திருமதி ஹேமமாலினி என்கிற ” தியாகி ” க்கு – பாஜக அரசு அள்ளிக் கொடுத்திருக்கும் “பரிசு” …!!!

Hema-Malini-PTI

பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள்-இன்னாள்
நடிகையும், நடனக்கலைஞருமான, திருமதி ஹேமமாலினி
அவர்களுக்கு –
மும்பையில், நில மதிப்பு மிக உயர்ந்த நிலையில் இருக்கும்
“அந்தேரி” பகுதியில் “ஓஷிவாரா”வில் 2000 சதுர மீட்டர்
( அடி அல்ல மீட்டர்…) நிலம் வெறும் ரூபாய் 70,000/-க்கு
(எழுபதாயிரம் ரூபாய் மட்டுமே ) மஹாராஷ்டிரா பாஜக
அரசால் கடந்த மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காரணம் – சுமார் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள –
இன்னும் முழுமையாகத் திட்டமிடப்படாத,
போதுமான நிதியும் திரட்டப்படாத நிலையில் உள்ள
ஒரு நடனப்பள்ளியை அங்கு நிறுவி, ” தேச சேவை ”
செய்யப்போகிறார்..”

இவ்வாறு, திருமதி ஹேமமாலினிக்கு நிலம் ஒதுக்கப்படுவது
இது முதல் தடவை அல்ல. 1997-ல் இதே மும்பையில்,
அப்போது ஆட்சியிலிருந்த பாஜக-சிவசேனா அரசால் –
1741 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஒரு நிலம் –
ரூபாய் பத்து லட்சத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த இடம் கடலோர மண்டல கட்டுப்பாடுகளுக்குள்
( CRZ ) வந்ததால், அவரால் அந்த இடத்தை
அவர் விரும்பும் முறையில் பயன்படுத்திக் கொள்ள
முடியவில்லையாம். ஆனால், அந்த பழைய
நிலம் இன்னும் அவர் வசமே தான் இருக்கிறது
என்கிற நிலையிலேயே இந்த புதிய “பரிசு”
அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில்
அந்த பழைய நிலமும் நூறு கோடிக்கு மேல் விலை போகும்.

டிசம்பர், 29, 2015 – அன்று மஹாராஷ்டிரா அரசால்
இறுதி செய்யப்பட்ட இந்த நில ஒதுக்கீடு குறித்த தகவலை
மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் கீழ் பல உண்மைகளை வெளிக்கொண்டு
வரும் சமூக ஆர்வலர் திரு.அனில் கல்கலி ( Anil Galgali )
என்பவரால் அதிகாரபூர்வமாக பெறப்பட்டு நேற்று
வெளியிடப்பட்டிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சிக்கு, தேர்தல் நேரங்களில்
பிரச்சாரம் செய்வதற்கு அவரது சினிமா பின்னணியும்,
தோற்றமும் உதவியாக இருந்தது என்பதைத் தவிர,
இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ – அவர் எத்தகைய
“சேவை” செய்தார் என்பதும்

இந்த தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் சொந்தமான –
இத்தகைய விலையுயர்ந்த நிலத்தை –
இவருக்கு அள்ளி “தானமாக” கொடுக்க,
மஹாராஷ்டிரா பாஜக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் நமக்கு விளங்கவில்லை…..

தேசிய அளவில் பாஜக தலைமையும் இந்த நடவடிக்கைக்கு
வியாக்கியானம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறது. அவர்கள் சொல்லாமலா இது நடந்திருக்கப்
போகிறது …?

பின் குறிப்பு –

இதில் கொடுமை என்னவென்றால் –
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக –
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது – இதே மும்பையில்,
மேற்கு அந்தேரி பகுதியில், காங்கிரஸ் கட்சியின்
பிரமுகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான,
திரு. ராஜீவ் சுக்லாவுக்கு இதே மாதிரி நிலம் ஒதுக்கப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த
பாஜகவும் சிவசேனாவும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,
ஷுக்லா அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க நேர்ந்தது….

