திருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..!!!

ila.ganesan

பாஜக வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
நீண்டகாலமாக தமிழக அரசியலில் வலம் வருபவர்.
மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, வட மாநிலத்தில்
கவர்னர் பதவி ஏற்க வாய்ப்பு கிட்டியும், தமிழகத்தில்
தீவிர அரசியலில் தொடர்ந்து இருக்க விருப்பம் கொண்டு,
அதை தவிர்த்தவர்…

பொதுவாக தமிழகத்தைப் பொருத்த வரையில் –
தேர்தலுக்கு முன்னர் பாஜக தலைவர்கள் பேசியதையும்,
இப்போது பேசுவதையும் – ஒப்பிட்டுப் பார்த்தால் –
மத்தியில் ஆளும் கட்சியாகி விட்டதால் –
மாநிலத்தின் நலன்களை “காவு” கொடுக்க எந்த அளவிற்கு
அவர்கள் சித்தமாக இருக்கிறார்கள் என்பது நன்றாகவே
புரிகிறது.

அண்மையில், செய்தியாளர் ஒருவருக்கு திரு.இல.கணேசன் அவர்கள் பேட்டி கொடுத்தார்.
பல விஷயங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும்
இங்கே எடுத்துக் கொள்கிறேன்…( மற்றதை பின்னர் பார்க்கலாம்.)

திரு.கணேசன் பேசும்போது “கட் அண்ட் ரைட்” டாக
பேசுவது போல் அவரது குரலும் உடல்மொழியும் இருக்கும்…
ஆனால் – அவரை ” வழ.வழ.கணேசன் ” என்று
ஏன் சொன்னேன் என்பது பேட்டியின் முடிவில்
நான் சொல்லாமலே புரியும்….

செய்தியாளரின் கேள்வி –

கச்சத்தீவை தாரை வார்த்ததால் தானே நமது
மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை பறிபோனது ?
அதை மீட்பதில் என்ன பிரச்னை.. ?

திரு.கணேசனின் பதில் –
(அவரது பேட்டியிலிருந்து, வார்த்தைக்கு வார்த்தை
அப்படியே கொடுத்திருக்கிறேன்…)

—————-

இலங்கைக்கு கச்சத்தீவை தானமாக கொடுத்தது தப்பு…!

அதனை மீட்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு
வருவதில் சிக்கல் இருக்கிறது. பிரதமர் இந்திரா காந்தி
காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தானமாக
கொடுக்கப்பட்டது. இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ்
ஆட்சி செய்த சமயத்தில் கச்சத்தீவு விவகாரம் வந்தது.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளும்,
இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளும் கலந்து
பேசினார்கள். இது பற்றி பேச்சு வார்த்தை நடந்தது.
கச்சத்தீவை வழங்குவது பற்றிய அறிக்கை இலங்கைக்கு
போனது. இது சம்பந்தமாக 36 மணி நேரத்தில்,
” இதில் அநாவசியமாக தலையிடாதே. இந்தியாவுக்கு தான்
கச்சத்தீவு சொந்தம் ” என்று இந்தியா இலங்கைக்கு பதில்
அளித்தது.

தொடர்ந்து பாரத நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போது,
இரு நாட்டு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில்
காரண காரியங்கள் விளக்கப்பட்டு, ” இது ராமநாதபுரம்
மகாராஜாவுக்குத்தான் சொந்தம் ” என்று பத்திரத்தில் உள்ள
உண்மை எடுத்துக் கூறப்பட்டது. தற்போது பிரச்சினை
எல்லையில் என்பதைவிட மீன்பிடிக்கும் முறையில் தான்
இருக்கிறது.

