொரொன்ஹா
    U – உள்ளாள்
    இவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்திய நிறுவனம் …. சொத்தை ஆட்டையைப் போட துணை போன குன்ஹா தான் சொத்துக் குவிப்பு வழக்கின் நீதியரசர்.

    coyrtesy: KRK

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு ….
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-favours-voters-says-loyola-survey-245111.html …. மீண்டும் ராஜநாயகம் களம் இறங்கிவிட்டார் போல தெரிகிறது …. கலைஞர் — ஸ்டாலின் இடையே வெளிட்ட கருத்து கணிப்பு போய் இப்போ இந்த ” பீலா ” விட்டுயிருக்கிறார் … சென்ற பாராளுமன்ற தேர்தலில் பலரும் — ஊடகங்களும் தமிழ்நாட்டின் கணிப்பை வெளியிட்டு முகத்தில் கரியை பூசிக்கொண்ட பின்னும் இவர்களுக்கு இது தேவைதானா … ? கணிப்பு வெளியிட்ட உடனேயே ” கலைஞர் ” வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி — என்று அறிக்கை விட்டு இருக்கிறார் ..! போட்டோ — இணையத்தில் வெரிபை பண்ணும் வசதி — சேர்க்க – நீக்க அவகாசம் அனைத்தும் கொடுத்துள்ள போதே ” இந்த பில்டப் ” — டைம்ஸ் ஆப் இந்தியா முதலில் ” செம்பரம்பாக்கம் ” ஏரி திறப்பு விவகாரத்தை கிளப்பிவிட்டு — சிலவாரங்களுக்கு பின் ” நிவாரண பணிகளை ” ஒரே சமயத்தில் 700 — கோடி கொடுத்ததையும் — குப்பைகளை வாரியதையும் — தோற்று நோய் தடுப்பு போன்ற வேறெங்கும் நடக்காத அளவுக்கு சிறப்பாக நடந்தது என்று அரசின் நடவடிக்கைகளை பாராட்டி — எழுதியதையும் நினைவு கூற வேண்டுமல்லவா . ? முதலில் ஒன்றை வெளியிட்டு – அதை மற்ற கட்சியினர் பிடித்து தொங்கி அறிக்கை விட்டு ஓய்ந்தபின் — வேறு விதமாக செய்தி போடுவது இந்த பத்திரிக்கையின் செயல்பாடு தானே …. ?

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Let us ignore MKs satemtent. It is his usual trend before any election when ever he is not in
  power. More over I feel he is very much scared of his partys victory

  feel

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கருணானிதி, ஏதேனும் கருத்தைத் தெரிவித்து எப்போதும் செய்திகளில் அடிபடவேண்டும் என்று நினைப்பார். (இழவு வீட்டில் பிணமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இருக்க நினைக்கும் குணம்). அவரை மீறி ஸ்டாலினால் வரமுடியாததற்கு இந்தக் குணம்தான் காரணம்.

  திமுக வெற்றிபெற்றால், தன்னைப் பாராட்டிக்கொள்வதும், தோற்றால், மக்களைச் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று திட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை. (இது பொதுவாக அரசியல்வாதிகளின் குணம். ஜெ. மக்களைத் திட்டிப் பார்த்ததில்லை. அவர் வாக்களிக்கும் மெஷினைத்தான் குறைசொல்லுவார்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.