திரு.பழ.கருப்பையா – செய்தியாளர்களுடனான சந்திப்பு ….

pazha.karuppaiah

திரு.பழ.கருப்பையா அவர்கள் கட்சிக்கட்டுப்பாடுகளை
மீறியதாக, அதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்
நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை
ராஜினாமா செய்து விட்டு, இன்று நண்பகல் செய்தியாளர்களை
சந்தித்து அவர்களுடன் நீண்ட உரையாடலை நிகழ்த்தினார்.

தானாகவும் பல செய்திகளை சொன்ன கருப்பையா
செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.
அவரது பேட்டி கொஞ்சம் நீளமானது. பேட்டி வீடியோ இன்னும்
வெளியாகவில்லை. இதுவரை வெளியாகி இருக்கும்
செய்திகள் – முழுமையாக இல்லை.
அரைகுறையாக செய்தி தரக்கூடாது என்பதால் – நானும்
இங்கு அவற்றை பதியவில்லை.

திரு.கருப்பையா பல விஷயங்களைப் பற்றி திறந்த மனதுடன்
பேசினார். அவரை நான் நீண்ட நாட்களாக கவனித்து
வந்திருக்கிறேன். அவரது நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு நேரிலும்
போயிருக்கிறேன். தூயவர்… நல்ல இலக்கியவாதி.
தனித்தமிழில் பல மணிநேரங்கள் தொடர்ந்து சுவையாக
உரையாற்றக் கூடியவர்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னர் துறைமுகம்
தொகுதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறார்
என்ற செய்தி முதன் முதலில் வெளிவந்தவுடனேயே
நான் நினைத்தது –
இவருக்கு ஒத்துவராதே – இதில் எல்லாம் ஏன் போய்
சிக்கிக் கொள்கிறார் என்பது தான்.
தீவிர அரசியல் என்பது புலிமேல் சவாரி செய்வது மாதிரி.
தொடர்ந்து சவாரி செய்வதும் கடினம்.
விட்டு இறங்கினாலும் ஆள் தேறுவது கடினம்.

பேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் எதுவானாலும் கூட,
அவர் மிக நாகரிகமான முறையில் அவற்றை வெளிப்படுத்தி
இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

நண்பர்கள் எல்லாருமே பேட்டியை பார்த்திருப்பீர்கள் –
அல்லது இனி பார்ப்பீர்கள்….
அவர் அதில் வெளிப்படுத்தியுள்ள செய்திகள்/கருத்துக்களைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…
என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சுருக்கமாக, தெளிவாக, அழகாக, நாகரிகமாக –
பின்னூட்டங்கள் மூலம் வெளிப்படுத்துங்களேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திரு.பழ.கருப்பையா – செய்தியாளர்களுடனான சந்திப்பு ….

 1. உண்மை சொல்கிறார்:

  பழ கருப்பையா பற்றி சோ அன்று சொன்னது……….

 2. உண்மை சொல்கிறார்:

 3. thiruvengadam சொல்கிறார்:

  பழ.கருப்பையா பேட்டிகள் பதிவு தங்களது சார்புநிலையை சிறிது அசைத்துள்ளது. ஜெ அவர்கள் நிர்வாகத்திறமை கேள்விக்குரியது இல்லை. பல் மொழி திறமை, நிர்வாக அனுபவம் அவரால் எந்தகேள்வியானாலும் பதில் அளிக்ககூடியவர் தற்போது நான் ரீச்சபிள் என்ற நிலையை பழ.கரு உறுதிப்படுத்தியுள்ளார். அன்புமணியின் பிரபல விளம்பர வாசகம் – மாற்றம் – செயல்படுத்துவது இப்போதைய தேவை.

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா திருவேங்கடம்,

   உங்கள் ஆங்கில பின்னூட்டத்தை விட தமிழ் பின்னூட்டம் ஓரளவு புரிகிறது. எனவே, எழுதித்தான் தீருவேனென்றால்
   தொடர்ந்து தமிழில்மட்டுமே
   எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், ஆங்கிலமோ,
   தமிழோ உங்கள் குழப்பம் மட்டும் தொடர்கிறது.

   // நிர்வாகத்திறமை கேள்விக்குரியது இல்லை. பல் மொழி
   திறமை, நிர்வாக அனுபவம் அவரால் எந்தகேள்வியானாலும் பதில் அளிக்ககூடியவர்//

   இதற்கு அர்த்தமென்ன ஆண்டவனே ?