அப்போது பி.ஜே.பி. பாரதீய ஜன சங்கமாக இருந்தது.
அப்போதே வாஜ்பாய் அதனை பகிரங்கமாக எதிர்த்தார்.
கச்சத்தீவு தீர்மானத்தை கிழித்து எறிந்தார். கச்சத்தீவு
சம்பந்தமாக இந்திரா காந்திக்கும, ஸ்ரீமான் – ( இது தவறு,
சிரிமாவோ என்றிருக்க வேண்டும்..) பண்டாரநாயகாவுக்கும் –
பேச்சு வார்த்தை நடந்தபோது, இந்திரா காந்தியிடம்
பண்டாரநாயகா சொன்னது – “இதை எங்களுக்கு விட்டுக்
கொடுப்பதால், உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை…ஆனால்,
இதனை கொடுக்காமல் விட்டால் எனக்கு கௌரவப்பிரச்னை ”
என்றிருக்கிறார்.

இந்திரா காந்தி கச்சத்தீவு குறித்து பாராளுமன்றத்தில்
பேசவில்லை.. அமைச்சரவையில் பேசவில்லை…
இருவருக்கும் இடையில் நட்பு இருந்ததால், பேச்சுவார்த்தை
நடந்து கொண்டிருக்கும்போதே, இலங்கைக்கு கச்சத்தீவை
தானமாக கொடுப்பதாக இந்திரா காந்தி சொல்லி விட்டார்.
” கச்சத்தீவை அப்பன் வீட்டு சொத்து போல ”
கொடுத்திருக்காங்க.

பிரதமர் மோடி அவர்கள் வந்த பிறகு 60 ஆண்டுகளாக
இருந்த பங்களா தேஷ் எல்லை பிரச்னை சுமுகமாக தீர்ந்தது.
நாம் சில இடங்களை விட்டுக் கொடுத்தோம்.
அவர்கள் சில இடங்களை தந்தார்கள்.

அந்த பிரச்னை வேறு.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவை கேட்பது
என்பது வேறு…..!!!

——————————

இப்போது நாம் திரு.கணேசன் அவர்களை கேட்பது –

– தானம் கொடுத்தது திருமதி இந்திரா காந்தி தான் –
எனவே அதை ” தப்பு ” என்று சொல்வதில் இவருக்கு
எந்தவித தயக்கமும் இல்லை..

– ஆனால் ” அதனை மீட்க பாராளுமன்றத்தில்
தீர்மானம் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது.” என்று
இவர் சொல்வதன் பொருளென்ன…?

அதில் என்ன சிக்கல் ….?
பாராளுமன்றத்தில் இவர்களுக்கு மெஜாரிடி இல்லையா …?
இல்லை எந்த கட்சியாவது இதை எதிர்க்கின்றதா…?
குறைந்த பட்சம் அதற்கான தங்கள் கட்சியின்
விருப்பத்தையாவது இவர்கள் இதுவரை வெளிப்படையாக
தெரிவித்திருக்கிறார்களா…?

சிக்கல் யாருக்கு …?

டாட்டாவிற்கும், பாஜக தலைமைக்கு நெருக்கமான மற்ற
சில தொழில் அதிபர்களுக்கும் தங்கள் வர்த்தகத்தை
( ப்ரொஜெக்டை ) இலங்கையில் மேற்கொண்டு
எடுத்துச் செல்வதில் சிக்கல் இருக்கும் என்று சொல்கிறாரா …?

-” பங்களா தேஷ் பிரச்சினை வேறு – இது வேறு ” –
யார் இல்லை என்று சொன்னது ? இரண்டையும் இவர் தானே ஒப்பிடுகிறார்…?

– ” அந்த பிரச்னை வேறு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு
கச்சத்தீவை கேட்பது என்பது வேறு…..”

– ” கச்சத்தீவை அப்பன் வீட்டு சொத்து போல ” இந்திரா காந்தி
கொடுத்துட்டாங்க…” – இவரே சொல்கிறார் அல்லவா …?

“அப்பன் வீட்டு சொத்து போல்” பாராளுமன்றத்தின் ஒப்புதலை
கோராமல் முன்னர் கொடுத்தது தவறு. எனவே
அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் அந்த தவறு
இப்போது சரி செய்யப்படுகிறது.”

-என்பது தானே இவர்களது,
பாஜகவின் நிலையாக இருக்க வேண்டும்…?

பின் ஏன் வருகிறது இந்த குழப்பம் ….?

