இன்று வெளியான ” துக்ளக் ” ல் இருந்து …..!!!

.

.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
என்றாலும் கூட அவர் கூறும் எல்லா கருத்துக்களும்
எனக்கு ஏற்புடையவை அல்ல.

பல விஷயங்களில் அவர் கருத்து சொல்லும்போது
எனக்கு மிகவும் எரிச்சலும், கோபமும் கூட வரும்.

ஆனாலும் இவை எல்லாவற்றையும்
மீறி அவரிடம் உள்ள என்னை கவரும் முக்கிய குணங்கள் –
அவரது நேர்மையும், யார் என்ன நினைத்துக் கொள்வார்களோ
என்று கவலையே கொள்ளாமல் தனக்குத் தோன்றுவதை
பளிச்சென்று சொல்லி விடும் இயல்பும்…..!!!

இந்த விஷயத்தில் மட்டும் சோ அவர்களை என்னுடைய மானசீக ஆசானாக ஏற்றுக்கொண்டு செயல்பட நான் முயற்சி செய்கிறேன்… நான் முழுவதுமாக இதே வழியில் செல்கிறேன் என்று சொல்ல முடியாது…. இந்த குணங்கள் என்னிடம் படிய இன்னும் சில காலம் பிடிக்கலாம்……!

இந்த வார துக்ளக் இதழில் நான் சொல்ல விரும்பும் அதே
கருத்துக்கள் சிலவற்றை ஆசிரியர் சோ சொல்கிறார்…
எனவே அவரது வாயிலாகவே –

t-1

t-2

t.a.padam

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இன்று வெளியான ” துக்ளக் ” ல் இருந்து …..!!!

 1. Paramasivam சொல்கிறார்:

  “” சோ அவர்களை என்னுடைய மானசீக ஆசானாக ஏற்றுக்கொண்டு செயல்பட நான் முயற்சி செய்கிறேன்… நான் முழுவதுமாக இதே வழியில் செல்கிறேன் என்று சொல்ல முடியாது…. இந்த குணங்கள் என்னிடம் படிய இன்னும் சில காலம் பிடிக்கலாம்……!”” சீக்கிரமே படிய விரும்புகிறேன்.

 2. thiruvengadam சொல்கிறார்:

  மு.க. அவர்களின் இன்றைய கருத்தான சோ அவர்கள் மதுத்தொழிற்சாலை இயக்குநர் குழுவில் சிலகாலம் இருந்தமைக்கான நிலை பற்றிய தன்னிலை விளக்கம் கொடுத்து , சார்பற்ற நிலை என்பதை அறியச்செய்யலாம்.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  துக்ளக் அட்டை படத்தில் கலைஞர் மெகா போனை வைத்துக்கொண்டு கூட்டணிக்கு கூவி -கூவி அழைப்பதை விட— சு . சுவாமி அதிகமாக கூவுகிறார் —சாமிக்கு ஏன் இந்த திடீர் ஸ்டாலின் பாசம் என்று யாருக்காவது தெரியுமா ….. ?
  // ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்.. பிறகு… பாஜக + திமுக + விஜயகாந்த்… இது சாமி விருப்பம்! Follow
  Subramanian SwamyVerified account
  ‏@Swamy39
  I am hopeful the MK will decline to be CM candidate and make Stalin leader. Then hope BJP align Stalin and Vijaykanth in a new alliance
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swamy-wants-stalin-as-cm-candidate-many-more-245871.html …. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் காவிக்கொடி பறக்கும்- கோவையில் முழங்கிய தமிழிசை, பொன்னார்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-hopes-capturing-power-tn-245876.html ஒரே கட்சியில் இரு வேறு ஆசைகள் ….?

  • செல்வதுரை சொல்கிறார்:

   “……அவரது நேர்மையும், யார் என்ன நினைத்துக் கொள்வார்களோ
   என்று கவலையே கொள்ளாமல் தனக்குத் தோன்றுவதை
   பளிச்சென்று சொல்லி விடும் இயல்பும்…..!!!”
   இது தான் நான் திரு சோ மீது கொண்டிருக்கும் அபிப்பிராயம் கூட. ஆனால் சமீபத்தில் நான் படித்த சில இணைய பக்கங்களில் உள்ள தகவல் இக்கருத்தின் மீது குழப்பத்தை விளைவிக்கிறது.
   ……..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப செல்வதுரை,

  இதற்கான காரணங்களை என்னால் யூகிக்க முடிகிறது….

