அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட கலைஞர் வேண்டுகோள் ….!!!

.

இன்றைய செய்திகள் –

செய்தி-1 –

3-வது நாளாக தொடரும் போராட்டத்தின்
ஒரு கட்டமாக அரசு ஊழியர்கள் இன்று காலை
11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீஸ் சாலை
சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக,
திடீரென சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

aasiriyargal-1`

govt.servants mariyal

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுக்கு
எதிராகவும் கோஷமிட்ட ஊழியர்கள் சிலர் சாலையின்
குறுக்கே படுத்துக் கொண்டனர்.

இதனால், அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல
இயலாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட தூரத்திற்கு
வாகனங்கள் சாலையில் காத்து நின்றன.
இந்தப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடித்தது.

போலீசார் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டவில்லை….

போக்குவரத்து தடைபட்டதால், எரிச்சலடைந்த,
வாகனங்களில் காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள்,
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.

சில நிமிடங்களில் போராட்டக்காரர்களுக்கும் –
பொதுமக்களுக்கும் பெரும் மோதல்
உருவாகும் சூழ்நிலை உருவாகியது.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்
வேனில் ஏற்றிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து
அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

செய்தி-2

போராட்டத்தை திரும்பப்பெற அரசு ஊழியர்களுக்கு
கருணாநிதி வேண்டுகோள் – அறிக்கை…!

தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும்
இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதற்கிடையே
தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பொறுத்துப் பொறுத்துப்
பார்த்துக் கடைசியாகப் பொங்கியெழுந்து இந்த அரசுக்கு எதிராகப்
போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

“தினகரன்” தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல ( ? )
இதற்கு முன் இத்தனைப் போராட்டங்களைத் தமிழகம்
ஒரே நேரத்தில் சந்தித்ததில்லை என்று தான் கூற வேண்டும்.

அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும்
“ஏழாம் பொருத்தம்” என்பார்களே, அது போல ஒரு பொருத்தம்
உண்டு.

அரசு அலுவலர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் விரோதமாக
அ.தி.மு.க. அரசு செய்த இத்தகைய கொடுமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.


இந்த ஆட்சி முடிய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்ற
நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி, தங்களை வாட்டி
வதைத்துக் கொள்ளத் தேவையில்லை

எனவே அ.தி.மு.க ஆட்சியின் சர்வாதிகார – பழி வாங்கும்
அணுகு முறையை எண்ணிப் பார்த்து, போராட்டத்தில்
ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத் திரும்பப் பெற்றுக்
கொண்டு, பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத்
தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய
குடும்பத்தினருக்கும் நல்லது;

காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர்!
என்ற கருத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது
என்னுடைய கடமை எனக் கருதுகிறேன்.

பின் குறிப்பு –

இரண்டு கேள்விகள் –

1) இந்த இரண்டு செய்திகளுக்கும் எதாவது
தொடர்பு இருக்கிறதா ….?

2) “என்ன இருந்தாலும் கலைஞரின் சாமர்த்தியம்
ஸ்டாலின் அவர்களுக்கு வராது- அதான் பொறுப்பை
இன்னமும் ஒப்படைக்கவில்லை ”
என்று என் நண்பர் ஒருவர் கூறுகிறார்…

இந்த சம்பவங்களுக்கும் அதற்கும் எதாவது
சம்பந்தம் இருக்கிறதா என்ன ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட கலைஞர் வேண்டுகோள் ….!!!

 1. B.Venkasubramanian சொல்கிறார்:

  அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டார்.
  ஆனால், பொதுமக்களின் மனப்போக்கு போராட்டத்திற்கு எதிராக
  திரும்புகிறது என்பதை உணர்ந்தவுடன் புத்திசாலித்தனமாக
  போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொல்கிறார்.
  நீங்கள் பல தடவை சொன்னது போல் “கலைஞர் கலைஞர் தான்”.
  அவருக்கு ஈடு இணை வேறு யாரும் இருக்க முடியாது.
  ஸ்டாலினுக்கு 90 வயது ஆனாலும் கூட கலைஞரின் திறமை,
  சாமர்த்தியம் வராது என்பது தான் உண்மை.

 2. Prakash சொல்கிறார்:

  over confident என்றுமே வெற்றி பெற்றதில்லை என்பதை கலைஞர் உணர வேண்டும் . என்னமோ அடுத்த ஆட்சி இவருக்கு தான் என்று எழுதி கொடுத்தது போல பேசுகிறார்.