சுப்ரீம் கோர்ட்டில் கச்சத்தீவு குறித்த வழக்கு நிலுவையில்
இருக்கிறது. பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு,
வழக்கு ஒரு முறை விசாரணக்கு வந்தது. அப்போது, மத்திய
அரசின் சார்பாக இவர்கள் என்ன சொல்லி இருக்க வேண்டும்…?

இந்த வழக்கில் மத்திய அரசின் கொள்கை முடிவில்
மாற்றம் இருக்கிறது… முந்தைய அரசு சமர்ப்பித்த பதில்
மனுவை திரும்ப பெறுகிறோம்… என்று சொல்லி –

“கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு பாராளுமன்றத்தில்
முறையாக ஒப்புதல் பெறப்படவில்லை என்கிற காரணத்தால் –
அந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல ”
என்று மத்திய அரசு இப்போது கொள்கை ரீதியாக
முடிவெடுத்து இருக்கிறது ” –

என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்….?

இதைச் சொல்ல விடாமல் தடுத்தது எது
திரு.கணேசன் அவர்களே…?

———————————-

பின் குறிப்பு –

செய்தியாளர், அவருக்குள்ள நெருக்கடி, கட்டுப்பாடுகள்
அல்லது இயலாமை காரணமாக, தொடர்ந்து
கேள்விகள் எழுப்பாமல், இவர் சொன்னதை மட்டும்
கேட்டுக் கொண்டு பேட்டியை வெளியிட்டு விட்டார்.

பாஜக இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு பெரும் துரோகம்
இழைக்கிறது. கட்சிப்பற்று காரணமாக திரு.கணேசன்
அவர்களும் விஷயத்தை (cover up ) மூடி மறைக்கிறார்.

திரு.கணேசன் இதனை மறுப்பாரேயானால்,
அவர் ஒப்புக்கொண்டால் –
அவர் விரும்பும் இடத்திற்கே சென்று,
குறைந்த பட்சம் இரண்டு பொது நபர்கள் முன்பாக –
இந்த விஷயம் குறித்து விரிவாக கேள்விகள் எழுப்பவும்,
அவருடன் விவாதம் செய்து இதனை நிரூபிக்கவும்
நான் தயாராக இருக்கிறேன்.

விவாதம் முழுவதும் பதிவு செய்யப்பட வேண்டும்
என்பது மட்டுமே எனது ஒரே நிபந்தனையாக இருக்கும்…
(இல்லையெனில் பின்னர் – பின்வாங்கி விடுவார்கள்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to திருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..!!!

 1. ravi சொல்கிறார்:

  http://tinyurl.com/gmjubh2

  interesting,.,.,,.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரவி,

   உங்கள் தகவலுக்கு நன்றி.
   மன்னிக்கவும்.
   நான் இதற்குள் போக விரும்பவில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  தமிழக மக்களா ? யார் அவர்கள் ? அவர்களுக்கு அவர்கள் அப்போது சார்ந்திருக்கும் கட்சிதான் முக்கியம். நாங்கள் கண்டபடி கூட்டணி வைத்து மக்களை குழப்பி ஆதாயம் தேடுவோம். அடுத்த ஆட்சி வந்தால், மறுபடியும் கடல் தாமரை போராட்டம் நடத்துவோம். இதெல்லாம் மக்களுக்கு புரியாது ….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம் அன்பு,

   நமது செய்தியாளர்கள் இன்னும் கூர்மையுடன்
   செயல்பட வேண்டுமென்று நினைக்கிறேன்.

   தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை சொல்லும்போது,
   குறுக்கே தூண்டில் கேள்விகளைப் போட்டு, மறைந்திருக்கும்
   செய்திகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

   பதில் சொல்கிறார்களோ இல்லையோ,
   குறைந்த பட்சம் – அவர்களின் response and re-action -ஐ
   மக்கள் புரிந்து கொள்ள அது உதவுமே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  இல.கணேசன் கூறுவது அவரது சொந்தக் கருத்தா … அல்லது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கருத்தா …?
  Posted on திசெம்பர் 10, 2014 by vimarisanam – kavirimainthan … சுமார் 13 – மாதங்களுக்கு முன் அய்யா … எழுதிய இடுக்கையில் — (http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=133959 ) இந்த’ லிங்க் ‘ கொடுத்து இருந்தீர்கள் — மேற்கண்ட இடுக்கையின் முடிவில் // உச்சநீதிமன்றத்தில் –
  முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த அதே முடிவையே
  பாஜக அரசும் தொடர்ந்தால் – திரு.இல.கணேசன் அவர்கள்
  கட்சியிலிருந்து வெளியே வந்து விடத்தயாரா …?
  திரு. இல.கணேசன் அவர்களே கூறட்டும்.// என்று முடித்து இருப்பிர்கள் … மாதங்கள் தான் ஓடின … மீனவர் மற்றும் கட்ச தீவு பிரச்னை பிரச்னை — அப்படியே இருக்கிறது — நிருபர்களின் ஒரே கேள்வியும் அப்படியே இருக்கிறது — இல . கணேசனது பதிலும் – பேட்டியும் அப்படியே இருக்கிறது — ஆனால் நீங்கள் மட்டும் அன்று : — // திரு.கணேசன் மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டப்படி
  செல்லாது என்றே தற்போதைய அரசு கருதுவதாகவும்
  சொல்லி பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்து விடலாமே…!
  மத்திய அரசு இப்படி ஒரு நிலை
  எடுக்கும்படி செய்து விட்டாரென்றால், முதல் ஆளாக
  நான் அவர் வீடு தேடிச்சென்று, காலில் விழுந்து வணங்கி
  நன்றி தெரிவிப்பேன்.// என்றும் — இன்று தாங்கள் : — // இந்த விஷயம் குறித்து விரிவாக கேள்விகள் எழுப்பவும்,
  அவருடன் விவாதம் செய்து இதனை நிரூபிக்கவும்
  நான் தயாராக இருக்கிறேன் // …. என்றும் உங்களின் இரண்டு வித நிலைப்பாட்டை கூறியும் — அவர்களுக்கு உறைக்குமா … என்பது — சந்தேகம் தானே … ?
  .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   திரும்பவும் ஒரு ஷாக்.
   நான் அநேகமாக, செய்தியை பார்த்ததும்,
   சூடாக எழுதத் துவங்கி விடுகிறேன்.
   முன்னால் இது பற்றி எதாவது
   சொல்லி இருக்கிறோமா என்று பார்க்கும்
   வழக்கம் சாதாரணமாக என்னிடத்தே இல்லை.

   என் பழைய இடுகைகள் அமைந்திருக்கும் விதத்தில்,
   அதனை தேடுவதும் அவ்வளவு சுலபம் என்று
   தோன்றவில்லை. என் ஞாபக சக்தியை பற்றி
   நானே ஒப்புக் கொண்டு விட்டேன்.

   நீங்கள் எப்படியோ பழைய
   இடுகைகளை கண்டுபிடித்து,
   தொடர்பு படுத்தி விடுகிறீர்கள்.
   பாராட்டுகள்.

   அநேகமாக back reference பார்ப்பதில்லை என்பதால்,
   சில சமயங்களில் நான் எதாவது முன்னுக்குப் பின்
   முரணாகக்கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது.

   ஆனால், அந்தந்த சமயங்களில் எனக்கு
   சரி என்று தோன்றுவதை
   எழுதி விடுவதால், இதைப்பற்றிய உறுத்தல்
   எனக்கு இல்லை.

