சி.எம். கனவுக்கு திரு.ஸ்டாலின் எப்போது போட்டார் அஸ்தி – வாரம்…?

.

.

நினவு இழத்தல் –
கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது…
பழகிய பெயர்கள், பழகிய வார்த்தைகள் சமயத்தில்
மறந்து போய் விடுகின்றன… நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம்
என்பது கூட நினைவில் நிற்க மாட்டேனென்கிறது…

இந்த லட்சணத்தில், எட்டு மாதங்களுக்கு முன்னர் என்ன
எழுதினோமென்று மறந்து விட்டோமே என்று நான் வருத்தப்பட்டு
ஆகப்போவது ஒன்றுமில்லை. நமக்கு – மன்னிக்கவும், எனக்கு
அது இயல்பாகி விட்டது.

எதற்கு இந்த விஸ்தாரமான முன்னுரை …?

திருவாளர்கள் ஸ்டாலின் + சுப்ரமணியன் சுவாமியின் கூட்டு
” கலைஞர் கவிழ்ப்புத் திட்டம் ” துவங்கி இருப்பது பற்றி
கடந்த இரண்டு நாட்களில் மூன்று இடுகைகள் எழுதினேன் –
ஆனாலும் கூட இதற்கு அடிப்படையாக இருக்கும் ஒரு பழைய
இடுகை என் நினைவிற்கு வரவே இல்லை பாருங்கள்…!

நல்ல வேளை நேற்றைய பின்னூட்டத்தில் நண்பர் பாமரன்
செல்வராஜன் நினைவூட்டினார்….

( இப்போதே சொல்லி
விடுகிறேன் – அப்புறம் மறந்து விடக்கூடும் –
நண்பருக்கு மிக்க நன்றி..! )

நான், கடந்த 2015, மே 20-ந்தேதி
“மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது ”
என்கிற தலைப்பில் இதே தளத்தில் எழுதிய இடுகை ஒன்றை..!

“கலைஞர் கவிழ்ப்புத் திட்டம்” எங்கே, எப்படி, துவங்கியது
என்பது அதிலிருந்து புலப்படக்கூடும்…!

கீழே அந்த இடுகையை மீண்டும் பதித்திருக்கிறேன் –

——————————————

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பரந்த மனது ……
Posted on மே 20, 2015

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் கீழ்க்கண்ட ட்விட்டர்
செய்தியையும், அவர் பிரசுரித்திருக்கும் புகைப்படத்தையும்
பார்த்தவுடன் –
எனக்கு இந்த இடுகையை எழுதத் தோன்றியது.

twitter-swamy-on-stalin-visit-2

stalin-and-s-swamy-2

ஆனால் கூடவே ஒரு பிரச்சினையும் தலை தூக்கியது….

இந்த இடுகை வெறும் ட்விட்டர் செய்தியையும்,
புகைப்படத்தையும்
மட்டுமே கொண்டது –
என் விமரிசனங்கள் எதுவும் இல்லை –
ஆதலால், பிரச்சினை இடுகையில் அல்ல …..

பிரச்சினை – தலைப்பில் தான் ….!!!

ஒரே சமயம் 4 தலைப்புகள் மனதில் தோன்றின.
அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்து,
யோசித்து பார்த்தேன்.
முடிவெடுக்க முடியவில்லை… இறுதியில்,
விஷயம் எப்படி இருந்தாலும், தலைப்பை நல்லதாகவே
போடுவோமே என்று முடிவெடுத்ததால் தான்
மேற்கண்ட தலைப்பு.

என்னென்ன தலைப்புகள் தோன்றின என்பதையும்
சொல்லி விடுகிறேன்….

முதல் தலைப்பு –
” ஸ்டாலின் அவர்களுக்கு பரந்து விரிந்த மனது ” –

காரணம் –
ஸ்டாலின், சுப்ரமணியன் சுவாமியை தன் 62 வயதுக்
காலத்தில் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை.
அவர்கள் இருவரும் நண்பர்களும் இல்லை.
குடும்ப நண்பர்களும் இல்லை.