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் கலைஞர்.

  • today.and.me சொல்கிறார்:

   அடுத்தவீட்டுப் பிள்ளையையும் தொட்டிலையும் ஆட்டி தன்வீட்டு தொட்டில் நிரம்பப்பார்க்கிறார் 🙂

 4. Kamal சொல்கிறார்:

  By the way, why are they protesting? I have been continuously reading your blog. Have you written on it before and I have missed it?

 5. CHANDRAA சொல்கிறார்:

  Tamil nadu govt servants strike is totally unwarranted………These govt servants teachers are getting revised dearness allowance just like central govt employees nowadays the pay is very lucrative compared to lacs of employees working in private sectors And we all know about the rampant corruption that prevails in tamil nadu govt departments……..
  Right from judges posts doctors nurses teachers posts vacancies do exist………Any govt could do this job gradually only…… Tamil nadu people are already cursing these striking tamil nadu govt staffs………..

 6. Raghuraman N சொல்கிறார்:

  Dear KM Sir.,

  I am wondering how these govt staff, teachers renew their protests once in 10 years – that too just before elections?

  Is my above statement is just a perception?

  I see TODAY & ME keeps many statistics – can there be one for this as well?

  Raghuraman N

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ரகுராமன்,

   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது
   பணி, ஊதியம் தொடர்பாக பல கோரிக்கைகளை
   முன்வைத்திருக்கிறார்கள். மத்திய அரசு எப்போதெல்லாம்
   மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்கிறதோ,
   அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும்
   ஊதிய, படிகள் அனைத்தும் கிட்டத்தட்ட அதே அளவில்
   உயர்த்தப்படுகின்றன.

   எனவே, ஊதிய அளவில் அவர்களுக்கு பெரிய குறைகள்
   எதுவும் இருக்கக்கூடாது.

   முக்கியமான குறை ஒன்றிருக்கிறது. அது ஓய்வூதியம் குறித்தது.
   2004 -க்குப் பிறகு அரசுப்பணியில் சேரும் ஊழியர்களுக்கு
   ஓய்வூதியம் கொடுப்பதில் சில பாதிப்பான திருத்தங்களை மத்திய அரசு
   கொண்டு வந்தது. அதையே பெரும்பாலான மாநிலங்களும்
   கடைபிடிக்கின்றன.

   இந்த ஓய்வூதியம் கைவிடல் என்னும் கொள்கை நிச்சயமாக
   ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது தான்.
   ஆனால் அதற்கு இப்போதைய அதிமுக அரசு பொறுப்பல்ல.

   முக்கியமாக இந்த பிரச்சினை மத்திய அரசு ஊழியர்களுக்கும்
   இருக்கிறது. எனவே, இது தேசிய அளவில் – தொழிற்சங்கங்கள்
   இணைந்து மத்திய அரசை வற்புறுத்தி செயல்பட வைக்க வேண்டிய
   விஷயம்.

   இப்போது, தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பது
   pure blackmail. தேர்தல் சமயத்தில், அரசை நிலைகுலையச்செய்யும்
   முயற்சி. இதன் பின்னணியில் இருப்பது, அடுத்து அரியணையில்
   ஏறத்துடித்துக் கொண்டிருக்கும் 93 வயது மூத்த அரசியல்வாதி….!

   ஆனால், இந்த போராட்டங்கள் தொடர்ந்தால் –
   மக்கள் தமிழக அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கு பதிலாக –
   போராட்டத்தை நடத்துபவர்களுக்கும்,
   அதை தூண்டி விடுபவர்களுக்கும் –
   எதிராகவே திரும்புவார்கள்.
   இது தான் கள உண்மை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    ஆரம்பிக்கச் சொன்னவர்தானே
    முடித்துவைக்கவும் முடியும்
    அதனால் தான் அறிவிப்பு.

