இந்த ” செய்தி ” எந்த அளவிற்கு உண்மை ..? திரு.ஸ்டாலின் அவர்கள் தான் கூற முடியும் …!!!

இன்று காலை வெளியாகியுள்ள ஒரு செய்தி கீழே –

———————-
எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், எதிர்ப்புகள் தானாகவே
விலகவும், முதல்வர் பதவியில் அமரவும், கோ பூஜையில்,
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதாக, தகவல்
வெளியாகி உள்ளது.

stalin go poojai

சென்னையில், ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள,
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று ஓட்டேரி
பகுதிவாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது,
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள,
‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு சென்றார். இந்த டிரஸ்ட்,
50 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. இங்கு, 2,000த்திற்கும்
மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோசாலைக்கு,
தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, வடமாநிலங்களைச்

சேர்ந்தவர்கள், பசுக்களை தானமாக வழங்குவது வழக்கம்.
அதனால், இங்கு பசுக்களுக்கு அவ்வப்போது, கோ பூஜை
நடத்தப்படுவது வழக்கம். முதல்வர் ஜெயலலிதா,
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ‘அவர் விடுதலை பெற
வேண்டும்; மீண்டும் முதல்வராக வேண்டும்’ என, இந்த
கோசாலையில், பெண் அமைச்சர்கள் இருவர், கோ பூஜை
நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்,
‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு நேற்று சென்ற போது,
அங்கு, பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் பூசி,
கோ பூஜைக்கு தயாராக வைத்திருந்தனர்.

ஸ்டாலின் சென்றதும், பசு மற்றும் கன்றுகளுக்கு மாலைகள்
அணிவித்தார்; வாழைப்பழம் மற்றும் பசுந்தழைகளை
வழங்கினார்.

பின், கோ பூஜை நடத்தும் முக்கிய அறைக்கு,
அவர் மட்டும் சென்றார். அங்கு, பூஜை முடிவடைந்ததும்,
பசு மாடுகளை பராமரிக்கிற பணிகளில் ஈடுபடும்,
50 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், எதிர்ப்புகள் தானாகவே
விலகவும், முதல்வர் பதவியில் அமரவுமே, பிஞ்சராபோல்
டிரஸ்டில் நடைபெற்ற கோ பூஜை யில், அவர் பங்கேற்றதாக
கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_
detail.asp?id=1454700

————————-

திருவாளர் ஸ்டாலின் அவர்கள் தான் –

1) தான் இந்த இடத்திற்கு சென்றது எதேச்சையானதா அல்லது
ஏற்கெனவே திட்டமிடப்பட்டதா…?

2) அங்கு “கோ-பூஜை” எதாவது நடந்ததா…?

3) அதில் அவர் பங்கு கொண்டாரா….?

4) இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதா…?

என்றெல்லாம் விளக்க முடியுமே தவிர, இந்த செய்தித்தாளில்
கூறப்படுவதை எல்லாம் நாம் அப்படியே எடுத்துக் கொள்ள
முடியுமா என்ன ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to இந்த ” செய்தி ” எந்த அளவிற்கு உண்மை ..? திரு.ஸ்டாலின் அவர்கள் தான் கூற முடியும் …!!!

 1. ravi சொல்கிறார்:

  high possibility ..
  much of the DMK family’s womenfolk are firm devotees of various temples.
  azhagiri started his election campaign before a temple.
  ethai thindral pitham theliyum ??

 2. JC சொல்கிறார்:

  what is wrong in it

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear JC,

   There is absolutely nothing wrong in it…..

   ஒருவர் நாத்திகராகவோ இருப்பதோ,
   ஆத்திகராக மாறுவதோ – அவரவர் உரிமை…
   இங்கு அதனை குறை சொல்லவில்லையே…?

   But –

   திரு ஸ்டாலின் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்.
   தேர்தலில் நின்று, மக்களால் தமிழக சட்டமன்றத்திற்கு
   அனுப்பப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதி.

   நாத்திகர் என்று இதுவரை அறியப்பட்டவர்.

   நாளை மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறவர்.
   முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆகக்கூடியவர்.