   தமிழக பாஜக தலைவர்கள் சிலரின்
   பார்வைக்கு இந்த தளத்தில், பாஜக குறித்து
   எழுதப்படும் செய்திகள் செல்கின்றன – பார்ப்போம்,
   எதாவது சொல்கிறார்களா என்று.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … தங்களின் அக்கரையில் எந்த முரண்பாடும் இல்லை … வழ.வழ. இல. கணேசனும் — கொழ . கொழ .பா.ஜ.க. அரசும் தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை பற்றி { நீராதாரங்கள் மற்றும் தற்போதைய கெயில் போன்ற } கவலை படாத ” சட்டங்களும் ” தான் முரண்பாடாக இருக்கின்றன … // எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும் // என்ற யங்களின் கூற்று எனக்கும் பிடிக்கும் — மேலும் தாங்கள் எடுத்து கையாளும் செய்திகளும் — எழுத்து நடையும் எனக்கு மிகவும் பிடிப்பதால் — ஏதோ கொஞ்சம் பழைய இடுகைகளின் கருத்து நினைவில் நிற்பதால் மீண்டும் கொண்டுவர முடிகிறது — அவ்வளவே — படித்ததும் மறப்பதும் இருக்கிறது — மறக்க முடியாததும் இருப்பது — தாங்கள் அறியாததா …. ?

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நேற்றைய பொன்ரா-வின் பேட்டியில், பழியை தமிழக மீனவர்கள் மீது மொத்தமாக சுமத்திவிட்டு, தான் இதில் ஒன்றும் செய்வதிற்கில்லை என்று அழுத்தமாக கூறியுள்ளதை கவனிக்கவும் ஐயா!

 5. thiruvengadam சொல்கிறார்:

  கட்சிக்கு பலன் இல்லாத இடத்துக்கு யார் உதவுவார்கள். முன்பு டெல்லி அதிகாரிகளாக தமிழர்கள் இருந்தார்கள். பொதுபிரட்சனைகளில் அண்டைமாநிலத்தவர் போல் இங்கு ஒற்றுமை காட்டுவது இல்லை. வாழப்பாடியார் போல் ஆளுங்கட்சியாயிருந்து ராஜுனாமா செய்ய அவருக்கு பதவியும் இல்லை. இலங்கை மீனவர் ஏற்காத இரட்டைமடி வலை தவிர்ப்பதும் கலாம் ஆலோசணைப்படி இருநாட்டவரும் எல்லை நிர்ணயம் இல்லாது ஆல்டர்நேட் நாள் முறை தொழில் நடைமுறை முயற்சிக்கலாம். பூனைக்கு மணிகட்டுவது யார் ?

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr.LVISS,

   This is not about the original petition which is still pending
   in Supreme Court. This is in response to some petitions filed
   by the fishermen of tamilnadu.

   Original petition filed by JJ and later joined by the
   Govt. of Tamil Nadu has not yet come up for regular hearing.

   • LVISS சொல்கிறார்:

    Mr B V Venkatasubramanian I produced the link because of two sentences in the report –One is that the NDA has taken the same stand as UPA Two that the dispute is between British Govt and Ceylon—-
    Two agreements were signed in 1974 and 1976 according to which the fishermen have no fishing rights and only access is allowed —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr.LVISS,

     How you are conveniently ignoring the point that
     the earlier stand of the BJP was that the katchatheevu agreement
     was void-ab-initio i.e. fundamentally unlawful since it failed to obtain
     the approval of the Parliament.

     Now they stick to a stand which is
     totally contradictory to what they said earlier.

     According to themself, Mr.Vajpai tore the paper in Parliament.
     But now they go against even Mr.Vajpai’s sentiments…!

     Even if you are a BJP sympathiser –
     Please do not try to justify their illogical and selfish behaviour.

     People are watching them…and will re-act when time comes.

     -with best wishes,
     Kavirimainthan

     • ravi சொல்கிறார்:

      !!. People are watching them…and will re-act when time comes.!!

      by how ? defeating BJP and bringing congress !! thats it . so whats the difference.. nothing..

      Admk was perceived corrupt in 1996 , but whether they became honest in 2001.
      Dmk was perceived corrupt in 2001, but whether they became honest in 2006..
      Nothing,

      Alliances , booth management, media are the keys .

      In 2004 -2014 southern states hold the key in parliment ..
      now the tide has turned .its the northern states have the hold.

