” பசுநேசன் ” மு.க. ஸ்டாலின் – சு.சுவாமி காட்டிய வழியில் பயணம்…?

.

அரச குமாரனாகிய சித்தார்த்தன் என்னும் கௌதம புத்தருக்கு
தனது 29-வது வயதில் ஞானம் பிறந்தது. “ஆசை”யே அனைத்து
துன்பங்களுக்கும் காரணம் என்று உணர்ந்தார். செல்வங்கள்,
அரச, சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து துறவு
மேற்கொண்டார். மக்களை வாட்டும் பசி, பிணி, மூப்பு
ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் அவர்களுக்கு
வழியை போதித்தார்.

(முதல்) மந்திரி குமாரராகிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது 62-வது வயதில் ” புதிய ” ஞானம் பிறந்திருக்கிறது…

தனது பிறவிப்பயனாகிய “தமிழ்நாட்டின் முதலமைச்சர்”
என்னும் இடத்தை அடைவது எப்படி என்று அல்லும் பகலும்
யோசித்து,

புதிய ஞானத்தந்தையாகிய அறிஞர் (உபயம்-திரு.இல.கணேசன்)
சுப்ரமணியன் சுவாமி என்னும் குருவை பின்பற்றினால் ஒழிய
தான் முக்திப்பேற்றை அடைய வழியில்லை என்பதை உணர்ந்து
அந்த வழியில் பயணத்தை துவங்கி விட்டார் என்று தெரிகிறது.

நேற்றிரவு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்களுடன் திவ்ய-தரிசனம்
மற்றும் உபதேசம்.

சுப்ரமணியன் சுவாமி என்னும் குருவை திருப்தி செய்ய
இன்னும் என்னென்ன செய்யலாமென்று யோசித்தபோது
திடீரென்று தோன்றிய ஒரு அற்புத எண்ணம் போலும்.

இதுவரை தமிழக அரசியல்வாதிகள் எவர் சிந்தனையிலும்
உதிக்காத அற்புத யோசனையாகிய “பசுவுக்கு அகத்திக்கீரையும்
பழங்களும்” கொடுத்து தன்னை “முழு-இந்து” வாக
காட்டிக்கொள்வது….!!!
விளைவு – இன்று காலை “நமக்கு நாமே” பயணம் போகும்போது, ” கோசாலா ” என்னும் –

( அந்தணர்கள் எனப்படுவோர் நடத்தி வரும்
வயது முதிர்ந்த, பயன் தரவல்ல பசுக்களை அவற்றின்
இறுதிக் காலம் வரை காக்கும் நிலையம் )

– பசுக்கள் காப்பகம் சென்று, மாடுகளுக்கு “அகத்திக்கீரையும்,
வாழைப்பழமும் ” கொடுத்து வந்தார்.

————-

ஆமாம் – எம்.என்.நம்பியார் வேடத்தில்,
“ராஜகுரு” வேடத்தில் – அவருக்கு பதிலாக
அறிஞர் சுப்ரமணியன் சுவாமியை வைத்து “மர்மயோகி-பார்ட்-2”
எடுத்தால் எப்படி இருக்கும்……???

————————
நகைச்சுவைக்காக எழுதப்பட்ட மேலேயுள்ள இடுகையை
விட்டு விஷயத்திற்கு வருவோம்….
————————–

இது வரை திரு.ஸ்டாலின்- பாஜக வுடன் கூட்டணி பற்றிய
செய்திகளுக்கு நேரடியான பதிலை அளிக்கவில்லை.

“கூட்டணி என்று நான் சொன்னேனா ….?
யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது….! ”

– இவ்வளவு தான் பதில்.

———–
“மதவாத சக்தியான பாஜக வுடன் திமுக
என்றும் கூட்டணி வைக்காது.”

