செய்தியாளர்களுக்கு திரு.ஸ்டாலின் கொடுத்த விருந்து ….!!!

seithiyaalarudan virunthu

“நமக்கு நாமே” நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு
முன்னர் சென்னையில் முடித்துக் கொண்டதை அடுத்து,
திரு.ஸ்டாலின் – செய்தியாளர்களுடன் ஒரு சந்திப்பை
நிகழ்த்தினார் என்றும்
அந்த சந்திப்பில் செய்தியாளர்களுக்கு
விருந்து கொடுக்கப்பட்டது என்றும் அந்த விருந்தில்
ஒவ்வொரு சாப்பாட்டின் விலையும் ரூ.2360/-
என்றும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது…!

” கொடுத்து வைத்தவர்கள்…! “

இது எந்த ஹோட்டலில் நடந்தது என்றோ,
யார் யாருக்கெல்லாம் இந்த பாக்கியம் கிட்டியது என்றோ
எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்றோ –
தகவல்கள் இல்லை.

இது குறித்து “மேலதிக” தகவல்கள் இருந்தால் நண்பர்கள்
தெரிவிக்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to செய்தியாளர்களுக்கு திரு.ஸ்டாலின் கொடுத்த விருந்து ….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  முந்தாநாள் உப்புப்போட்ட கைக்கு
  ரெண்டகம் பண்ணாமல்
  நேற்று ஒரு கருத்துத்திணிப்பை
  வெளியிட்டு விட்டது
  புதிய தலைமுறை

  இதுவரை இந்த ஊடவியலாளர்கள் சந்திப்பு குறித்து ஏதாவது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறதா? திமுக தரப்பிலாவது, ஸ்டாலின் தரப்பிலாவது
  அட்லீஸ்ட் இந்த ஊடகங்கள்,
  விபச்சாரம் செய்பவர்கள்தான்
  தாங்கள் எங்கே யாருடன் சந்தித்தோம் என்பதை மறைவாக வைத்திருப்பார்கள்.
  எவ்வளவு அன்பளிப்பு பெற்றோம் என்பதையும் கூட..

  இவர்களுக்கும் இங்கே சந்திப்பில் கலந்துகொண்ட ஊடவியலாளர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

  தாங்கள் சென்றுவந்தைக்குறித்த வெளிப்படையான
  அறிக்கை / கட்டுரை – மேலே திருவேங்கடம் ஐயா குறிப்பிட்டுள்ள விகடன் உட்பட வெளிப்படையான கட்டுரை இல்லை… அங்கே கலந்துகொண்டவர்கள் யாரும் வெளியிடவும் மாட்டார்கள்.

  வெளியிட்டவரை செய்தி என்ன சொல்கிறது,
  கருணாநிதியை விட ஸ்டாலின் தலைமை தான் அவசியம்..
  இதைத் தவிர ஸ்டாலினின் ஏதாவது ஒரு நல்லகுணத்தை (இருந்தால்தானே) எடுத்துக்காட்டிவிடமுடியுமா இந்தப் பத்திரிகைகளால்.

  இவர்கள் செய்யும் பத்திரிகைத் தொழிலுக்கும்
  அழைத்தால் செல்லும் தொழிலுக்கும்
  அழைக்கவிட்டால் வேறுவிதமாக செய்வோம் என்று பிளாக்மெயில் செய்யும் களவாணித் தொழிலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

  விஜயகாந்த்-இடமும் இரண்டு மீடியாக்கள் இருக்கிறதுதானே,, அவர் தரப்பு செய்திகளாக இதை வெளிப்படுத்தியிருக்கலாமே. அழைக்கப்படவில்லையா? அதையும் போட்டுக் கிழித்திருக்கலாமே அவர் டிவியில். வைகோவின் சங்கொலிக்கு அனுமதியில்லையா? கேட்டிருக்கலாமே?

  அழைக்கப்பட்ட மீடியா பெர்சன்களுக்கு மட்டும் அனுமதி.
  பணமாகவோ பொருளாகவோ அன்பாக அளிக்கப்பட்ட நிதிகள்
  இதன்பேரில் இனி வெளியிடப்போகும் செய்திகள் எல்லாம் பெய்டு நியூஸ்.