சுப்ரமணியன் சுவாமி –

ஸ்டாலினின் தங்கை கனிமொழியின் 8 மாத “திஹார்”
சிறைவாசத்திற்கு காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் அவர்களின்
மீது இந்த தள்ளாத வயதில் சிபிஐ வழக்கு தொடரவும்
காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் மாமன் மகன்களான, மாறன்
சகோதரர்களின் மீது 700 கோடி ஊழல் வழக்கு தொடரப்படவும்
காரணமாக இருப்பவர்.
ஸ்டாலின் அவர்களின் தந்தை கலைஞர் கருணாநிதி மீது,
தொடர்ந்து இன்னமும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அள்ளி
வீசி வருபவர்.

திமுக -வை ஒழித்துக் கட்டுவேன் என்று சபதம் போட்டிருப்பவர்.
ஈழத் தமிழர்களின் அழிப்புக்கு துணை போனவர்.
தமிழக மீனவர்களின் படகுகளை
இலங்கை திரும்பத் தரக்கூடாது என்று சொன்னவர்.
ராஜபக்சேயின் “ஜிக்ரி” தோஸ்த்…!!!

காவிரி நீரைக் கேட்டு கர்நாடகாவை தொல்லைப்படுத்துவதை
தமிழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தஞ்சை டெல்டா பாசன வசதிகளுக்கே – தேவையான நீரை –
கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதன் மூலம்
பெற்றுக் கொள்ள வேண்டும் –

– என்றெல்லாம் சு.சுவாமி சொல்லியும் கூட –

சு.சுவாமி – இதுவரை பார்த்தே இராத,
தனது தம்பி தமிழரசுவின்
மகன் அருள்நிதியின்
திருமணத்திற்கு கட்டாயம் வந்தேயாக வேண்டுமென்று
என்று விடியற்காலையில் வீடு தேடிப்போய்,
சு.சுவாமிக்கே ‘சர்ப்ரைஸ்’ கொடுத்து –
வேண்டி, விரும்பி, அழைப்பிதழ் கொடுத்த விதம் இருக்கிறதே –

மிக மிகப் பரந்து விரிந்த மனம் உடையவரால் மட்டும் தானே
இதைச் செய்ய முடியும்…..?

(மற்ற 3 தலைப்புகளுக்கு விரிவான விளக்கங்கள் தேவைப்படாது
யோசிக்காமலே உங்களுக்கே காரணம் புரிந்து விடும்…!!! )

இரண்டாவது தலைப்பு –

“காரியம் ஆகணும்’னா கழுதையானாலும் காலைப்பிடி ”

மூன்றாவது தலைப்பு –

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே –
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே”
(தூக்குத் தூக்கியில் சிவாஜி பாடலின் வரிகள் …)

நான்காவது தலைப்பு –

“எப்படியாச்சும், எதாச்சும் செய்யுங்க சார்….
ஒங்களைத்தான் நம்பி இருக்கோம் …”

———————————————————–
பின் குறிப்பு –
நான் கொடுத்த தலைப்பு,
கொடுக்க நினைத்த தலைப்புகள் – ஆகியவை
பொருத்தமாக இல்லை என்று நண்பர்கள் கருதுவீர்களேயானால்,
நீங்கள் கொடுக்கும் தலைப்பு பொருத்தமானதாக இருந்தால் –
அதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

———————————————-


பின் குறிப்பு –

இந்த இடுகைக்கு
முதல் இரண்டு பின்னூட்டங்களால் ஏற்படக்கூடிய
அதிர்ச்சிக்கு நான் ஏற்கெனவே
தயாராகவே இருக்கிறேன்…. !!! 🙂 🙂

1) திரு.திருவேங்கடம் –
நீங்கள் இதில் புதிதாக எதையும் சொல்லி
இருப்பதாக தெரியவில்லை. எட்டு மாதங்களுக்கு
முன் சுப்ரமணியன் சுவாமி இந்த மாதிரி திட்டம் எதையும்
வெளியிடவில்லை….

