கோவையில் திரு.விஜய்காந்த், மோடிஜியை சந்தித்தால் பாஜக வுடனான கூட்டணி நிச்சயம்…!!!

vijaykanth and modiji

கேரளத்திற்கு வரும் பிரதமர் மோடிஜி, பிப்ரவரி 2- ந்தேதி
(செவ்வாய்) காலை அங்கிருந்து நேராக கோவைக்கு
வருகிறார். நண்பகலில் மத்திய அரசு சார்ந்த ஒரு
அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மாலையில் தமிழக பாஜகவின் சார்பாக ஒரு பொதுக்கூட்டம்
ஏற்பாடு செய்யப்படுகிறது. பாஜக தலைவர் அமீத் ஷாவும்
கலந்து கொள்ளும் இந்த கூட்டம், தமிழகத்தில் பாஜகவின்
– அதிகாரபூர்வமற்ற – முதல் தேர்தல் பிரச்சார கூட்டமாக
இருக்குமென்று தெரிகிறது.

இந்த் கூட்டத்தில் திரு.விஜய்காந்தை மேடையேற்ற
வேண்டுமென்று தமிழக பாஜக அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டுள்ளது. திரு.அமீத் ஷாவும் விஜய்காந்த்துடன்
பேசி அழைத்திருக்கிறார். திருமதி தமிழிசையும்
திரு.விஜய்காந்தையும், அவரது மனைவி திருமதி
பிரேமலதாவையும் நேற்று நேரில் சென்று, பிரதமர் மோடிஜி
அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்…
இவையெல்லாம் சேர்ந்து விஜய்காந்த்துக்கு, கூட்டணியில்
சேர்ந்தாலும் சேராவிட்டாலும், பிரதமரை சந்தித்தாக
வேண்டிய அழுத்தத்தை உண்டுபண்ணியிருப்பதாக
தெரிகிறது.

திரு.விஜய்காந்த் கோவை சென்று
பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும்,
அது நிகழ்ந்தால், தமிழகத்தில் பாஜகவும், விஜய்காந்தும்
கூட்டணி சேர்வது உறுதி என்றும் பாஜக தரப்பில்
உற்சாகத்தோடு சொல்லப்படுகிறது…..

அதேசமயம் – இதைக் குலைக்கவும்,
இந்த சந்திப்பு நிகழாமலிருக்கவும் தன்னால் இயன்ற
அனைத்து முயற்சிகளையும் கலைஞர் மேற்கொண்டுள்ளதாக
பாஜக நண்பர்கள் பொருமுகிறார்கள்.

இடையில் 3 நாட்கள் தானே …?
என்ன நடக்கிறதென்று …. பொருத்திருந்து பார்ப்போமே…!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to கோவையில் திரு.விஜய்காந்த், மோடிஜியை சந்தித்தால் பாஜக வுடனான கூட்டணி நிச்சயம்…!!!

 1. அரசு சொல்கிறார்:

  இதற்குத்தானே ஆசைப்படுகிறீர்கள் காவிரிமைந்தன்?

 2. chandraa சொல்கிறார்:

  vijayaykanths possible entry into bjp alliance wouldmake the ruling aiadmk partys victory a smooth affair…. this must happen ..as tamilaruvi manian often quotes dmk should be eliminatedfrom tamilnadu through this election for its bad rule in the past……i know well that km ji will not publish this posting if i add any remark about aiadmk after these four lines.

 3. LVISS சொல்கிறார்:

  If Mr Vijayakanth’s party allies with the BJP then in one stroke he will be drawn away both from the DMK and AIADMK–This will pave for the easy victory for the AIADMK — The party has done enough for the poor by their various schemes and this should stand in good stead —
  One fails to understand why the BJP in Tamil Nadu is against an alliance with the ruling party — If they take this stand it will pit the PM against the CM who have respect for each other —

 4. அரசு சொல்கிறார்:

  உங்கள் ஏக்கம் நன்றாகப் புரிகிறது.

  தேமுதிக பாஜகவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதால், பாஜகவிற்கு தமிழகத்தில் கூடுதல் வாக்கு கிடைக்கும். அதேசமயத்தில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணியைத் தடுத்து, அதிமுக வெற்றிக்கும் வழி வகுக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

  மாமேதை ஒருவர் சொன்ன“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பது இங்கு பொருந்தும். அதேபோல ”ஆசைப்படுவது எல்லோருக்கும் சகஜமப்பா” என்பதும் பொருந்தும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அரசு,

   //தேமுதிக பாஜகவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில்
   கூட்டணி வைப்பதால், பாஜகவிற்கு தமிழகத்தில் கூடுதல்
   வாக்கு கிடைக்கும். அதேசமயத்தில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணியைத் தடுத்து, அதிமுக வெற்றிக்கும் வழி
   வகுக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.//

   இத்துடன் மற்றொரு கோணமும் இருக்கிறது.

   அது தேமுதிக வின் எதிர்காலம் பற்றிய கோணம்.

   திமுக வுடன் கூட்டணி சேர்ந்தால் – தேமுதிகவின்
   அழிவிற்கு அதுவே காரணமாகி விடும். பணத்திற்காக
   திமுக வுடன் கூட்டு சேர்ந்தார் என்கிற பழி சேர்வது
   மட்டும் அல்லாமல், தேமுதிகவின் ஓட்டு வங்கியை
   திமுக பெற்றுக் கொள்ளுமே தவிர, தேமுதிக வேட்பாளர்கள்
   தோல்வியடைய ஒவ்வொரு தொகுதியிலும் அதுவே
   குழி பறிக்கும். பாஜக வுடன் விஜய்காந்த் சேர்ந்தால் –
   இந்த தேர்தலில், அதற்கு குறிப்பிட்டு சொல்லும்படி
   வெற்றிகள் கிடைக்காவிட்டாலும், அது இரு கட்சிகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. உண்மை சொல்கிறார்:

  மன்னிக்கவும்,பதிவுடன் சம்பந்தப்படாத பின்னூட்டம்.