   //அன்புமணியின் பிரபல விளம்பர வாசகம் – மாற்றம் – செயல்படுத்துவது இப்போதைய தேவை.//

   இதை யார் செயல்படுத்த வேண்டும் ?
   தயவுசெய்து இதற்கும் அர்த்தம் சொல்லிவிட்டு போயிடுங்களேன்;

   சார் நீங்கள் பின்னூட்டம் போட்டுத்தான் ஆக வேண்டும் என்பது அவ்வளவு அவசியமா ? விமரிசன வாசகர்கள்
   பிழைத்துப் போகட்டுமே விட்டு விடுங்களேன்.
   முதலில் நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனோ என்று
   சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது வரிசையாக நிறைய
   நண்பர்கள் எழுதுவதை பார்க்கிறீர்கள் தானே ? பாவம் கே.எம்.சார்
   நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று நினைத்து பேசாமலிருக்கிறார்.
   அவரைப்புரிந்து கொண்டு உதவுங்களேன்.

   • thiruvengadam சொல்கிறார்:

    Dear ilango – pl bear with me for responding in english. I exposed the caliber of JJ. i expect Marram in Non Reachable status of JJ which confirmed by Pl.Kr. Other friends posting are in tune with me.

    • ரிஷி சொல்கிறார்:

     இந்த விளக்கமின்றியே நீங்க சொல்ல வருகிற விஷயம் நன்கு புரிகிறது நண்பர் திருவேங்கடம்.

  • ரிஷி சொல்கிறார்:

   “முதலமைச்சர் மீது மதிப்புள்ளது” என்ற குறிப்பிட்ட வாசகம் கொண்ட வீடியோ இமேஜ் மட்டும் போட்டிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது 😉 😀

 4. உண்மை சொல்கிறார்:

  ஜே ன் தொடர் அரசியல் நிகழ்வுகளை அவதானித்துப் பார்த்தால் பல சந்தர்ப்பங்களில் அவர் அவசரப் பட்டு செயல்படுவதாகவும்,யாரோ சொல்வதைக் கேட்டு நடப்பதைப் போலவும் தெரிகிறது. சரியோ தவறோ அவர்களின் கருத்தை விளக்கத்தைக் கேட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பது சிறப்பாகவே இருக்கும்.

  நான் என்ற அகங்காரத்தை அகற்றி பொறுமையுடன், சமீபத்தில் சோ சொன்ன அதிமுக வின் குறைகளை நீக்கி செயல்படாவிட்டால் அரசியல் எதிர்காலம்?? இவ்வுலகில் தவறு செய்யாதவர்கள் யார்?

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பழ கருப்பையா அவர்கள் சொல்வது உண்மைதான். அவரும் நல்ல மனிதர். அவர் சொன்ன எதுவும் இட்டுக்கட்டிச் சொன்னதல்ல. நயத்தக்க நாகரிகத்துடன்’தான் அவர் சொல்லியிருக்கிறார். இன்றைய (40 ஆண்டுகால அரசியல்) அரசியலில் அவரைப்போன்றவர்களுக்கு இடமில்லை. அவர் எல்லா அதிகாரிகளையும் குறை சொல்லியுள்ளார்.

  அதைமட்டும் வைத்துக்கொண்டு, ஜெ மீது பாய்வதோ அல்லது அதிமுக அரசைக் குறைசொல்வதோ சரியல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றைக்கு யார் அரசியலில் இருக்கிறார்கள்? அரசியலில் இருப்பதற்கான காரணம் என்ன? அவர்கள் (எல்லாரும். இதில் விதிவிலக்கான 0.00000002% அரசியல்வாதிகளை விட்டுவிடலாம்) இந்தத் தொழிலுக்கு வருவதற்குமுன் அவர்களிடமிருந்த சொத்து என்ன, இத்தனைவருடம் தொழில் செய்தபின் இருக்கும் சொத்து என்ன. அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. அரசு அதிகாரிகளுக்கும்தான் இது பொருந்தும். அவர்கள் நினைத்திருந்தால் அரசு (எந்த அரசுமே) நேர்மையாக இருந்திருக்க முடியும். இந்த நிலையை யார் சரிபண்ணமுடியும்? இளைஞர்கள்தான். அவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் (‘நல்ல தலைவனை அரசியலுக்கு வரும்படியான சூழலைக் கொண்டுவந்தால்) இது சாத்தியம்.

