ஒரு நீதிபதியின் முன்னாள் கதை அல்லது ஒரு அப்பாவி பெண்மணியின் சோக சரித்திரம்…!

.

.

ஒரு கணவன் -அவனது சொத்துக்கள்….!
அவனது முதல் மனைவி,
இரண்டாம் மனைவி,
நான்கு வக்கீல்கள் பார்ட்னர்களாக சேர்ந்து துவங்கிய
ஒரு சட்ட நிறுவனம். அதில் மூத்தவர் நீதித்துறையில் சேர்ந்து
வெவ்வேறு “ரோல்” களில் “சேவை” செய்யப்போய் விடுகிறார்.
அவரது பதவியினால் கிடைக்கும் பலன்களை அந்த நிறுவனம்
பயன்படுத்திக் கொள்கிறது. ( அந்த நிறுவனம் அவர் போன
பிறகும் அதே பெயரில் தான் தொடர்கிறது…)
இது கதையின் பின்னணி ….!

இனி கதைக்கு வருவோம்.

கதை துவங்குவது மங்களூரில். கணவன், (முதல்)மனைவி இரண்டு குழந்தைகள். மனைவி டீச்சராக பணி புரிகிறார். கணவர் வெளிநாடு ஒன்றில் வேலை தேடிக்கொள்கிறார்.
(முதல்) மனைவியும், குழந்தைகளும் மும்பைக்கு
இடம் பெயர்கிறார்கள்.

வெளிநாடு போன அவருக்கு புதிய தொடர்புகள்….
இரண்டாவதாக ( ஒரு இந்திய பெண்ணைத்தான் )
திருமணமும் செய்து கொண்டு குடித்தனம் செய்கிறார்.
பின்னர் இரண்டாவது மனைவியுடன் மங்களூர் திரும்பி
சேர்ந்து வாழ்கிறார்கள்.

மும்பையிலிருக்கும் முதல் மனைவிக்கு இது தெரியவர
அவர் பிரச்சினை பண்ணுகிறார். உடனே கணவர் –
முதல் மனைவியுடன் விவாகரத்து கேட்டு மங்களூர்
நீதிமன்றம் ஒன்றில் வழக்கு போடுகிறார். வழக்கு நிலுவையில்
இருக்கும்போதே அந்த கணவர் மாடியிலிருந்து கீழே விழுந்து
சந்தேகத்திற்குரிய விதத்தில் இறந்து விடுகிறார்…

கணவர் இறந்த செய்தியை மும்பையிலிருக்கும் முதல் மனைவி
அறிந்து, பின்னர் அந்த செய்தியை அதிகாரபூர்வமாக
விவாகரத்து வழக்கு தொடரப்பட்ட கோர்ட்டில் தெரிவிக்கிறார்.
அந்த இறப்பின் காரணமாக, கோர்ட் – வழக்கை தள்ளுபடி
செய்து விடுகிறது. அதாவது விவாகரத்து வழக்கில் தீர்ப்பு
எதுவும் கொடுப்பதற்குள்ளாகவே கணவர் இறந்து விடுவதால் –
வழக்கு தள்ளுபடியாகிறது. அவர்கள் விவாக பந்தம் தொடர்கிறது.

விவாகரத்து நடக்காததால் –
கணவரது சொத்துக்கள் அனைத்தும்
முதல் மனைவிக்கும் அவரது இரண்டு வாரிசுகளுக்கும்
தான் போய்ச்சேர வேண்டும்.

இந்த நிலையில், 2வது மனைவியுடன், செத்துப்போன கணவரின்
சொத்துக்களை அபகரிக்க ஒரு கூட்டணி போடுகிறார் துவக்கத்தில்
சொன்ன கில்லாடி (பார்ட்னர்) வக்கீல். அவருக்குத்தான்
நீதித்துறையில் பணிபுரியும் (முன்னாள் பார்ட்னர்) நண்பரின்
அதிகாரமும், பதவியும் துணைக்கு இருக்கின்றனவே…!

விவாகரத்து வழக்கில் எந்த கோர்ட், மனுதாரர் இறந்து விட்ட
காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்ததோ –

அதே கோர்ட் தீர்ப்பு சொன்ன மாதிரி ஒரு டாக்குமெண்ட்
தயார் செய்யப்படுகிறது. கணவர் செத்துப் போவதற்கு
மூன்று மாதத்திற்கு முன்பே “டைவர்ஸ்” கொடுக்கப்பட்டது
மாதிரி ஒரு போலி டாக்குமெண்ட்.

