கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……

.

கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……
( SSR அவர்கள் மறைவதற்கு முன்பாக எழுதப்பட்டது )

S.S.ராஜேந்திரனுக்கு இப்போது வயது 86 – உடல்நிலை
காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
அரசியலிலும் இல்லை.

ssr-latest

இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்கிற
பெருமை ராஜேந்திரனுக்கு உண்டு. ஒரு காலத்தில் எஸ்.எஸ்.ஆர்
தென் இந்திய நடிகர் சங்கச் செயலாளராகவும் சிறப்பாகப்
பணியாற்றி இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு
பேருடனும் நல்ல நட்புறவுடன் இருந்து –
ஒரே காலத்தில், இருவருடனுமே சேர்ந்து நடித்துக்
கொண்டிருந்த பெருமைக்குரியவர்.
சிவாஜிக்கு அடுத்து, திரைப்படங்களில் மிகச்சிறப்பாக தமிழை
உச்சரித்தவர் எஸ்.எஸ்.ஆர்- தான் என்று தயக்கமின்றி சொல்லலாம்.

ssr-and-mgr

அறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தவர்.
திமுக வின் துவக்க காலத்தில் இருந்தே, அதில் தீவிரமாகப் பணியாற்றியவர். திமுகவின் துவக்க காலத் தலைவர்கள்
அனைவருடனும் இணைந்து பணியாற்றியவர்.
திமுக வில் இருந்த காரணத்தினாலேயே
புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர்…..அதற்காகவே
அண்ணாவால், “இலட்சிய நடிகர்” என்று பட்டம் சூட்டப்பட்டவர்….

(இதையெல்லாம் நான் சொல்ல வந்தது
இன்றைய இளைய தலைமுறைக்காகத்தான்.
மூத்தவர்கள் எஸ்.எஸ்.ஆர் -ஐ இதைவிடவும்
நன்றாகவே அறிவார்கள்….!)

அண்மையில் S.S.ராஜேந்திரன் ஒரு பேட்டி
கொடுத்திருக்கிறார். ரஜினி, கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின்
ஆகியோர் பற்றிய தன் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து கலைஞர் கருணாநிதி தொடர்புடைய
ஒரு சிறிய பகுதி மட்டும் கீழே –

( கருணாநிதியைப் பற்றி “வனவாச”த்தில் கண்ணதாசன்
சொல்லாத விஷயமா …? இருந்தாலும்,
இது S.S.ராஜேந்திரன் – அவருடைய பாணியில் ….)

————-

திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணா தான் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வந்தார். கட்சிக்கு உழைத்த ஒவ்வொருவரையும் பொதுச்செயலாளர் பதவியில் அமரவைத்து
பார்க்க வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

‘நானே எத்தனை நாளைக்கு கட்சிப் பதவியில் இருப்பது’ –
கொஞ்ச நாள் நெடுஞ்செழியன் இருக்கட்டுமே என்று
ஆசைப்பட்டார். அப்போது கட்சியில் ‘நீ பெரியவனா –
நான் பெரியவனா’ என்று கடும் போட்டி – ஈவிகே சம்பத்,
நெடுஞ்செழியன் இருவருக்கும் நடுவே இருந்து வந்தது.

நெடுஞ்செழியனை பொதுச்செயலாளர் ஆக்க அண்ணா
ஆசைப்பட்டார். அன்று நடந்த திமுக செயற்குழுவில்,
“தம்பி வா – தலைமை ஏற்க வா” – “உன் ஆணையை ஏற்று
நடக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும்
ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று அண்ணா
சொன்னார்.

அதைக்கேட்டு ஈவிகே சம்பத்தை விட கடுமையாக
அண்ணாவின் மேல் ஆத்திரம் கொண்டவர் கருணாநிதி தான்.
( இதை எல்லாம் சொல்வது எஸ்.எஸ்.ஆர். என்பதை
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்….)

