இதில் அதி பயங்கர புத்திசாலி – சந்தேகமே இல்லாமல் சு.சுவாமி தான்…!!!

 


இதில் அதி பயங்கர புத்திசாலி – சந்தேகமே இல்லாமல்
சு.சுவாமி தான்…!!!

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி கொளுத்திப் போட்டு
48 மணி நேரம் தாண்டியாகி விட்டது…!

முதல் சரம் முந்தாநாள்….,
இரண்டாம் சரம் நேற்று …

தங்கள் வீட்டு வாசலில் வந்து வெடி வைத்து விட்டுப் போகிறார்-
சுப்ரமணியன் சுவாமி… வீட்டிற்குள்ளிருந்து சப்தத்தையே
காணோமே – ஏனோ…?
எப்படி ரீ-ஆக்ட் பண்ணுவது என்று யாருக்கும் புரியவில்லையா ?

—————————

– திருவாளர்கள் ஸ்டாலினும், Dr.சு.சுவாமியும் சேர்ந்து போடும் DMK + DMDK + BJP கூட்டணி – திட்டம்….
Posted on பிப்ரவரி 3, 2016 மற்றும்

கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி – Posted on பிப்ரவரி 3, 2016 –

ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாக இந்த இடுகை வருகிறது.

————————–

– //கருணாநிதி ஒதுங்கிக் கொண்டு ஸ்டாலின் தான் திமுகவுக்கு
தலைமை தாங்குவார் என்று அறிவிக்க வேண்டும்….

ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க
வேண்டும்…

இதைச் செய்தால், DMK + DMDK + BJP கூட்டணிக்கு
நான் உதவி செய்வேன்… இதைச் சும்மா சொல்லவில்லை.
மேலே பேச வேண்டியவர்களிடம் பேசி விட்டுத்தான்
சொல்கிறேன். //-

திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் இந்த அறிவிப்பு
வந்தவுடன் – எதிர்தரப்பில் கள்ளத்தனம் ஏதும் இல்லாமல்
இருந்தால் என்ன நடந்திருக்கும் ….?

” திராவிட இயக்கத்தை பிளவுபடுத்த, ஒழித்துக்கட்ட
எத்தனையோ பேர் முயன்று இன்று அவர்கள் இருந்த இடத்தில்
புல் முளைத்துப் போனது…. இந்த சுப்ரமணியன் சுவாமியின்
பசப்பு வார்த்தைகளுக்கு பின்னே யார் இருக்கிறார்கள் என்பதை
இந்த இயக்கத்தின் ஒவ்வொரு தொண்டனும் அறிவான் ”

– என்று கலைஞர் கூறி இருக்கலாம். அல்லது,

“கலைஞருக்கு கண்டிஷன் போடும் அளவிற்கு
சுப்ரமணியன் சுவாமிக்கு தகுதி இல்லை ” -என்று
பேராசிரியர் அன்பழகனை விட்டாவது சொல்ல வைத்திருக்கலாம்…!

“ஆறாவது முறையும் கலைஞரே முதல்வராக
பொறுப்பு ஏற்பார்… இதை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே
திமுக கூட்டணி அமைக்கும்..”

என்று திருவாளர் ஸ்டாலின் கூறி இருக்கலாம். அல்லது

“எனக்கும் இந்த யோசனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை –
கூட்டணி குறித்து தேமுதிக இன்னமும் எந்த முடிவிற்கும்
வரவில்லை” –

என்று திருவாளர் விஜய்காந்த் செப்பி இருக்கலாம்…

சூடான தேர்தல் களத்தில், இப்படி ஒரு வெடியைப்
போட்டு விட்டு, சு.சுவாமி வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கையில்,
சம்பந்தப்பட்ட மூன்று பேருமே பேயடித்தது போல்
திகைத்து நிற்பது எதைக் குறிக்கிறது…..?

சரி என்று ஒப்புக் கொண்டு – திரு.ஸ்டாலினுக்காக
முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க கலைஞருக்கு
மனம் வருமா…?

வெளிப்படையாக ” இந்த கருத்து
எங்களுக்கு ஏற்புடையது அல்ல ”
என்று ஸ்டாலினால் ஏன் கூற முடியவில்லை….?

