எங்கே போனது சுயமரியாதை….. சிங்கங்களே …?

.

.

திரு.குலாம் நபி ஆசாத் வருகிறார். பேசுகிறார்கள். பின்னர்
வெளியில் வந்த இளவல் சொல்கிறார் –

“காங்கிரஸ், திமுக இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது”.

பின்னர் அவரே தொடர்கிறார் –

” தலைவர் கலைஞர் அவர்களே விஜய்காந்துக்கு
நேரடியாக அழைப்பு விடுத்திருக்கிறார். விரைவில் தேமுதிக
நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம் “.

“கூட்டணிக்காக நாங்கள் அலையவில்லை. யாரையும்
வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை ” என்று சொன்ன
அதே சுயமரியாதை வாய் தான் இதையும் சொல்கிறது.

இவர் சொல்லி 24 மணி நேரத்திற்குள் இதற்கு மறைமுகமான
பதிலை, பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறார் – தேமுதிக- வின்
நம்பர் 2-ஆன திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்கள்.

” பல ஆண்டுகளா நடந்த எவ்வளவோ ஊழல்,
பிரச்சினைகளுக்கு இவங்க ரெண்டு பேரும் தான்
காரணமாக இருந்தாங்க -ங்கறதை இன்னிக்கு தெளிவா
எல்லா facebook -லயும் போட்டுருக்காங்க.

இவங்க ரெண்டு பேரும் ஏன் கூட்டணி அமைச்சிருக்காங்கன்னு
நமக்கு தெரியாது. இது பத்தி கலைஞர் அவங்களைத்தான்
கேட்கணும் “

(பேட்டி வீடியோ கீழே ..)

கூட்டணிக்கு அழைப்பு விடுத்து காத்திருப்பவர்களுக்கு,
இதைவிட (அ)நாகரிகமான ஒரு பதில் இருக்க முடியுமா …?

இதைக் கேட்ட பிறகும், செய்தி தொலைக்காட்சிகளில்
பலமுறை இந்த பேட்டி திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்ட பிறகும் –

93 வயது சுயமரியாதைச் சிங்கம் –
மயான மவுனம் சாதிக்கிறது.
ஒரு சிறிய உறுமல் கூட இல்லை..
ஏன் – ஒரு கனைப்பு சப்தம் கூட இல்லை…!

62 வயது சிங்கக்குட்டி, எதைக்கேட்டாலும்,
சூடாக பதில் கொடுக்கும் –
“யாரையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை”
என்று சொன்ன சுயமரியாதைச் சிங்கம் –
அதுவும் இருக்கின்ற இடமே தெரியவில்லை…!!

சரி இவர்களாவது – “இன்னமும் நேரடியாக இல்லை என்று
கூறவில்லையே”
என்று நப்பாசை காரணமாக மவுனம்
சாதித்தாலும்,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்று ஒரு
பகுத்தறிவுச்சிங்கம் இருக்கிறாரே –

“தனியாகவே 234 இடங்களிலும் நிற்போம்”
என்று ஆரம்பித்து, “ஆட்சியில் பங்கு” என்று தொடர்ந்து –
“கணிசமான எண்ணிக்கையில்” என்று
இப்போதைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்
திருவாளர் ஈவிகேஎஸ் அவர்கள் –

அவர் கூட,

” பல ஆண்டுகளா நடந்த எவ்வளவோ ஊழல்,
பிரச்சினைகளுக்கு இவங்க ரெண்டு பேரும் தான்
காரணமாக இருந்தாங்க ”

என்கிற –

காங்கிரஸ் கட்சியை அப்பட்டமாக ஊழல் கட்சி என்று
விமரிசிக்கும் வார்த்தைக்கு இன்னமும் பதில் ஏதும்
கூறாமல் மவுனம் சாதிப்பது ஏனோ …?

திரு.விஜய்காந்த் அவர்களின்,
முடிவு சொல்லாத இழுத்தடிப்புக்கு –
ஏற்கெனவே உள்ள காரணங்களுடன், புதிதாக
இன்னொரு காரணத்தையும் கூட இப்போது
சேர்த்துக் கொள்ளத் தோன்றுகிறது….

ஒரு வேளை திமுகவையும், காங்கிரசையும்
அதிக பட்சம் expose செய்வதற்காகவே, திரு.விஜய்காந்த்
தன் முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறாரோ…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to எங்கே போனது சுயமரியாதை….. சிங்கங்களே …?

 1. B.Venkasubramanian சொல்கிறார்:

  neengal solvathu pol ithuvum kooda oru kaaranamaaga
  irukkalaam.