“கலைஞர் தான் கழகம். கலைஞர் இல்லாத கழகத்தை
எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது ”

“சுப்ரமணியன் சுவாமியை நாங்கள் யாரும் போய் கூட்டணி
சேருகிறீர்களா என்று கேட்கவில்லை…கேட்க வேண்டிய
அவசியமும் திமுக வுக்கு வராது…”

” திமுக தான் தேர்தலில் வெற்றி பெறும்.
ஆறாவது முறையும் கலைஞர் தான் முதலமைச்சராக
பொறுப்பேற்பார் ”

————

– இவை அனைத்தையும் அல்ல…
இதில் ஏதாவது ஒன்றை சொல்லி இருந்தாலும் கூட,

ஸ்டாலின் இன்னும் தந்தை வழியில் தான் செல்கிறார்
என்று சொல்ல முடியும்….

ஆனால் அவரது இப்போதைய போக்குகள் –
அவர் தனது “ஞானத்தந்தை “யின் வழியில் பயணிக்க
முயற்சி செய்வதையே காட்டுகிறது…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ” பசுநேசன் ” மு.க. ஸ்டாலின் – சு.சுவாமி காட்டிய வழியில் பயணம்…?

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மீனவன் ஓரக் கடலில் தூண்டில் போடுகிறான். அவங்கிட்ட, என்ன, மீன் பிடிக்க வந்தியா, நண்டு பிடிக்க வந்தியா அப்படின்னெல்லாம் கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? எது கிடைக்கப்போகிறது என்பது அவனுக்கு எப்படித்தெரியும்? நாளை பா.ஜ.காவோடு சேரும் நிலை வந்தால், என்ன பதில் சொல்லமுடியும்? ஸ்டாலின் முடிந்த அளவு அவரது முகமும், முக்கியத்துவமும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இப்போதெல்லாம், டி.ஆர்.பாலு போன்றவர்கள் உடனிருக்காமல், மற்றவர்களைச் சந்திக்கிறார். கருணானிதி காலத்துக்குப் பிறகு, இது அவருக்கு மிகவும் உபயோகப்படும்.

 2. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Both SuSa and MKS are trying to use each other…… this “use” will soon turn to “exploit”, “deceive”, “damage” etc….. it is purely “brilliance and making moves” dependent…… MKS may not be that tactical as his his dad in making moves with/against SuSa….. Ultimately it is going to cost him very big….. if this goes in the same pace and way then along with MKS, slowly the party will also loose identity…..

 3. selvarajan சொல்கிறார்:

  சூப்பரான செய்திகளால் மக்களுக்கு தமாஷா பொழுது போகுது —// சட்டசபைத் தேர்தல்ல திமுகதான் ஜெயிக்குமாம்…. “ஆவி” பறக்க ஒரு கருத்துக் கணிப்பு…! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/opinion-poll-from-ghosts-246636.html?…. { ஆவி — என்றவுடன் ஜால்ரா பத்திரிக்கையை விட ஒரு படி மேலே } —– ராமானுஜர் தொடர் — திருகொஷ்ட்டியூர் தரிசனம் — யாகங்கள் — கோயில்- கோயிலாக சுற்றிவருவது — திருப்பதி நாமங்கள் வீட்டிற்கு வந்து மந்திரம் ஓதுவது — தாடி சாமியார் சந்திப்பு — போலியான கருத்து கணிப்பு — இதெல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகாது என்பதால் — இப்போ ” பேய் — ஆவி ” என்று குடும்பம் சுத்த ஆரம்பித்துள்ளது — எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போல — மூளை சூடேறி — முத்தி போய் அலையுது — குடும்பம் … ?????? அதன் ஒரு பகுதிதான் ” பசு நேசன் ” பார்ட் … ! அடுத்து ” குறி ” சொல்லும் ஆசாமிகளிடம் போனாலும் ஆச்சர்யம் இல்லை — ஆமா … ஒருவர் மாட்டுக்கறி விருந்தெல்லாம் வைத்தாரே — கருணாநிதியின் பகுத்தறிவை தாங்கும் — தடி ” மானமிகு… ? ” வீரமணி — இந்த ” வேஷம் கட்டிய ” கூத்துக்களை பார்த்து — தலைமறைவாகி .. விட்டாரா …. ? எந்த ஊடகமும் இதை பற்றி — கூவாமல் இருப்பதன் – மர்மமென்ன …. ?

 4. CHANDRAA சொல்கிறார்:

  I sincerely want to know how and where dr swamy is connected with ravishankers meeting with stalin……….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.