திரு.பழ.கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும் …..!!!

pazha_karuppaiya_new

ஒரு வாரம் நகர்வு எதுவும் இல்லாமல் இருந்தது…
நேற்று மீண்டும் துவங்கி விட்டது.
திரு.பழ.கருப்பையாவின் assignment…!!!

முதலில் எனக்குத் தெரிய வந்த ஒரு உறுதிப்படுத்தப்படாத
செய்தியை சொல்லி விடுகிறேன். ( இன்னும் இரண்டு-மூன்று
வாரங்கள் போனால், இது உண்மையா இல்லையா என்பது
தெரிந்து விடும். )

பழ.கருப்பையா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதை
வெகு சிலரே அறிந்திருப்பர். அவர் கடைசியாக படம் எடுத்து
பல வருடங்கள் ஆகி விட்டதால் இந்த நிலை…

அண்மையில் அவர் ஒரு தமிழ் திரைப்படம் தயாரித்து,
கிட்டத்தட்ட முடித்து விட்டாராம். இந்த காலத்தில் திரைப்படம்
எடுப்பது சுலபம். ஆனால் வெளியிடுவது தான் கடினம் என்பது
நடைமுறை.


கருப்பையா அவர்கள் தன் திரைப்படத்தை வெளியிட இயலாத
நிலையில், மூத்த தமிழக அமைச்சர் ஒருவரை அணுகி,
தன் திரைப்படம் வெளியாக அவர் தன் அதிகாரத்தையும்,
செல்வாக்கையும் பயன்படுத்தி உதவ வேண்டும் என்றும்,
கூடவே, அதனை ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நல்ல
தொகையுடன் திரையிடவும் உதவி செய்ய வேண்டும் என்றும்
வற்புறுத்தி வந்தாராம். அந்த அமைச்சர் ஏற்கெனவே
திரு.பழ.கரு. மீது தலைமை கடுமையான நோக்கில் இருப்பது
தெரியும் என்பதால் தான் இதில் தலையிட முடியாது என்று
மறுத்து விட்டாராம்.

இதற்கு மாற்றாக என்ன செய்யலாமென்று யோசித்த
திரு.பழ.கரு. –

திரு.உதயநிதியை அணுகி அவரது திரைப்பட நிறுவனத்தின்
மூலம் தன் படத்தை வெளியிட முடியுமா என்று
முயற்சித்திருக்கிறார். விஷயம் திமுக தலைமை வரை
போயிருக்கிறது…

பொறுப்பு திருவாளர் சபரீசனிடம் விடப்பட்டிருக்கிறது.
படத்தை அவர்களது நிறுவனத்தின் மூலம் வெளியிடுவது
என்றும் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி
பெற்றுக் கொண்டு திரு.பழ.கரு.வுக்கு கணிசமான தொகை
கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

இதற்கு கைம்மாறாக திரு.பழ.கரு. என்ன செய்ய வேண்டும்
என்பதும் விவரிக்கப்பட்டதாம். அதன் முதல் நிகழ்வு தான்
துக்ளக் ஆண்டு விழாவில் திரு.பழ.கரு. பேசியது…
அதிசயமாக இந்த விழாவிற்கு முன்பாகவே திரு.பழ.கரு.
மூலமாக இருக்கை உறுதி செய்து கொண்டு, திருவாளர்
சபரீசன் – திரு.பழ.கரு. agreement-ன் முதல்
நிபந்தனையை நிறைவேற்றுவதை பார்த்து மகிழ்ந்து விட்டு,
திரு.பழ.கரு. பேசி முடித்தவுடன், அரங்கை விட்டு வெளியேறி
இருக்கிறார்…!!!

அதற்கு அடுத்தடுத்த கட்டங்கள் நிகழத்துவங்கியபோது தான் –
வில்லனாக திரு.ரங்கராஜ் பாண்டே-யின் பேட்டி
குறுக்கிட்டிருக்கிறது. அந்த சூழ்நிலை மாறட்டும் என்று
கொஞ்சம் ஆறப்போட்டு விட்டு, மீண்டும் திரு.பழ.கரு.
சுருசுருப்பாக புறப்பட்டு விட்டார்.