 6. kalakarthik சொல்கிறார்:

  கா.மை அவர்களுக்கு,
  நம்பினால் நம்புங்கள்.திரு.இல.கணேசன் பற்றி உங்களை எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.எழுதிவிட்டீர்கள்.ஆனால் எனக்கு தோன்றியது என்னவோ, யார்யாரையோ C .M வேட்பாளர் என்று சொல்கிறார்களே.இவரை ஏன் முன்னிறுத்தக் கூடாது என்று தோன்றியது.நல்ல பண்பாளர்.அசிங்கமாக, தரம் தாழ்ந்து பேசாதவர்.நீங்கள் சொன்னது போல் கட்சி மேல் விசுவாசம் உள்ளவர்.இவர் முதல்வரானால் நன்றாக இருக்குமோ?என் எண்ணம் சரியா?
  கலாகார்த்திக்
  கார்த்திக் அம்மா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கார்த்திக் அம்மா,
   நலமாக இருக்கிறீர்களா ..?

   நீங்கள் சொல்வது போல் – திரு.இல.கணேசன் கண்ணியமானவர்.
   நாகரிகமாக பேசக்கூடியவர் – பழகக்கூடியவர் – நான் பலதடவை
   இதை நேரிலும் கண்டிருக்கிறேன். முற்றிலும் உண்மை தான்.

   ஆனால் – மிகப்பெரிய பிரச்சினை –
   அவருக்கு தமிழ்நாட்டின் நலனை விட அவரது கட்சியின்
   நலன் தான் பெரிது. அவரது கட்சிக்கோ, ஓரளவு காலூன்றி –
   அடுத்த தேர்தலில் இன்னும் பலம் பெறக்கூடிய சூழ்நிலையில்
   உள்ள கர்நாடகாவும், கேரளாவும் தான் முக்கியம்.

   எனவே, திரு கணேசனால், தமிழ்நாட்டின் தலையாய
   பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காண முடியாது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. selvarajan சொல்கிறார்:

  // கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-letter-party-volunteers-246360.html …. தலீவருக்கு இனிமே ” நிறைய வலிகளும் — கடந்த காலங்களில் தமிழ்நாட்டுக்காக ” தான் சிறை சென்றதும் — { தன் } மக்களுக்காக…? செய்த தியாகங்களும் — கட்சியை வலு உள்ளாதாக கட்டி காப்பதையும் ” சொல்ல ஆரம்பித்திவிடுவாரா ….? ஸ்டாலின் & கோ வின் நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் போது — தன்னுடைய ” ரெடிமேடு ” ஆயுதமான — கட்சியிலிருந்து விலகி ஓய்வு எடுக்க போகிறேன் – என்கிற கூர் இல்லாத அம்பை விட்டால் — இப்போதுள்ள நிலைமையில் கட்சிக்குள் ” என்ன re – action ” ஏற்படும் …. ? தொண்டர்களுக்கு இனிமே நிறைய கடிதங்களை எழுதி கு {ழப்பி } குவித்து விடுவாரா …. ? அடுத்து ” ஹார்வர்டில் — கமலின் பேச்சு ….. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கலைஞரிடமிருந்து இனி கொஞ்ச நாட்களுக்கு
   இந்த மாதிரி நிறைய “செண்டிமெண்ட்” கடிதங்களை
   எதிர்பார்க்கலாம்.

   சு.சுவாமி offer பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்
   என்றும் எதிர்பார்க்கலாம்.

   விஜய்காந்த் ஒரு முடிவிற்கு வரும் வரை
   ஸ்டாலினும் வழுக்கிக்கொண்டே போவார்.

   இந்த வாரம் குலாம் நபி ஆசாத் புதுவை வரை
   வர இருந்தவரை கலைஞர் அழைத்திருப்பதாகத்
   தெரிகிறது. அவரும் வந்து “ஹல்லோ” சொல்லி விட்டு
   போனால், கலைஞர் கொஞ்சம் பரபரப்பு காட்ட
   அது உதவியாக இருக்கும்…

   இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ” நாடகமே (தமிழ் ) உலகம்…
   அதில் நம் அரசியல்வாதிகள் அனைவருமே நடிகர்கள்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.