” எனக்கு இதில் சம்மதம் அல்லது சம்மதமில்லை அல்லது
தேமுதிக வுக்கும் இந்த யோசனைக்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை ” –
என்றாவது
திரு.விஜய்காந்த்தால் ஏன் கூற முடியவில்லை….?

– ” திமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு
உடன்பாடு இல்லை ” என்று தமிழக பாஜக தலைவர்கள்
யாராலும் ஏன் கூற முடியவில்லை….?

– இவர்கள் அத்தனை பேரையும் மௌனிகளாக்கி விட்டு,
கைகட்டி நின்று சிரிக்கும் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி
நிச்சயம் இவர்கள் எல்லாரையும் விட புத்திசாலி தான்….!!!

( இங்கே புத்திசாலி என்று கூறுவதால்,
சு.சுவாமி பற்றிய என்னுடைய முந்தைய
அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு விட்டேன் –
என்று ஒரு புத்திசாலி முதலாவதாக முந்திக்கொண்டு வந்து
ஒரு பின்னூட்டம் போடுவார்….!!!

– இதற்கு அந்த அர்த்தமில்லை.
ஒரு ” க்ரூக் ” கின் உள்ளே,
ஒரு “ப்ளாக் மெயிலரி”ன் உள்ளே –
நிச்சயம் ஒரு புத்திசாலி
இருக்கத்தான் செய்வார்…!!! – இது அந்த அர்த்தத்தில்
சொல்லப்படுவது ….!!! )

 

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to இதில் அதி பயங்கர புத்திசாலி – சந்தேகமே இல்லாமல் சு.சுவாமி தான்…!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  “இந்த புத்திசாலி” க்கான விளக்கம் அருமை.

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா,

   நீங்கள் ” எந்த புத்திசாலி” யை கூறுகிறீர்கள் –
   “இடுகை”யில் சொல்லப்படும் புத்திசாலியா அல்லது
   “பின்னூட்டம்” குறித்து சொல்லப்படும் புத்திசாலியா ?

 2. thiruvengadam சொல்கிறார்:

  Your referred silence ended. From PTV : மேலும், தி.மு.க, பாரதிய ஜனதா கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் பலர் பல கருத்துகளை தெரிவிப்பார்கள் என்றார். முதல்வர் வேட்பாளர் குறித்து கருணாநிதிதான் முடிவெடுப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

 3. இளங்கோ சொல்கிறார்:

  நேற்று வரை ஸ்டாலின் கூறி வந்தது – கே.எம்.சார் கூறியது போல்

  //“ஆறாவது முறையும் கலைஞரே முதல்வராக
  பொறுப்பு ஏற்பார்… இதை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே
  திமுக கூட்டணி அமைக்கும்..”//

  ஆனால் இன்று ஸ்டாலின் கூறுவது …?

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  // மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது …… //
  Posted on மே 20, 2015 by vimarisanam – kavirimainthan … இந்த இடுக்கையை மீண்டும் ஒரு முறை படித்தால் புரியும் — அதில் பல தலைப்புகளை திரு கா.மை .குறிப்பிட்டு இருந்தாலும் — கடைசி தலைப்பு : நான்காவது தலைப்பு – “எப்படியாச்சும், எதாச்சும் செய்யுங்க சார்….
  ஒங்களைத்தான் நம்பி இருக்கோம் …” என்கிற தலைப்பின்படி — இப்போது ” தன் அசைன்மெண்ட்டை ” மும்முரமாக — சுப்ரமண்யன் சுவாமி செய்ய துவங்கி விட்டார் போல தெரிகிறது … பத்திரிக்கை வைக்க சென்ற போதே — இந்த வேலைக்கு சுவாமியை ” அப்பாய்மெண்ட் ” செய்து இருப்பார்களோ …. ? பாவம் … கருணாநிதி … ! ஆட்சி தகயட்டும் — அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று கருணாவும் —- ஆறாவது முதல்வர் — என்பதை பற்றி எதுவும் சொல்லாமல் இருப்போம் என்று ஸ்டாலினும் — பேரம் படியட்டும் பிறகு மற்றதை பார்ப்போம் என்று விஜயகாந்தும் — எப்படியாவது தமிழகத்தில் காலூன்றினால் போதும் என்று பா.ஜ.க.வினரும் இருப்பதால் யாரும் எதுவும் கூறாமல் மெளனமாக இருக்கிறார்களா … ? எல்லாவற்றையும் ” கணிப்புகள் — தலைவர்களின் அறிக்கைகள் — டைம்பாஸ் பயணங்கள் — ஊடகங்களின் ஒருதலை பட்சமான செயல்கள் — போன்றவற்றை கவனித்துக்கொண்டு — ஓட்டு போடும் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் — ஜெயலலிதா பற்றி …. ?

