திருவாளர் குன்ஹா மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியின் புகார் – முழு விவரங்கள்….

.

.

திருவாளர் குன்ஹா மீது கூறப்பட்ட மோசடிப் புகார் பற்றி
ஏற்கெனவே இந்த தளத்தில் சில விவரங்கள் வெளிவந்தது நினைவிருக்கலாம்..

இப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர்
மைக்கேல் எஃப் சல்தங்கா என்பவர் திரு. குன்ஹாவின் மீது
அளித்துள்ள புகார் பற்றிய முழு விவரங்களும் செய்திகள்.காம்
வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

எவரெஸ்ட் பெரைரா என்கிற ஒரு நபரின்,
(சட்டப்படி செல்லாத) – இரண்டாவது மனைவியுடன்
சேர்ந்து கொண்டு, அந்த நபரின் கொலைக்கும், ஐந்து கோடி ரூபாய்
பெறுமானமுள்ள அவரது சொத்துக்களை அபகரிப்பதிலும் – முக்கிய
கூட்டாளியாக இருந்தார் என்று இவரது நண்பரும் பார்ட்னருமான
மங்களூர் வக்கீல் நொரான்ஹா என்கிற நபர் மீது குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறது.

15 க்கும் மேற்பட்ட முறைகள் அந்த
புகார் மனு அனுப்பப்பட்டு, நினைவூட்டப்பட்டபோதும்,
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உயர்நீதிமன்ற ரிஜிஸ்டிராராக இருந்த திரு.குன்ஹா
ஒரு வருடத்திற்கும் மேலாக அதன் மேல் எந்தவித மேல்
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

தனது நண்பரான நொரான்ஹா மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும்
வழக்கை திசை திருப்புவதிலும் தான் திருவாளர் குன்ஹா
ஈடுபட்டிருந்தார் என்பதும் குற்றச்சாட்டு.

குற்றம் சாட்டுபவர் சாதாரண மனிதர் அல்ல.
அதே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி
ஓய்வுபெற்றுள்ள நீதியரசர் மைக்கேல் எஃப் சல்தங்கா அவர்கள்.

அந்த செய்தியிலிருந்து சில பகுதிகளும்,
அந்த புகாரின் நகலும் கீழே –

————

( http://www.seythigal.com/?p=8755 )

சொத்து வழக்கின் பரபரப்புத் தீர்ப்புக்குப் பிறகு திரு.மைக்கேல் குன்ஹா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஊழல்தடுப்புப் பிரிவின் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பொதுப் பதிவாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

“குன்ஹா தனது பதவியினைப் பயன்படுத்தி எம்.பி. நூரோன்ஹா
என்ற தனது வழக்கறிஞர் நண்பருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.
க்ளாடீஸ் அல்மேடியா என்ற பெண்மணியின் விவாகரத்து வழக்கு
ஒன்றிற்காக ஆஜரான குன்ஹாவின் நண்பரான நூரோன்ஹா –

விவாகரத்து தீர்ப்பு என்று நீதிமன்றத்தின் சீல்,
நீதிபதி கையெழுத்து உள்ளிட்டவைகளை போலியாக
தயார் செய்து போலித் தீர்ப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து 15-க்கும் மேற்பட்ட தடவைகளில் அவர் மீது
வழக்குப் பதிவு செய்ய புகார் கொடுத்தும் குன்ஹா
அதனைச் செய்யாமல் இருக்கிறார்.

எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை
எடுக்க வேண்டும்” என்று முன்னாள் நீதியரசர் சல்தங்கா
கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும்,
உச்சநீதிமன்றத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

”இந்தப் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்”
என்று அவர் தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற
பொதுப் பதிவாளராக இருக்கும் குன்ஹாவுக்கும்,
உச்சநீதிமன்றத்துக்கும் அவர் அனுப்பிய கடிதத்தின் நகல்
நமக்குக் கிடைத்தது. அந்தக் கடிதம் இதோ :

Cunha1

Cunha2Cunha3

Cunha5

Cunha6

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருவாளர் குன்ஹா மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியின் புகார் – முழு விவரங்கள்….

 1. Jayam சொல்கிறார்:

  So what?

  As a judge he given correct justice.

  As a layer he helped his client.

  • paamaranselvarajan சொல்கிறார்:

   நண்பரே … நீங்க கூறியுள்ளது நீதிபதி திரு குமாரசாமி அவர்களுக்கும் பொருந்தும் — அப்படித்தானே … ?

 2. thiruvengadam சொல்கிறார்:

  இவன் ( ர் ) போட்டகணக்கு ஒன்று. அவன் ( ர்) போட்ட கணக்கு ஒன்று இதில் எந்தகணக்கு ( தீர்ப்பு ) சரியென்று சொல்லும் நாளை எதிர்பார்த்து இருப்போம். இந்த இடுகை ஒரு புதிய தகவல் உறுதி செய்ய காரணமாகிறது. மற்ற ஓய்வு பெற்ற அலுவலருக்கு இல்லாத சலுகையாக ஓயவுபெற்ற நீதிபதி தன் கடிதங்களுக்கு சர்வீஸ் காலம் போல அலுவலக முத்திரை பயன்படுத்தலாம் . மேலும் அவர் பார்வையில் படும் தவறுகளை சுட்டிக்காட்டி விரைவு நடவடிக்கை பரிந்துரைக்கலாம் என்ற நிலை.

 3. இளங்கோ சொல்கிறார்:

  ஆசிரியர், பாடத்தை கூர்ந்து கவனிக்காத மாணவனிடம் –

  “இதிலிருந்து உனக்கு என்ன புரிந்தது ? ”

  மாணவன் –
  “வால் மட்டும் இன்னும் வெளியிலேயே இருக்கிறது சார் ”

  காவிரிமைந்தன் அவர்களை கடவுள் காக்கட்டும்.

 4. chandraa சொல்கிறார்:

  ELANGO SIR CHEER UP DO NOT LOSE HOPE

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.