கோபாலபுரம் தான் திருப்பதி – கலைஞர் தான் பெருமாள் ……!!!

.

.

சொன்னவர் சற்றே மாற்றிச் சொல்லி இருந்தால் –
திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் போக்கையே அது
மாற்றி இருக்கும்…!

கலைஞரை நாத்திகர் என்றும்
ஸ்டாலின் ஆத்திகர்,
கோவிலுக்குப் போகிறவர்…..
திமுகவை இந்து மதக்கட்சியாக பார்க்கிறவர்…
அடுத்த முதல்வர் பதவிக்கு அவரே தகுந்தவர் –

என்றெல்லாம் சு.சுவாமி சொல்லி இருக்க வேண்டிய
அவசியமே இல்லாமல் செய்திருக்கலாம் – சற்றே
வார்த்தையை மாற்றிப் போட்டிருந்தால்.

இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி என்று
கேட்கிறீர்களா ? விஷயம் திருப்பதி சம்பந்தப்பட்டதாயிற்றே …!
அப்படித்தான் இருக்கும்..!!! 🙂

சரி விஷயத்திற்கு வருவோம்..

———–

சில நாட்களுக்கு முன்னர் கலைஞரின் கோபாலபுரம்
இல்லத்தில் நிகழ்ந்த அற்புதமான ” வேத ஓதுதலை ”
அநேகர் பார்த்திருப்பீர்கள்…

இதுவரை, அதனை பார்க்கும் பாக்கியத்தை பெறாதவர்கள்
இப்போது இங்கே பார்த்து –
தாங்கள் பிறவி எடுத்ததன் பயனை அடையலாம்….!!!

இந்த பாக்கியத்தை கலைஞரும், மற்றவர்களும்
பெறக்காரணமாக இருந்த பெருமகன் யார் என்பது
அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்காது…

அது யார் என்பது,
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக –
அண்மையில் கலைஞர் திருவாரூர் சென்றபோது
நிகழ்ந்த மற்றோர் நிகழ்வின் மூலம் தெரிய வந்தது….

கோபாலபுரத்தில், கலைஞரின்
சாப விமோசனத்திற்காக வேத விற்பன்னர்களை
அழைத்துச் சென்றவர்,

திருவாரூரில் கலைஞரை தெய்வமாகவே ஆக்கி விட்டார்…!
திருவாரூர் பொதுக்கூட்டத்தில், கலைஞரை எதிரே
வைத்துக் கொண்டு – அந்த பெருமகனார்
ஆற்றிய உரையின் ஒரு பகுதி கீழே –

———-

“எங்களை எல்லாம் காத்து வருகின்ற
திருவாரூர் தியாகராஜ பெருமானே …! 🙂
(கலைஞரைத்தான் விளிக்கிறார்…! )

உலகத்தில் இப்படிப்பட்ட தலைவரை
எங்கும் பார்க்க முடியாது. பனித்துளியை விட
சுத்தமானவர் இவர். 🙂 🙂

இவர் ஆற்றிய பணிக்கு முழு நிலவைக்கொண்டு
மோதிரம் போட வேண்டும் என்பது என் ஆசை.

விண்ணிலுள்ள கடவுளாக நீங்கள் மண்ணுக்கு
வந்திருக்கிறீர்கள். ( !!! ??? )

இராமானுஜ காவியத்தை யாராலும் எழுத முடியாது.
திருப்பதியில் உள்ள தேவாதி தேவர்கள் எல்லாம்
கீழே இறங்கி வந்து, கோபாலபுரத்து படிக்கட்டுகளை
தொட்டு ஏறிய அந்த காட்சியைப் பார்க்க
திருப்பதி கோயில் மாதிரியே இருந்தது. 🙂

பெருமாள் மாதிரியே தலைவர் அமர்ந்திருந்தார்…!!! 😀 😀

இதே போல் –

பூடான், நேபாள பிரதமர்கள் எல்லாம்
கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று ஏங்கி
நிற்கக்கூடிய சத்ய சாய்பாபாவும் தலைவரைத் தேடி
வீட்டுக்கு வந்து ஆசீர்வாதம் செய்து விட்டுச் சென்றார்…!!!

இதெல்லாம் உலக அதிசயம்.

————————-

இப்படி எல்லாம் சொல்கின்ற பெருமகனார்
யாரென்று கேட்கிறீர்களா …?
திருவாளர் ஜெகத்ரட்சகன் என்னும்
தொண்டரடிப் பொடியாரின் திருவாரூர் உரையின்
ஒரு பகுதி தான் இது.

முழு உரையையும் கேட்க நமக்கு கொடுத்து வைக்கவில்லை…
எனவே, கிடைத்தவரை திருப்தி கொள்வோம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கோபாலபுரம் தான் திருப்பதி – கலைஞர் தான் பெருமாள் ……!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  These PUROHITS who chanted vedic verses at the doors of kalignar had done irreparable harm to hinduism …….Kalignar always stood against sanskrit…….kalignar had abused hindus hinduism ……Any sane self respecting hindu cannot approve these actions of these PUROHITS WHAT IS ARJUN SAMPATH OF HINDU MUNNANI AND PERIAVAR RAMA GOPALAN DOING NOWADAYS………

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இப்படி நினைப்பது தவறு. அவர்கள் கருணானிதியை வாழ்த்திப் பாடவில்லை. வேத கோஷமிட்டனர். கருணானிதி அதைக் கேட்கும்படியான வாய்ப்பைப் பெற்றார்.