இந்த போலியான டைவர்ஸ் தீர்ப்பின்படி –
முதல் மனைவிக்கு டைவர்ஸ் கொடுக்கப்பட்டு விட்டதால்,
கணவர் இறந்த தினத்தில் சட்டப்படி, அவரது இரண்டாவது
மனைவி மட்டுமே வாரிசுதாரராக இருக்கிறார்…..
எனவே இறந்தவரின் சொத்துக்களுக்கு அவர் உரிமை
கொண்டாடுகிறார். கில்லாடி வக்கீலின் திட்டப்படி,
முதல் மனைவிக்கு தெரியாமலேயே – மங்களூரில்,
சொத்துக்களை விற்கவும் பங்கு போட்டுக்கொள்ளவும் ஏற்பாடு நடக்கிறது.

மும்பையில் வசிக்கும் முதல் மனைவிக்கு இந்த
மங்களூர் சதிகள் எல்லாம் தெரிய வர நீண்ட நாட்களாகின்றன.
அவர் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனு போட்டு, “போலி”ஜட்ஜ்மெண்ட்
விவகாரங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறார்.

அலறிப் புடைத்துக் கொண்டு, அவர் ஹைகோர்ட்டில் புகார்
கொடுக்கிறார். ஹைகோர்ட்டில், நடவடிக்கை எடுக்கவேண்டிய
பொறுப்பில் இருப்பவர், கில்லாடி வக்கீலின் கில்லாடி முன்னாள்
பார்ட்னர். இதில் இங்கு தவறேதும் நடக்கவில்லை.
எந்த கோர்ட்டில் (விவாகரத்து கோர்ட்) டூப்ளிகேட் தீர்ப்பு
கொடுக்கப்பட்டதோ – அந்த கோர்ட் இதை விசாரிக்கட்டும்
என்று சொல்லி கடிதம் கொடுத்து விட்டு கதையை முடித்து
விடுகிறார்.

இது நீதித்துறையில் நிகழ்ந்துள்ள மோசடி
என்பதால், எங்கே தவறு நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது
என்றெல்லாம் உடனடியாக, தீவிரமாக கண்டுபிடிக்க வேண்டிய
பொறுப்பில் இருப்பவர்
சுலபமாக தட்டிக்கழித்து கோப்பை
மூடி விடுகிறார்…! ( காரணம் – நண்பேண்டா…! (பார்ட்னர் கூடடா…)

அந்த அப்பாவி முதல் மனைவி மீண்டும் மங்களூர் கோர்ட்டுக்கு
ஓடுகிறார். புகார் கொடுக்கிறார்… கொடுக்கிறார்…. கொடுத்துக்
கொண்டே இருக்கிறார். அவர்களும் நடவடிக்கை
எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்…!

விஷயம் முற்றுவது தெரிந்தவுடன், கில்லாடி வக்கீல் கையை
கழுவிக் கொள்கிறார். அந்த போலி ஜட்ஜ்மெண்ட்டுக்கும் எனக்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை. என் client தான்
கொடுத்தார்.. அவரைத்தான் கேட்க வேண்டும் என்று
தப்பித்துக் கொள்கிறார். அந்த client தான் செத்துப்போன
கணவரின் 2வது மனைவி….

அவரை கேட்டால், என் கணவரின் லாயர் தான் இந்த
ஜட்ஜ்மெண்டை என்னிடம் கொடுத்தார்… எனக்கென்ன தெரியும்
அது “போலி” என்று – என்று கூறி நழுவிக்கொள்கிறார்.

செத்துப்போன கணவரின் லாயரிடம் கேட்டால் எனக்கு
இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. 2வது மனைவி சொல்லும்
விஷயமே புதிதாக இருக்கிறது என்கிறார்…!!

பாவம் – வழக்கு இழுழுழுழுழுத்துக் கொண்டே போகிறது.
முதல் மனைவியும், அவரது இரண்டு வாரிசுகளும் –
அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்வைத் தொடர்கிறார்கள் –
என்றாவது நீதி தேவதை கண் திறப்பாள் என்கிற
நம்பிக்கையுடன்….!!!

கதையில் வேண்டுமானால் இப்படியெல்லாம் நடக்கும்.
நிஜத்தில் எங்காவது நடக்குமா என்று சில நண்பர்கள்
யோசிக்கலாம். அச்சு அசலாக அப்படியே இல்லாவிட்டாலும்,
ஓரளவு ஒத்துப்போகிற மாதிரி ஒரு செய்தியை படிக்க
விரும்புபவர்கள் இந்த link-ஐ போய்ப் பாருங்களேன்.

http://www.newskarnataka.com/exclusive/Judge-accuses-two-Mangaluru-based-advocates-of-foul-play

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஒரு நீதிபதியின் முன்னாள் கதை அல்லது ஒரு அப்பாவி பெண்மணியின் சோக சரித்திரம்…!