2) திரு.இளங்கோ – கே.எம்.சார்,
கமெண்ட் எழுதுபவர்களை நீங்கள் அவசியம் வடிகட்ட
வேண்டும். உப்பு, உரைப்பு இல்லாமல் சப்பென்று எழுதி
இடுகையின் விருவிருப்பையே குலைத்து
விடுகிறார்கள் சிலர்…

திரு.ஸ்டாலினின் எட்டு மாத பிரசவ வேதனைக்குப் பிறகு
இந்த “க.க.திட்டம்” “குறைப்பிரசவமாக” வெளிவந்திருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் – முற்றிலும் உண்மை.

——————–

– இனி மற்ற நண்பர்களின்
பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..!
😀

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to சி.எம். கனவுக்கு திரு.ஸ்டாலின் எப்போது போட்டார் அஸ்தி – வாரம்…?

 1. chandraa சொல்கிறார்:

  stalin is absolutely desperate.. to keep a place in dmk…..if not a win in this election…..stalins son in law sabareesan had attended thuglaks function no other dmk leader was present in thuglaks function>>>>stalin would go to any level to establish his importance>>>but 2016 elections results would turn him crazy helpless dejected …recently he had shown his disappointment over thepoor response of nominations in dmk with his close friends

 2. ரிஷி சொல்கிறார்:

  //சி.எம். கனவுக்கு திரு.ஸ்டாலின் எப்போது போட்டார் அஸ்தி – வாரம்…?//

  சி.எம். கனவில் இருப்பவரை அஸ்தியாக்காமல் விட்டால் சரிதான்! (கொஞ்சம் rude ஆக இருக்கிறதோ? ஔரங்கசீப் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறார்)

  • ஜோதி சொல்கிறார்:

   //சி.எம். கனவில் இருப்பவரை//
   அவுரங்கசீப்பாக கனவில் வருபவர் யார்?
   மு க
   ஸ்டாலின்
   அழகிரி

   “கொஞ்சம் விஷமும் நிறைய பணமும் மூன்று திருடர்களும்” வேறு (கதை தான்) நினைவுக்கு வருகிறார்கள்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஜோதி,

    இரண்டு விஷயங்கள்….

    1) அவுரங்கசீப் தான் தந்தையையும், சகோதரர்களையும்
    அகற்றி விட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்.
    எனவே, உங்களுக்கு ரிஷி சொல்கிற நபர் இங்கே யார் என்று
    சந்தேகம் வர வாய்ப்பில்லையே… 🙂

    2) அதென்ன, ஆவலைக் கிளப்புகிறாப்போல் –
    “கொஞ்சம் விஷமும் நிறைய பணமும் மூன்று திருடர்களும்” கதை ..?
    சுருக்கமாகச் சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்.
    எல்லாருமே ரசித்து விட்டுப் போகிறோம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. ஜோதி சொல்கிறார்:

  பின்குறிப்பை முன்குறிப்பாக சொல்லும்
  காமை சார்
  க க க போ
  🙂
  ரொம்பத்தான் தேறிவிட்டீர்கள்
  😀

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜோதி,

   அந்த விளம்பரம் தான் inspiration என்று வைத்துக் கொள்ளுங்களேன்…!
   ஆனால் அந்த விளம்பரத்தில் ஒரு குழப்பம் பார்த்தீர்களா –
   கா.க.போ. என்று இருக்க வேண்டியதை ஏன் க.க.க.போ. என்று போட்டார்கள்.? தப்பாகச் சொல்லி கவனத்தை கவரவா ?

   இருந்தாலும், கலைஞர் விஷயத்தில் நாம் தவறு செய்யலாமா ?
   அது க.க.திட்டம் தான்…!
   எதிர்காலத்தில் சரித்திரத்தில் இடம் பெறப்போகும் திட்டம்… 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜோதி சொல்கிறார்:

    கருத்தை
    கவனமாய்
    கவ்விக்கொண்டுவிட்டீர்கள்
    போங்கள்
    கககபோ from இம்சை அரசன் 23ம் புலிகேசி.
    😀

