குடி நீர் பஞ்சம் போக்க சுலபமான வழி …..!!!

இது காசு எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் –

automated teller machine

காலம் மாறிக்கொண்டே வருகிறது.
தொழில் நுணுக்கங்களை, முன்னேற்றங்களை,
மக்களின் அத்தியாவசிய தேவைகளை
பூர்த்தி செய்துக்கொள்ளவும்,
வாழ்வு நிலையை (quality of life ) மேம்படுத்திக்
கொள்ளவும் பல வழிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை நகரில் மட்டும் என்றிருந்த
நல்ல குடிதண்ணீர் பிரச்சினை இப்போது சிறு நகரங்களுக்கும்,
கிராமங்களுக்கும் கூட தொத்துநோய் போல் பரவி விட்டது.

எங்கு போனாலும், தண்ணீர் பாட்டிலை கையோடு
எடுத்துக் கொண்டு தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.
சென்னையிலும், மற்ற நகரங்களிலும்,
(water cane ) 20 லிட்டர் கொண்ட ஒரு வாட்டர் கேன்
முப்பது முதல் முப்பத்தைந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சில்லரையில் ஒரு லிட்டர் பாட்டில் பதினைந்திலிருந்து
இருபது ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெட்டிக்கடைகளில்,
(சுத்தப்படுத்தாத குடிநீர்) சிறிய பாக்கெட் 2 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது.

வடக்கே குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய அளவில் வாட்டும்
ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்
இந்த பிரச்சினையை சமாளிக்க water ATM தண்ணீர்
மெஷின் நிறுவ ஆரம்பித்து விட்டார்கள். இவற்றில்
தண்ணீர் பெற ATM கார்டு போன்றே ஒரு பிளாஸ்டிக்
கார்டு கொடுக்கிறார்கள். அந்த அந்த கம்பெனிகள்,
கிராம பஞ்சாயத்துகளுடன் ஏற்படும் உடன்பாடுகளின்படி
இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ராஜஸ்தானில் நிறுவப்பட்டிருக்கும் இந்த இயந்திரங்களில்
குடிநீர் 20 லிட்டர் 5 ரூபாய் மட்டுமே.

இது ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் தண்ணீர் ஏடிஎம்.

water atm - rajasthan

மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டு வரும் இந்த இயந்திரங்களில் – solar powered water atms20 லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்.

இப்போது தமிழ்நாட்டிலும் முதல்முறையாக இத்தகைய திட்டம்
ஒன்று சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில்,
அலிமேடு மற்றும் ஊரக்காடு கிராமங்களில் வசிக்கும் சுமார்
500 குடும்பங்களுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விலை கேட்டால் பிரமிப்பாக இருக்கும் –
20 லிட்டர் வெறும் 2 ரூபாய் மட்டுமே.

water atm-1

இங்கு மட்டும் இது எப்படி சாத்தியமானது….?

இந்த கிராமத்தில் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் –
குடிப்பதற்கு உதவாத உப்புத்தண்ணீர்…!!!

கிராமத்தின் நடுவே பெரிய ஆழ்கிணறு (போர்வெல்) ஒன்று
நிறுவப்பட்டு, அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, மேல்நிலைத்தொட்டி
ஒன்றில் சேகரிக்கிறார்கள். அந்த நீர் – நிறுவப்பட்டுள்ள
இரண்டு reverse osmosis plant and the ATM -க்கு
எடுத்துச்செல்லப்பட்டு, சுத்தீகரிக்கப்பட்டு, அதிலிருந்து
ATM அட்டையை பயன்படுத்துவோர்க்கு அளவாக
தண்ணீர் கிடைக்கிறது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில்
2000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக
இருக்கிறது.

இதனை ஏற்பாடு செய்திருப்பது ஊர் பஞ்சாயத்து தான்.
இதற்கான மொத்த செலவே ரூபாய் 9.7 லட்சம் தான்
ஆகி இருக்கிறது. இதற்கான முன் முயற்சியை மேற்கொண்டவர்
அந்த கிராம பஞ்சாயத்தின் தலைவர் திருமதி வசந்தி பாஸ்கரன்.

தமிழகத்தை பொருத்த வரையில் இதையே ஒரு முன் மாதிரியாக
எடுத்துக் கொண்டு செயல்படலாம். நல்ல குடிதண்ணீர் பஞ்சம்
இருக்கும் கிராமங்கள் மட்டுமன்றி, நகராட்சிகள், மாநகராட்சிகள்
அனைத்திலும் இதை செயல்படுத்தலாம்.