தேர்தல் நேரத்தில் திரு.பழ.கரு. முழுமையாகப் பயன்படுத்திக்
கொள்ளப்படுவார் என்றும் அவரது திரைப்படம் குறித்த
முன்னேற்றங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும்
தகவல்.

———————————

இந்த கட்டுரையில் திருப்தி அடையாதவர்களுக்கு
போனஸாக கீழே – 2011-ல் திரு.பழ.கரு. வின் வீடு
தாக்கப்பட்டது குறித்து அப்போது அவர் எழுதிய ஒரு
பதிவு –

—————————–

” நான் பெற்ற விருது! “

‘ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே
என்ன கொண்டாட்டம்?

மொழி என்பது வெறும் ஒலியா? இனத்தின் முகமல்லவா!
இனத்தை அழித்துவிட்டு மொழிக்கென்ன கொண்டாட்டம்?
செம்மொழி மாநாட்டுக்குத் தமிழ்த்தாய் வர மாட்டாள்!’

இடையறாது எழுதிக்கொண்டிருந்தேன்.

அதிகாரத்தில் வேறு இருக்கிறாரே கருணாநிதி!

செம்மொழி மாநாட்டின் இறுதி நாளன்று (27.6.10) பிற்பகல்
ஆறேழு குண்டர்கள் ‘மணக்க மணக்க செம்மொழியில்’
இரைந்து கொண்டே என் வீடு புகுந்து,

என் கழுத்தினை இறுக்கி என்னைத் தாக்கிவிட்டு,
வீட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தி, மகிழ்வுந்தையும்
அடித்து நொறுக்கி விட்டுச் சென்று விட்டார்கள்!

thiru.paza.karu-2011

இது 2011-ல் உலகத்தமிழ் மாநாடு மற்றும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை, திரு.பழ.கரு. விமரிசித்தபோது நிகழ்ந்த சம்பவத்தின் புகைப்படம்

என் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து விட்டனர்!

காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும்;
அடிக்கச் சொன்னவரையும் தெரியும் என்பதால்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை!

என்னுடைய எழுத்தின் வலிமையை அதுவரை நான்

அறிந்திருக்கவில்லை! அதனுடைய ஆற்றலைக்
கருணாநிதிதான் எனக்கு உணர்த்தினார்!

ஒரு முதலமைச்சரால்
‘மரியாதை’ செய்யப்படுவதைவிட
எழுதுபவனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?

என் எழுத்துக்கு நான் பெற்ற சிறந்த விருது இதுதான்!

——————————————

பருவங்கள் மாறலாம்..
காலங்கள் மாறலாம்…
உலகமே மாறலாம்….

ஆனால் – இந்த அரசியல்வாதிகள்……?????????????????????

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.பழ.கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும் …..!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  தங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையாக இருக்கலாம். டாஸ்மாக் பார் பினாமி மூலம் , எம் எல் ஏ நிதி திட்டங்களுக்கு மால் வெட்டு , வெளியில் வராத வருமான வாய்ப்பு முதலிய இருந்தும் , இப்படி ஏற்கனவே செய்த தொழிலுக்கு எதிர்க்கட்சியினரை நாடியதற்கு அம்மா அவர்கள் மிக்க பெருந்தன்மையுடன் கட்சியிலிருந்து மட்டும் நீக்கி , அவர் ராஜினாமா ஏற்றுக்கொள்ளாமல் ( இதுவரை செயதி இல்லை) வருமான உதவி பெற உள்ளார். இதை முன்பே மோப்பம் பிடிக்க தவறிய உளவுத்துறை தப்பிக்க பிரார்த்திக்கிறேன். Some statements holdgood ever. Last but one paragraph is in such a way applicable now also with a slight editing.