  ———–

  தமிழக முதல்வர் கவனத்திற்கு:
  இனிமேல் வெள்ள அபாயம் வந்தாலோ, அணை திறக்கவேண்டும் என்றாலோ அவசர செய்திகள் மக்களை அடையவேண்டும் என்றாலோ
  உடனடியாக ஒரு நட்சத்திர .ஹோட்டலில் மீட் போட்டு கொடுக்கவேண்டிய கவர்களைக் கொடுத்து அவர்களைக் கவர் செய்து மக்கள் எல்லாம் செத்துவிட்டார்களா இல்லையா என்று பார்க்க மட்டும் இந்த மீடியாக்களை அனுப்பவும்.

  BLOODY PRESSTITUTES.

  எனக்கு இந்த சகவாச சுகமும் வேண்டாம், அதனால் வரும் வியாதியும் வேண்டாம் என்று இவர்களை-இந்த மீடியாக்களை அண்டவிடாத அல்லது அண்ட விரும்பாத தமிழக முதல்வருக்கு என் பாராட்டுக்கள்.

  அரசாங்க செய்தி – தலைமைச்செயலகத்திலிருந்து, துறைவாரியாக தலைவர்கள் செயலர்களிடமிருந்து வருவதை வெளியிட்டுக்கொள்ளுங்கள் என்ற வெளிப்படைத்தன்மை பிடித்திருக்கிறது.

  ____________

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-0/s261x260/12669520_10153607549918303_78703614424110648_n.jpg?oh=1800ad8978c41e221875b7935eca4ed0&oe=575D927B

  ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருப்பவர் யார் என்று தெரிகிறதா?

  நடுநிலைவாதி என்று முந்தாநாள் வரை சொல்லிக்கொண்டிருந்தவர் 🙂 ,

  இந்த விருந்துக்கு அப்புறம் கருத்துத்திணிப்பை வெளியிட்டு தந்தையை விட தனயனை முன்னிறுத்துகிறார் 😮

  தமையன் தினகரன் விசயம் எல்லாம் மறந்துவிட்டதுபோலும். 😀

  ____________

  விஜயகாந்த் பாணியில் இவர்களுக்காக என் எச்சிலைக்கூட வீணாக்க விரும்பவில்லை.

  ஆனால்
  இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறிவிடும்
  என்று நிச்சயமாக நம்புகிறேன்.
  ———————

 2. today.and.me சொல்கிறார்:

  நமக்கு நாமே பத்திரிகையாளர் கலந்துரையாடல் பற்றி மாலன் சார் பக்கத்திலிருந்து…

  ”ஸ்டாலினுக்கு எப்போதும் அடித்தளத்தின் துடிப்பை, கட்சி நிர்வாகிகள் என்ற வடிகட்டிகளைத் தவிர்த்து விட்டு, நேரிடையாக அறிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் உண்டு”

 3. today.and.me சொல்கிறார்:

  நமக்கு நாமே பத்திரிகையாளர் கலந்துரையாடல் பற்றி
  ஏழுமலை வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில்
  இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்

  ” மாலன் சார் கருத்து எனக்கு சற்று நெருடலாக இருக்கிறது…எனக்கு தெரிந்து ஸ்டாலின் அவர்களை நேரடியாக அணுக முடியவில்லை என்று கட்சியினர் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. நண்பர்கள் என்கிற வட்டாரத்தை மீறி அவரை அணுக முடிய வில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே உண்டு..

  ஸ்டாலினிடம் உள்ள குறையே, பொதுவெளியில் பொது மக்கள் மத்தியில் அதிகம் தன்னை வைத்துக் கொள்ளா ததுதான். இப்போதுதான் அந்த அணுகுமுறையில் மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது… அது அன்பு மணி ராமதாஸின் தாக்கம் காரணமாக இருக்க வாய்ப்பு அதிகம்..

  சொல்லாடலில் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நமக்கு நாமே பற்றி.. ”ஜெயலலிதாவே” பேச ஆரம்பித்துவிட்டார் என்று சொன்னார்.. அப்படி யானால் ‘ஸ்டாலினுக்கு ஜெயலலிதா இன்னும் உயரத்தில் இருப்பவராக தெரிகிறார், சம எதிரியாக கருதவில்லை போலும்..