பணம் இதில் ஒரு பிரச்சினையாகவே எனக்கு தோன்றவில்லை.
எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் – லயன்ஸ் க்ளப்,
ரோட்டரி க்ளப், போன்றவை அனைத்து ஊர்களிலும் சமூகநலம்
என்கிற நோக்கோடு இயங்குபடுகின்றன. அவரவர் செயல்படும்
ஏரியாக்களில் 10 லட்சம் செலவில் இது போன்ற
வாட்டர் ஏடிஎம்-களை மிகச்சுலபமாக நிறுவி, ஏழை மற்றும்
நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பேருதவி செய்யலாம்.

இதைக்காணும் – தங்களுக்கென்று தனியே வலைத்தளத்துடன்
செயல்படும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள்
இந்த செய்தியை பரவலாக எடுத்துச் செல்ல உதவ வேண்டுகிறேன்.

குறிப்பாக தொண்டு நிறுவனங்களின் பார்வைக்கு இந்த செய்திகள்
செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் அனைவரும்
ஆர்வத்துடன் இதில் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to குடி நீர் பஞ்சம் போக்க சுலபமான வழி …..!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // ‘அம்மா குடிநீர் திட்டம்’ அறிமுகம்: சுத்தமான குடிநீருக்கு ஸ்மார்ட் கார்டு: ஜெயலலிதா தொடக்கி வைத்தார்… //
  By dn, சென்னை
  First Published : 13 February 2016 10:50 AM IST … இன்றைய தினமணி பத்திரிக்கையிலும் இதை போல — முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் மணிக்கு 2,000லிட்டர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என்று . பிரசுரமாகியுள்ளது … சென்னை பெருநகருக்கு அவசியம் தேவை — நல்லது நடந்தால் பாராட்டியே ஆகவேண்டும் … அய்யா.. கூறியுள்ளதைபோல ” வாட்ஸ்அப்பில் ” பகிர்வது பலரையும் விரைவாக சென்றடையும் — !!!

 2. nparamasivam1951N.Paramasivam சொல்கிறார்:

  அருமையான ஒரு முயற்சி. அரசை எதிர் நோக்காது, பஞ்சாயத்துகள் தனியார் (அவர்கள் விளம்பரத்துடன்) உதவியுடன் செயல்படுத்துவது முக்கியம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த இடுகையை இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னரே
   கிட்டத்தட்ட எழுதி முடித்து விட்டேன்.
   ஆனால், தொடர்ந்து சூடான மற்ற விஷயங்கள்
   வந்துகொண்டே இருந்ததால், இதை பதிவிடுவது
   தள்ளிப் போனது.

   நேற்றிரவு தான் தொடர்ந்து திருவாளர்கள் கலைஞர், ஸ்டாலின்
   சம்பந்தப்பட்ட இடுகைகளாகவே இருக்கின்றனவே. அவசியம்
   ஒரு மாறுதல் வேண்டுமென்று நினைத்து இதை முடித்தேன்.

   காலையில் பதிவேற்றிய பிறகு பார்க்கிறேன் -தொலைக்காட்சியில்,
   “அம்மா குடி நீர் ” திட்டம் பற்றிய விவரங்களை.
   நல்லது. பருத்தி, புடவையாகவே காய்த்தது போலாயிற்று.

   ஆனாலும், அரசாங்க திட்டம் என்பதாலும், தமிழகம் முழுவதும்
   இந்த திட்டம் போய்ச்சேர அதிக அவகாசம் பிடிக்கும் என்பதாலும்,
   நான் இடுகையில் கேட்டுக் கொண்டது போல, தனியார்,
   தொண்டு நிறுவனங்கள், பஞ்சாயத்துகள் – தங்கள் சொந்த
   நிதி ஆதாரங்களின் அடிப்படையிலேயே, அரசாங்கத்துக்காக
   காத்திராமல் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்.
   நண்பர்கள் தொடர்ந்து இந்த செய்தியை எடுத்துச் செல்ல
   உதவ வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • thiruvengadam சொல்கிறார்:

    A fine one suggestion. Since this matter co incides with Amma Water scheme, i appreciate NParamasivam’s alert to avoid Stickers in an another form. It is an accepted fact Ur posts are mostly on current affairs . Thank U for feeling the continued postings on MK & son need a pause. But U have been necessiciated again to continue that (of course joining congress ) by virtue of the meet of Ex law makers of J& K and TN .

 3. Tamilselvi Nicholas rajan சொல்கிறார்:

  அருமையான பதிவு
  இதை அரசாங்கமே செயல்படுத்தலாம்

 4. ravi சொல்கிறார்:

  DMK government started a plant in 2008 at minjur
  ADMKk government started one in nemmeli in 2013.
  maintanence is the key , for the reverse osmosis plants ,
  but government organisations are very poor in maintaining such hitech systems .
  lets hope they do it properly..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.