கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

.

.

திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் கலைஞரா –
ஸ்டாலினா என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு
விடை கிடைக்கிறது.

கலைஞரை ஓரம் கட்டும் முயற்சியில் மறைமுகமாக
ஈடுபட்டிருந்த திருவாளர் ஸ்டாலினுக்கு, டாக்டர் சுப்ரமணியன்

சுவாமியின் நேரடியான, உறுதியான ஆதரவு
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்,
பாஜகவும், விஜய்காந்தின் தேமுதிகவும் திமுகவுடன்
கூட்டு சேரும். அதற்கான முயற்சியில் நான் நேரடியாக
ஈடுபடுவேன்…என்று தந்தி டிவிக்கு அளித்துள்ள
கீழ்க்காணும் பேட்டியில் தமிழில், தெளிவாகச்
சொல்கிறார் சு.சுவாமி.

இதுவும் வழக்கம் போல் ரீலாக இருக்குமோ என்று
சந்தேகம் ஏற்படாமலிருக்க ” நான் இதை பொறுப்பில்லாமல்

சொல்லவில்லை – பாஜக தலைமையிடம் பேசிய பிறகு தான்
சொல்கிறேன் என்று உறுதி வேறு கூறுகிறார்….!!

இதன் விளைவோ – என்னவோ, விகடன் உடனடியாக
கலைஞருக்கு எதிரான தனது கிண்டல் பிரச்சாரத்தை
துவங்கி விட்டது….

பின் குறிப்பு –

நிலுவையில் இருக்கும் 2ஜி வழக்குகள் காரணமாக,
கலைஞர் குடும்பத்தில், கலைஞரைத் தவிர –
திரு.முக அழகிரியை தவிர மற்ற அனைவருமே
திரு.சுப்ரமணியன் சுவாமி தரும் இந்த முடிவை-விடிவை –
பெருமகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்றே தோன்றுகிறது….!

பாவம் கலைஞர் …!!!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

 1. chandraa சொல்கிறார்:

  AN avaricious LEADER KALIGNAR would go to any level to protect his existing place in dmk soon you will hear the news that kalaignar shouted at stalin and stalin had hurriedly left gopalapuram the subsequent statement of stalin would be as follows I MAY COMPETE IN KOLATHUR AFTER OBTAINING PERMISSION OF KALAIGNAR….

 2. LVISS சொல்கிறார்:

  The main reason Mr Swamy is giving for supporting alliance is that Mr Stalin has said that the DMK has many Hindus –The other consideration seems to be that his name does not figure in 2 G scam – Of course he main reason is his disapproval of the AIADMK leader — This alliance depends on the DMK leader giving up the idea of becoming the CM again —The BJP may not gain much from any alliance in Tamil Nadu —

 3. senthil kumar சொல்கிறார்:

  அறிவியலிலும் அரசியல்… திமுகவை விளாசும் விவசாயிகள்!
  http://www.vikatan.com/news/tamilnadu/58551-dmks-political-game-in-science-tanjore-farmers.art

  விகடனில் மேற்கண்ட தலைப்பில் ஸ்டாலினை விமர்சனம் வந்துள்ளது…. என்ன காரணம் கா.மை அவர்களே…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செந்தில்குமார்,

   தேர்தல் நேரம் வந்து விட்டது. விகடன் திமுக சார்பானது
   என்கிற கருத்து தீவிரமாக பரவி வருகிறது. இது நீடித்தால்,
   தேர்தல் நேரத்தில் இவர்கள் சொல்வது பொது மக்களுக்கு
   போய்ச்சேராது. திமுக ஆதரவாளர்கள் – முரசொலி படிப்பவர்கள் –
   மட்டுமே வாங்கப்படும் இதழாகி விடும் விகடன்.

   எனவே, இமேஜை மாற்றுவதற்காக – இடையிடையே சில
   விஷயங்கள் இப்படி வரலாம். தேர்தல் நெருங்குகையில் –
   அதன் உண்மைத் தோற்றம் மீண்டும் வரலாம்.

   விஷயம் தெரிந்தவர்கள்….
   வியாபாரமும் தெரிந்தவர்கள்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.