பேட்டி நிச்சயம் தோல்வி அல்ல ….!!! clean exposure – செய்யப்பட்ட திரு.பழ.கருப்பையா….!!!

.

.

இதுவரை இந்த பேட்டியை பார்க்காத நண்பர்கள்,
கீழேயுள்ள, தந்தி தொலைக்காட்சியின் திரு.ரங்கராஜ் பாண்டே –
திரு.பழ.கருப்பையா அவர்களுடன் 30ந்தேதி இரவு நிகழ்த்திய
நேர்காணலை முதலில் பார்த்து விடுங்கள். பிறகு
இடுகைக்கு வாருங்கள்….

தந்தி தொலைக்காட்சியில் நேர்காணலில், திரு.பழ.கருப்பையா
அவர்கள் பாதியிலேயே கோபித்துக் கொண்டு, வெறுப்பாக
சொற்களை உதிர்த்துக்கொண்டு வெளியேறுவதை பார்த்தவுடன்
பேட்டி தோல்வியோ என்று சிலருக்கு சந்தேகம் எழலாம்….

இந்த நேர்காணலின் முக்கிய நோக்கமே – திரு.பழ.கருப்பையா
அவர்களின் உண்மை முகத்தை, உண்மை எண்ணங்களை
வெளிக்கொண்டு வருவது தான்… அந்த அளவில் –
பேட்டி கண்டவர் தனது பணியை அற்புதமாகச் செய்திருக்கிறார்
என்றே நான் நினைக்கிறேன்.

முதல் நாள் இதே தந்தி டிவி உரையாடலில் -சரியாக
யோசிக்காமல், உணர்ச்சி வசப்பட்டு தான் நிகழ்த்திய
சில பக்குவமற்ற செய்கைகளின் /பேச்சுக்களின் விளைவாக
தன் மீது எழுந்துள்ள எதிர்மறை எண்ணங்களை /விமரிசனங்களை
மாற்றும் உத்தேசத்துடனே,

முதல் நாள் அவமானப்பட்டாலும், மறுநாளும் மீண்டும்
பேட்டிக்கு வந்திருக்கிறார் அய்யா.

பேட்டி கண்ட திரு.ரங்கராஜ் பாண்டே-யிடம்,

” நீங்கள் என்னை கேள்வி கேட்க வேண்டாம்.
நான் விரும்பறதைச் சொல்ல மட்டும் தான் நான் இங்கு
வந்தேன். எனக்கு சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு
நான் போய் விடுகிறேன். அதற்கு பிறகு நீங்கள் என்ன
வேண்டுமானாலும் பேசிட்டு முடிச்சுக்குங்க.
அவ்வளவு தான்…” என்கிறார்.

திரு.பாண்டே நேரிடையாகவே அவரை கேட்கிறார் ….

” நீங்க இங்கே வரும்போது “நேர்காணல்” என்று
சொல்லி அழைச்சிட்டு வந்தாங்களா இல்லை
உங்கள் ” உரை ” என்று சொல்லி அழைத்தார்களா ?”

அதையும் மீறி –
பேட்டி எடுப்பவரை பேசவோ, குறுக்குக் கேள்வி கேட்கவோ
விட மறுக்கிறார்…. ஆவேசம் அடைகிறார்… கொதிக்கிறார்…
அவரது உடல்மொழியும் (body language )
முகமொழியும் (facial expressions ) அவரை முற்றாக
காட்டிக் கொடுத்து விடுகின்றன.

” லஞ்ச ஊழலைக் கண்ட நீங்கள் –
கட்சியில் அதைப்பற்றி பேச முடியவில்லை என்றால்,
உங்களால் சரிசெய்ய முடியவில்லை என்றால்,
கோர்ட்டுக்கு போயிருக்கலாமே ?”
என்கிற கேள்விக்கு –

// என்ன நீங்க யோசனை இல்லாம பேசறீங்க…
கோர்ட்டுக்கு போக, வழக்கு தொடுக்க எல்லாம்
ஆதாரம் வேணும்யா….//

//அப்ப ஆதாரம் இல்லாம குற்றம் சாட்டறீங்களா ?…..//
பாண்டே மீண்டும் கேட்கிறார்…!

