திருவாளர்கள் ஸ்டாலினும், Dr.சு.சுவாமியும் சேர்ந்து போடும் DMK + DMDK + BJP கூட்டணி – திட்டம்….

stalin and s.swamy

நேற்றைய தினம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் போட்ட ஒரு செய்தியுடன் ஒரு பரபரப்பு பிறந்தது உண்மை… ஆனால், இதற்கான அறிகுறிகள் சற்று முன்பாகவே தோன்றி விட்டன – ஆனால் அதை பெரும்பாலோர் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம்.

முதலில் சு.சுவாமியின் ட்விட்டர்…..

dr.swamy tweet

இதற்கு முன்னால், கடந்த வாரம் மதுரையில் திரு.ஸ்டாலின் பேசும்போது, டாக்டர் சு.சுவாமி மீது மிகுந்த பரிவுடனும், ஏகப்பட்ட மரியாதையுடனும் பேசி இருக்கிறார்….

” தான் சு.சுவாமி தொடர்பான அறிக்கைகளை எல்லாம்
தொடர்ந்து படித்து வருவதாகவும்,
தர்மத்தை காப்பதையே தன் லட்சியமாகக் கொண்டுள்ளார் டாக்டர் சு.சுவாமி ”
(தன் சகோதரி மீதான வழக்கு அவர் நினைவிற்கு
வரவில்லை.. பாவம் திருமதி கனிமொழி….!)

என்றும் மதுரையில் ஸ்டாலின் கூறியது ஒரு ஆங்கில
வலைத்தளத்தில் மட்டுமே வந்தது…. தமிழக செய்தி ஏஜென்சிக்கள் எதுவும் ஏனோ இதை கண்டு கொள்ளவே இல்லை.

ஆங்கிலத்தில் வந்த செய்தியிலிருந்து சில பகுதிகள் –

———————

Stalin said that though he does not agree
with Swamy’s politics, he makes it a point to read the
statements issued by the BJP leader.

This is the first time in the recent past
a DMK leader is praising Swamy. The BJP leader
used to be a subject of criticism in all the Dravida
meetings due to his stance on various issues
like Sri Lankan Tamil issue and the family politics of the
DMK.

Last year Stalin had personally called on Swamy to invite
the BJP leader for a
marriage in the Karunanidhi family.

( http://www.dailypioneer.com/nation/stalin-
praises-swamy-surprises-all.html _ )

——————

இதைத்தொடர்ந்து திமுக சார்புடைய “நக்கீரன்” இதழிலும் –

திரு.விஜய்காந்த், பாஜக தேசியத்தலைவர் திரு.அமீத் ஷாவை
அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக
வாழ்த்து தெரிவித்து தொலைபேசியில் பேசியபோது –

– பாஜக + தேமுதிக கூட்டணியில் திமுகவையும் கொண்டு
வருவது குறித்து விஜய்காந்த்தின் கருத்து என்ன என்று
வினவியதாகவும், பிறகு அதற்கான முயற்சிகளில்
விஜய்காந்த் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும்

– ஒரு செய்தி வந்தது.

(ஆனால், விஜய்காந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் –
“பார்க்கலாம்” என்றே பதில் சொன்னாரென்றும் தகவல் )

———-

இவற்றிற்கு பிறகு தான் நேற்றைய சு.சுவாமியின்
ட்விட்டர் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

பிரதமர் நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து, பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும்போதும், தமிழக அரசியலைப்பற்றி எதுவுமே பேசாமல் சென்றது – பாஜக, தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதைப்பற்றி இன்னமும் எத்தகைய முடிவிற்கும் வரவில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது….

இந்த புதிய காம்பினேஷன் ( DMK + DMDK + BJP ) குறித்து
ஸ்டாலினும், சு.சுவாமியும் நிச்சயம் அக்கரை காட்டுகின்றனர்
என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆனால் இதில் மற்றவர்களின் நிலை என்ன …,?

– விஜய்காந்த் – திமுகவுடன், பாஜக இணைந்தால் –
தனக்கு அங்கே மதிப்பு குறைந்து விடும் என்று யோசிக்கிறார்…

– இந்த கூட்டணிக்காக கலைஞர் முதல்வர் பதவியை அவ்வளவு சுலபமாக தியாகம் செய்ய தயாராக இருப்பாரா …?
( அதுவும், தனது முன்னாள் ஊழல் பின்னணி காரணமாக
அவர் ஒதுங்கி, ஸ்டாலினுக்கு வழிவிட வேண்டும் என்கிற
சு.சுவாமியின் வெளிப்படையான யோசனையை ஏற்று….? )

– தமிழக பாஜக தலைவர்கள் இந்த யோசனையை
முற்றிலுமாக எதிர்ப்பதாகவே தெரிகிறது. திமுக வுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு, தமிழக மக்கள் முன்னால் சென்று ஓட்டுக்கேட்கும் ஒரு நிலையை அவர்களால் நினைத்துப்
பார்க்கவோ, ஜீரணம் செய்யவோ – முடியவில்லை….