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  // 15 நாட்களாக நிறைய நடக்குதுங்க…”தளபதி” ஸ்டாலின் ஊழலற்றவர்..2ஜி ஆசிர்வாதம் ஆச்சாரியின் அடடே பேச்சு….. சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவின் ஆ. ராசா, கனிமொழி சிறைக்குப் போக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி.. அவர்தான் தற்போது, “தளபதி” ஸ்டாலின் ஊழல் அற்ற முகம் கொண்டவர்; “தலைவர்” கலைஞர் அவர்கள் இப்போது ஆன்மீகத்தை ஏற்றிருக்கலாம்; கடந்த 10,15 நாட்களாக நிறைய நடைபெறுகிறது….. என்றும் இவ்வழக்கில் ஆ.ராசா, கனிமொழிக்கு எதிரான முக்கியமான அரசு சாட்சியே ஆசிர்வாதம் ஆச்சாரிதான். இப்படியான ஆசிர்வாதம் ஆச்சாரி, சுப்பிரமணியன் சுவாமியை தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு பாஜகவில் ஐக்கியமானார். கடந்த சில நாட்களாக சுப்பிரமணியன் சுவாமி திடீரென மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிஷ்யர் ஆசிர்வாதம் ஆச்சாரியும் தந்தி தொலைக்காட்சி நடத்திய நேற்றைய விவாதத்தில் திமுக உடன்பிறப்புகளை புல்லரிக்க வைக்கும் விதமாக பேசிவிட்டார்….//
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/whistle-blower-aseervadham-achary-supports-mk-stalin-246126.html …. என்று மேலும் தொடர்கிறது செய்தி — ” காலம் எப்படியெல்லாம் — மனிதர்களை மாற்றுகிறது …! ” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் — தெய்வம் ஏதுமில்லை ” — ஆச்சர்யாவின் திடீர் பல்டி பற்றி திரு கா.மை .. அய்யாவின் கருத்து …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   ஆசிர்வாதம் ஆசாரி ஏகப்பட்ட விஷயங்களை உதிர்த்து விட்டு,
   “என் வாய் கட்டப்பட்டிருக்கிறது ” என்று வேறு சொல்லி விட்டுப்
   போகிறார்.

   இதில் நாம் பேச நிறைய இருக்கிறது.
   கொஞ்சம் கொஞ்சமாக பேசலாமே…!
   அவர் தான் இன்னும் 10 நாட்கள் டைம் கொடுத்திருக்கிறாரே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. thiruvengadam சொல்கிறார்:

  ஸ்டாலின் போட்ட அஸ்திவாரம் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் , கவனிக்கப்படாத ஆசைகள் : தமிழக்த்திலும் தன் செல்வாக்கு பெற மோடி முயற்சி , பீகார் நிலைக்கு பின்னரும் பெற்றுவிட்ட தலைவர் பதவி நீடிக்க அமித்ஷா முயற்சி .அரியணை காப்பற்ற ஜெ முயற்சி , மிரட்டலில் மீன் பிடிக்க விகாந்த் , தந்தையின் நிழல் கேபின்ட்டை நிஜமாக்க அன்புமணி,

 6. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கோபமும், நக்கலும் ஒரே சமயத்தில் அரங்கேறும்படி எப்படித்தான் எழுதுகிறீர்களோ ! உங்கள் இடுகை –
  particularly this Blog is very interesting.
  என்னைப்பற்றி எழுதியதற்கு – நான் கொடுத்து வைத்தவன்.
  நன்றி சார். நீங்கள் நிறைய எழுத ஆண்டவன் உங்களுக்கு நல்ல
  ஆரோக்கியத்தை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
  உங்களுக்கு ஞாபக சக்திக்கு பதிலாக நிறைய நண்பர்கள் பாமரன் செல்வராஜன் / ஜோதி போன்றவர்கள் துணை இருக்கையில் என்ன குறை ?
  நன்றி சார்.

  • thiruvengadam சொல்கிறார்:

   What a co incidense ! Even though i missed my usual first post , my friend had the chance in his usual follow up but left me. K M sir’s demanded refusals now came . But any thing may happen in politics as general motto ” for the sack of survival “

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி இளங்கோ மற்றும் திருவேங்கடம்.