   • ravi சொல்கிறார்:

    //இப்போது, தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பது pure blackmail. தேர்தல் சமயத்தில், அரசை நிலைகுலையச்செய்யும் முயற்சி. இதன் பின்னணியில் இருப்பது, அடுத்து அரியணையில் ஏறத்துடித்துக் கொண்டிருக்கும் 93 வயது மூத்த அரசியல்வாதி
    //
    சார், பிஜேபி காரர்களை கேளுங்கள் ..ஏதாவது பிரச்னை என்றால் உடனே வெளிநாட்டு சதி என்பார்கள் .. அதை போல் தான் உள்ளது .. மொத்த அரசாங்கமும் இவர்கள் கையில் தான் உள்ளது .. கேட்டல் தலிவர் சதி ..
    2004 போல், எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பலாமே …

    மேலும், அரசு ஊழியர் மேலும் மக்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது .. கிம்பளம் , நினைத்தால் விடுமுறை, வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் , சம்பளத்துக்கு மேல் ஓய்வூதியம் ..
    ஒரு பியூன் வாங்கும் சம்பளம் இன்று ஒரு பொறியியல் படித்தவரை விட அதிகம்.

    இதே முதல்வர் 2004 ல் சொன்னது, அரசுக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு சென்றால் , மற்ற திட்டங்களுக்கு பணம் எங்கு வரும் என்று !!

    //முக்கியமான குறை ஒன்றிருக்கிறது. அது ஓய்வூதியம் குறித்தது.2004 -க்குப் பிறகு அரசுப்பணியில் சேரும் ழியர்களுக்கு
    ஓய்வூதியம் கொடுப்பதில் சில பாதிப்பான திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது//

    நீங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதியத்திற்காக கொடுக்க வேண்டும், அரசும் தன பங்கை கொடுக்கும் ..
    100% அரசே கொடுக்கும் ஓய்வூதியம் கொடுக்கும் திட்டம் ( பஞ்சப்படி ஏற , ஓய்வூதியம் ஏறும் ) , போன்றவை இந்தியா போன்ற நாடுகளில் எந்த அளவு சாத்தியம் ?? ராணுவ வீரர்கள் (crpf,cisf,rpf,bsf) உட்பட மட்டுமே இதயகைய சலுகைகள் தேவை , மற்ற அரசு ஊழியர்களுக்கு அல்ல.
    இதனையும் மீறி , கொடுக்க ஆரம்பித்தால், கூடிய சீக்கிரம் திவால் ஆகலாம் ..

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப ரவி,

     நீங்கள் பிரச்சினையை சரியாகப் புரிந்து
     கொள்ளவில்லையென்று நினைக்கிறேன்.

     1) தேர்தல் நேரத்தில் அரசு தனது ஊழியர்களிடம்
     கடுமையாக நடந்து கொள்ள முடியாது….
     இதனை உணர்ந்து தான் அவர்கள் வீதிக்கு வந்து
     மறியல் செய்கிறார்கள். இதைத்தான் blackmaiசெய்கிறார்கள்
     என்று சொன்னேன். அரசும் காலையில் கைது
     செய்து விட்டு, மாலையில் விட்டு விடுகிறது.

     2) ஓய்வூதியம் குறித்து –
     பிரச்சினை ஓய்வூதியத்தை அரசே கொடுப்பதற்கு பதிலாக
     ஊழியர்களையும் சம பங்கு போடச்சொல்லுவது மட்டுமல்ல.

     அப்படிப் போடப்படும் பணத்தை, மத்திய அரசு பங்கு மார்க்கெட்டில்
     முதலீடு செய்கிறது. பங்கு மார்க்கெட்டில் லாபமும் வரலாம் –
     நஷ்டமும் வரலாம்…. அந்த risk எங்களுக்கு ஏன் என்று
     ஊழியர்கள் கேட்கிறார்கள்.

     நியாயமான கேள்வி தான்…!
     மொத்தமான தொகையை வைப்பு நிதியில் வைத்து,
     அதற்கான வட்டியை ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக
     கொடுப்பது தான் நியாயமான வழி.

     மத்திய அரசு செய்வது – கடைத்தேங்காயை எடுத்து
     வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்றது.

     இதை அரசு ஊழியர்கள் எதிர்ப்பது தவறு ஆகாது.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • ravi சொல்கிறார்:

      சார், நான் புரிந்து தான் எழுதுகிறேன் ..
      //
      1) தேர்தல் நேரத்தில் அரசு தனது ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியாது….இதனை உணர்ந்து தான் அவர்கள் வீதிக்கு வந்து மறியல் செய்கிறார்கள். இதைத்தான் blackmaiசெய்கிறார்கள் என்று சொன்னேன். அரசும் காலையில் கைது செய்து விட்டு, மாலையில் விட்டு விடுகிறது.
      //
      தெரியும், தேர்தல் இல்லை என்றால் , அம்மா அதனை பேரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் .. இங்கே தொழிலாளர் நலம் எல்லாம் மேற்பார்வைக்கு பொங்கல் மட்டுமே .. உள்ளே ஊசி போன உப்புமா .. கட்சி, தலைவர் இவர்கள் யாரோ , இவர்களை பொருத்து கருத்து மாறும் ..