   அறியப்பட்ட கொள்கையிலிருந்து அவர் மாறி இருந்தால் –
   அதனைப்பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு
   எல்லா உரிமையும் இருக்கிறது.
   அதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய
   கடமையும் அவருக்கு இருக்கிறது…

   அவ்வளவே….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. seshadri சொல்கிறார்:

  bad time going to stat for மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்….(50 acre land in the city)…..

 4. selvarajanselvarajan சொல்கிறார்:

  ” ஆனால், எனக்கென்னவோ, இது இனமானத்தலைவர்
  “மானம்”மிகு திரு வீரமணி அவர்களுக்காகவே
  வெளியிடப்பட்ட செய்தி என்று தான் தோன்றுகிறது !! ” —- இதை அன்று தன்னுடைய பழைய இடுக்கையில் // மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! //
  Posted on நவம்பர் 23, 2009 by vimarisanam – காவிரிமைந்தன் என்பதில்
  எழுதிய திரு. கா.மை . அய்யாவின் இன்றைய இடுகைக்கும் ” தலைமறைவாகி — காணாமல் போன ” மானமிகு ..? க்கும் — கலைஞர் குடும்பத்திற்கும் — பொருந்துவது தான் — அதிசயமோ … ? மற்றவர்களுக்கு மட்டும் போடும் வெளி வேஷம் தான் கருணாவின் — அன்றும் — இன்றும் — என்றும் மாறாதது … அப்படிதானே …. ? குடும்பத்திற்கு எல்லாவற்றிலும் விதிவிலக்கு அளிப்பது எதனால் …. ?

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  There is nothing wrong in it.It is difficult to satisfy all.Trial costed Rs 2lakhs only for Mr Stalin.

  • today.and.me சொல்கிறார்:

   -//It is difficult to satisfy all.//-
   சரி, இப்போ யாரை திருப்திப்படுத்துகிறார் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே.

 6. today.and.me சொல்கிறார்:

  திமுகவின் கொள்ளைகள்
  சாரி
  கொள்கைகள் என்னென்ன என்று தெரியுமா நண்ப ஜேசி

  தாய்த்தமிழையும் ஒழுங்காகப் படிக்கவிடாமல்
  மற்ற மொழிகளையும் தெரியவிடாமல்
  சொந்த மதத்தையும் மதித்து பழகவிடாமல்
  மற்ற மதத்திற்கும் மாறவிடாமல்
  தமிழகத்தில்
  இருதலைமுறைகளை
  கெடுத்துக் குட்டிச்சுவராக்கி
  மூன்றாம் தலைமுறையிலும்
  கொள்ளையடித்ததை
  காப்பாற்ற
  அதிகாரம் இருந்தே ஆகவேண்டும்
  என்ற நிலைக்கு வந்தபின்
  எதைச் செய்தாலாவது

  எதைச் செய்தாலாவது
  ஆட்சிக்கு வந்தாகவேண்டும்
  என்ற திமுகவின் வரலாறு
  தெரியாத முதல்தலைமுறை ஆளாக நீர் இருக்கச் சாத்தியமில்லை.

  மூன்றாம் தலைமுறை என்பதாலேயே
  what is wrong in it
  என்று
  ஆங்கிலத்திலும்
  இதுநாள்வரை தப்பென்று சொன்னதையே
  இப்போது அவரே செய்கிறாரே,
  அட்லீஸ்ட் உலகத்தார் என்ன சொல்வார்களோ என்ற
  குற்றவுணர்ச்சி கூட இல்லாமல்
  அதிலே என்ன தப்பு
  என்று கேட்கிறீர்கள்

  உங்களைப்போன்ற கொள்கையில்லாத திமுக பக்தர்கள் இருக்கும்வரை தப்பேயில்லைதான்.

  ஸ்டாலி்னுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால்
  பக்தர்களுக்கெல்லாம் ஸ்டாலின்தானே கடவுள்
  கடவுளே செய்தால்
  what is wrong in that 🙂

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  There is much more possibility of MR.sESHADRI’s comment.

