அழகிரி அவர்களால் என்ன செய்ய முடியும் ….?

alagiri

முதலில், அழகிரி அவர்கள் செய்தி நிறுவனங்களுக்கு
அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே –

——————

தி.மு.க., – காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்.

”தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: சட்டசபை
தேர்தலுக்காக, தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி
அமைத்துள்ளது. இந்த கூட்டணி, எந்த அடிப்படையில்
அமைந்துள்ளது என்ற கேள்விக்கு, இரு தரப்பிலும் விடை
சொல்ல முடியாது. அதனால் தான், இந்த கூட்டணியை
பொருந்தாக் கூட்டணி, கொள்கையற்ற முரண்பாடான கூட்டணி
என விமர்சனம் செய்கிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்தியில் காங்., தலைமையிலான
அரசில் தி.மு.க., இடம் பெற்றிருந்தது. அப்போதே, இரு
கட்சிகளுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் நிலவின.
நான் கேபினட் அமைச்சராக இருந்ததால் முரண்பாடுகள் பற்றி
பேசவில்லை; சகிப்புத்தன்மையோடு அமைதியாக இருந்தேன்.

இருந்தும் 2013ல், ஸ்டாலின் ஆலோசனைப்படி, மத்திய
அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., வெளியேறியது.
இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டி வெளியேறியதாக,
தி.மு.க., தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.இப்படி
வெளியேறியது பற்றி கேபினட் அமைச்சராக இருந்த எனக்கே
முதலில் தகவல் தெரிவிக்கவில்லை. யாரை கேட்டு
வெளியேறினீர்கள் என கேட்ட போதும் சரியான பதில் இல்லை.

அதன்பின், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி
சேர காங்கிரஸ் முயன்றது. ஆனால் அதற்கு தடைபோட்டு,
தனி கச்சேரி நடத்தினார் ஸ்டாலின்.
அவரின் முடிவு, கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்;
தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என, நான்
அறுதியிட்டுக் கூறினேன்; சொன்னபடியே நடந்தது. இப்போது
என்ன மாற்றம் நடந்து விட்டது;

சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வும் காங்கிரசும் கூட்டணி
அமைத்திருக்கின்றன. எந்த இலங்கை தமிழர் பிரச்னைக்காக,
காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறியதோ, அந்த விஷயத்தில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாத போது,

இவர்களிடம் மட்டும் மாற்றம் எப்படி வந்தது.

‘2ஜி’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள்
மத்தியஅமைச்சர் ஆ.ராஜா, ‘பிரதமராக இருந்த மன்மோகன் சிங்
அனுமதி இல்லாமல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
நான் ஈடுபடவில்லை. விசாரணை என வரும் போது
மன்மோகனையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும்’ என,
நீதிமன்றத்தில் கடந்த வாரம் சொல்லியிருக்கிறார். ஊழல்
விஷயத்தில், முன்னாள் பிரதமரையும் சேர்த்து பழிவாங்கத்
துடிக்கிறது தி.மு.க., தரப்பு. ஆனால், அதையெல்லாம்
கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தி.மு.க.,வுடன் காங்கிரஸ்
கூட்டணி அமைத்துள்ளது; ஆக, யாருக்கும் வெட்கம் இல்லை.

தி.மு.க., – காங்., கூட்டணி பொருந்தாக் கூட்டணி. சில
நிர்பந்தங்கள் அடிப்படையிலேயே இந்த கூட்டணியே
ஏற்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். கனிமொழியை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கவும்; வேறு சிலர் மீது வழக்குகள் வரக்கூடாது என்பதற்காகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி, கூட்டணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்; அவர் சூழ்நிலைக்
கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு,
இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை என்பதே எனக்கு
கிடைத்துள்ள தகவல். ஸ்டாலினின், ‘நமக்கு நாமே பயணத் திட்டம்’ முழு தோல்வி அடைந்துள்ளதால், அது பற்றி பெரிதாக பேச எதுவும் இல்லை.