 1. ravi சொல்கிறார்:

  ரொம்ப மெனகெட வேண்டாம் .. கொஞ்சம் நம் ஊரில் உள்ள கீழ் கோர்ட்களில் சென்று பார்த்தாலே போதும்….
  ஒவ்வவொரு வழக்கும் பல வருடங்கள் ஓடும் ..

 2. thiruvengadam சொல்கிறார்:

  நண்பர் அதிக மெனக்கெட வேண்டாம் என்றதன் அடிப்படையிலும் , இந்த வெப்சைட்டை நானும் ( கா.மை இரண்டாவது பதிவை படிக்குமுன்) என் கருத்தை முன் முந்தைய பதிவிலேயே தெரிவித்துள்ளதால், இப்பதிவில் கா.மை . கவனிக்காத இரண்டு மட்டும் – அவர் செசன்ஸ் ஜட்ஜை நடவடிக்கைக்கு பரிந்துரையும். செசன்ஸ் ஜட்ஜின் தாமதமும். புதிய தகவலாக ஓய்வுபெற்ற ஜஸ்டிஸ் ஒரு வழக்கு சம்பந்தமாக நடவடிக்கைக்கு கடிதம் எழுதலாம் என்பது . பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பிராடுகள் தண்டனை பெறவேண்டும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   தீவிரமாக ஆதாரங்களைத் தேடி அலைந்து,
   அலசி, சட்ட பிரச்சினை எதுவும் வராமல், அதே நேரத்தில்
   விஷயமும் சுலபமாக விளங்கும்படி ஒருத்தர்
   இடுகை போட்டால்,
   லொட்டு லொசுக்கு என்று குறை பார்த்து எதையாவது
   உளறிக்கொண்டே இருக்கின்றன
   சில பொழுது போகாத ஜென்மங்கள்.
   கே.எம்.சார் சொல்ல வந்ததை தெளிவாகவே சொல்லி விட்டார்.
   ” இந்த கயவர் கம்பெனி – பணத்துக்காக
   எதையும் செய்யக்கூடிய கூட்டம் ”
   அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு விஷயம்.

   இப்போ இந்த பேராசிரியர் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சு
   எழுதி இருப்பது யாருக்காவது புரிகிறதா ? முதலில்
   அவர் என்ன சொல்லுகிறார் என்பது அவருக்கே புரியுமா ?
   சார் இந்த மாதிரி எல்லாம் பின்னூட்டம் போடாமல் இருந்தாலே
   படிப்பவர்களுக்கு
   பெரிய உதவி பண்ணியதாக இருக்கும்.
   ( மனதில் தோன்றியதை கடுப்பில் எழுதி விட்டேன்.
   ஆனால் நான் உண்மையைத்தான் எழுதி இருப்பேன்.
   எழுதியது தவறு என்றால், கே.எம்.சார் நீக்கி விடலாம்.
   எனக்கு ஒரு வருத்தமும் இருக்காது )

   • சேகரன் சொல்கிறார்:

    இன்னொன்று கூட சேர்த்துக்கொள்ளலாம் இளங்கோ.

    காவிரிமைந்தன் எழுதும் எல்லாவிஷயங்களும்
    ஏற்கெனவே தெரிந்த
    ஏகாம்பரங்கள்
    ஏன்,
    இன்னும் அதிகமாகவே விவரம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்ளுபவர்கள்,
    தமிழில் தட்டச்சத் தெரிந்தவர்கள்,
    தனக்குத் தெரிந்தவற்றை
    ஒரு பிளாக்கை ஆரம்பித்து
    சமூகத்துக்கு சொல்லலாமே?
    அப்படி ஒன்றை திருவேங்கடம் போன்ற விமரிசனம் நண்பர்கள் ஆரம்பிக்க நான் முன்மொழிகிறேன்.

    பி.கு. ( மனதில் தோன்றியதை கடுப்பில்லாமல் எழுதியிருக்கிறேன்.
    எழுதியது தவறில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இன்னொரு பிளாக்கர் உருவாக நான் காரணமாக இருககிறேன் என்பதால் ,
    கே.எம்.சார் இதை நீக்கினால் மிகவும் வருத்தப்படுவேன். )

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர்கள் இளங்கோ மற்றும் சேகரன் –

     “இடுக்கண் வருங்கால் நகுக ” .. 🙂 🙂

     (வேறு வழி ….? )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

   • Sharron சொல்கிறார்:

    You are right Mr.Elango

 3. உண்மை சொல்கிறார்:

  http://www.deccanherald.com/content/466470/petitioners-trust-advocate-lands-woman.html
  வெளி நாடுகளில் மருத்துவரிடமும்,வழக்கறிஞரிடமும் செல்லுமுன் இரண்டாவது கருத்தை-second opinion- பெற்றுக் கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார்கள்.