   ஏனோ – சொல்லி வைத்தாற்போல் இந்த தடவை
   இரண்டு பேருமே என்னை
   ஏமாற்றி விட்டீர்கள்… 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. paamaranselvarajan சொல்கிறார்:

  “இந்துமயமான” திமுகவும் ஓகே… ஸ்டாலினுடன் விளையாடி பார்க்கவும் ரெடி… சொல்வது சு.சுவாமி
  Subramanian SwamyVerified account
  ‏@Swamy39
  @Chennai_Knight : I am ok with a Hinduised DMK …. மற்றொரு // கேள்விக்கு பதிலளித்துள்ள சு.சுவாமி, ” கருணாநிதி ஒரு சீனியர் தீயசக்தி ” — . ஸ்டாலினோ 90% திமுகவினர் கோவிலுக்கு போகிற இந்துக்கள் என்கிறார். வாய்ப்பிருந்தால் அவருடனும் விளையாடி பார்க்கவும் தயார் என கூறியுள்ளார்.// என்ன விளையாட்டு விளையாடுவார் … ? ” கருணாநிதி ஒரு சீனியர் தீயசக்தி ” என்று இப்போது கூறுவதின் ” மர்மம் ” என்ன … ? அப்போ .. ஜூனியர் ” தீய சக்தி ” … யார் … ?
  Read more at: http://tamil.oneindia.com/news/india/swamy-sasy-hinduised-dmk-is-ok-246113.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   கலைஞரை குறிக்க “தீயசக்தி” என்கிற சொல்லை
   முதல் முதலில் பயன்படுத்தியவர் யார் –
   நினைவிருக்கிறதா …?

   சு.சுவாமியின் ட்விட்டர் அக்கவுண்டை தமிழ்தெரிந்த
   உதவியாளர் ஒருவர் தான் கையாண்டு வருகிறார் என்பது
   என் நீண்ட நாள் சந்தேகம்… அது அண்மையில் உறுதியானது..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Following could be my imagination…..

  Why not we see this twists and turns as a step taken by BJP(in alignment with ADMK) to eliminate DMK and to come in second position in TN ( you may say – there are some other parties in TN…. but are they active enough to WORK/ACT as a major opposition party ??)….. DMK-DMDK-BJP alliance is going to give a big dent to DMK & DMDK….. Hardcore DMK partymen will not like this alliance….. In christian dominated areas, DMK will loose a heavy share of its votes(i had witnessed this)…….Already DMDK is sliding down….. This alliance and 3rd front – Makkal Nala Koottany will move votes in ADMK’s favour…… DMK without MK can be easily diluted and can be victimized in many ways – I think Stalin may not be able to tackle political attack from Central from different angles(even MK had suffered)….. At one point DMK will NOT act efficient or will NOT come out with any kind of reports etc….. BJP with their strong base – working partymen(may be the numbers could be lower comparatively), can try to project themselves as a good opposition party with number of agitations etc…… This may take little time….. How are they going to achieve this ??? Elections get over by May/June 2016…… Then slowly certain things will come up……….. HOW???……PLEASE REMEMBER SuSa asking his party high command to make him TN BJP leader by 2017 !!!!…….Why has he chosen “2017” ??………

  Of course SuSa is exceptionally brilliant……

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சன்மத்,

   நல்ல வளமான கற்பனை தான்.

   கையில் அதிகாரம் இருந்திருந்தால்-
   சு.சுவாமியை எப்போதோ
   தூக்கி சாப்பிட்டு இருப்பார் கலைஞர்.
   அவர் துரதிருஷ்டம் – பலமின்றி இருக்கிறார்.

   சு.சுவாமி, ஸ்டாலினுக்கு ஆசை காட்டுகிறார்….
   தூண்டி விடுகிறார்….
   ஆனால், இந்த யோசனை மேற்கொண்டு நகர்வது
   விஜய்காந்த் கையில் தான்
   இருக்கிறது.
   பாஜக வையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால்
   தான் நான் திமுக கூட்டணிக்கு வருவேன் என்று
   விஜய்காந்த் கண்டிஷன் போட்டால் …..
   -குடும்பத்துக்குள் குழப்பம் உண்டாகக் கூடும்.

   சு.சுவாமி அதற்குத்தான் முயற்சி செய்து வருகிறார்
   என்று தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜேசன் சொல்கிறார்:

    கதை வசனம் வேறு என்று நினைக்கிறேன் காமை சார். 10 நாள் டைம் கொடுத்திருக்கிறார்கள். 10 நாட்களில் என்ன ஆகப் போகிறது? யாருக்கு என்ன செக் வைக்கப்போகிறார்கள்? முதல் செக் மு.க.வுக்கு, 10 நாட்கள் கழித்து வைக்கப் போகிற செக்கும் மு.க.வுக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.