இன்னும் 100 முறை கட்சி மாறுவேன்…
என்று தான் கட்சி மாறியதை நியாயப்படுத்துகிறார்.

இந்த அரசைப்பற்றி பேசுவதற்கு மட்டும் தான் நான்
வந்தேன் – நீங்கள் என்னை வேறு கேள்விகள் கேட்காதீர்கள்…

ஒரு கட்டத்தில் சொல்கிறார்….
” என்னை திடீரென்று வெளியேற்றியது அதிர்ச்சியாக
இருந்தது. துக்ளக் ஆண்டு விழாவில் பேசி நிறைய
நாட்களாகி விட்டன….”

இது சுத்தப் பொய். இந்த வார விகடனுக்காக ஒரு
நீண்ட விசேஷ பேட்டி கொடுத்திருந்தார். ஆளும் கட்சியை
பற்றியும், அமைச்சர்களை பற்றியும் மிக மோசமான
புகார்களை அதில் சொல்லி இருந்தார்.

அவர் கொடுத்த அந்த பேட்டி அடங்கிய ஆனந்த விகடன்
வார இதழ் செவ்வாயன்று அச்சிடப்பட்டு புதன் பகலில்
வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டது.

அந்த தகவல் அதிமுக தலைமைக்கு கிடைத்த பிறகு தான்
உடனடியாக புதன் இரவே திரு.கருப்பையாவை கட்சியிலிருந்து
வெளியேற்றிஇருக்கிறார்கள்.

தான் வெளியேற்றப்பட்ட செய்தி புதன் இரவு வெளியானவுடன் –
அடுத்த நாள் வியாழன் காலையில் –
திரு.கருப்பையா செய்தியாளர்களை தன் இல்லத்திற்கு
அழைத்து சிரித்துப்பேசி, சாதனையாளர் போல் பேட்டி
கொடுத்த அதே நேரத்தில் தான்
அவரது வெளியேற்றத்திற்கு காரணமான பேட்டி வந்த
ஆனந்தவிகடன் இதழும் விற்பனைக்கு வந்தது.
எனவே தனது வெளியேற்றம் குறித்து ஆச்சரியப்பட்டதாக
அவர் கூறுவது அபத்தம். விகடனில் இந்த பேட்டியை
கொடுக்கும்போதே, இது குறித்து அவருக்கு தெரிந்திருக்கும்.
அதனை எதிர்பார்த்து தான் பேட்டியே கொடுத்திருக்கிறார்…

திரு.பாண்டே இன்னும் சில முக்கியமான கேள்விகளையும்
முன்வைத்தார்…

– மார்க்சிஸ்டுகளை பாராட்டும் பழ.கருப்பையா
அந்த இயக்கத்தில் ஏன் சேரவில்லை…?

– இன்று சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்திருந்தும் முன்பாகவே கூறாதது ஏன் ?

————-

ஆக மொத்தம் இந்த பேட்டியின் முக்கிய விளைவு –
தன்னை ஒரு ஊழல் எதிர்ப்பாளராகவும்,
அதனால் பாதிப்படைந்த தியாகியாகவும் காட்டிக் கொள்ள
முயன்ற திரு.பழ.கருப்பையா –

” வழக்கம்போல் – எப்போதும் சுயநலம் பாராட்டும்
அரசியல்வாதிகளில் தானும் ஒருவர் என்பதையும்,
மந்திரி பதவி கிடைக்குமென்று நாலே முக்கால் வருடம்
வரை காத்திருந்து, இனி மந்திரி பதவியும் கிடைக்காது,
அடுத்த தேர்தலில் “சீட்”டும் கிடைக்காது என்று
உறுதியான நிலையில் வெளியே வந்து –
தன் கட்சியின் மீதே புகார்களை அள்ளி வீசி,
பழி வாங்க முயற்சி செய்கிறார்….”

என்பதை சொல்லியும், சொல்லாமலும் வெளிப்படுத்தி
இருக்கிறார்….!!!