கட்சி தொடர்பான நிறைய விஷயங்களை, நான் அதிரடியாக செய்ய வேண்டியுள்ளது; அதைப் படிப்படியாக
துவங்குவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

———————-

திரு.அழகிரியை சென்ற வாரம் சென்னை விமான நிலையத்தில்
செய்தியாளர்கள் அவரது நிலை பற்றி கேட்டபோது, இன்னமும்
இரண்டு மாதங்கள் பொறுங்கள் என்றார். அதாவது, தேர்தல்
அட்டவணை அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் முடிவு செய்யப்பட்டு
விட்ட பிறகு தான் பேசுவதாகக் கூறி இருக்கிறார்.

ஆனால், நேற்று திடீரென்று தன் மீது தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டை மீறி இப்படி பேச காரணம் என்னவாக இருக்கும்…?

அழகிரி அவர்களுக்கு, மீண்டும் மீண்டும் தந்தையால்
வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன….
அழகிரி பொறுமையாக இருந்தால், அவருக்கு உரிய இடமும்,
பங்கும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், திமுக கூட்டணி மட்டுமே திரு.அழகிரியின்
குமுறலுக்கு காரணம் அல்ல. சுமார் 45,000 கோடி ரூபாய்
மதிப்புள்ள திமுக சொத்துக்களை பரிபாலிக்கும்
அறக்கட்டளையில் அழகிரிக்கு இதுவரை எந்த இடமும்
கொடுக்கப்படவில்லை. கட்சிக்காக தானும் எவ்வளவோ
உழைத்திருக்கும்போது, தனக்கு பங்கில்லாத நிலையை
அழகிரி எப்படி ஏற்பார்…?

இதே பின்னணியில், எதிர்காலத்தில் – தந்தை இல்லாத
ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் – அதன் பிறகு அழகிரியால்
என்ன செய்ய முடியும்..? எனவே, தந்தை இருக்கும்போதே,
தனக்குள்ள பங்கை பெறுவதும், உரிமையை நிலைநாட்டிக்
கொள்ள முயற்சி செய்வதும் இயற்கை தானே…?

சரி – பெரும்பாலான அழகிரி ஆதரவாளர்களை ஸ்டாலின்
வளைத்துக் கொண்டு விட்ட நிலையில், அழகிரியால்
கட்சியில் என்ன செய்து விட முடியும் ? அவரால் திமுகவில்
தற்போதைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விட
முடியாது என்பது உண்மை தான்.

ஆனால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,
வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பிறகு,
பல அதிருப்தியாளர்களின் ஆதரவு அழகிரிக்கு கிடைக்கலாம்.
அவரால் திமுக அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி,
கட்சிக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படுத்த முடியும்.

ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல.
திரு.அழகிரியைக் கண்டு கலைஞரும், ஸ்டாலினும் அஞ்சுவதற்கு
பல காரணங்கள் இருக்கின்றன.

தந்தையைப் பொருத்தவரையில், வெளிப்படையாக அவரை அவமதிக்கும் எந்த செயலிலும் அழகிரி ஈடுபடமாட்டார்.

ஆனால் திருவாளர் ஸ்டாலின் அவர்களின் ” இமேஜை ”
மிக மோச
மாக பாதிக்கக்கூடிய பல ரகசியங்களை அழகிரி
அறிவார்… அவற்றை அவர் வெளியிட ஆரம்பித்தால்,
தேர்தலுக்கு முன்னதாகவே ஸ்டாலின் அவர்களுக்கு –
மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஸ்டாலின் அவர்களின் “இமேஜ்” பாதிக்கப்பட்டால் – அது
தேர்தலில் திமுகவின் வாய்ப்புகளை கெடுக்கும் என்பதை
கலைஞர் நன்கு உணர்வார்.

எனவே, வெளிப்பார்வைக்கு, கலைஞரிடமிருந்து எத்தகைய
பதில் அறிக்கைகள் வந்தாலும், உள்ளுக்குள் மீண்டும்
அழகிரி எதிர்பார்ப்பதை ஓரளவாவது கொடுத்து, அவரை
சமாதானப்படுத்தும் முயற்சியே நடக்கும்.