    முதல் செக், சி.எம் வேட்பாளராகத் துடித்துக் கொண்டிருக்கும் வாரிசை, தலைமைக்கு எதிராகத் திருப்பி விட்டு, கட்சி பிளக்கிறதா என்று பார்ப்பதற்கு. இங்கு ஒரு கேள்வி வருகிறது, கட்சியை எதற்குப் பிளக்க வேண்டும்? முழு திமுகவையே அரவணைத்துக் கொள்ளலாமே? ஆனால் அதற்கு மு.க., அவரது அடையாளங்களான ஊழல், இந்து வெறுப்பு – இவை அனைத்தையும் இவ்வளவு நாள் எதிர்த்தது – என இவையெல்லாம் தடையாக உள்ளனவே. இவற்றுடன், மு.கவுடன் கை குலுக்கினால், இருக்கிற கொஞ்ச நஞ்ச வாக்கு வங்கியும் போய் விடும். ஆனால் திமுகவின் என்றும் மாறாத 25 சதவிகித வாக்கு வங்கி, நாக்கில் சப்பு கொட்ட வைக்கிறது. நம்ம வாக்கு வங்கி நமக்கு வோட்டு போடவில்லை என்றாலும், கூட்டணியில் இருந்தால் திமுக வாக்கு வங்கியே சில, பல சீட்டுகளைக் கொடுத்து விடும் அல்லவா? அதனால் திமுகவை இழுக்க வேண்டும். மைனஸ் முக என்று சீட்டு போட்டுப் பார்த்து, பிளந்தால் லாபம். பிளக்கலைன்னா, சு.சாவுக்குக் கிடைக்காத ஊழல் குற்ற சாட்டா? முக மீது சுப்ரீம் கோர்டில் வழக்கு போடலாம், இது 10 நாட்களுக்குப் பின் வரப் போகும் 2 ஆவது செக்காக இருக்கலாம்.

    அப்பொழுது, தேர்தல் தேதி நெருக்கடியும் சேர்ந்து, ஸ்டாலின் தலைமையில் திமுக அல்லது பிளவு பட்ட திமுக. என்ற ஒன்று பாஜகவுடன் சேரத் தயாராகும். முகவைக் காப்பற்றுவது ஒரு நோக்கம், திமுகவுக்கு அரசியல் வாழ்வு வெளி நோக்கம், ஸ்டாலினுக்கு சி எம் பதவி என்பது பெரு நோக்கம். முக இல்லாத ஸ்டாலினுடன், அதாவது திமுகவுடன் சேர எந்தத் தீட்டும் கிடையாது. முன்னதாகவே சு.சா சொல்லிவிட்டார், ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டு கிடையாது, அவர் பக்திமான், குடும்பமே பக்தி, திமுகவே இந்துமயம் என்று.

    இங்கு இடையில் தேமுதிக. விஜயகாந்துக்கும் சிம் ஆசை. ஆனால் ஸ்டாலினை சி எம் வேட்பாளராக, பாஜக ஏற்கும் நிலையில், விகா வின் சி எம் கனவு என்னவாகும்? அவரைக் கழட்டி விட்டு இந்தக் கூட்டணி இல்லை. அங்குதான் விகாந்துக்கும் ஒரு செக். பாஜகாவுடன் ஐக்கியம் ஆகி விடுங்கள், நீங்களே எங்கள் சி எம் வேட்பாளர். ஆட்சியில் திமுகவுடன் சம பங்கு. சுழற்சியில் ஸ்டாலினும், நீங்களும் சி எம்கள் – என்று விகாவின் சி எம் ஆசையை பாஜக இப்படி பயன் படுத்துக் கொள்ளும். திமுக, தேமுதிக வாக்குகள் பாஜகவுக்கு விழும், அதே வாக்குகள் அவர்களுக்கும் விழும். அதனால் சீட்டுகளை அள்ளலாம். பாஜகாவின் வாக்கு வங்கி (என்ற ஒன்று இருக்குமேயானால்) வாக்கு போட்டாலும், போடாவிட்டாலும், யாருக்கும் ஒன்றும் குறைந்து விடாது. இந்த கணக்கு சாத்தியமான ஒன்று. ஆக இதில் செக் என்பது, முகவுக்கு மட்டுமே. ஆசை காட்டுதல் ஸ்டாலின், விகா இருவருக்குமே.