——-

அண்ணாவுக்குப் பிறகு தன்னால் ஏன் கருணாநிதியுடன்
நட்புடன் இருக்க முடியவில்லை என்பதை விளக்கும்போது
எஸ்.எஸ்.ஆர். கூறுகிறார் –

“அண்ணாவின் பரந்து பட்ட சிந்தனை கருணாநிதிக்கு இல்லை.
அது தான் காரணம். மிசாவுக்குப் பிறகு திமுக செயற்குழு
கூட்டம் நடந்தது. அப்போது மதியழகன் எழுந்து –
“எத்தனை நாளைக்கு தலைவர் பதவியில் நீங்களே இருப்பது ?”
என்று கேட்டார்.

அப்போது கோபமாக எழுந்த இளம்வழுதி
( பரிதி இளம்வழுதியின் தந்தை ) “நீ பேசாம உட்கார்”
என்று மதியழகனை அமரச்சொல்லி சத்தம் போட்டார்.

உடனே ஆவேசமாக எழுந்த நான் ( SSR ) “மதியழகனை
பேச விடுங்கள்”
என்று சொன்னேன்.

mathialagan_vpraman_anna_rajaji_karunanidhi

திருவாளர்கள் மதியழகன், வி.பி.ராமன், அண்ணா, ராஜாஜி கருணாநிதி ஆகியோர் உள்ள ஒரு மேடை


(புகைப்படத்தில், முதலில் அமர்ந்திருப்பவர் தான் மதியழகன் )

அப்போது கருணாநிதி எழுந்து “நீ முதல்ல உட்கார்.
உன்னோட யோக்யதை எனக்குத் தெரியாதா ?”
என்று கேட்டார்.

நானும் பதிலுக்கு ” உன் யோக்யதை எனக்குத் தெரியாதா ?” என்று கேட்டேன். ( எஸ்.எஸ்.ஆருக்கு கருணாநிதியால்
அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினை
ஏற்பட்டிருந்தது – அதை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது என்பதால் நான் விவரிக்கவில்லை.. அது பற்றி தெரிந்தவர்கள் அவர்களுக்குள் நினைவு கூர்ந்து கொள்ளலாம்… )

“நான் கட்சியோட தலைவர்” என்றார் கருணாநிதி.

அதற்கு நான், “உன்னை தலைவனாகவே நான் என்றைக்கும் ஏற்றுக் கொண்டது இல்லை….” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பி விட்டேன்.(ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் அனைவரிடமும் அப்போது
நெருக்கம் இருந்தது )

———————————–

இன்றைய திமுகவைப் பற்றி –

“கழகம் ஒரு குடும்பம்” என்று அன்று அண்ணா சொன்னார்.
“கழகம் என் குடும்பம்” என்று சொல்லி
கருணாநிதி நிரூபித்து வருகிறார்.

அழகிரி-ஸ்டாலின் சண்டை இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.
அழகிரிக்கு எட்டு வயசு இருக்கும்போது கருணாநிதியைப்
பார்க்க கோபாலபுரம் வீட்டுக்குப் போனேன். அப்போது –
அழகிரியும், ஸ்டாலினும் குடுமிபிடி சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்கள். கருணாநிதி இருவரையும்
விலக்கி விலக்கி பார்த்தார். நடக்கவில்லை.

என்னைப் பார்த்து “ராஜூ, இவனுங்களை கண்டிச்சு வை”
என்று சொன்னார். நான் உடனே கோபமாக இருவரது
சட்டையையும் பிடிக்க, ஸ்டாலின் நழுவி ஓடி விட்டார் ( ! )
அழகிரி மாட்டிக்கொண்டார். நான் கோபத்தில் வேகமாக
முகத்தில் அறை விட்டேன்.

சிறுவர்களாக இருந்து கோபாலபுரம் வீட்டுக்குள்
சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
இப்போது வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அண்ணா
அறிவாலயத்தில் சண்டை போட்டு வருகிறார்கள்.
இவை எதுவும் புதிதல்ல.

“திமுகவை ஆரம்பித்து கட்சியை வளர்ப்பதற்கு
அண்ணாவோடு – நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டது …

திமுக ஆட்சியில் அமர்ந்தது ….