 2. ஜேசன் சொல்கிறார்:

  // ஒரு வேளை திமுகவையும், காங்கிரசையும்
  அதிக பட்சம் expose செய்வதற்காகவே, திரு.விஜய்காந்த்
  தன் முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறாரோ…?//

  Expose செய்தது சுசா.
  ஸ்டாலினுடைய வீக்னெஸ், முக -வின் பதவி வெறி, அழகிரியின் ஆற்றாமை இவை என்றுமே மாறாதவை என்ற நம்பிக்கையில், ஸ்டாலினுடன் விளையாடியிருக்கிறார். அதில் ஸ்டாலினும் விழுந்து, சுசாவுக்கு எதிராகப் பொங்கி எழாமல், மாட்டுக் கொட்டாய் வரை போய் விட்டு வந்ததைப் பார்த்த தலைவர், ஆசாத்திடம் கை குலுக்கி விட்டார். போதாதற்கு கனிமொழியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு. ஸ்டாலினுக்கு அங்கேயும் ஒரு செக்.

  கனிமொழியை அவராகவே கொண்டு வந்து நிறுத்துவார். அழகிரியோ தானே தன் முகத்தைக் காட்டி விடுவார் என்று சு.சா முதல் அனைவரும் அறிந்ததுதான். கொஞ்ச நஞ்சம் மறந்திருந்தாலும், மீண்டும் தமிழகத்துக்கு பழையனவற்றை எல்லாம் இந்தக் குடும்ப அரசியல் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டது. இப்படிப்பட்டவர்களுடன் சேருவதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று வி.காந்திடம் கேட்காமல் கேட்பதற்கு, சு.சா போட்ட ப்ளான் என்று 10 நாட்களில் தெரிந்து விட்டது. ஆகக் கூடி, வி.காந்த் மீதுதான் பாஜகாவுக்குக் கண்ணே தவிர, திமுக மீது அல்ல.

  • seshadri சொல்கிறார்:

   exactly……swamy’s goggle ……bowling….batsman, runner are out by single ball…..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜேசன்,

   ஒரு நல்ல ஆய்வு. அந்த அளவில் பாராட்டுகிறேன்….

   என் பார்வைக்கு இதில் இன்னொரு கோணமும் கூட
   புலப்படுகிறது….

   திமுக – விஜய்காந்த்தை வளைப்பதற்கு பதிலாக,

   பாஜக / சு.சுவாமி சரியான முறையில் விஜய்காந்தை
   பயன்படுத்தி, காங்கிரசுக்கு பதிலாக –

   பாஜக வை கூட்டில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால்
   மட்டுமே நான் உங்களுடன் கூட்டணிக்கு வருவேன்
   என்று ஸ்டாலினிடம் சொல்ல வைத்தால் –

   தந்தையை கைகழுவினால் –

   ஜெயிக்கக்கூடிய கூட்டணி கைகூடும்,
   மத்திய ஆட்சியுடன் உறவும் நெருக்கமும் ஏற்படும்,
   தன் நீண்ட நாள் கனவான தமிழக முதலமைச்சர்
   நாற்காலியில் அமரக்கூடிய பெரும்பேறும் கிடைக்கும் –

   ” ஒரே கல்லுல மூணு மாங்கா ”

   என்று ஸ்டாலின் அவர்களும் யோசிக்கத் துவங்கினால் –

   சு.சுவாமி அவர்களின் கனவுத்திட்டம் கூட
   ஓரளவு மெய்ப்பட வாய்ப்புகள் உருவாகக்கூடும்….!!!

   ( இந்த “ஓரளவு” என்பது ஒரு இடுகை அளவில்
   விளக்கப்பட வேண்டியது.. எனவே இப்போது வேண்டாம்…)

   பாஜக வின் கண் விஜய்காந்த் மீது மட்டும் இருக்கலாம்…

   ஆனால் சு.சுவாமியின் பார்வை உடைக்கப்பட்டு,
   பலவீனமாக்கப்படும் திமுக மீது தான் என்று
   எனக்குத் தோன்றுகிறது.

   பார்ப்போம் – போகப் போகத் தெரியும்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. CHANDRAA சொல்கிறார்:

  karuna knows well that dmdks alliance only would help dmk in scoring over aiadmk
  therefore stalin karuna veeramani elangovan khader duraisamy and all are begging vijaykanth to align with dmk pudhia thalaimurais very latest survey reveals that aiadmk is just ahead of dmk

  NO WONDER KARUNA STALIN BEG VIJAYKANTH KM JI

 4. LVISS சொல்கிறார்:

  As voters we have got used to this change of stance by political parties -We cannot find a single party which sticks to one principle at least for elections — It is a sad thing but a reality -You may vote for a particular party having its alliance in mind thinking that the alliance is permanent but when power beckons they change sides under some pretext —

 5. selvarajan சொல்கிறார்:

  அ . தி. மு.க. வுடன் பா.ஜ.க . இணைந்தாலோ — அல்லது தே.மு.தி.க — பா.ஜ.க இரண்டும் சேர்ந்தே தி.மு.க.கூட்டணியில் இணைந்தாலும் கலைஞர் அவர்களுக்கு — { குடும்பமே பக்தியில் மூழ்கி திளைக்கும் போது } ” மதவாத கூட்டு ” என்று கூறும் அருகதை உண்டா … ? இவர்கள் அனைவரும் ஒன்றாகி — அ . தி. மு.க. – தனித்து போட்டி என்ற நிலை ஏற்பட்டால் மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் … ? . புதிய தலைமுறை நேற்றைய கருத்து கணிப்பில் தி.மு.க. மற்றும் அ . தி. மு.க. இடையே அதிக வித்தியாசம் இல்லாததை போல் வெளியிட்டது – காங்கிரஸ் — தி. மு.க. வுடன் கூட்டணி என்பதற்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் — கூட்டணிக்கு பின் இதே நிலை இருக்குமா — கூ.பி . மக்கள் எப்படி நோக்குவார்கள் … ? வி.காந்த் பா.ஜ.க.வுடன் கூட்டு என்றால அவரது பேரத்தின் ஆசையும் — முதல்வர் வேட்பாளர் முத்திரையும் கிடைக்கும் — ஆனால் நிர்வாகிகள் பலர் தி.மு.க. பக்கம் தாவ சான்ஸ் உண்டு — அது கருணாநிதியின் கணக்கு — அப்படி தானே ….? என்று பல கேள்விகள் சுழன்று அடிக்கின்ற வேளையில் — ஒரு உயர் நீதி மன்ற நீதிபதி தன் ” ஜாதியை ” காரணமாக சொல்லி — தனக்கு அநீதி இழைக்க படுவதால் ” வெளிநாட்டிற்கு ” குடி பெயர போகிறேன் — என்று சமீகால சினிமா ஹீரோக்கள் கூறியது போல கூறியுள்ளது — அவரின் தீர்ப்புகளின் மீது மற்ற சமூக மக்களுக்கு ” சந்தேகம் ” வர வாய்ப்பு உள்ளது தானே …. ?

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  திமுக இப்போது விஜயகாந்தை எதிர்பார்த்துத்தான் உள்ளது. அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் விஜயகாந்த் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பேயில்லை என்பது.

  ‘நான் விஜயகாந்த், திமுகவுடன் கூட்டுச்சேருவார் என்றுதான் நினைக்கிறேன். அப்படி முடிவு எடுப்பதற்கு, “அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியை ஒழிக்கவேண்டும்” என்ற ஒரே காரணத்தால்.. என்று விளக்கமும் சொல்லுவார். அவர் கருணானிதி, ஸ்டாலின் ஆகிய இருவருடனும் மேடையைப் பகிர்ந்துகொள்ள மாட்டார். 50 சீட்டுக்களுக்கு ஒத்துக்கொள்வார், 1 ராஜிய சபா வையும் வாங்கிக்கொள்வார். (ஆட்சியில் பங்கு என்ற கோஷத்துக்குப் பதிலாக).

  பாஜகாவை விட்டு வந்ததற்கு அவரால் காரணம் சொல்லமுடியாது. அதை நியாயப்படுத்தவும் அவரால் முடியாது (ஏனென்றால் இன்னும் மூன்று ஆண்டுகள் பாஜகா ஆட்சி உண்டு). ஜெ காலத்துக்குப் பிறகும் பாஜக வலுவோடு இருக்கும். அதிமுக மனது மாறி, பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால், அது அதிமுகவுக்கு சிக்கல். அதிமுக இதனால் எள்ளளவும் லாபம் அடையாது. அதுக்கு, கம்யூனிஸ்டுகளைச் சேர்த்துக்கொண்டால், “மதச்சார்பற்ற” என்ற லேபிளுக்காவது உதவும்.

  எனக்கென்னவோ, கருணானிதி, சரியான முடிவினை எடுப்பதாகத் தெரியவில்லை. ஸ்டாலின் வழி சென்று, கருணானிதி ‘கட்சித் தலைவர்’ என்ற பொறுப்பைமட்டும் எடுத்துக்கொள்வதுதான் திமுகாவுக்கு நல்லது. கனிமொழியைக் காப்பாற்ற, அது இது என்று அவர் ஸ்டாலினுக்குக் கெடுதல் செய்வதுமட்டுமல்ல, திமுகாவுக்கும் கிரெடிபிலிட்டி இல்லாமல் செய்கிறார்.

 7. selvarajan சொல்கிறார்:

  முக அழகிரி, கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்களாம் இது… நெட்டிசன்ஸ் குசும்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/songs-mk-azhagiri-kanimozhi-design-netizens-246992.html …. அய்யா … ! முடிந்தால் இதை படித்து –பார்த்து — கேட்டு — ரசித்து இன்புறுங்கள் …. !!!

 8. ravi சொல்கிறார்:

  எங்கே போனது சுயமரியாதை….. சிங்கங்களே –> How much rate per kilo ??

 9. சேகரன் சொல்கிறார்:

  என்ஜாய் ப்ரண்ட்ஸ்,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.