————–
பின் குறிப்பு –
மேலே இருப்பது என் கருத்து….

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை வழக்கம்போல்,
பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன்..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to பேட்டி நிச்சயம் தோல்வி அல்ல ….!!! clean exposure – செய்யப்பட்ட திரு.பழ.கருப்பையா….!!!

 1. seshadri சொல்கிறார்:

  look like parthipan – vadivel comedy show…..

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  திரு.பழ கருப்பையாவின் பேச்சுக்களைக் கேட்டுள்ளேன். அவரைப் பற்றிய செய்திகளையும் படித்துள்ளேன். அதனை வைத்து அவரைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் வைத்திருந்தேன்.

  இப்போது அவர் கொண்ட நிலைப்பாட்டிற்கேற்றவாறு பேசுவதைக் கண்டு, அவர் மீது கொண்ட நல்லெண்ணம் மறைகிறது.

  இவருக்கும் சு.சுவாமிக்கும் என்ன வேறுபாடு? சு.சுவாமியும் ஜெ. மூலம் எம்.பி ஆனவர்தான். அவர் ஜெ. பற்றிக் குறை சொல்லும்போது அதில் தார்மீக நெறி தெரியவில்லை. அவரது ஏமாற்றமும் ஆத்திரமும்தான் தெரிகிறது (அடுத்த தேர்தலில் இடம் தராததுதான் அவர் ஜெ.வுக்கு எதிரான நிலை எடுக்க வைத்தது).

  திரு கருப்பையா அவர்களுக்கும் இப்போது அடுத்த தேர்தலில் இடம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. மந்திரி பதவியும் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. அதனால் அவர் எதிர் நிலை எடுத்துவிட்டார். அவர் என்ன காரணத்துக்காக ஜெ.விடம் சேர்ந்தாரோ, அது இன்றுவரை மாறவில்லை. கருப்பையா அவர்களின் priorityதான் மாறிவிட்டது.

  இன்றைக்கு தி.மு.காவுக்கு, ஜெ.மீது மக்கள் அதிருப்தியோ, அல்லது 96போல் எதிர்ப்பதற்க்கு நிறைய காரணங்களோ இல்லை. எதைச் சொன்னாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. ஏனென்றால், எதைச் சொன்னாலும் பூமராங்க்போல் தி.மு.காவையே தாக்கும். இது டெசோவுக்கும், ஊழலுக்கும், சசிகலா போன்ற காரணங்களுக்கும் எதற்கும் பொருந்தும். சொத்துக்குவிப்பு, உச்ச நீதிமன்ற வழக்கு என்பதைச் சொன்னாலும் 2ஜி பூமராங்க் வரும். எனக்குத் தெரிந்து நில அபகரிப்பு, திமுகாவில் 5 சதவிகிதம் கூட, அதிமுக செய்யவில்லை. நில அபகரிப்பு மக்களைப் பெரும் அளவில் பாதிப்படையவைத்தது. அதனால் அந்தக் குற்றச்சாட்டை மட்டும் அதிமுகமேல் திமுக வைப்பதில்லை.

  திரு கருப்பையா அவர்கள், 20 நிமிட புகழுக்காக (அவர் பேட்டியை கலைஞர், சன் தொலைக்காட்சிகளும், நக்கீரன், விகடன் வகையராகாளும் வெளியிடுவதன்மூலம் கிடைக்கும் புகழ்) அவரது credibilityயை அடகு வைத்துவிட்டார். இனி அவர் அரசியலில் இருந்து ஆகப்போவதென்ன!

  பாண்டே சரியான கேள்விகளைக் கேட்டுள்ளார். பொறுமையாகவும் பேட்டியை ‘நடத்தியுள்ளார். கருப்பையா அவர்கள் முழுமையாக expose ஆகிவிட்டார்.

  • thiruvengadam சொல்கிறார்:

   Just one infrm wish to record Swamy was earlier a elected from Maharastra. His actions may be qusnable, But this infrmn will just help JJ image

   • இளங்கோ சொல்கிறார்:

    திருவேங்கடம்,

    நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு
    அடிக்கடி தவறாகவே சொல்லி வருகிறீர்கள்.
    1998 தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்து
    மதுரையிலிருந்து ஜெ.அவர்களின் ஆதரவால் பாராளுமன்ற
    தேர்தலில் ஜெயித்தவர் தான் சு.சுவாமி.