எல்லாம் என் கண் எதிரிலேயே நடந்தது.

கருணநிதி குடும்பத்தினர் திமுகவை அழிக்கும்
காட்சியையும் இப்போது என் கண்ணெதிரே பார்த்துக்
கொண்டிருக்கிறேன்”.

——————————–

கலைஞர் கருணாநிதி குறித்து கருத்து கூற
எஸ்.எஸ்.ஆர் – க்கு இல்லாத உரிமை
வேறு யாருக்கு இருக்கிறது …..??

————–
பின் குறிப்பு – இந்த இடுகை இதே தலைப்பில்
இதே தளத்தில் – செப்ரெம்பர் 10, 2014 அன்று
வெளிவந்தது. இன்றைய மறுபதிவுக்கு காரணமான
நண்பர் செல்வராஜனுக்கு நன்றிகள்.

—————————————–
இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் –

A.Raghavan சொல்கிறார்:
8:09 முப இல் செப்ரெம்பர் 10, 2014 (மேம்படுத்து)
பத்திரிக்கையில் போடுவதில்லை என்று உறுதி
அளித்து விட்டு எஸ்.எஸ்.ஆர்.இடம் பேசினால் –
கருணாநிதி பற்றி இன்னும் நிறைய விஷயங்கள்
சொல்வார்.

srinivasanmurugesan சொல்கிறார்:
3:17 பிப இல் செப்ரெம்பர் 10, 2014 (மேம்படுத்து)
1.விளையும் பயிர் முளையிலேயே தெரிந்துள்ளது…

2. ( எஸ்.எஸ்.ஆருக்கு கருணாநிதியால் அவரது சொந்த
வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருந்தது –
அதை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது என்பதால்
நான் விவரிக்கவில்லை.. அது பற்றி தெரிந்தவர்கள்
அவர்களுக்குள் நினைவு கூர்ந்து கொள்ளலாம்… )—
–இதனை பதிவிடாமலேயே இருந்திருக்கலாம்.
இது குறித்து அறிந்தவர்கள் யார் என்று எப்படி அறிவது
.நாகரீகமில்லை என்பதை தெரியப்படுத்துவானேன்…
ஆவலை தூண்டுவானேன்….

todayandme சொல்கிறார்:
8:01 முப இல் செப்ரெம்பர் 11, 2014 (மேம்படுத்து)
//// அப்போது கருணாநிதி எழுந்து “நீ முதல்ல உட்கார்.
உன்னோட யோக்யதை எனக்குத் தெரியாதா ?” என்று கேட்டார்.

நானும் பதிலுக்கு ” உன் யோக்யதை எனக்குத் தெரியாதா ?”
என்று கேட்டேன். ( எஸ்.எஸ்.ஆருக்கு கருணாநிதியால்
அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினை
ஏற்பட்டிருந்தது – அதை இங்கு எழுதுவது நாகரீகமாக
இருக்காது என்பதால் நான் விவரிக்கவில்லை.. அது பற்றி
தெரிந்தவர்கள் அவர்களுக்குள் நினைவு கூர்ந்து கொள்ளலாம்… ) //

கேள்வியும் பதிலும் எஸ்எஸ்ஆருக்கு
மிகவும் முக்கியமானவை, அவர்களுக்கான அந்யோன்ய
உறவை வெளிப்படுத்துபவை.
ஆனால் அதை கா.மை. பதிவிடும்போது பின்குறிப்பிட்டுத்தான் வெளியிடவேண்டும். இதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
கேள்வி – பதில், இரண்டுக்குள்ளும் ஒரு உள்குத்து
இருக்கிறது-அதை வெளிப்படையாகச் சொல்லமுடியாது-
சமகாலத்தில் வாழ்ந்தவர்களில் சிலருக்குத்தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள் தங்களுக்குள் நினைவுகூரலாம்-
இந்த அடைப்புக்குறிக்குள்ளான குறிப்பைத் கா.மை
தராவிட்டால் அது என்ன ‘உன் யோக்யதை’ என்று
கேள்விகள் வரிசையாக எழும். எனவேதான் பி.கு.