  அப்புறம், நமக்கு நாமே என காட்டப்பட்ட படத்தில், ஒரு பெரியவர் தனக்கு 108 வயது என்றும் இதுவரை முதி யோர் பென்ஷனே வரவில்லை என்று ஸ்டாலி னிடம் சொல்கிறார். அப்படியானால் அவர் கடந்த 45 ஆண்டு களாக பென்ஷனுக்கு போராடியிருக்க வேண்டும்..இந்த காலகட்டத்தில் திமுகவும் பல முறை ஆட்சியில் இருந்திருக்குமே என்றெல்லாம் தோன்றவில்லையா?

  பல விஷயங்களில் சுய அலசல்கள் அதிகம் தேவை “

 4. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,

  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

  ஆனாலும் எல்லாருமே
  சொல்லிவைச்சாப்போல
  சாப்பாட்டு மேஜை படத்தை
  மட்டும்தான் போட்டுருங்காங்க,

  ஒருவேளை அதற்காக மட்டும்தான் போனாங்களோ?
  🙂 😀

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப டுடேஅண்ட்மீ,

  உங்களது விவரமான அலசலுக்கும்,
  தந்திருக்கும் பல “தகவல்”களுக்கும் மிக்க நன்றி.

  இந்த தளத்தில் இது மாதிரியான அலசல்களைத்தான் நான்
  எதிர்பார்க்கிறேன்.

  1) உண்மையில் அந்த “செய்தியாளர்களுடனான சந்திப்”பில் –
  அனைத்து செய்தியாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்களா –
  அல்லது ஸ்டாலின் /சபரீசன் விரும்பியவர்கள் மட்டுமா ?

  2) முக்கியமாக – யார், யார் – எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்கள்
  எல்லாம் அழைக்கப்படவில்லை .?

  3) அழைப்பிலிருந்து சிலர் விடுபட்டது ஏன் ..?

  4) கலந்துகொண்ட மூத்த செய்தியாளர்கள் இதனை
  கவனித்தார்களா ?

  5) ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூ.2360/- -செலவில்
  ஒரு அரசியல்வாதியின் சார்பாக அளிக்கப்படும் ஒரு
  விருந்தில் கலந்து கொண்டு, வயிறு புடைக்க சாப்பிட்ட பிறகு –
  குறைந்த பட்சம் அடுத்த ஒரு வாரத்திற்காவது
  அவருக்கு எதிராக
  கருத்து எதுவும் சொல்ல முடியுமா ..?

  6) செய்தியாளர் சந்திப்புகளில் – டீ/காப்பி/குளிர்பானங்கள்,
  பிஸ்கட் தவிர விலையுயர்ந்த விருந்துகளை
  ஏற்றுக் கொள்வது தவறு என்று செய்தியாளர்களின்
  மனசாட்சி உறுத்தவில்லையா ?

  6) கலந்து கொண்டவர்களுக்கு விருந்து மட்டும் தானா
  அல்லது ” கவர் ” எதாவது கொடுக்கப்பட்டதா ..?

  7) இந்த விருந்தின் செலவுகள் எல்லாம் யாரைச் சேரும் ?
  திரு.ஸ்டாலின் அவர்களின் சொந்தக் கணக்கா ?
  திரு.சபரீசன் அவர்களின் கணக்கா ?
  திமுக பொது நிதியிலிருந்தா ?
  தேர்தல் நிதியிலிருந்தா ?

  8) நமக்கு நாமே திட்டத்தில் திரு.ஸ்டாலின் அவர்கள்
  234 தொகுதிகளிலும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும்,
  அவருக்காகவும், அவர் “உடன்” சென்றவர்களுக்காகவும்
  மொத்தம் சுமாராக எவ்வளவு பணம் செலவழிந்திருக்கும்
  என்று யாராலாவது மதிப்பிட முடிகிறதா ?
  ( டிரெஸ், காஸ்டியூம் செலவை விட்டு விடுங்கள்.
  ஓட்டல், வாகனங்கள், அங்கங்கே கலந்துரையாடல்கள்
  நடத்தப்படும் இடங்களுக்கான
  வாடகை, விருந்துகளுக்கான செலவுகள் …etc…)

  நான் இந்த இடுகையை எழுதியதன் நோக்கம் –
  படிப்பவர்களின் மனதில் இந்த மாதிரியான கேள்விகள்
  எழ வேண்டும் என்று எதிர்பார்த்து தான். Just கேள்விகள்
  எழுந்தால் போதும். மக்கள் சிந்திக்கத்துவங்கினால் போதும்.

  உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும்
  என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.