    • Paramasivam சொல்கிறார்:

     திருவேங்கடம் அவர்கள் கூறுவதும் சரியானது.(சிவ சேனா உதவியுடன் ஒரு முறை MP) அதே போல் திரு இளங்கோ அவர்கள் கூறுவது போல் அதிமுக உதவியுடன் தமிழ் நாடில் இருந்து ஒருமுறை (மதுரை) சென்றவர். மதுரை யில் உதவியதற்கு சோனியாவுடன் டீ பார்ட்டி சந்திப்பு ஏற்பாடு செய்து நன்றிக் கடன் செலுத்தி விட்டார். இது தான் நடந்தது.

 3. ஜோதி சொல்கிறார்:

  // நீங்கள் என்னோடு இருந்தால் எனக்கு நல்லது என்று நான் நினைத்தால் நான் உங்களை விடமாட்டேன்.

  மனித இயல்பு எப்போதும் தங்களுடைய நலன் சார்ந்ததுதான்.

  அதிமுகவுக்கு அரசியல்ரீதியாக எது நலம்பயக்குமோ அதை முடிவெடுக்கிற இடத்தில் அம்மா அவர்கள் இருக்கிறார்கள்.

  – பழ கருப்பையா//

  நன்றி:

  https://todayandme.wordpress.com/2016/01/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%99/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜோதி,
   பார்த்தேன். அதிலிருந்தே இன்னொரு quotation –

   //துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய மற்ற கட்சித்தலைவர்கள் / பேச்சாளர்கள் தாம் தாம் சார்ந்த கட்சிக்குத் தொண்டர்கள் பாத்திரத்தை சரியாகச் செய்தபோது, கருப்பையா தாம் சார்ந்த கட்சிக்கு உண்மையான தொண்டனாக இருந்தாரா?//

   அதிமுக வைப் பொருத்தவரை ” தகுதி” முக்கியமில்லை-
   “விசுவாசம் ” தான் முக்கியம்.
   அது இவரிடம் சுத்தமாக இல்லை….அதான் …. அனுபவிக்கிறார்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. drkgp சொல்கிறார்:

  அமைதியான தோற்றத்துடன் அழகிய தமிழில் அனைவரையும்
  ஈர்த்த அவரா இவர் !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் KGP,

   இதே problem தான்….
   நானும் இதே போல் தான் ஏமாந்தேன் இவரிடம்…!
   நல்ல வேளை ரங்கராஜ் பாண்டே எல்லாவற்றையும்
   “தெளிவாக்கி” விட்டார்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. ஜோதி சொல்கிறார்:

  கா.மைசார்

  இந்தப் பேட்டியைப் பார்த்தேன்.

  அதிமுக கூடாரத்திக்குள் இருந்து முக்கிய செய்திகள் திமுக தலைவருக்கு ஒரிரு நாட்கள் முன்னரோ அல்லது ஓரிரு மணித்துளிகள் முன்னரோ எப்படித் தெரியவந்தது என்படி என்பதும் புரிகிறது.

  இந்த நாலரை ஆண்டுகாலம் அதிமுகவிற்குள் ஒரு அதிமுக அல்லாதவர் ஒருவர் இருக்கமுடிந்திருப்பதே ஜெ-யின் எதையும் நம்பும் குணத்திற்கும், தான் பேசிய பேச்சுக்களுக்கு மன்னிப்பு என்று கேட்டுவிட்டால் மன்னிக்கும் மனப்பாங்கையும் காட்டுகிறது.

  ஆனால் இவர் நடந்திருக்கும் முறைகளைப் பார்த்தால்
  இன்னும் பழைய கருப்பையாகவே இருக்கிறதைப் பார்த்தால்
  தேர்தல் நெருக்கத்தில் இருக்கும்போதும்,
  இவர் வெளியில் எதை உளறினாலும் அதனால் தன் ஆட்சிக்குக் கவலை தரும் விசயங்கள் நடந்தாலும் பரவாயில்லை என்று இவர்மீது ஜெ நடவடிக்கை எடுத்திருப்பதையும் பார்த்தால் அது ஜெயின் களையெடுக்கும் துணிவைத்தான் காட்டுகிறது.