 5. LVISS சொல்கிறார்:

  Going through that interview of Mr Swamy again I think what he said was ‘I have spoken to people here but the parliamentary board will decide ” — Mr Vijayakanth is keeping all the parties waiting – —

 6. chandraa சொல்கிறார்:

  mr stalin had not brushed aside the suggestion of dr swami if he really cared for kal:aignars leadership in the coming election>>>rather he wants to put up pressure on karuna>>>> may be dmk will be split before 2016 elections>

 7. chandraa சொல்கிறார்:

  km ji to get a doctorate from harvard university it is essential that one should be extremely intelligentperson like dr swami>>>>even p>chidambaram our rbi governor raguram rajan had studied in harvard university but not obtained doctorate>>>ofcourse dr swamys political functioning is different please…..

  • LVISS சொல்கிறார்:

   Mrt Chandras
   We may not like what Mr Swamy is doing politically but there is no doubt that he is a rare politician who wages a lonely battle against corruption –He has written about 19 books (Source Wilipedia) —

 8. B.Venkatasubramanian சொல்கிறார்:

  Yes Mr.LVISS,

  A Great BLACK MAILER who fights against corruption.
  A RELIGIOUS FANATIC in the disguise and mask of Patriotic Nationalist.
  It is great pity that well educated, middle class indians
  are falling prey to him without knowing his true self.

  GOD SAVE THESE PEOPLE and make them understand the
  real nature of persons in the public life.

 9. Ganpat சொல்கிறார்:

  காமைஜி
  இதை நீங்கள் வெறும் புகழ்ச்சியாக எடுத்துகொண்டாலும் பரவாயில்லை.ஆழமாக அதே சமயம் எளிமையாக,சுருக்கமாக எழுதுவதில் நீங்கள் சோ வையும் விஞ்சி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr. K.M.
   Yes Sir.
   I second it.
   Sometime back I saw in IdlyVadai blog, someone identifying you
   with Mr.Cho and stating that you are ” Inaiyathala Cho “.
   I was really enjoying those comments.
   May GOD bless you with good health and long life.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்ஜி.
   நன்றி B.Venkatasubramanian.

   உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   நான் இதற்கு எந்த விதத்திலும் தகுதி இல்லாதவன்.

   ஆசிரியர் “சோ” அவர்கள் பிறவி எழுத்தாளர்…
   அவருடன் ஒப்பிடப்பட நான் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவன்.

   – 40 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில்,
   இந்தியிலும் ஆங்கிலத்திலும் குப்பை கொட்டி விட்டு ,
   பணி ஓய்வு பெற்ற பிறகு 65 வயதுக்கு மேல்
   கணிணி கற்றுக் கொண்டு, அதன் உதவியுடன்
   தமிழில் எழுதத்தொடங்கியவன் நான்.
   ஏதோ, என் மனதிருப்திக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
   அது உங்களுக்கெல்லாம் பிடிக்கும் வகையில் இருக்கிறதென்றால் –
   அது என் பாக்கியம்… அவ்வளவே..

   ஆனால் ஒன்று –
   நேர்மையாக எழுத முயற்சி செய்கிறேன்.
   சரியோ – தவறோ
   என் மனசாட்சி சொல்கிறபடி எழுத முயற்சி செய்கிறேன்.