உங்களுக்கு அதைப் பற்றித் தெரிந்துகொள்ள
ஆவல் இருக்குமேயானால் அக்கால நாளிதழ்களையோ
அல்லது அக்காலத்தவர்களின் சுயசரிதைகளையோ
வாங்கிப் படித்தீர்களானால் கண்டுகொள்ளலாம்.

srinivasanmurugesan சொல்கிறார்:
5:38 முப இல் செப்ரெம்பர் 12, 2014 (மேம்படுத்து)
நன்றி அய்யா!!!!!

todayandme சொல்கிறார்:
8:11 முப இல் செப்ரெம்பர் 11, 2014 (மேம்படுத்து)
குழந்தைகள் என்றால் அதுவும் ஒரேவீட்டில் இரு சகோதரர்கள்
என்றால் சண்டைவரத்தான் செய்யும். சண்டையிடாத
குழந்தைகள் இருக்கவேமுடியாது.

கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் இளையவர்.
மாட்டிக்கொண்டு அறைவாங்கிய மூத்தவர்.
அப்பொழுதுமே இப்படித்தானா! சுவையான நிகழ்வு
குழந்தைகளாக இருந்தபோது. 2ஜி-தொலைக்காட்சி-தி.மு.க.சொத்துகள்-கட்சிப்பதவிகள்-
அரசாங்கப்பதவிகள் அனைத்திலும் இதுவே தொடரும்போது –
இப்பொதும் இப்படித்தானா? என்று அலுப்புத்தட்டுகிறது.

அப்பொழுதும் மகன்களைக் தன்னால் கண்டிக்க இயலாத
கையாலாகாத அப்பா, மற்றவர்களை விட்டு கண்டிக்கச்
சொல்லும் (கண்டிப்பதுபோல் நடிக்கச்சொல்லும்) அதே ரோலை இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

நடிக்கச்சொன்னால் உண்மையாக அறைவிடுபவரை,
(அதுவும் சொந்த மகனை) என்ன செய்தால் தகும்.
தூக்குடா கட்சியை விட்டு. 🙂

இனிய நினைவுகளை இப்பொழுதாவது பகிர்ந்துகொண்ட
எஸ்எஸ்ஆர், இங்கு பகிர்ந்த கா.மை. இருவருக்கும் நன்றி

vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
9:19 முப இல் செப்ரெம்பர் 11, 2014 (மேம்படுத்து)

உங்கள் உற்சாகமான விளக்கங்களுக்கு
நன்றி நண்பரே.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
——————————————

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி…… க்கு 2 பதில்கள்

  1. CHANDRAA சொல்கிறார்:

    In this K M tournament kalaignar had played too many single games………..Besides he had complained of his continuous eye problems……..the lovers of this K.M tournament feel that kalignar requires the much needed rest ………for sometime atleast……….Why K M tournament organisers never invite other TOP players………….

    • thiruvengadam சொல்கிறார்:

      அரசியல் வாழ்வு புலிவால் பிடித்ததை ஒத்தது என்பது தெரிந்ததே. தொடர் ஈடுபாடு இல்லாவிடில் பல இன்னல்கள் சந்திக்கவேண்டியுள்ளாதால் இந்த நிலை. மு க அவர்களின் கடந்த கால செயல்கள் ஞாபகப்படுத்தல் எந்த அளவு தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் என்று பார்ப்போம். என் பழைய நினைவில் ஒன்று : அண் ணா அவர்கள் திமுக ஆரம்பிக்க நேப்பியர் பார்க்கில் கூட்டிய நபர்களில் மு க இல்லை என்பதை மற்ற நண்பர்கள் உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இத்தகைய பதிவுகள் எதிர்நிலையில் உள்ளவருக்கும் போட இயலாத நிலையில் வடிவேல் காமெடியை சற்று மாற்றி ரும் போட்டு தேடி எடுத்தவை எனலாமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.