  பாண்டே சிறந்த கேள்விகளுடன் வந்திருக்கிறார் என்பதை கருப்பையா வெளிநடப்பு செய்ததாலேயே அறியமுடிந்தது. நன்றி பழைய கருப்பையாவுக்கு.

 6. Ganpat சொல்கிறார்:

  அதிமுக பூ…..பழ கருப்பையா நார்….எனவே இதுவரை மணத்தார்… பூ உதிர்ந்து விட்டது ..பாண்டேயால் நார் நாராக கிழிக்கப்பட்டார் ..இனி மறக்கப்படுவார்.

 7. thiruvengadam சொல்கிறார்:

  துக்ளக் ஆண்டுவிழாக்கொண்டாட்டம் ஒரு பொது நிகழ்ச்சி. சோ அவர்களே அவ்வப்பொழுது நாட்டுநடப்புகளுக்கு ஏற்ப தன் கருத்துக்களை மாற்றிச்சொல்வதை பார்க்கிறோம். இந்த கூட்டம் அமெரிக்க தேர்தல் சமயங்களிலும் , நமது நாட்டில் சில இடங்களில் நடைபெறும் வேட்பாளர் அறிமுககூட்டமாக இருந்தால் தன் கட்சி சார்பு நிலை பேச வேண்டும். ஜெ வுக்கு மரியாதை காரணமாகவோ , சுயமுன்னேற்றம் வேண்டி அவரிடம் பணிவு காட்டல் என்பது தனி. அவரும் மற்றதலைவர்கள் போல் ரீச்சபிள் ஆக ( ஊடகங்கள் வாயிலாகவாவது ) இருக்கவேண்டாமா ? பழ. கரு நிகழ்வு அதற்கு வழிகாட்டுமா ?,

  • இளங்கோ சொல்கிறார்:

   திருவேங்கடம் சார்.
   திரும்பவும் உளறல்.
   சோ எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல.
   தான் நினைக்கும் எதையும் பேசும் சுதந்திரம் உள்ளவர்.
   வழ.கருப்பையா அப்படியல்ல. அதிமுக எம்.எல்.ஏ. –
   தன் கட்சிக்கு
   விரோதமாக அவர் பேசியது தவறு தான்.
   அதெப்படி சார் நீங்களும் கருப்பையா மாதிரியே ……?

 8. ரிஷி சொல்கிறார்:

  கலா மாஸ்டர் சொன்ன மாதிரி.. சும்மா கிழி… கிழி…னு கிழிச்சிட்டாங்க போங்க. பழ.கருப்பையா சரியா பிரிப்பேர் பண்ணாம வீராவேசத்துல வந்து உட்கார்ந்துட்டார் போல. அவர் துரைமுருகன்கிட்ட நிறைய கத்துக்கணும் 🙂

  • Paramasivam சொல்கிறார்:

   உண்மை. தன்னால் பதில் கூற முடியா விட்டால் பெரிய சிரிப்பை, அடுத்த கேள்விக்கு தாவும் வரை சிரிக்க வேண்டும்.

 9. செல்வதுரை சொல்கிறார்:

  திரு பழ.கருப்பையா அவர்களின் கட்சி அவிசுவாசக் குற்றச்சாட்டும் அவரின் நடைமுறை மீறுதல்களும் அ.தி. மு. க. கட்சித்தலைமையின் சர்வாதிகாரப் போக்கிற்கும் நெறியற்ற ஆளுகைக்கும் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் நடத்தப்படும், நடந்துகொள்ளும் விதத்தையும் நியாயப்படுத்தாது. என்னுடைய பார்வையில் திரு பாண்டே அவர்கள் திரு கருப்பய்யாவை எள்ளி நகையாடுவதிலும் தன்னை ஒரு அதி மேதாவியாகக் காட்டிக்கொள்ளுவதிலுமே குறியாக இருக்கிறார். இடையிடையே குறுக்கிடாமல் விருந்தினரின் கருத்தை அவர் சுதந்திரமாக வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பளிக்க திரு பாண்டே பழகிக்கொள்ள வேண்டும். சுயநலத்திற்காகவே எனினும் கூட ஒரு சர்வாதிகார மற்றும் மக்களை மதிக்காத ஆளுங்கட்சித் தலைமையை விமரிசிக்கும் ஒருவரை இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அத்தகைய ஒரு விமரிசிக்கும் மனநிலை யாருக்குமே வராது. இது மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஒரு தடையாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்து.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப செல்வதுரை,

  திரு.பாண்டே தன்னை ஒரு அதி மேதாவியாக காட்டிக்கொள்வதில்
  குறியாக இருக்கிறார் என்பது உங்கள் பார்வையாக இருக்கலாம் –
  ஒரு விதத்தில் அது சரியாகக் கூட இருக்கலாம்.

  ஆனால், திரு.கருப்பையாவின் போலி வேடத்தை கலைத்து,
  மக்களிடம் அவரது உண்மை முகத்தை உரித்துக் காட்ட யாராவது
  வேண்டும் அல்லவா ? அதைச் செய்ய முனைந்தவரைத்தான்
  உங்கள் வாதம் வேறு கோணத்திற்கு இழுத்துச் செல்கிறது.

  திரு.பாண்டேயை புரிந்து கொள்ள ஏற்கெனவே வேறு பல வாய்ப்புகள்
  கிடைத்தன. ஆனால் திரு.கருப்பையாவை புரிந்து கொள்ள இதை
  விட்டால் வேறு சந்தர்ப்பம் ஏது ? விட்டால் – “லட்சிய வீரராகவும்”,
  “தியாகி”யாகவும் ஆகி இருப்பாரே….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • செல்வதுரை சொல்கிறார்:

   திரு பழ.கருப்பையா அவர்களின் போலி வேடத்தைக் கலைத்து அவர் லட்சிய வீரராகவோ அல்லது தியாகியாகவோ ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுவது அவரை நீக்கிய கட்சித் தலைமையின் கடமை. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவரது சுயநலத்திற்காகவே அவர் வெளியேற முற்பட்டிருக்கலாம். ஆரம்ப காலத்திலேயே அவர் எதிர்கருத்துக்களைக் கூறி வருவதாக குறிப்பிடுகிறார். அது உண்மையாக இருப்பின் அவர் தரப்பில் நியாயம் இருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது அல்லவா? எப்படியும் அ.தி.மு.க. தலைமையின் ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கு அவர்களின் கூடாரத்திலேயே இருந்து வெளிவந்த ஒருவரின் சாட்சியத்துடன் மக்களுக்கு சென்றடைவது அவசியம் அல்லவா? திரு பாண்டேயின் பேட்டி இதை படம் பிடித்துக்காட்டிடுவதில் முனைப்பாக இருக்க வேண்டாமா?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப செல்வதுரை,

    பேட்டி காண்பவர், யாரை பேட்டி காண்கிறாரோ, அவரது
    உண்மையான நோக்கத்தை, குணத்தை, உண்மைத் தன்மையை –
    வெளிக்கொண்டு வருவது தான் முக்கியமானது.

    முக்கியமாக, பேட்டி கொடுப்பவர்
    போலி வேடதாரியாக இருந்தால், அவர் வேடத்தை களைவது தான்
    முக்கியமானது. அதைத்தான் திரு.பாண்டே செய்திருக்கிறார்
    என்பது என் கருத்து. நீங்கள் இந்த கருத்துடன் ஒத்துப்போகவில்லை
    என்றால் அது உங்கள் விருப்பம்….!

    இதற்கு மேல் இதைப்பற்றி
    விவாதிக்க நான் விரும்பவில்லை.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 11. Sundar சொல்கிறார்:

  Always am registering my words dont believe the people from Cinema Industry who are seving for society…. they are living in …………………………… please fill it…….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.