   நீங்கள் எல்லாரும் கொடுக்கும் ஊக்கம் தான்
   எனக்கு பலமும், சக்தியும்…,

   மீண்டும் நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. ரிஷி சொல்கிறார்:

  // என்றாவது
  திரு.விஜய்காந்த்தால் ஏன் கூற முடியவில்லை….?//

  தெருவில் ஒரு நாய் குரைத்துக்கொண்டு சென்றால் அதற்கு விஜயகாந்த் பாவம் என்ன செய்வார்!! 🙂

  எனக்குத் தெரிந்து பிப்ரவரி 20 வரை ஸ்டாலின் என்ன முக்கினாலும் அது ஊட்டம் பெறாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   இப்போதைக்கு விஜய்காந்த், சுப்ரமணியன் சுவாமியை
   தன் “குரு”வாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
   “குரு”வை இப்படி எல்லாம் அவமதிப்பது சரி ஆகாது… 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ரிஷி சொல்கிறார்:

    ஒருவேளை விஜயகாந்த் + பாஜக + திமுக கூட்டணி அமைந்துவிட்டால் அதிமுகவை நான் வெளிப்படையாக ஆதரிக்கிறேன். 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ரிஷி,

     ஒரு வேளை –
     விஜயகாந்த் + பாஜக + திமுக கூட்டணி அமைந்துவிட்டால்-
     தமிழக மக்களிடையே அதற்கான வரவேற்பு
     எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்…?

     உங்கள் கணிப்பை சொல்லுங்களேன்…

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • ஜோதி சொல்கிறார்:

      முதலில் திமுக என்று ஒன்று இருக்குமா பாருங்கள்.
      முந்தாநாள் சுவாமி கொளுத்திப்போட்ட திரியில்
      வெடித்த அழகிரி சென்னை வந்து அம்மாவைப் போய்பார்த்திருக்கிறார்
      ஆனால் அப்பாவைப் பார்க்கவில்லை
      தமையனைக் கட்சிக்குள் சேர்த்தால்
      கட்சியை உடைப்பேன் என்று தனயன் குதிக்கிறார்
      தந்தை தலைவர் இல்லையென்றால்
      கட்சியை உடைப்பேன் என்று தமையன் குதிக்கிறார்.

     • ரிஷி சொல்கிறார்:

      ஐயா, சென்ற தேர்தலில் அதிமுக+தேமுதிக என்பது பொருந்தாக் கூட்டணியாகத்தான் இருந்தது. ஆனால் இணை சேரக் காரணமும் இருந்தது. திமுகவின் மகா மெகா ஊழல்களும் ஈழ துரோகமும்தான் அவை. தேர்தலுக்கு முன் ஜெ மற்றும் விஜயகாந்த் நேரில் சந்திக்கவேயில்லை. பொதுக்கூட்டங்களிலும் ஒன்று கலக்கவில்லை. ஒன்று கலக்க முடியாது என்பது பொதுமக்களுக்கும் புரிந்தது.

      ஆனால் இப்போது சூழல் அப்படியில்லை. அதிருப்திகள் நிறைய இருந்தாலும் திமுக அளவிற்கு வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இப்போது திமுக பக்கம் தேமுதிக சென்றாலே கட்சிக்கு அழிவுதான் (விஜயகாந்திற்கு தனிப்பட்ட லாபங்கள் கிடைப்பதென்பது வேறு).

      அதிலும் பாஜ + திமுக + தேமுதிக என்பது முற்றிலும் முரண்பட்ட கூட்டு; அந்தக் கூட்டிற்கு நியாயம் கற்பிக்க எவ்வகையிலும் அவர்களுக்கு கைகளில் அஸ்திரம் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஜெ.யை பிடிக்காத நடுநிலையாளர்கள் (தேர்தலுக்கு தேர்தல் சூழலைப் பொறுத்து ஓட்டு போடுபவர்கள் – 5%) மக்கள் நலக்கூட்டணிக்கு தான் போடுவார்கள்.

      வெறும் நம்பர் கூட்டல் மட்டுமே வெற்றிக்கு வழிகோலிட முடியாது. இந்த தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் பொதுக்கூட்டங்களில் வைக்கப்போகும் பாயிண்டுகள் சென்ற தேர்தலில் வடிவேலு வைத்ததற்கு ஒப்பாகவே இருக்கும் (சரக்கு இருக்காது; சரக்கு வைத்தாலும் குறைந்தபட்ச நேர்மையாக இருக்காது. மக்களுக்கு இது நன்கு தெரியும்.)