 2. drkgp சொல்கிறார்:

  இந்த கால் பிடித்தே கோடிகளை சேர்க்கும் ஜென்மங்கள் இறுதியில்
  வெறுங்கையோடுதான் மண்ணினுல் செல்லவேண்டும் என்பதை
  உணராமல் போவது ஏனோ?

 3. selvarajan சொல்கிறார்:

  2009 – ல் தி.மு.க.வில் சேர்ந்த — வீரவன்னியர் பேரவை என்றும் பின் அதையே ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மாற்றியவருமான திரு ஜெகத்ரட்சகன் ” கலைஞர் அவர்களை ” பெருமாள் என்றும் — கோபாலபுரத்தை திருப்பதி என்றும் கூறுவது ஒரு புறம் இருக்க — இன்று தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டி பாடுபடும் கலைஞர் குடும்ப பத்திரிக்கையாக மாறிப்போன விகடனில் அன்று ப .திருமாவேலன் எழுதியதை மேற்கோள் காட்டியும் — அந்த கால ஒரிஜினல் தி.மு.க. நடிகரும் — அண்ணாவின் அன்புக்கு உரியவருமான திரு எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேட்டியையும் இடுக்கைகளாக திரு .கா.மை அவர்களினால் வெளிவந்ததை நண்பர்கள் படித்து ரசிக்க …. // கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….
  Posted on மார்ச் 14, 2013 by vimarisanam – kavirimainthan —- கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……Posted on செப்ரெம்பர் 10, 2014 by விமரிசனம் – காவிரிமைந்தன் // வடகலையா … தென்கலையா என்பதும் அந்த ஜெகத்ரட்சகனுக்கே — வெளிச்சம் … அப்படி தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மலைப்பாக இருக்கிறது.
   நான் இன்னும் என்னவெல்லாம் எழுதி இருக்கிறேனோ –
   எனக்கே நினைவில்லை….!!!

   உங்கள் பெயருக்கு நன்றி சொல்லி ,
   அந்த இரண்டு இடுகைகளையும்.
   நேயர் விருப்பமாக -அல்ல ….!!!
   என் விருப்பமாக மீண்டும் வெளியிடுகிறேன்.

   -இது தமிழ் மக்களுக்கு நாம் செய்யும்
   பணியாக இருக்கட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஜெகத்ரட்சகன் வைணவகுலத்தில் வந்தவர். அவர் தந்தையார் மட்டுமல்ல, ஜெகத்ரட்சகன் அவர்களும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் (வைணவ பக்திப் பாடல்கள்..தமிழ் வேதம் என்று போற்றப்படுபவை. 6-7ம் நூற்றாண்டுவரை அவதரித்த தமிழ் ஆழ்வார்கள் செய்தது) நல்ல அறிவு உள்ளவர்.

  “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதைப் புரிந்துகொண்டு, கருணானிதியுடன் சேர்ந்து பணத்தைச் சேர்க்கிறார். ஏனோ..தலைவர்களுக்கு (கருணானிதி, ஜெ, மற்றும் எல்லோரும்) புகழ்போதை அதிகம். அதுவும், இந்திரன் சந்திரன் என்று புகழுவதைக் கேட்க ரொம்ப விரும்புகிறார்கள். கருணானிதிக்குப் போலி புகழுரைகள் பிடிப்பதுபோல, ஜெவுக்கு, போலி பணிவு பிடிக்கிறது. அதனால்தான் அங்கு எல்லோரும் தலைவணங்குகிறார்கள். இங்கு, பொய்ப் புகழுரைகளை மழைபோல் பொழிகிறார்கள்.

  • S Rajagopalan சொல்கிறார்:

   Jagath Rakshagan arranged an event in Kamaraj memorial immediately after Semmozhi Maanadu. He invited Velukkudi and Trichy Kalyanaraman to speak on Saivism and Vaishnavism. Mu Ka was the thalaivar for the event. As usual Kalyanaraman praised MU Ka in that speech but Velukkudi did us proud by speaking about vaishnavism in s befitting manner which would make all proud.

 5. selvarajan சொல்கிறார்:

  // கலைஞர் அவர்களே கவலை வேண்டாம் – நீங்கள் நேற்று சொல்லி இருப்பதையும், சொல்லாமல் விட்டதையும் – சேர்த்தே நினைவு கூர்கிறோம்….
  Posted on ஒக்ரோபர் 14, 2013 by vimarisanam – kavirimainthan … // இந்த இடுக்கையில் உள்ள செய்தியையும் ” The K Company ” படத்தையும் மீண்டும் படித்தும் — பார்த்தால் எப்படி இருக்கும் …. ? இதே படத்தை கொஞ்சம் மாற்றி — கலைஞரை சங்கு – சக்கரதாரியாகவும் — மனைவி – துணைவியை சீதேவி — பூதேவியாகவும் — மற்றவர்களை தகுதிக்கு தக்கவாறும் — படம் போட்டால் — ஜெகத்ரட்சகன் மிகவும் சந்தோஷ பட்டு — ஆனந்த கூத்தாடுவார் தானே … ? அவரைவிட கற்பனை அதிகமாகுமோ … ?

 6. today.and.me சொல்கிறார்:

  //பெருமாள் மாதிரியே தலைவர் அமர்ந்திருந்தார்…!!! 😀 :-D//

  பெருமாளே ! இதென்ன சோதனை ?
  😦 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.