எனவே, அழகிரி அவர்கள் தற்போது பேசி இருப்பது –
பொது மக்களுக்கானது அல்ல…. கலைஞருக்கும்,
ஸ்டாலினுக்கும் அவர் கொடுத்துள்ள “warning”…
என்றே சொல்ல வேண்டும்……!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அழகிரி அவர்களால் என்ன செய்ய முடியும் ….?

 1. selvarajan சொல்கிறார்:

  மு.க. அழகிரியை அலட்சியப்படுத்துங்கள்: கருணாநிதி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-chief-m-karunanidhi-condemns-alagiri-ties-with-congress-246877.html ….. என்கிற பத்திரிக்கை செய்திக்கும் — அய்யாவின் ….. //அழகிரி அவர்களால் என்ன செய்ய முடியும் ….? Posted on பிப்ரவரி 15, 2016 by vimarisanam – kavirimainthan…// என்கிற இன்றைய இடுகைக்கும் மொத்தமாக சேர்த்து —- முன்பு அய்யா எழுதிய — வெட்கம், மானம், சூடு, சொரணை …? அய்யய்யோ -அதெல்லாம் எதுவுமே கெடையாதுங்க ….!!
  Posted on ஜனவரி 11, 2014 by vimarisanam – kavirimainthan ….. என்ற இடுக்கையில் கேட்டுள்ள அதே கேள்வியை மீண்டும் கேட்டாலும் — ” அந்த இரண்டும் வரபோவதில்லை — நண்பர்கள் இந்த இடுக்கையில் உள்ள போட்டோக்களை மீண்டும் ஒருமுறை பார்த்தால் எவருக்கும் வெட்கம் இல்லை என்பது விளங்கும் ….! அடுத்து — அழகிரி+கலைஞர் கூட்டணி ….. !!! ( ஸ்டாலினை கட்டுப்படுத்த…?? )
  Posted on செப்ரெம்பர் 4, 2015 by vimarisanam – kavirimainthan … என்பது திசைமாறி —- ஸ்டாலினை கட்டுபடுத்த முடியாமல் ” கலைஞர் ” சரணாகதி அடைந்து விட்டார் — என்பது தானே தற்போதைய உண்மை ….? இவற்றை போல இன்னும் பல முந்தைய ” தந்தை — மகன்கள் — மற்றும் தன் குடும்பம் — முதல்வர் பதவி என்று கலைஞர் மற்றும் ” பங்காளிகள் ” பற்றிய இடுக்கைகள் பல சுவாரசியங்களோடு இருக்கிறது — படித்து பாருங்கள் பல உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வரும் …. அப்படிதானே …. ?

 2. B.Venkasubramanian சொல்கிறார்:

  கருணாநிதி 2 நாட்களுக்கு முன்னர் ஜெ. கூறிய கதைக்கு
  பதிலாக கூறியது –
  எந்த பாசத் தந்தையும் தனது பிள்ளையின் மீது பற்றுதல் கொண்டிருக்கத் தான் செய்வான் … பிள்ளை பெற்றிருந்தால்
  தானே அதன் அருமை புரியும் –

  நேற்று அழகிரிக்கு எதிராக கூறுவது –
  கழகத்திற்கு எதிராக அழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது –

  அழகிரி மீது இவ்வளவு வெறுப்பு காட்டுவதன் மூலம் கலைஞர், அழகிரி தான் பெற்ற மகனில்லை என்று சொல்கிறாரா ?

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  MK is playing an awkward and dangerous game.On one side it appears that he encourages
  Stalin.(whether his knowledge or not is a different story). On the other side he is keeping silent
  about Alagiri. Now he wants to wash off him. (this also appears true or not). The DMK will have to
  pay a very high price in the coming election if this continues.

  .

 4. seshadri சொல்கிறார்:

  i think KM sir favorite Swamy’s game plan started working. like beating around the bush he used stalin to move the congress towards no man land DMK team and it works. now he can talk freely with vijayakanth on behalf of BJP. no vijaykanth options eighter 4 member team or NDA. i hope he will not sail alone in the sea. and he is wise man also for grasping huge money for election from bjp which is too difficult from dmk.

  As alakiri said stalin still not matured in our dirty politics. he is like playing with his team only as a leader.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.