 8. senthil சொல்கிறார்:

  எப்பவும் தி மு க செய்தியா வருது ஆளும்கட்சி அ தி மு கவா தி மு க வா

  • today.and.me சொல்கிறார்:

   எதிர்க் கட்சிகூட கிடையாது
   உதிரிக் கட்சியாக இருந்தாலும்
   அவர்கள் செய்தி மட்டுமே செய்தித்தாள்களில் வரும்படி பார்த்துக்கொண்டாலும்
   அதையும்
   பத்திரிகைசுதந்திரம் அல்லது
   அனுமதிக்கும் குணம் அல்லது
   பத்திரிகையும் உதிரிகளும் தான் கண்டுகொள்ளும் அளவுக்கு பெரிய இமேஜ் உடையவர்கள் அல்ல
   என்னும் குணம் ஜெஜெக்கு உண்டு.

   இதேபோன்ற நிகழ்வை முகவின் ஆட்சியில் பார்க்கவும் முடியாது.
   ஒன்று பத்திரிகை இருக்காது, 😐
   இல்லையேல் எழுதியவன் இருக்கமாட்டான் 🙂
   அப்புறம் எழுதிய சான்றே இருக்காது 😀

   இதுதான்
   முக
   தன்னை வளர்த்த தமிழர்களுக்கும்
   தான் கொள்ளையடித்த தமிழ்நாட்டிற்கும்
   கொடுத்த அன்(வம்)புப்பரிசு 😦

 9. senthil சொல்கிறார்:

  தகப்பனா…பிள்ளையா அண்ணன்னா தம்பியா போட்டியில் தி.மு.க. பத்தி பேச ஒன்றுமில்லாத அவங்களுக்குள்ளயே பிரச்சனை நிங்க செத்தப்பாம்ப அடிக்கிறிங்க

  • today.and.me சொல்கிறார்:

   உண்மையில் கருணாநிதி என்று அதிமுகவினர் கூச்சலிட்டாலும் என்னால் நம்பமுடியவில்லை. எதிராளியின் திறமையை குறைவாக எடைபோடுகிறார்க என்றுதான் சொல்லுவேன்.

   மகனுடைய
   மகனுடைய மருமகனுடைய
   இத்தனை வருட அரசியல் வாழ்க்கைக்கு அப்புறம்
   இப்போது ஊர்ஊராய்ப் அலைந்து திரிந்து
   மாடர்ன் டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி
   பலகோடி செலவில் எடுத்த
   நமக்கு நாமேயை

   உட்காரவைக்கப்பட்டிருக்கும்
   வீல்சேரைவிட்டு அசையாமலேயே
   அவர்கள் இருவருக்குமே
   நாமமாய் மாற்றியிருக்கிறார்
   என்றால்

   மு கருணாநிதியின் திறமை
   சிம்ப்ளி எக்ஸண்ட்.

   கருணாநிதி சாணக்கியர்தான்.

 10. CHANDRAA சொல்கிறார்:

  Very pertinent points raised by T A M Dmk tv channels still address hindu festivals like deepawali etc as VIDUMURAI KALA SIRAPPU NIGAZHCCI………..Dmk leaders have NO BASIC COURTESY of wishing hindus during their feativals……….Hypocrisy cheating ……
  Dmk is a dangerous diabolical destructive dejected disappointing cunning wicked political party……….All know that ji

 11. today.and.me சொல்கிறார்:

  ஒரு கேள்விக்கு விடை நானே சொல்லிவிடுகிறேன் ஜி, மற்றவற்றிற்கு திமுக தலைவரிடமிருந்து அறிக்கை எதாவது வருகிறதா பார்க்காம்.

  கொள்ளைமிகு தலைவர் இல்லையா?
  சிவாஜியையே திருப்பதி கோயிலுக்குப் போனதற்காக கோயிலைவிட்டு வெளியே வருமுன்னேயே அடிப்படை உறுப்பினராகக்கூட நீடிக்கத் தகுதியில்லை என்று நீக்கியவர் ஆயிற்றே.

  –//அதில் அவர் பங்கு கொண்டாரா….?//-

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12670409_10208778785617182_2012972946044517841_n.jpg?oh=b1a861ce6e801c06e2f63ac28e984d6a&oe=576C3CF4

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.