    இந்தக் கதை- வசனம் இப்படித்தான் போகுமா என்ற சந்தேகத்துக்கு விடையாக சில காட்சிகள் :-

    (1) பாஜக முதலில் தேமுதிக பின்னால் தான் போனது. கொஞ்சம் சுமாரான வாக்கு வங்கி ஒரு காரணம். மற்றொரு காரணம், சி எம் ஆக வேண்டும் என்ற ஒரே கொள்கையைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத விகா. விகாவைத் தங்களுடன் இணைத்துக் கொள்ள பாஜக அழைத்தது என்ற செய்தி முன்பு வந்தது. தேமுதிகவும் பாஜாகாவும் இணைத்து விட்டால், பாஜகா சற்று பெரிய கட்சியாக ஆகி விடும். விகாவே சி எம் வேட்பாளராக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் விகாவுக்கு பாஜகா அளவுக்கு ஐடியா இல்லை. முரண்டு பிடிக்கிறார். அவருக்கு திமுக வாக்கு வங்கி மீது கண்.

    (2) இந்த இடத்தில் பாஜக யோசிக்கிறது – உனக்குத் திமுக தானே வேண்டும், நானும் நீயும் ஒண்ணா சேர்ந்து திமுகவுடன் கூட்டணி வைக்கலாமே? இதை தேமுதிகவுடன் பேசி வைத்துக் கொண்டுதான் சுசா மூலமாக பாஜக காயை நகர்த்தி இருக்கிறது. ஏனெனில் ஒரே கூட்டணி என்றால் விகாவுக்கும் சி எம் ஆசை, ஸ்டாலினுக்கும் சி எம் ஆசை. அப்படி இருக்க இந்த இருவரில் ஸ்டாலினுக்கு முன்னுரிமை கொடுப்பது போல, அவர் சி எம் வேட்பாளரானால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக சுசா ஏன் சொன்னார்? இதனால் விகா கோபித்துக் கொள்ள மாட்டாரா? ஆனால் அவர் வாயே திறக்கவில்லை. நாங்கள் இப்படி ஒரு கோல் போடுவோம். விழுந்துதுன்னா அவரும் சி எம் வேட்பாளர், நீங்களும் சி எம் வேட்பாளர். 50-50 பிரிச்சிக்கலாம். இதுதான் டீல்.

    (3) இதை, தேமுதிகவே, மைனஸ் பாஜகாவாக, திமுகவுடன் பேரம் பேசிக்கலாமே என்ற கேள்வி வருகிறது. அதற்கு முக ஒரு முட்டுக்கட்டை. மேலும் முக தலைமயிலான திமுகவுடன் கூட்டணி என்றால், விகா என்னென்னவோ சப்பை கட்டு கட்டணும். அதற்கு ஸ்டாலின் திமுகவே மேல் அல்லவா?

    அதனால, ‘எதாச்சும் செய்யுங்க சார்’ என்று ஸ்டாலின் கேட்டாலும், ‘உனக்கும் சேர்த்து செய்யறேன்’ னு விகாவுக்கு பாஜகா உத்தரவாதம் கொடுத்திருக்கும்.

    இதுல சைடுல பெனிபிட் ஆகப் போறது, மாறன் சகோதரர்களாக இருக்கலாம். இன்று வரை அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதில் பாஜகா மீது சந்தேகம் இருக்கிறது. ஸ்டாலின்- மாறன் பந்தம் ஏற்கெனெவே தெரிந்த விஷயம் தான். பாஜகாவுடன் கூட்டணி என்றால், ஸ்டாலின் தரப்பில் மாறனுக்காகவும் பேரம் நடக்கும், நடந்தும் முடிந்திருக்கலாம்.