– மேலும், சு.சுவாமிக்கும், தமிழக பாஜக தலைவர்களுக்கும்
ஏழாம் பொருத்தம் ( ஹெச்.ராஜாவை தவிர்த்து, மீதி அத்தனை தலைவர்களும் சு.சுவாமியை வெறுப்பவர்கள்…! )

– பாஜக தேசிய தலைவர் அமீத் ஷா கூட இந்த விஷயம்
குறித்து தீவிரமாக எந்த முடிவிலும் இல்லை… சு.சுவாமி
தெரிவித்த இந்த யோசனையை அவர் விஜய்காந்திடம் கூறி
அது குறித்தும் பரிசீலிக்கும்படி தெரிவித்திருக்கிறார்…
அவ்வளவே…!

அதற்குள்ளாக – டாக்டர் சு.சுவாமி –
செய்தியை முந்தித்தரும் ஆர்வத்தில், அவசரப்பட்டு
அதிரடியாக குறைப்பிரசவத்தில்
“ரிலீஸ்” செய்து விட்டார்.

இனி இந்த ” குறைப்பிரசவ குழந்தை” யின் கதி
என்ன ஆகப்போகிறது என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருவாளர்கள் ஸ்டாலினும், Dr.சு.சுவாமியும் சேர்ந்து போடும் DMK + DMDK + BJP கூட்டணி – திட்டம்….

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  பா.ஜ.க வினர் மைன்ட் வாய்ஸ் “நாம ஒண்ணு நினைக்கிறோம், சாமி ஒண்ணு நினைக்கிறார்”…

 2. chandraa சொல்கிறார்:

  today pon radhgakrishnan had not ruled out dr swamys suggestion …of dmdkand dmk in bjp alliance…then the following alliances might emerge… aiadmk tamil maanila and small parties dmk dmdk and bjp as the second alliance makkal nala koottani as the third alliance congress and the pmk will stand alone…even then aiadmk will emerge victorious …

 3. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  Just cut & paste of Swamy`s another tweet : Why are Amma chelas and chelis so rattled by my suggestion that DMK minus MK plus Vijaykant plus BJP form an electoral alliance?