  நான் இருபது,நீங்கள் எழுபது. உங்கள் கருத்தை ஏற்று நல்ல அரசியல்வாதியாக பழ.கருப்பையா இருப்பார், என்று மனத்தில் ஏற்பட்ட எண்ணம் ,நாகரீகம் என நீங்கள் சொன்னது எல்லாம் தவிடு பொடியாயிற்று.

  இன்று கேள்விக்கென்ன பதிலில் வருகிறார் கருப்பையா. இது முன்னோட்டம்.

  பாண்டே மீது ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகிறது. அடித்த பாம்பை அடிக்கிறாரா? ஊடக வியாபாரமா? எல்லாரிடமும் இப்படிக் கேட்பாரா? என பல விமர்சனங்களை வைக்கிறார்கள். அதே போல் பொறுமையற்ற கருப்பையா எடுத்த ஓட்டத்தை கவலையுடன் பார்க்கிறார்கள்.
  அரசியல் நாகரீகம் தமிழகத்தில் சட்டசபையில் இருந்து தொலைக்காட்சி என் எங்கும் சாக்கடையாக வெறிபிடித்த அரசியலாக மாறி விட்டதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப உண்மை,

   மிகவும் உதவிகரமான தகவல்களை தருகிறீர்கள்.
   நன்றி நண்பரே.

   சில சமயங்களில் (மட்டும்) தொலைக்காட்சி ஊடகங்கள்,
   இந்த மாதிரி “தலீவர்”களை நாம் அடையாளம் காண
   உதவுகின்றன. கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியான முறையில்
   அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

   அவை தொடர்ந்து மக்களுக்காக மட்டும்
   “பொதுநல” நோக்கில் செயல்படும்போது,
   நமது ஜனநாயகம் இன்னும் சிறக்க வாய்ப்பிருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • அரசு சொல்கிறார்:

   வணக்கம் உண்மை:

   உங்கள் எழுத்தில் 70க்கான பக்குவமும், நிதானமும், ஆழமும், அனுபவமும் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். 70 என நீங்கள் குறிப்பிடும் காவிரிமைந்தனுக்கு 20க்கான இளமைத்துடிப்பும், உழைப்பும், வேகமும், புதுமை விருப்பமும் புலப்படுகிறது.

   பண்பான சொற்களால் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும்போது, பிறர் பார்க்கும் கோணத்திலிருந்து சிந்திக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. புதிய செய்திகளும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

   காவிரிமைந்தனின் வலைப்பூவைப்பார்த்துத்தான் பழ கருப்பைய்யா என்பவர் யார் என்று எனக்கு தெரியவாய்ப்புக்கிடைத்தது. கருப்பைய்யா அவர்களின் பேச்சுக்கள் சிலவற்றை இணையத்தில் கேட்டு அவரது தமிழ்ப்பற்று, இலக்கிய ஆர்வம், தற்போதைய அரசியலில் ஒட்டமுடியாத தன்மை அனைத்தும் புரிந்துகொண்டேன்.

   அதிமுக கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்பதை அவரும் அறிந்துதான் இருப்பார் போலிருக்கிறது. என்னதான் தனித்தன்மை பொருந்தியவர் என்றாலும், அரசியல் சாக்கடையில் குதித்தபின்னர் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது மிகுந்த சிரமம் என்பதை உணர்த்துகிறார் தமது செயலாலும் பேச்சுக்களாலும். அவரிடம் காவிரிமைந்தன் கண்ட முரண்பாடுகளை நானும் காண்கிறேன்.

   தமிழக அரசியல்/சமுதாயம்/தமிழ் இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமுடையவர்கள் அறியப்படவேண்டியவர் பழ கருப்பைய்யா என எண்ணுகிறேன். அறிமுகப்படுத்திய காவிரி மைந்தனுக்கு நன்றி.

   தந்தி டிவி பாண்டே அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் சாக்கடைபோலவே ஊடகங்களும் விளம்பரத்துக்காக சாக்கடைகளாகிக்கொண்டிருப்பதும் நன்றாகத்தெரிகிறது. நீங்கள் கொடுத்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைப்பைப்பார்த்தால் அவர்கள் நாகரிகமானவர்களாகத் தோன்றுகிறது. ”நேர்படப்பேசு” பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி அறிவிப்பாளர் யார் என அறிய விரும்புகிறேன். இணையத்திலும் அந்நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்க்கவும் எண்ணியுள்ளேன்.

   மீண்டும் நன்றிகள் உண்மையாரே!

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,
  http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8270000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article8171337.ece?homepage=true&relartwiz=true
  உண்மை நிலை இது தான். ஊழலை ஒழிப்போம் எல்லாம் வேற்று கோஷம் மட்டுமே. ஒருத்தர் மாற்றி ஒருத்தருக்கு குடை பிடிக்க வேண்டியதுதான். ஒட்டு போட்ட சாமானியன் நிலை அதே கதி, அதோ கதி தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம் அன்பு,

   இந்த செய்திக்கு இன்னும் அதிக முக்கியத்துவம்
   கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
   எனவே, விவரமாக தனி இடுகை பதிவிடுகிறேன்.
   உங்கள் தகவலுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.