      2) ஓய்வூதியம் குறித்து – பிரச்சினை ஓய்வூதியத்தை அரசே கொடுப்பதற்கு பதிலாக, ஊழியர்களையும் சம பங்கு போடச்சொல்லுவது மட்டுமல்ல.அப்படிப் போடப்படும் பணத்தை, மத்திய அரசு பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்கிறது. பங்கு மார்க்கெட்டில் லாபமும் வரலாம் – நஷ்டமும் வரலாம்…. அந்த risk எங்களுக்கு ஏன் என்று ஊழியர்கள் ட்கிறார்கள்.
      //
      இது EPF மட்டுமே பொருந்தும் .. அதுவும் இன்னமும் முடிவு ஆகவில்லை ..
      இந்த மதிய அரசு/மாநில அரசு ஆட்களின் ஓய்வூதியம் pfrda கையில் உள்ளது. 100% அரசு அமைப்பு . அரசு ஊழியர் பணம் முழுக்க முழுக்க LIC மூலமாக நிர்வாகம் செய்ய படுகிறது ..அரசு ஆட்களுக்கு 3 வழிகள் .
      1. முழுவதும் அரசு பத்திரங்களில் முதலிடு ,
      2. அரசு + தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு
      3. பங்கு சந்தை + அரசு + தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு

      இதில் , உங்களுக்கு எது விருப்பமோ , அதை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் .. நம் ஊழியர் சங்கம்கள் கண்டிப்பாக இதை எல்லாம் பேச மாட்டார்கள் ..

      இதில் முக்கியமானது , மாநில அரசுகள் ஊழியர் மற்றும் தம் பங்கை pfrda நிதியில் சேர்க்க வேண்டும் . தங்கள் கணக்கில் எதனை பணம் உள்ளது , என்று ஊழியர்களுக்கு சொல்ல வேண்டும் .. இவை இரண்டியுமே, மாநில அரசுகள் ஒழுங்காக செய்ய மாட்டார்கள் .. !! இன்னமும் ,ஓய்வூதியம் வாங்குவதற்கே லஞ்சம் கொடுக்கும் நிலைமையில் தான் நம் ஊர் உள்ளது ..

      அய்யா போராளிகளே(அதாவது அரசு ஊழியர்கள் ) , ரொம்ப அம்மாவை கோவை படுத்தாதீர்கள் .. அப்புறம் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு ஆப்பு தான் . 2004 ல் , அம்மா ஏற்கனவே , ஓய்வூதிய பணத்தை திருப்பி கொடுக்காமல் , பத்திரமாக கொடுத்தது நினைவில் உள்ளதா ?? மக்கள் ,உங்களை எந்த காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள். முடிந்தால் , மக்களும் உங்களை சாத்துவார்கள் ..

 7. S Rajagopalan சொல்கிறார்:

  The strike by govt. servants is unwarranted. They should be taken to task for illegal strike.

 8. ஜோதி சொல்கிறார்:

  நன்றி: திரு வெங்கட்ராமன்.
  ——————
  நேற்று திருப்பூரில் அரசாங்க ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணத்தினால் பேருந்து நிலையத்தை கடந்து வாகனஙகள் செல்வதற்க்கு பல மணி நேரமானது.

  நின்று கொண்டிருந்த போது பக்கதில் இருந்தவர் என்ன பிரச்சனையென்று கேட்டார்?
  அரசாங்கா ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கையை நிரைவேற்ற போரட்டம் செய்கிறார்கள் என்றேன்.

  அருகிலிருந்தவரிடம் நான் சொன்னேன்,
  ஆயிர கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு ,பிறப்பில் இருந்து சாவு வரைக்கும் லஞ்சம் வாங்கும் அரசாங்க ஊழியர்களுக்கு இன்னும் என்ன சலுகை வேண்டி போரட்டம் நடத்தராங்கன்னு தெரியலை என்றேன்.