      இப்போதைய சூழலில் எவ்வகையிலும் அதிமுக வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகளால் முடியாது. ஆனால் ம.ந.கூ + தேமுதிக + தமாக கூட்டு எதிர்கால அரசியலில் அவர்களுக்கு மரியாதையைப் பெற்றுத்தரும். குறுகிய கால லாபமீட்டலுக்கு அடிபணிந்தால் ஜெ. வின் வலிமையையே அது மேலும் பெருக்கும்.

      இதுவரை ம.ந.கூ செல்லும் பாதையைப் பார்க்கும்போது தேர்தல் வரை அது உடைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தற்போது திமுகதான் பெரும் சங்கடத்தில் மாட்டித் தவிக்கிறது. விஜயகாந்த்தின் போக்கு பிப்ரவரி 20க்கும் பின் தெளிவாக தெரிய வரும்.

      ஜோதி சொல்கிற மாதிரியெல்லாம் அழகிரியால் ஒன்றும் செய்ய முடியாது. லோக்கல் மொழியில் சொல்ல வேண்டுமானால் தற்போதய அழகிரியை சப்பை எனலாம்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ரிஷி.

      அதே தான்.
      அனைவரின் எதிர்கால நடவடிக்கைகளும்,
      விஜய்காந்த் அவர்களின் முடிவைப் பொருத்து
      அமையுமென்றே தெரிகிறது….

      ஆமாம் – விஜய்காந்த், சு.சுவாமி பேச்சைக் கேட்பாரா …?
      பாஜக வையும் சேர்த்துக் கொண்டால் தான்
      நான் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று
      சொல்வாரா …?
      ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பாரா …?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 11. ஜோதி சொல்கிறார்:

  //மூன்று பேருமே பேயடித்தது போல்//
  சாமியடித்தது மாதிரி என்று சொன்னால் தான் என்னவாம்.
  🙂 🙂

 12. srinivasanmurugesan சொல்கிறார்:

  திரு்குமார் கந்தசாமி அவர்களின் முகநூலில் இருந்து…….
  நேற்று நடந்தாற் போல் இருக்கிறது

  ஏறத்தாழ நாற்பதாண்டுகள் ஒடி விட்டன

  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரம்

  தமிழகத்தில் நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரம்

  எதிர்க் கட்சிகள் வேட்டையாடப்பட்டன

  திமுக திக ஜனசங்கம் கம்யூனிஸ்ட் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்

  திமுக திக வை தவிர மற்ற அமைப்பினர் அமைதியாக இருந்து எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்

  அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்( அப்போது புழல் இல்லை )

  சிறை வளாகத்தில் திமுகவினர் செய்த அடாவடி கொஞ்ச நஞ்சமல்ல

  அப்போது நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் நிருபராக இருந்தேன்

  அந்த நேரத்தில் வித்யாசாகர் என்பவர் சிறைக் கண்காணிப்பாளராக இருந்தார்

  நேர்மையான காவல்துறை அதிகாரி

  பச்சையப்பா டிரஸ்ட் பாரம்பரியம் நாத்திக குடும்பம்

  ஆனால் இவரோ மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்

  சிறை வளாகத்தில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது

  தினமும் காலையில் வித்யாசாகர் அந்த சிலைக்கு மலர்களும் சமர்பித்து இரண்டு

  நிமிடமாவது மெளனமாக வேண்டிக் கொண்ட பிறகே தன் பணிகளை துவங்குவர்

  அன்று வழக்கம் போல் மலர்களுடன் வந்தவர் அதிர்ந்து போனார்

  அந்த பிள்ளையாருக்கு “மயிர்” மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது

  பீடத்தின் கீழ் சிறு நீர் கழிக்கப்பட்டு இருந்தது

  வெறி கொண்ட வேங்கையானார் வித்யாசாகர்

  யார் இந்த வேலையை செய்தது என விசாரிக்கும் போது மூவர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்