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இது கொஞ்சம்கூட சாத்தியமே இல்லாதது. (1) பாஜகா எப்போதும் தேசியத்தைவிட, இந்துத்வாவின் குரல் அதிகம் இருக்கும்படி நடந்துகொள்கிறது. இந்துத்வாவை ஆதரிப்பவர்கள் எந்தக்காரணம் கொண்டும், கருணானிதியையோ திமுகாவையோ ஜீரணிக்கமாட்டார்கள். வாஜ்பாயியின் காலத்தில், பாஜவுக்குத் தேவை இருந்தது. காரியம் ஆக, கழுதையின் காலைப் பிடித்தார்கள் (திமுகாவுக்கும் இது பொருந்தும்). திமுக பாஜகவுடன் சேர்ந்தால், ஜெவுக்குக் கொஞ்சம்கூடக் கவலையில்லை. திராவிட சிந்தனை உள்ளவர்களும், இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். பாஜகவின் கிரெடிபிலிடி குறைந்துவிடும். (2) அரசியலில் இருப்பது புலிமேல் சவாரி செய்வது போன்றது. முலயாம்சிங், தன் பாலகனை முதலமைச்சராக்கினாலும், அவரின் பிடி, புகழ் வலுவானது. வயதும் அவர் பக்கம் இருக்கிறது. தேசிய அரசியலின் பிடியும் அவரிடம் இருக்கிறது. இது எதுவுமே கருணானிதியிடம் கிடையாது. கருணானிதி ஆட்கள் அரசியலில் மறையும் ஸ்டேஜ். லகான் ஸ்டாலினிடம் சென்றால், கருணானிதி அரசியல் வானிலிருந்து மறைந்துவிடுவார். இப்போதே, அழகிரியைக் கட்சியில் சேர்க்கவே ஸ்டாலின் அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ஸ்டாலின் திமுகாவின் முக்கியக் கேந்திரங்களை எல்லாம் தன் பிடியில் கொண்டுவந்துவிட்டார். (3) சு.சுவாமி என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்கும் வெற்றுதைரியம் கொண்டவர்கள் திமுக அதிகாரத்தில் இல்லை. 2ஜி, கலைஞர் தொலைக்காட்சி என்று அடிமடியில் நீதிமன்றங்கள் கைவைத்தால்தான், திமுக இந்தப் பாதையைப்பற்றிச் சிந்திக்கும். (4) சு.சுவாமி தன் கிரெடிபிலிட்டியை இழந்து பலவருடங்களாகின்றன. 1996உடன் அவர் மதிப்பு தமிழகத்தில் தாழ்ந்துவிட்டது. அவ்வப்போது திமுக தலைவர்கள் சுவாமியப் பாராட்டும் விதமாகப் பேசுவதற்கு ஒரே காரணம், அவர் ஜெவுக்கு குடைச்சல் கொடுக்கிறார் என்பதுதான். ஜெவின் ஊழலைப்பற்றிப் பேசும் தகுதி, திமுகாவுக்கு இல்லை என்பதை இந்தத் தலைவர்கள் அறிந்ததுதான் அதற்குக் காரணம். (5) சு.சுவாமி, சமயத்தில் யாருக்காவது புண்ணில் கோல் சொருகுவதற்காக இந்தமாதிரி ஸ்டேட்மண்ட்களை வெளியிடுவார். ஒருவேளை, அவர் காங்கிரஸுக்கு எரிச்சலூட்ட இப்படிப் பேசியிருக்கலாம். இதில் சாத்தியக்கூறு இருப்பதாக இளங்கோவன் கருதினால், தன் திமுகா பாராட்டைக் கொஞ்சம் தள்ளிப்போடுவார். அதிமுகவை எதிர்ப்பதைமாத்திரம் கைக்கொள்ளுவார். ஏனென்றால், எந்தக்காரணம் கொண்டும், காங்கிரஸுடன் ஜெ. கைகோக்க மாட்டார்.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இந்த ட்விட்டர் மற்றும் தமிழிசை — பொன் .ரா . அவர்களின் கோவை பேச்சின் தலைப்பும் என்ற இரண்டு செய்தியை “ஒன் இந்தியா தமிழ் ” பத்திரிக்கையில் படித்த பின் ” நேற்றைய என்னுடைய பின்னூட்டத்தில் ” எடுத்து போட்டிருந்ததை நிறைய நண்பர்கள் கவனிக்கவில்லை போல தெரிகிறது — ஆனால் நண்பர் திரு செல்வதுரை என்பவர் ஒரு ” மறுமொழி இட்டதற்கு — தாங்களும் அவருக்கு ஒரு மறுமொழி இட்டு உள்ளீர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு நினைவூட்டுகிறேன் … என்னுடைய நேற்றைய பின்னூட்டம் : — // துக்ளக் அட்டை படத்தில் கலைஞர் மெகா போனை வைத்துக்கொண்டு கூட்டணிக்கு கூவி -கூவி அழைப்பதை விட— சு . சுவாமி அதிகமாக கூவுகிறார் —சாமிக்கு ஏன் இந்த திடீர் ஸ்டாலின் பாசம் என்று யாருக்காவது தெரியுமா ….. ? // என்று தொடங்கும் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   உங்களின் அந்த பின்னூட்டத்தை நேற்றிரவே பார்த்தேன்.
   அதைப்பார்த்த பின் தான் நான் முன்பாகவே படித்திருந்த
   ஸ்டாலின் அவர்களின் மதுரை பேச்சும், நக்கீரன் செய்தி துணுக்கும்
   நினைவிற்கு வரவே, அவற்றை தேடிக்கொண்டு போய் விட்டேன்…
   உங்களுக்கு மறுமொழி எழுத மறந்து விட்டேன் – மன்னிக்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது நீங்கள் எழுதி இருப்பது :

  //தமிழக பாஜக தலைவர்கள் இந்த யோசனையை முற்றிலுமாக எதிர்ப்பதாகவே தெரிகிறது. திமுக வுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு, தமிழக மக்கள்
  முன்னால் சென்று ஓட்டுக்கேட்கும் ஒரு நிலையை
  அவர்களால் நினைத்துப் பார்க்கவோ, ஜீரணம் செய்யவோ – முடியவில்லை….//

  ஆனால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார் திரு. பொன். ராதாகிருஷ்ணன்.
  அப்போது அவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்தில் எந்தவித தவறும் இல்லை என்று கூறி இருக்கிறாரே;

  சார், இது குறித்து உங்கள் கருத்து ?

 7. paamaranselvarajan சொல்கிறார்:

  திமுக + தேமுதிக + பாஜக கூட்டணி பற்றி சுவாமி கருத்தில் எந்த தவறும் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pon-radhakrishnan-said-about-subramanian-swamy-twitter-245995.html … எப்படியெல்லாம் மாறுகிறார்கள் — நேற்றைய பிரதமரின் கோவை மாநாட்டில் ” காவி கொடி ” கோட்டையில் பறக்கும் என்று கூறிய பொன் .ரா . இன்று விருப்பம் போல இந்த கூட்டணி அமைந்தால் எப்படி காவி கொடி பறக்கும் என்பதை விளக்கியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் … அப்படி தானே … ?

 8. senbag சொல்கிறார்:

  ( அதுவும், தனது முன்னாள் ஊழல் பின்னணி காரணமாக
  அவர் ஒதுங்கி, ஸ்டாலினுக்கு வழிவிட வேண்டும் என்கிற
  சு.சுவாமியின் வெளிப்படையான யோசனையை ஏற்று….? )
  is (தனது முன்னாள் ஊழல் பின்னணி காரணமாக) this your interpretation or a reference to a different tweet?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.