  நாங்கள் பேசிக்கொண்டிறந்ததை கேட்ட அரசாங்க ஊழியர்கள் நீங்க எப்படி இப்படி பேசலாம் என்று கேட்க வாக்குவாதம் ஆகிவிட்டது.

  அதற்கு நான் சொன்னேன் பொது மக்களாகிய நாங்க கட்டுகிற வரியைத்தான் உங்களுக்கு சம்பளமாக தருகிறார்கள்.
  எங்க பணத்தை சம்பளமாக பெறும் உங்களிடம் நாங்க கேக்காமா வேறு யாரு கேப்பாங்க என்றேன்.

  அவனவன் தினமும் 200/300 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு வாழ்க்கைய நடத்திட்டு இருக்கான் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் உங்களால வாழ்க்கை நடத்த முடியாதா என்றேன்.

  பொது மக்கள் பலர் அவங்கள கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்்கள்.
  கேட்டதை எழுதினால் பெரிய பதிவாக போகும் .அதனால் சில கேள்விகளை மட்டுமே பதிவிட்டு இருக்கேன்.

  ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் சண்டைபோட்ட ஆசாமிகள் விட்டா போதும்ன்னு பஸ் ஏறி போய்ட்டாங்க.

  ஏதோ நம்மால் முடிந்தது, அரசாங்க ஊழியர்களின் போரட்டத்திற்க்கான எதிர்ப்பை தெரிவித்தவிட்டேன்.

  ஒவ்வொவொரு ஊரிளும் போரட்டக் காரர்களுக்கு எதிரா மக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
  ——————

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த யோசனையை முழுமனதோடு வரவேற்கிறேன்…

   தேர்தல் காரணமாகவும்,
   எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்கள் காரணமாகவும்
   தீவிரப்படுத்தப்படும் இந்த போராட்டங்களில் ஈடுபடுவோரை
   அரசாங்கம் கடுமையாக தண்டிக்கத் துணியாது.

   மக்கள் தான் இந்த பொறுப்பை
   தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
   இவர்கள் போராட வேண்டும் என்றால்,
   தங்கள் அலுவலகங்களின் வாயில்களில்
   நின்றோ, உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ
   எப்படி வேண்டுமானாலும் போராடட்டும்.

   பாதையில் செல்லும் பொதுமக்களைத் துன்புறுத்தவோ,
   தடுக்கவோ, தாமதப்படுத்தவோ –
   இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
   மக்கள் பொறுமை இழந்தால் – இவர்கள்
   அதன் விளைவுகளை சந்திக்கவே நேரிடும்.

   இவர்களை தொடர்ந்து ஆதரித்தால்,
   தாங்கள் பொதுமக்களின் வெறுப்பை
   சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதை
   அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அரசு ஊழியர்கள் அத்து மீறுகிறார்கள்…
    அலுவலகத்தின் உள்ளே புகுந்து –
    பணி செய்கிறவர்களை திட்டி, வலுக்கட்டாயமாக
    வெளியேற்றுகிறார்கள்.

    பொதுமக்கள் நேரடியாக இதில் தலையிட
    இவர்களே வழி செய்து கொடுக்கிறார்கள்.

    யாராவது உயர்நீதிமன்றத்திற்கு சென்று “பொது நல மனு”
    கொடுத்தால், நீதிமன்றம் தலையிட்டு,
    வேலைநிறுத்தத்தை தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இது நடக்கும் என்றே நினைக்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 9. B.Venkatasubramanian சொல்கிறார்:

  தெருக்களில், பொது இடங்களில் இவர்கள்
  போராட்டம் நடத்தினால், பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.
  பத்து பேராக சேர்ந்து கேட்க வேண்டும்.
  இந்த போராட்டக்காரர்கள் பேடிகள்.
  பெண்களை முன்னால் நிறுத்தி விட்டு, முந்தானைக்கு பின்னால்
  ஒளிந்து கொள்கிறார்கள்.
  அரசாங்கம் ஒரு நாள், ஒரே ஒரு நாள் ” உள்ளே ” தள்ளினால் கூட
  இவர்கள் செர்வீசில் ப்ரேக் ஆகி விடும். செய்யாது என்கிற தைரியத்தில்
  தெருவுக்கு வருகிறார்கள். நாலு இடங்களில் பொதுமக்கள் எதிர்த்தால்
  பிறகு குளிர்சுரம் வந்து விடும் இவர்களுக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.