 2. நிமித்திகன் சொல்கிறார்:

  ஆக, பழ. கருப்பையாவிற்கு எந்த ஆட்சி வந்தாலும், ‘அடி’ கிடைத்துக் கொண்டே இருக்கும். அடியிலிருந்து தப்பிக்க அவர் ‘வாயை மூடி பேசவும்’ என எவராவது அறிவுரை கூறினால் நல்லது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நிமித்திகன்,

   நல்ல யோசனை… ஆனால்,
   ஒவ்வொரு அடியின் போதும்,
   அவருக்கு புதிது புதிதாக லாபங்கள் கிடைத்துக்
   கொண்டிருக்கும்போது, அவர் எப்படி வாயை மூடுவார்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  பழ கருப்பையா அவர்களின் படத்தின் பெயர் : ” நாடி துடிக்குதடி ” அதைபற்றிய செய்தி — // Naadi Thudikuthadi (Upcoming) Movie
  Produced by : Pala. Karuppiah
  Naadi Thudikuthadi is a tamil Romance entertainment movie directed by Selva released under the banner of Pala. Karuppiah (Produced By) in the year of 2016. Naadi Thudikuthadi kollywood movie star casts are Subin,Archana,Jyotsna and others. This movie songs & background score (Music) composed by Ilayaraja and released in the date of 19/9/2016 (Sep 19, 2016) – See more at: http://tamil.cinemaprofile.com/movies/naadi-thudikuthadi-movie-details-2015-biography-online.html#sthash.5o2AMEP5.dpuf // … பழ .கருப்பையா அவர்கள் 1992 — ல் ” வா வா வசந்தமே ” என்கிற படத்தை எடுத்து டைரக்டும் செய்யதற்கு பிறகு 2013 — ல் நாடி துடிக்குதடி என்கிற படத்தை ஆரம்பித்து ரிலீசுக்கு காத்திருக்கிறது —- அய்யா … கூறியுள்ளதுபோல் அவர்களின் நிறுவனத்தின் மூலம் வெளி வரும் என்பதால் தான் — நாடி அதி வேகமாக துடித்ததோ … ? எப்படியோ பொழப்பு நடந்தால் சரி — கொள்கை — குறிக்கோள் என்பது ஏது … ? அன்று தி.மு.க. ஆட்சியில் செம்மொழி செம்மல்கள் அவரையே நேரடியாக வீடு புகுந்து தாக்கினார்கள் … இப்போது தாக்கியவர்கள் தங்களின் பெயர் மற்றும் விலாசம் சொல்லி தாக்கியதாக கூறுவது தான் — விநோதமாகவும் — பழ கருப்பையாவின் மீது சந்தேகமாகவும் இருக்கிறது …. அப்படி தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் செல்வராஜன்,

   அள்ளீட்டீங்க; பாராட்டுகள்…ஆதாரபூர்வமாக
   கொடுக்கலாமே என்று
   இந்த தகவலை முடிந்த வரை தேடிப்பார்த்தேன்..
   என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை…
   உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் நன்றி.

   திரு.பழ.கரு. அளிக்கும் ஒவ்வொரு பேட்டியின் மூலமும்
   அவரது ஒப்பனைக்குள் மறைந்திருக்கும் அழுக்கு உள்ளம்
   கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • thiruvengadam சொல்கிறார்:

    பழ. கரு அவர்களின் கேரக்டரை முகநூல் பதிவில் அங்காடிதெரு திரைப்பட பகுதி காணமுடிந்தது. நம்பியார் , பி.எஸ். வீரப்பா ஆகியோருக்கு பொதுவாக அவர்களுடைய கேரக்டர் இமேஜ் முன்னிருத்தப்படுவது போல் கருப்பையாவின் முதலாளி கேரக்டரும் எலக்ஷ்ன் சமயம் அவருடைய நிஜ கேரக்டராக ?

 4. chandraa சொல்கிறார்:

  ONE THING IS OBVIOUS releasing films is not an easy joke nowadays>>> even thankar bacchhans film simbus film and many other celebreties films could not be released >>>>>>>
  recently sivakarthikeyans film release was heavily blocked by ONE NIDHI OF KARUNAS FAMILY………

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.