  என்னால் மட்டுமல்ல…. ஓரளவு அரசியலை கூர்ந்து கவனிக்கும்
  யாராலும் யூகிக்க முடியும்…

  ஆனால் இதற்கான விளக்கங்களை திரு.சோ அவர்கள் தான்
  கொடுக்க முடியும்.

  என்னைப் பொருத்தவரை, சோ அவர்களின் மீதான நம்பிக்கை
  இதனால் சற்றும் குறையவில்லை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  பின் குறிப்பு –

  நீங்கள் கொடுத்துள்ள link -களை நான் நீக்கி விட்டேன்.
  மன்னிக்கவும். அவற்றை இங்கே அனுமதிப்பதற்கில்லை.

 5. arasu சொல்கிறார்:

  சோ அவர்களின் நகைச்சுவை உணர்வும், புத்தி கூர்மையும், தன் கருத்தை தயங்காமல் வெளிப்படுத்தும் தன்மையும், தன்னிடமிருந்து அடிப்படை கொள்கை முரண்பாடு கொண்டவர்களோடும் தனிப்பட்ட அளவில் அன்புடன் பழகுவதும் அனைவராலும் பாராட்டப்படும் குணநலன்கள்.

  ஆனால் எப்பாடுபட்டாயினும் திமுக வை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டுவதை தன் அடிப்படைக்கொள்கையாகவே கொண்டிருக்கிறார் என்பதும்; திராவிடம்/தமிழ் சார்ந்த உணர்வுகள் மக்கள் மனங்களிடமிருந்து சுவடு தெரியாமல் ஒழித்துக்கட்டுவதே தலையான நோக்காக அவர் செயல்படுவதும் வெளிப்படையாகவே தெரிகிறது.

  இந்திரா அம்மையார் ”நெருக்கடி நிலை” அறிவித்த நாட்களிலிருந்தே – திராவிடம் / தமிழுணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி இவற்றினை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஒவ்வொன்றும் திமுகவை அழித்தொழிக்கும் முயற்சியிலேயே முனைப்புக்காட்டுகின்றன. “இனம் புரிந்த” அந்த வெறுப்புக்களே திமுக வின் கட்சி/ஆட்சிப் பிழைகளையும் தாண்டி பல உள்ளங்களில் அனுதாபம் ஏற்பட காரணமாயிருக்கிறது. அந்த அனுதாபமே திமுக கட்சிக்கு ஒரு வலுவாகவும் அமைந்துவிடுகிறது.

  சுப்ரமணிய சுவாமி இன்னும் ஒருபடி மேலே போகிறார். கலைஞர் இல்லாத திமுக வை நீர்த்துப்போகச்செய்துவிடலாம் என நம்பி – ”ஸ்டாலின் தலைமை எடுத்த பின், பாஜக, தேமுதிக கட்சிகள் திமுக வோடு கூட்டணி அமைக்கலாம்” என வெளிப்படையாகவே கூறுகிறார். His belief is that Stalin can be manipulated more easily than Kalainjer.

  பொறுத்திருந்து பார்ப்போம்.

 6. LVISS சொல்கிறார்:

  The fact is no one can be completely neutral because most of us form opinions based on our prejudices – –If you discuss politics it can be only from one side ,mostly —

 7. paamaranselvarajan சொல்கிறார்:

  1 . துக்ளக் படிக்காதவர்களுக்காக !
  Posted on ஜனவரி 7, 2010 by vimarisanam – kavirimainthan
  ….2 . நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்
  Posted on மார்ச் 30, 2010 by vimarisanam – kavirimainthan … 3 .. நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் !
  Posted on ஏப்ரல் 1, 2010 by vimarisanam – kavirimainthan …. 4 ..திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
  Posted on ஏப்ரல் 28, 2010 by vimarisanam – kavirimainthan …சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !!
  Posted on செப்ரெம்பர் 9, 2010 by vimarisanam – kavirimainthan …. 4 .. தயாநிதி ஸ்பெஷல் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!
  Posted on ஜனவரி 28, 2015 by vimarisanam – kavirimainthan … சும்மா — முந்தைய இடுகைகளை படிப்போமே என்று புரட்டியதில் ” பல சுவாரஸ்யமான ” இடுக்கைகள் நடுவே நம்பர் 2 – வது இடுக்கை குறிப்பிட தக்கது — தற்போதைய நண்பர்கள் திரு .கா.மை. ஜி பற்றி அறிய உதவும் — தினமும் தரமான — வித விதமான — பல சுவையுள்ள சாப்பாட்டை சாப்பிட்டு பழக்கப்பட்டவனுக்கு — திடீரென்று சாப்பாட்டில் ஏதோ ஒன்று குறைந்தால் ஏற்படும் ” நெருடல் ” போல — சில வாரங்களுக்கு முன் இந்த தளத்திற்கு திடும் என்று வந்து சில சில்லறைத்தனமான ” சில்மிஷங்களை ” செய்து விட்டு ஓடி போனவர்களுக்கு — பிறகு வருகின்ற இடுகைகளில் ஏதோ ஒன்று குறைவதை போல இந்த ” பாமரனின் புத்திக்கு ” { புத்தி எனக்கு இருக்கிறதா என்கிற சந்தேகத்துடன் } படுகிறது — இது என்னுடைய கருத்து தான் –தவறாக கூட இருக்கலாம் — நண்பர்கள் யாரும் என்னை காய்ச்சி எடுத்துவிட வேண்டாம் என்று கோருகிறேன் — திரு.கா.மை. ஜி இதைபார்ப்பாரா — ? அப்படி பார்த்து தவறு என்று நினைத்தால் நீக்கி விடவும் … !!! மேலே உள்ள பல இடுகைகளை போல இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் எதையும் குறிப்பிடவில்லை … சரியா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வருவதை என்னால்
   புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு எழுத தயக்கமாக
   இருந்தால், நீங்கள் தாராளமாக என் மெயில் ID க்கு எழுதலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  To put it first, I was an ADMK sympathizer…… when I recall why I turned towards ADMK – I can attribute it to the local district secretaries/leaders etc of DMK…… When I started looking at politics during late years of my teenage, the scene was clear – at every district or town one powerful DMK guy ran the show and also another guy supported MILDLY by top leadership to pull the local leader as and when reqd(but NOT completely DOWN)….. then came the over-loose-ended and over-looting 2006-11 period…… this period made me speak for ADMK……Now the people’s anger on DMK is not alone on their corruption claims but also due to the over-actions of its local leaders….. Scene in ADMK is entirely different….. …..

  But, now, looking at the last 4.5 years and going back to past – one thing is to be accepted….. there were scams with dmk’s ruling as claimed by many….. but those scams were all claimed on implementation phase of projects not just announcing/naming the project alone….. also many SCHEMES – not like water bottle or unavagam, introduced by them had and still have direct positive impact on people….. can you name few good schemes in a macro level, in any of the admk governments and compare those with the number of schemes introduced by dmk ??……

  what i understand now is 2006-11 might have taught them a lesson……. you could recall the 96-2001 period of dmk – i feel that was better than any governments between 1991 and 2016…… as u do always say “yeriyira kolli la nalla kolli”, now it looks like dmk is better…..

  With BJP ruling in the centre “not-directly-shown” saffron face and with anti-tamil attitude, it is better to have DMK in TN, to protect at least little of our interests…….(please do not bring eezham issue here and correlate it with DMK’s rule – that war was completely BUSINESS-oriented run by few…. That war at that time was inevitable irrespective of whoever in power, both at centre and state….. If you would accept this world is very much run by corporates, then you should also accept that war was also run by corporates – you know it better Sir….)

  Sanmath AK

  PS: What I said above may be irrelevant to the topic, sorry in that case……

 9. chandraa சொல்கிறார்:

  one thing is certain… tamil nadu people should never choose dmk with kalaignar as c.m he looks totally worn out struggling in his movements… what he will do when he accidentally becomes c.m tamilnadu administration will still be worse…. besides kalaigmar will never give way for others….. let us be very firm to give kalaignar thorough rest by defeating dmk

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.