  வீரமணி ஸ்டாலின் சிட்டிபாபு

  தன் கை பிரம்பை எடுத்து விளாசிவிட்டார்

  ஸ்டாலினை காப்பாற்ற போய் சிட்டிபாபு உதை வாங்கினார்

  மற்ற காவலர்கள் சமாதானப்படுத்தினர்

  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டிபாபு உயிரிழந்தார்

  வீரமணி காது மடல் பிய்த்துக் கொண்டது

  ஸ்டாலின் சில நாட்கள் நடக்கவே முடியவில்லை

  பிறகு மேலதிகாரிகள் இது பற்றி விசாரித்தனர்

  வீரமணியை விசாரித்த போது தான் பாத்ரூமில் வழிக்கி விழுந்ததாக சொன்னார்
  ( மகாநதி படம் நினைவுக்கு வருகிறதா)

  அவசர நிலை முடிவுக்கு வந்தது

  எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள்

  மொரார்ஜி ஆட்சிக்கு வந்தார்

  தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி

  அவசர நிலையின் போது நடந்த அத்து மீறல்களை விசாரிக்க தமிழகத்தில் இஸ்மாயில்
  கமிஷன் அமைக்கப்பட்டது

  வீரமணி தான் தாக்கப்பட்டது பற்றி சொல்லவே இல்லை

  சிட்டிபாபு இறந்தது இயற்கை மரணம் என்றும் வித்யாசாகர் மீது தவறு இல்லை என்றும்
  கமிஷன் சொன்னது.

  இது சென்ற வருடம் நான் போட்ட பதிவு

  ஏனோ அதை இந்த தருணத்தில் மீள் பதிவு செய்ய வேண்டும் என தோன்றியது

  அரும்புகள் மலர்ந்து வந்தால் அந்த அழகினை ரசிப்பது உண்டு

  பருந்துகள் திருட வந்தால் அந்த பண்பினை பொறுப்பதுண்டோ

  திமுக இந்துக்கள் கட்சி
  கேழ்வரகில் நெய்

  திருடர்கள் ஜாக்கிரதை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஸ்ரீநிவாசன் முருகேசன்,

   மிக அபூர்வமாக நீங்கள் போட்டிருக்கும் இந்த பின்னூட்டம்
   மிகப்பெரிய செய்தியை தன்னுள் அடக்கி இருக்கிறது.

   பல தடவை இதே செய்தி, இதற்கு நேர்எதிரான பின்னணிகளுடன்
   திரு.ஸ்டாலின் அவர்களாலும், கலைஞராலும் சொல்லப்பட்டிருக்கிறது.

   ஆனால், அதன் உண்மையான பின்னணி இப்போது தான் முதல்முறையாக
   வெளிவருகிறது. ஒரு வித்தியாசமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள் –
   நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. ravi சொல்கிறார்:

  //ஐயா, சென்ற தேர்தலில் அதிமுக+தேமுதிக என்பது பொருந்தாக் கூட்டணியாகத்தான் இருந்தது. ஆனால் இணை சேரக் காரணமும் இருந்தது. திமுகவின் மகா மெகா ஊழல்களும் ஈழ துரோகமும்தான் அவை. ///

  ஈழ துரோகமும்தான்!! – 2009 பாராளமன்ற தேர்தலில் , இங்கே திமுக கூட்டணி தான் அதிக இடங்களை பிடித்தது .. ,இத்தனைக்கும் அப்போது போர் உச்சத்தில் இருந்தது ..
  2011 தேர்தலில் கூட காங்கிரஸ் 5 இடங்களை வென்றது , அவ்வளவு பிரசாரம் செய்தும் !!

  தவறு, இவை அனைத்தையும் விட முக்கியமானது, நில அபகரிப்பு ..
  சாதாரண மக்களின் நிலங்களை போட்டி போட்டு கொண்டு அபகரித்தது + 2ஜி பிரசாரம் ..
  மிச்ச அணைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவார்கள் .. ஆனால், பொது மக்களின் மனதில் உள்ள பிம்பம் , திமுகவினர் மீண்டும் வந்தால் , பிரச்னை செய்வார்கள் என்பதே !!
  இன்று அதிமுக , தாங்கள் செய்ததை சொல்லி ஒட்டு கேட்க முடியாமல் , திமுகவின் சேட்டைகளையும், இலவசம்களையும் சொல்லி வோட்டு கேட்கும் நிலையில் உள்ளார்கள் ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.