அதே கட்சிகள் இன்று ஆட்சிக்கு வந்ததும் …….???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திருமதி ஹேமமாலினி என்கிற ” தியாகி ” க்கு – பாஜக அரசு அள்ளிக் கொடுத்திருக்கும் “பரிசு” …!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பத்ம விருது பெற ஒரு நடிகை 12 மாடிகளை ஏறி வந்து மந்திரியின் வீட்டுக்கதவை தட்டினது மாதிரி…
  இன்தம்மா யார்யார் வீட்டில் அங்கப்பிரதட்சணம் செஞ்சாங்களோ!
  இதேபோல உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடாக இருக்கும் அம்பானியின் வீடு கட்டப்பட்ட இடமும் (பல கோடி மதிப்பிலானது) இப்படித்தான் அனாமத்தாக அந்த ஏழைக்கு கொடுக்கப்பட்டதாம்.

 2. LVISS சொல்கிறார்:

  Some more information may come after some time -The CM is yet to offer some clarification —Let us see what he says about this —

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  /*இதில் கொடுமை என்னவென்றால் –
  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக –
  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது – இதே மும்பையில்,
  மேற்கு அந்தேரி பகுதியில், காங்கிரஸ் கட்சியின்
  பிரமுகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான,
  திரு. ராஜீவ் சுக்லாவுக்கு இதே மாதிரி நிலம் ஒதுக்கப்பட்டது.
  அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த
  பாஜகவும் சிவசேனாவும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,
  ஷுக்லா அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க நேர்ந்தது….*/
  அது வேற வாய், இது வேற வாய்….
  உங்கள் பதிவிற்கு, நன்றி ஐயா.

 4. உண்மை சொல்கிறார்:

  இப்படியும் திரும்புமா?
  அறக்கட்டளை மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கு தொகையில் 25% செலுத்தினால் போதும் என்ற சட்ட வரைவின்படி, 1976 இல் உள்ள மதிப்பீட்டின்படி நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.அப்படியாக இருந்தாலும் எங்கோ கணக்கு இலட்சக் கணக்கில் உதைக்கிறதே என்கிறார் சமூக ஆர்வலர் திரு.அனில் கல்கலி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக ( ? )
   மக்கள் நிலத்தை திருமதி ஹேமமாலினிக்கு தத்துக் கொடுத்ததற்கு
   மஹாராஷ்டிர பாஜக அரசு என்ன சாக்கு-போக்கு வேண்டுமானாலும்
   சொல்லலாம். எத்தனை விதிமுறைகளை வேண்டுமானாலும்
   தோண்டி எடுத்துக் காட்டலாம்.

   ஆனால் நம்மைப் பொருத்தவரையில் –

   அந்த இடத்தில் வசதியற்ற மக்களின் குழந்தைகள் படிக்க,
   ஒரு இலவச பள்ளி துவக்கி நடத்துவதாக இருந்தால் –

   ஏழை மக்களின் மருத்துவ சேவைக்காக ஒரு இலவச
   மருத்துவ மனை கட்டுவதாக இருந்தால் –

   ஒரு முதியோர் இல்லம் கட்டுவதாக இருந்தால் –

   எந்தவித ஆதரவுமற்ற விதவைப்பெண்கள், முதியோர்கள்
   தங்கும் இலவச விடுதி ஒன்றினை கட்டுவதாக இருந்தால் –

   இந்த எழுபதாயிரம் ரூபாய் கூட இல்லாமல் –
   இலவசமாகவே பட்டா போட்டுக் கொடுக்கலாம்.

   ஆனால் அவர் கட்டப்போவது ஒரு “டேன்ஸ் அகாடமி “.
   இதில் யார் படிக்கப் போகிறார்கள்…?
   அங்கு குடிசைவாசிகளின் பெண்குழந்தைகளை சேர்த்துக்கொண்டு-
   திருமதி ஹேமமாலினி கட்டணம் வாங்காமல் நடனம்
   கற்றுக் கொடுக்கப்போகிறாரா …?
   அப்படிச் செய்வதாக எழுதிக் கொடுத்தாரேயானால் கூட –
   நாம் ஆட்சேபம் தெரிவிப்பதை நிறுத்தி விடலாம்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  இந்திரா காந்தியைப் போலவே மோடி அரசும் தோல்வியடையும்
  First Published : 31 January 2016 02:39 AM IST … தினமணி செய்தி … இவ்வாறு கூறுவது :– நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்… !!!

 6. gopalasamy சொல்கிறார்:

  What you wrote about Hema Malini’s academy is true. Unwarranted move by Govt. But I would like to request you to collect information about the trusts owned by Sonia and Rahul.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.