நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் –

.

கேட்கும்போதெல்லாம் நெஞ்சை உருக்குகிறது
இந்தப்பாடல். இளையராஜா அவர்களை நாம் எப்படிக்
கொண்டாடினாலும் அவரது தகுதிக்கு,
அது குறைவாகவே இருக்கும்.

பின் குறிப்பு –
1) இந்த பாடலை பாடியவர் யார் என்று
தேடினேன் – காண முடியவில்லை –
தெரிந்தவர் சொல்லுங்களேன்.

2) இந்த பாடல் மட்டும் தனியாக
வேறு format -ல் கிடைக்கிறதா ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் –

 1. ராமராவ் சொல்கிறார்:

  1. இந்த பாடலைப் பாடியவர் பெயர்: சுஜித் வாசுதேவன் (ஷர்ரெத்) என்றும் சுருக்கமாக அழைக்கப் படுகிறார். இவர் ஒரு மலையாள பாடகர் மற்றும் இசையமைப்பாளர். (பாலமுரளிகிருஷ்ணாவின் மாணவர் ). இதற்கு முன் இளையராஜா இசையில் தமிழ் (கிடா பூசாரி மகுடி, டூரிங் டாக்கீஸ்), கன்னடா, தெலுங்கு திரைப்படங்களுக்காக பாடியுள்ளார்.

  2. mp3 formatல் tamiltunes.com சென்று download செய்துகொள்ளலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமராவ்,

   உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  From the internet I gather that the singer is one Sharreth -The first para I understand is from Third Thirumarai — Some one who knows has to confirm it –

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  வறுமை நீங்கி செல்வம் பெற பாட வேண்டிய பதிகப் பாடல்
  (கடன் நீங்கி போதிய பொருளாதாரம் பெற்று வாழ வேண்டிய அதி அற்புதப்பதிகம்)
  திருஆவடுதுறை இறைவனை வேண்டி பாடிய
  திருஞான சம்பந்தர் பாடல்
  ” 1….. இடரினும், தளரினும், எனது உறு நோய்
  தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
  கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
  மிடறினில் அடக்கிய வேதியனே!
  இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
  இல்லையேல்,
  அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! — என்று தொடங்கி —11…… அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
  இலை நுனை வேல்படை எம் இறையை,
  நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
  விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
  வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
  நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே….. ”
  திருச்சிற்றம்பலம் —- என்று முடியும் பதினோரு பதிகங்களை கொண்ட பாடல்கள் — திருஞானசம்பந்தர் யாகம் செய்ய பணம் வேண்டி பாடிய பதிகங்கள் — உடனே இறைவன் ” தங்க பொன்முடிப்பு “கொடுத்ததாக கூறபடுகிறது … நம்பிக்கை இருந்தால் ” வறுமை நீங்க ” அனைவரும் பாடி துதிக்கலாம் தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   ஞானசம்பந்தரின் தமிழை வியப்பதா அல்லது உங்கள்
   இயல்பை வியப்பதா என்று தெரியவில்லை.

   ஒன்று கேட்டால், பத்தாக தருகிறீர்கள்.

   இவ்வளவு “செல்வங்களை” உள்ளடக்கிய உங்கள் பெயரில்
   எதற்கு “பாமரன்” பட்டம்…?

   குறைந்த பட்சம் என்னைப் பொருத்தவரையில்
   இனி நீங்கள் ” நண்பர் செல்வராஜன்” – அவ்வளவே…!
   ( no more paamaran selvarajan…
   only selvarajan…! ).

   நன்றியும், வாழ்த்துக்களும்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.