  இன்று ஜெவைக் குறை சொல்பவர்கள் (அரசியல்வாதிகள், கட்சி சார்ந்தவர்கள்) அவர்களின் சொந்த லாபத்துக்குத்தான் அப்படிச் சொல்வார்கள். ஜெவைத் தேர்ந்தெடுத்தது மக்கள். காமராஜரைத் தோற்கடித்தவர்கள் மக்கள். கொள்ளை செய்யமாட்டார் என்று தோன்றும் ஞானியையும், டிராபிக் ராமசாமியையும், சோவையும் தோற்கடித்தவர்கள் மக்கள். மக்கள் எவ்வழி… மன்னன் அவ்வழி.

 6. seshadri சொல்கிறார்:

  When Mr Cho, told “Irukkar” “irukkar” about Pala Karupaiyah at function, he might of prepared the letter and waiting for final call from JJ

  (but JJ could not able to take any other decision, else it will spoil the party discipline….)

  Seshan

 7. அம்மாவைச்சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதைப்போலவே, அம்மாவைச்சுற்றி ஒரு ரகசிய இருள்வட்டம், இப்போது உருவாகியிருப்பதை, நாட்டு மக்களைப்போலவே நானும் உணர்கிறேன்…அந்த இருள்திரை கிழிந்து ஒரு சுடராய் அம்மா வெளிவரும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்…

 8. V.G.Chandrasekaran சொல்கிறார்:

  பழயன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்கவியலா மாற்றங்கள் ஆனால் என்ன அதிமுகாவில் இது சற்றும் எதிர்பாராமல் நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் புரிந்து வைத்திருப்பதால் மாற்றங்கள் அங்கு இயல்பாய் போய் தனது அடுத்த உறுமீனிற்காக கொக்குகள் சலனமின்றி காத்திருக்க பழகிவிட்டன. ஆனால் சற்று எதிர் முகாமை எட்டி பாருங்கள் அகவை 90 ஆனாலும் முதல்வர் கனவு, அகவை 60 இளைஞரணி தலைவர் கிழவி எப்ப சாவாள் தின்னை எப்ப காலியாகுமென்ற மனநிலையில் இவர்களுக்கு செல்வியின் நிலைபாடு எவ்வளவோ மேல். என்ன வெளிபடையான பேச்சுக்கு உரியவர் என்பதனால் கருப்பையா காலம் கடந்தாவது பேசுகிறார் ஆனால் மற்றவர்கள் அமைதிகாத்து தனக்கான அடுத்த முறைக்காக ஹெலிகாப்டரை வணங்குவதும் வேப்பில்லையாடை உடுத்தி மண் சோறு உண்பதும் சு சாமியின் முன்பு குத்தாட்டம் போடுவதுமாக தங்களது விசுவாசத்தை நிரூபித்துகொண்டுள்ளனர்.

 9. ரிஷி சொல்கிறார்:

  நாஞ்சில் சம்பத் காலியானபோது பழ.கருப்பையா அதிமுக சார்பில் இனிமேல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளவேண்டும் என சிலரது பேஸ்புக் பதிவுகளைப் பார்த்தேன். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் சி.ஆர்.சரஸ்வதி போன்றோரை ஏன் அனுப்புகிறார்கள் என்பது புரியாமலிருந்தது. ஆக தன்மானம் கொண்டோர் அங்கு நிரந்தரமாக இருக்க முடியாதென்பது புரிகிறது.

 10. paamaranselvarajan சொல்கிறார்:

  // எங்களின் போராட்டத்தால் பழ.கருப்பையா நீக்கம்: எஸ்.டி.பி.ஐ!
  வியாழக்கிழமை, 28 January 2016 20:00 பகுதி: தமிழகம் …
  http://www.inneram.com/…/6883-sdpi-claims-action-taken-against-karuppiah…. // இப்படியும் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன …! அவர் சமீப காலங்களின் தினமணியில் எழுதிய கட்டுரைகள் மற்றும் மெகா டிவி யில் ஒளிபரப்பான குடியேற்றம் { குடியாத்தம் } திரு .பதுமனார் அவர்கள் நடத்திய ” வழக்காடு மன்றம் ” போன்றவற்றிலும் துக்ளக் விழாவில் பேசியதை போல பட்டும் – படமாலும் இந்த கருத்துக்களை கூறியதை பலர் படித்து -கேட்டும் இருக்க கூடும் …. கட்சியை விட்டு நீக்கயபின் கூறுவதை — தற்போது நடந்த பொதுக்குழு — செயற்குழுவில் இவர் ஆணித்தரமாக எடுத்துகூறி இருக்கலாம் — கழிவு நீர் போன்ற இணைப்புகளுக்கு அதிகாரிகள் மூன்று லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார்கள் என்பவர் அதை ஒரு எம்.எல்.ஏ என்கிற முறையில் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்கிற கேள்வியும் எழுவது இயல்பானது — // திறமைசாலிதான் ஜெயலலிதா. அதிமுக ஒரு வித்தியாசமான கட்சி. கட்சியிலுள்ள எல்லா மனிதர்களும் அவர்கள் போக்கிற்கு நடந்துகொள்ள அனுமதியளிக்கிறது. அதேநேரம், ஆசையின் மீது அச்சத்தை வைத்து ஜெயலலிதா கட்சியை நடத்திவிட்டார். அவர் பார்த்தாலே எல்லோரும் பயப்படும் அளவில்தான் கட்சியை வைத்துள்ளார். அதுவொரு பெரும் திறமைதான் என்று கூறியுள்ளார்.—– எந்த விளைவுகளை பற்றியும் கவலைப்படாமல் முடிவெடுப்பது ஜெயலலிதாதான். அவரிடம் எனக்கு பிடித்த குணமும் அதுதான். ஆனால் ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடும் அளவுக்கு அமைச்சர்களே போய்விட்ட பிறகு, நாம் என்ன செய்வது என்று நெடுங்காலமாக யோசித்துக்கொண்டு இருந்தேன். // நீங்கள் அவ்வாறு கும்பிடு போடாமல் இருந்த ஒரு நல்ல இலக்கியவாதிக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் பட்சத்தில் — அரசியல் என்கிற களத்திலிருந்து — முன்பே வெளியேறி இருந்தால் — நன்றாக இருந்து இருக்கும் — ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார் அப்படிதானே ….?

 11. ஜோதி சொல்கிறார்:

  தூய்மை என்றால் என்ன?
  (நல்ல !?) இலக்கியவாதி யார்?

  எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் செல்வி ஜெயலலிதா ஈடுபட்டிருந்தார். கடுமையான சுற்றுப்பயணம் அது.

  அப்போது இளைஞர்கள் எல்லாம் ஜெ தரப்பில் சுழன்று நின்றார்கள். அதை பார்த்து நக்கலடித்து பேசிய பழ. கருப்பையா,

  ‘ஜெயலலிதா ஒரு குலுக்கப்படாத லாட்டரி சீட்டு மாதிரி. அதை எப்போதும் சட்டைப்பையில் வைத்துக்கொண்டே திரிவார்கள். சட்டையை மாற்றினாலும் லாட்டரி சீட்டை அதில் மாற்றிக்கொள்வார்கள். ஜெயலலிதாவும் அப்படித்தான். குலுக்கப்படாத லாட்டரி சீட்டு மாதிரி. அதனால்தான் இளைஞர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள் “””

  என்று மகா இலக்கியநயத்துடன் பேசியவர் இந்த பழ. கருப்பையா.
  இவர் இன்றைக்கு அரசியல் நெறிகள் குறித்து பாடமெடுக்கிறார்,
  அதுவும் இப்படி இவர் கேவலமாக விமர்சித்தவரிடமிருந்து அரசியல் வாழ்வையும் பெற்ற பின்னர்.

  தூய்மை என்றால் என்ன?
  (நல்ல !?) இலக்கியவாதி யார்?

  நன்றி கேஆர்கே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஜோதி,

   கடந்த 7-8 வருடங்களாகத்தான் நான் பழ.கருப்பையா அவர்களை
   கவனித்து வருகிறேன். நீங்கள் கூறும் அவரது “முந்தைய சரித்திரம்”
   எனக்கு தெரியாது என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்… 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • ரிஷி சொல்கிறார்:

   What is thooymai?
   This question leads to describing the definition for thooymai.
   But the definition to such terms is always relative! 😀
   It brings up so many definitions with reference to the contexts.
   and we end up considering everything is our perception only! 😉

 12. chandraa சொல்கிறார்:

  the learned man palakaruppiah should have known THEETHUM NANDRUM PIRAR THARA VAARRAA… probably by this time he would have realised that….ji

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.