    (4) மாமாத்தனமா, அல்லது நரித்தனமா – இந்த ஆட்டத்தில் பாஜகாவுக்கு என்ன கிடைக்கும்? அதிமுகவுக்கு மாற்றுக் கூட்டணியில் தாங்கள் இருப்போம் என்ற அந்தஸ்து கிடைக்கும். கூட்டணிக் கணக்கில் ஆட்சியையும் பிடிக்க வாய்ப்பும் கிடைக்கிறது. திமுகவையும், தேமுதிகவையும், தன் கையின் கீழே வைத்திருக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பு அதிமுகவுடன் கூட்டணி என்றால் கிடைக்குமா?

    (5) இப்படி ஒரு திரைக் கதை எழுதப்பட்டு விட்டது என்பதற்கு சமீபத்திய சாட்சி, வழ வழ கணேசனின் கச்சத் தீவு வசனம். அப்பன் வீட்டு சொத்தைப் போல கச்சத் தீவை தாரை வார்த்து கொடுத்தது இந்திரா காந்தியா, கருணாநிதியா? தமிழ் நாட்டில் உட்கார்ந்து கொண்டு, கருணாநிதியின் பெரும் பங்கை எப்படி மறக்கலாம் / மறைக்கலாம்?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வருக நண்ப ஜேசன்,

     முதல் முறையாக இங்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்
     என்று நினைக்கிறேன்.

     நன்றாக analise செய்கிறீர்கள். தொடருங்கள் உங்கள்
     பின்னூட்டங்களை.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • ஜேசன் சொல்கிறார்:

      நன்றி காமை சார். முதல் பின்னூட்டமாக இருந்தாலும், சில மாதங்களாக உங்கள் கருத்துக்களைப் படித்து வருகிறேன். தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் கூறு கேட்ட அரசியல் விளையாட்டுகளைப் பார்க்கும் போது, நாளையாவது மாறாதா என்ற ஆதங்கம், நிராசையாக ஆகிவிடும் போலிருக்கிறதே. நல்ல பண்பட்ட ஜனநாயகமாக நம் நாடு வளர வேண்டிய நேரத்தில், கேவல அரசியல் தேவையா? காங்கிரசையே மிஞ்சி விடும் போலிருக்கிறதே பாஜக!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஆம் நண்பரே,

      நமது நண்பர் டுடேஅண்ட்மீ அடிக்கடி சொல்வார் –
      ” காங்கிரஸ் – பினாமி; பாஜக -சுனாமி ” என்று.
      காங்கிரஸ் ஏற்கெனவே நிரூபித்துக் காட்டி விட்டது.
      பாஜக அதை நிரூபித்துக் கொண்டிருப்பது போல்
      தோன்றுகிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • Sanmath AK சொல்கிறார்:

     TN’s voting pattern cannot be judged except one – bjp cannot materialize on any issues here in TN…. Their allies will also get affected…… This is for sure and cannot be denied…..

     BJP has to go a long way to make a mark in TN….. Nothing seems bright as of now……. Realizing all these SuSa is trying various chords….. MuKa is brilliant is playing chords….. It is now like watching Nadal and Federrer playing against each other – (both of them in full form and completely fit)……

     One more thing – You have told about DMDK getting absorbed in to BJP….. If this happens, very soon Vijayakanth will become active in running colleges, directing/producing movies for his younger son and lobbying business deals for his elder son……..

 9. drkgp சொல்கிறார்:

  MuKa has taken preemptive measures by inviting Gulam Nabi Azad
  for alliance talks. SuSa and Stalin have to fight it out or surrender.

 10. ஜேசன் சொல்கிறார்:

  அது என்ன 10 நாள்? ஆசீர்வாதம் ஆசாரி சொன்னார். இப்பொழுது மீண்டும் 10 நாள் கணக்கு அடிபடுகிறதே. கூட்டணி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுப்போம் என்று வழ வழ கணேசன் சொல்கிறார் – http://www.dnaindia.com/india/report-2016-tamil-nadu-elections-decision-on-alliance-to-be-taken-in-10-days-bjp-2175259

  • ரிஷி சொல்கிறார்:

   பிப்ரவரி 20 அன்று காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாடு. வெளிப்படையாக சொல்கிறார்களோ இல்லையோ.. அன்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.