 4. drkgp சொல்கிறார்:

  படிப்பவர்களுக்கு புரியாத பின்னூட்டங்களை கே எம் அவர்கள் களை எடுத்து இடுகைகளுக்கு

  புதுப்பொலிவு ஊட்டவேண்டும்.

 5. thiruvengadam சொல்கிறார்:

  Once thnks K M sir to post. Reg comments by frnds on my opinions – First we as a public need be neutral , othrwise no harm in declaring whom we support. I just brought forth the left portions from that article which change the actuals reported there in. My initiative to enter here ( 1 ) how MK could able to appoint him ( 2 ) did his past acts have relevance to deal this case. . It is not practically possible that those dealing in cases should not known to each other. It was in practice prior to independance, Privy Council at London which dealt only with case related documents. Inconclution i reminded of a joke : One time 2 judges has to be tried for a small offence. Ironically they have to deal that. One judge fined the other with a little amount. Then the left was put in for case. Already fined judge( who dealt ) imposed huge fine as this is a second case in this for offence. Once Thanks KM for allowing my opinions confirming I am neutral & will remark when ever came across on the interest of public information

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  இந்த “MANU ” & கோவின் இன்னும் பல செயல்பாடுகளை வெட்ட வெளிச்சமாக யாராவது வெளியிட்டால் நன்றாக இருக்கும் — ஒருவேளை ” சொத்துக்குவிப்பு ” வழக்கில் திரு . குன்ஹாவை பாராட்டியவர்களுக்கு நன்றாக அவரது பின்புலங்கள் தெரிந்து இருக்குமோ … அவர்களிடம் கேட்டால் முழு விவரம் தெரியுமா … ? அடுத்து … // ஓட்டு நப்பாசையில் ரஜினி, காங்கிரஸை வீழ்த்தியதற்கு வினோத் ராய் தேர்வு- பத்ம விருதுகளில் பரபர சர்ச்சை //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/controversy-erupts-over-padma-award-rajinikanth-245367.html … இந்த சர்ச்சை பற்றி …? பத்ம விருதுகள் சமீப பல ஆண்டுகளாக ” விமர்சனகளுக்கு ” உள்ளாவது … ஏன் … ?

 7. உண்மை சொல்கிறார்:

  இன்று படிக்காதவர்கள்,பாமரர்கள் தவறு செய்வது குறைவு.படித்தவர்களும் பிரபலங்களும் தான் அதிக தவறுகளை ஏமாற்றுகளை செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் இன்றைய கல்வித் திட்டமே. காமை சார் காலத்தைய சிந்திக்க வைக்கும் கல்வி இன்றில்லை. இருந்தால் அரைவாசி இளைஞர்கள் விஞ்ஞானிகளாக இருந்திருப்பார்கள் .வெளிநாடுகளுக்கு செல்லும் நம்மவர் கூலிகளாக இருக்கமாட்டார்கள்.படைப்பாளிகளாக இருந்திருப்பார்கள்.அன்றைய கல்வி பெற்ற காமை சார் போன்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  அரசியல்வாதிகளை விட்டுவிடலாம்.அதில் இருப்பவர்கள் பலரின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே. சினிமாவில் பாலசந்தர் தொடக்கம் அவர் சீடர்கள் கமலகாசன்,ரஜனி, கூடவே நடிகை இலட்சுமி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களின் முகமூடியை கிழிக்க யாரும் இல்லை. தனக்குத்தானே சற்குரு பட்டத்தைக் கொடுத்து ஏமாற்றும் வாசுதேவ் பின்னால் நடிகர்கள் கூட்டம்.
  காமர்சல் படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜனிக்கு ஏன் இந்த விருது? அவர் இதுவரை என்ன செய்தார்? நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏன் சினிமாவுக்கும் செய்தவை ஒன்றை யாராவது கூற முடியுமா?

  இங்கு வரும் பலர் இவையெல்லாம் இன்றே மாற வேண்டும் என்று எண்ணி கருத்திடுகிறார்கள்.காமை சார் நாளையாவது மாறும் என கனவு காண்கிறார். நானோ நாளை மறு நாளாவது மாறுமா? என ஏங்குகிறேன்.

 8. chandraa சொல்கிறார்:

  During my school college days i thoroughly relied on text books only i never depended the so called notes sold in markets like lifco leo konar notes>>>>now i badly require a notes to understand what THIRUVENGADAM IYYAH means >>>>>likes to tell his curious readers mr rishi can pl do this work for the benefitt of INNUMERABLE FOLLOWERS OF K M IYYAH>>>>

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.