கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

.

.

திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் கலைஞரா –
ஸ்டாலினா என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு
விடை கிடைக்கிறது.

கலைஞரை ஓரம் கட்டும் முயற்சியில் மறைமுகமாக
ஈடுபட்டிருந்த திருவாளர் ஸ்டாலினுக்கு, டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியின் நேரடியான, உறுதியான ஆதரவு
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்,
பாஜகவும், விஜய்காந்தின் தேமுதிகவும் திமுகவுடன்
கூட்டு சேரும். அதற்கான முயற்சியில் நான் நேரடியாக
ஈடுபடுவேன்…என்று தந்தி டிவிக்கு அளித்துள்ள
கீழ்க்காணும் பேட்டியில் தமிழில், தெளிவாகச்
சொல்கிறார் சு.சுவாமி.

இதுவும் வழக்கம் போல் ரீலாக இருக்குமோ என்று
சந்தேகம் ஏற்படாமலிருக்க

” நான் இதை பொறுப்பில்லாமல்
சொல்லவில்லை – பாஜக தலைமையிடம் பேசிய பிறகு தான்
சொல்கிறேன் என்று உறுதி வேறு கூறுகிறார்….!!

இதன் விளைவோ – என்னவோ, விகடன் உடனடியாக
கலைஞருக்கு எதிரான தனது கிண்டல் பிரச்சாரத்தை
துவங்கி விட்டது….

பின் குறிப்பு –

நிலுவையில் இருக்கும் 2ஜி வழக்குகள் காரணமாக,
கலைஞர் குடும்பத்தில், கலைஞரைத் தவிர –
திரு.முக அழகிரியை தவிர மற்ற அனைவருமே
திரு.சுப்ரமணியன் சுவாமி தரும் இந்த முடிவை-விடிவை –
பெருமகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்றே தோன்றுகிறது….!

பாவம் கலைஞர் …!!!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

 1. thiruvengadam சொல்கிறார்:

  சிலரின் பொதுநோக்கில் காங்கிரஸ் போலவே பிஜெபி நடந்துகொள்கிறது என்ற கருத்துக்கு வலுவூட்டும் செயலாக இதை பார்க்கலாம். ஆட்சி தொடர அவ்வப்பொழுது வழக்கு அஸ்திரத்தின் மூலம் துள்ளியபோதெல்லாம் முலாயமையும் லல்லுவயையும் கட்டுப்படுத்தியை ஒத்து , திமுகவிடம் ஆதரவு கோரும் தேவையில்லாவிடிலும் தமிழக காலுன்ற இம்முயற்சி எனக்கருதலாம். மேலும் ஒரு தகவல் இப்பதிவில் விகடனின் திமுக ஆதரவு நிலை என்ற தங்கள் பழைய பதிவுகளின் கருத்தில் மாற்றம் .

 2. Sekaran சொல்கிறார்:

  விகடனின் 45சத்வீத பங்குகள் மருமகனிடம்தானே உள்ளது.
  தன் மாமனாரைத் தானே அவர் ஆதரிப்பார்

  பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது

  ROFL

 3. Kamal சொல்கிறார்:

  It seems the post is made twice..

  • Sekaran சொல்கிறார்:

   No.
   first one is based on Twitter from Dr.SS
   second one is based on his interview on Thanthi TV and Vikatan TV.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கமல்,

   நீங்கள் சொல்வது சரி தான்.
   “தமிழ் மணம்” தொகுப்பில் பதிவு செய்வதில் சில குழப்பங்கள்
   நேரிட்டன. “டெக்னிகலாக” ஏதோ பிரச்சினை.
   அதை சரி செய்ய என் தரப்பிலிருந்து முடியவில்லை….
   அதற்குள்ளாக இரண்டிலும் பின்னூட்டங்கள் தொடங்கி விட்ட
   நிலையில், அதை நீக்கவும் முடியவில்லை…
   எனவே சுருக்கி விட்டேன்…
   இப்போது கூட இடுகையை தமிழ்மணத்தில் காணோம்.

   நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Sekaran சொல்கிறார்:

  So, SDMK will announce themselves as Hindu-aligned Party?

  Then DMK and his leader MK will be taken over by Al-DMK, announced as ‘NDMK’ (New DMK) or ‘ODMK’ ( Old DMK 🙂 or Original DMK 😀 )

  Then KDMK will develop their own business at New delhi.

 5. chandraa சொல்கிறார்:

  kalaignar is determined to go ahead in this election only under his leadership an AVARICIOUS political leader kalignar would twist his arms to any level that dmk competes in this election only under his leadership PL RECALL PAZHA NEDUMARANS OBSERVATION KALAIGNAR DIRHTHARASHTRAN>>.

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  தி.மு.க – அரை நூற்றாண்டாக தமிழம் சந்தித்த அனைத்து சீரழிவுகளையும் தொடங்கி வைத்து பங்காற்றி வருகிறது என்கிற உண்மையை மறைக்க — தி.மு.க புராணம் பாடும் விகடன் — எப்போ ‘ கலைஞர் குடும்ப குழு ‘ நிறுவனமாக ஆனதோ – அப்புறம் எதற்கு இன்னமும் விகடனின் அடையாளமாக இருக்கும் — ” விகடன் தாத்த படம் ” — அதை எடுத்துவிட்டு கலைஞர் படத்தை போட்டு மண்டையில் ஒரு சிண்டை போட்டு விட வேண்டியது தானே — அதுவும் விரைவில் நடந்தாலும் ஆச்சர்யம் இல்லை —தற்போது விகடனின் கலைஞர் அவர்களுக்கு எதிரான கிண்டல் போல தெரியும் — ஆனால் கிண்டல் கிடையாது — அப்படித்தானே …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.