சியாச்சினில் சிக்கிய 10 தமிழ் வீரர்கள்….

_60071714_siachen_lores_02

_74150704_siachen_lores_13

8_slrv

images (1)

131013806811842siachin

சியாச்சினில் சிக்கிய 10 தமிழ் வீரர்கள்….

மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும்
ஒன்பது வீரர்களும் ( அத்தனை பேரும் தமிழர்கள்…)
நேற்று காலை இமயத்தின் உச்சியில், சியாச்சின் பகுதியில்
(19,600 அடி உயரத்தில்) ரோந்து பணியில் இருந்தபோது,
திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

பனியில் புதையுண்ட அவர்களை தேடும் பணி,
இரண்டாவது நாளாக
இன்றும் தீவிரமாக நடைபெற்றது.

இரவில் மைனஸ் 40 டிகிரியும், பகலில் மைனஸ் 25 டிகிரியும் இருக்கும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் இனி உயிர்
பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று முன்னதாக பாதுகாப்பு
அமைச்சகம் அறிவித்திருந்தது. தற்போது அந்த 10 வீரர்களும்
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்பது பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களை கொண்டது. எனக்கு மெட்ராஸ் ரெஜிமெண்டில் பணிபுரிந்த பல வீரர்களை பரிச்சயம் உண்டு.
பங்களா தேஷ் போரில் – பாகிஸ்தான் ராணுவத்துடன்
போரிட்டு, கிழக்கு வங்கத்தை விடுவித்த இந்தியப்படையில்
இவர்கள் முக்கிய பங்காற்றினார்கள்…

டிசம்பர் கடைசி வாரத்தில் நான் காஷ்மீர் சென்றபோது
அதற்கான காரணங்களைச் சொல்லும்போது –

–// இந்த ஆண்டின் கடைசி தினத்தை வடக்கே
பனிமலையில் காவல் புரியும் படைவீரர்கள் சிலருடன்
செலவழிக்க வேண்டும் என்கிற ஒரு விருப்பம்…..

– ஆண்டில் பத்து மாதங்களை 38-40 டிகிரியில் கழிக்கும்
நமக்கு மைனஸ் 8 டிகிரி எப்படி உறைக்கிறது என்று
அனுபவித்துப் பார்க்க விருப்பம்…..//

என்று எழுதியிருந்தேன்.

இப்போது பருவநிலை அதைவிட மிகவும் மோசம்.
பகலில் மைனஸ் 25 – இரவில் மைனஸ் -40.
எவ்வளவு கடுமையான சூழ்நிலையில் அவர்கள்
பணி புரிந்திருக்கிறார்கள்…!

கூடவே அங்கு பணிபுரியும்
நமது ராணுவ வீரர்களைப் பற்றி எழுதும்போது –

-// மலை முகடுகளில், சிகரங்களின் நடுவே கூட,
சிறிய ஷீட் கொட்டகை அமைக்கப்பட்டு, இயந்திர துப்பாக்கி
சகிதமாக ஜவான்கள் இரவும் பகலும் காவல் புரிகிறார்கள்.
கொட்டும் பனியில், sub-zero temperature –
உறைநிலைக்கும் கீழே மைனஸ் 6 முதல் 8 டிகிரி வரையிலான
இரவு நேரங்களில் காவல் புரியும் இந்த ராணுவ வீரர்களை
பார்க்கும்போது – நாட்டைக் காக்கும் பணி எத்தனை சிரமமானது
என்பதும், நாம் அமைதியாகத் தூங்க வேண்டி,
இந்த ஜவான்கள் எத்தகைய இன்னல்களை எல்லாம் சந்திக்க
வேண்டி இருக்கிறது என்பது சுள்ளென்று உரைக்கிறது.//-

-என்றெல்லாம் கூட எழுதி இருந்தேன்.

நாட்டைக் காக்கும் பணியில் இந்த வீரர்கள் தங்கள் இன்னுயிரை
இழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்த வீரர்களின் குடும்பத்தை போற்றிப் பாதுகாக்கவும்,
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
செய்வதும் நம் கடமை… இந்த நாட்டின் கடமை.

நம் அனைவரின் சார்பாகவும், அந்த வீரர்களின் ஆன்மா
அமைதியுற இறைவனை வேண்டுவோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சியாச்சினில் சிக்கிய 10 தமிழ் வீரர்கள்….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில் சொல்ல மறந்து விட்டேன்.
  இந்திய ராணுவத்தில் எப்போதும்
  மெட்ராஸ் ரெஜிமெண்ட்,
  சிக் ரெஜிமெண்ட் மற்றும் கூர்க்கா ரெஜிமெண்ட்…
  ஆகியவற்றிற்கு சிறப்பான பங்கு உண்டு.

  பங்களா தேஷ் விடுதலைப்போரின் போது,
  மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தமிழர்கள் தங்களது
  இந்திய ராணுவ உடுப்புளைத் தவிர்த்து,
  வெறும் லுங்கி, பனியனுடன் –
  பங்களா தேஷ் விடுதலை வீரர்களின்
  விடுதலைப்படையான “முக்தி பாஹினி” யுடன்
  சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.
  விளைவு – பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த
  93,000 சிப்பாய்கள் சிறை பிடிக்கப்பட்டனர்….

  இத்தருணத்தில் –
  மெட்ராஸ் ரெஜிமெண்டுக்கு நமது வீர சல்யூட்.

  -காவிரிமைந்தன்
  .

 2. ravi சொல்கிறார்:

  my condolences for the brave soldiers . may their souls rest in peace..

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  வீரம் .. மற்றும் தியாகத்தை உணர்ந்தவர்களுக்கு மாபெரும் இழப்போடு கூடிய சோகம் — மற்றவர்களுக்கு வெறும் செய்தி …. இதன் வலியையும் — அர்ப்பணிப்பையும் எல்லோரும் உணர வேண்டுமானால் ” ஒரு இரண்டு வருட கட்டாய ராணுவ பயிற்சி ” பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் கொடுக்க வேண்டும் — அப்போதாவது நாட்டுபற்றும் — ஊழலும் ஒழியும் அல்லவா … ? வேதனையுடன் … !!!

 4. Sridhar சொல்கிறார்:

  my condolences for the brave soldiers . may their souls rest in peace..

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I just can’t imagine living in -25 and -40 degree. Hats off to them.

 6. nparamasivam1951 சொல்கிறார்:

  வீர சல்யூட்! என்னென்றும் நம் நினைவில்!

 7. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  JAIHIND,May their souls rest in peace

 8. LVISS சொல்கிறார்:

  It is a sad incident — Siachin is a risky terrain to guard but only select few get the chance to serve there —
  I thought Madras regiments consists of persons from Tamil Nadu only – As per today’s news 4 are from T Nadu 3 from Karnataka one each from Kerala Andhra and Maharashtra —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.