” மோடிஜி, உங்கள் மந்தையில் சில கருப்பு ஆடுகள் ” -சொல்கிறார் “அறிஞர்” சுப்ரமணியன் சுவாமி…!!!

.

.

முதலில் “அறிஞர்” சுப்ரமணியன் சுவாமி -க்கான விளக்கம்.

பொதுவாக தமிழக பாஜக தலைவர்களிடையே
திரு.சு.சுவாமிக்கான ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவு.
ஆனால், அதில் ஒரு திடீர் மாறுதல் –

அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்
திரு.இல.கணேசன் பேசும்போது, ” டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
ஒரு மிகப் பெரிய அறிஞர் – சில சமயங்களில் அவருக்கு
தோன்றும் யோசனைகளைக் கண்டு நானே பிரமித்துப்
போயிருக்கிறேன்…” என்று கூறினார்.
திரு.இல.கணேசனின் இந்த கருத்தோடு நான் முற்றும்
ஒத்துப் போகிறேன். சுப்ரமணியன் சுவாமி ஒரு பெரிய அறிஞர்,
புத்திசாலி – என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால், “அறிவு” என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட
ஒரு கத்தி. அதை எந்த பக்கம் வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம். யாருக்காவது உதவியாகவும் செயல்படலாம்.
எதிராகவும் செயல்படலாம். ஆதரவாக செயல்படுவது போல்
காட்டிக் கொண்டு அதே சமயம் எதிராகவும் செயல்படலாம்.

( அதே போல், ஒருவர் தமக்கிருக்கும் அறிவை
வைத்துக் கொண்டு சமுதாயத்திற்கு அரிய பணிகளும்
ஆற்றலாம் – அந்த சமுதாயத்தை அழிவுப்பாதையிலும்
இட்டுச் செல்லலாம்.
நமக்குத் தெரிந்து ஹிட்லர் இதற்கு
ஒரு மிகச்சிறந்த உதாரணம். )

திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்கள் சாதாரண அறிஞர் அல்ல…. “பயங்கரமான” அறிஞர்…!!!

இனி தலைப்பிற்கு வருவோமே…!

திரு.சு.சுவாமி, அண்மையில் பிரதமர் மோடிஜிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் –

மோடிஜியிடம் –

பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் இயங்கும்
department of personnel –
முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் மற்றும்
அவரது மகனின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை
விசாரிப்பதில் அக்கரையின்றி இருக்கிறது. அதில்,
மற்றும் enforcement directorate-ல் பணி புரியும்
சிலர் இன்னமும் முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சி.
அவர்களுக்கு உதவியாக செயல்படுகிறார்கள் என்றும் –
மோடிஜி இதை கவனித்து, ஆவன செய்யவில்லை
என்றால், சுப்ரீம் கோர்ட்டில் தனது வழக்கு விசாரணைக்கு
வரும்போது, சங்கடப்பட நேரிடும் என்றும் சொல்கிறார்.

அறிஞர் சு.சுவாமி, மோடிஜிக்கு எழுதியுள்ள
கடிதம் கீழே –

ss letter to pm-1

 

ss letter to pm-2

ss letter to pm-3

ஆமாம் – சு.சுவாமிக்கு மோடிஜி என்ன அறிமுகம் இல்லாதவரா?
இருவருமே ஒரே கட்சியைச் சேர்ந்த “சீனியர்” தலைவர்கள் தானே –
நெருக்கமானவர்கள் தானே …?
இவர் விரும்பினால், ஒரு ஐந்து நிமிடம் தொலைபேசியில் பேச
பிரதமர் நேரம் ஒதுக்க மாட்டாரா என்ன ?
பின் கடிதம் ஏன் எழுத வேண்டும் –
பிறகு அதை பொதுவெளியில் வேறு
ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும் ?

உண்மையாகவே பிரதமர் இதில் தலையிட வேண்டியது
அவசியம் என்று தோன்றினால், ஐந்து நிமிடங்கள்
தொலைபேசியிலோ, நேரிலோ – பேசுவது தானே சரி …?

-அதைத்தான் துவக்கத்திலேயே சொல்லி விட்டேனே –
சு.சுவாமி ஒரு “பயங்கரமான” அறிஞர் என்று…!!!

தொலைபேசியில் பேசினால் அது யாருக்குத் தெரியும் …?
இப்போது பொது மேடையில் (“public domain” ) போட்டால்,
சு.சுவாமி எவ்வளவு சுருசுருப்பாக லஞ்ச ஊழல்களுக்கு
எதிராக போராடி வருகிறார் என்பது எல்லாருக்கும்
தெரிய வருகிறதல்லவா …?

ஒருவேளை நாளை தான் தொடரும் வழக்கு
“புஸ்வாணம்” ஆகி விட்டால் –

லஞ்ச ஊழலை வெளிக்கொண்டு வர என்னால் இயன்றது
அனைத்தையும் நான் செய்தேன் – ஆனால், பிரதமராலேயே
department of personnel -மற்றும்
enforcement directorate- ஐ
தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியவில்லை….!
என்று ஒரு அறிக்கை விட்டு விட்டால் ….

“ஒரே கல்லில் பல மாங்காய்கள் ” ( !!! ??? )
“பயங்கரமான அறிஞர் ” – இது ஒரு மிகச்சிறிய உதாரணமே..!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ” மோடிஜி, உங்கள் மந்தையில் சில கருப்பு ஆடுகள் ” -சொல்கிறார் “அறிஞர்” சுப்ரமணியன் சுவாமி…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  “பயங்கரமான” அறிஞர் – மிகப்பொருத்தமான,
  நல்ல அடைமொழி. இவர் நிஜமாகவெ
  ரொம்ப dangerous ஆசாமி தான்.

 2. CHANDRAA சொல்கிறார்:

  It is very natural that written letters do serve as a record in all official matters It is surprising that km ji finds fault with the system p m would have spoken atleast twenty important issues to ministers diplomats army chiefs other country leaders daily……dr swamys letter to pm would help the law department enforcement depts tax depts etc to deal correctly in chidambaram jis issues
  as km ji often admits that he tends to forget his own postings more often modi ji might not remember what his bjp leaders talk to him daily
  dr swami had indeed adopted a very correct procedure by sending a letter to modi ji
  in dmk also k>p ramalingam mullai vendan had written open letters to karunanidhi ji

 3. Ganpat சொல்கிறார்:

  முந்தைய பிரதமர் ஒன்றும் செய்யவில்லை என்றாவது தெரிந்தது.தற்போதயவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு எல்விஸ்,

    தயவுசெய்து,

    திரு.தயாநிதி மாறன், தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது
    அவரது இல்லத்திற்கும், சன் டிவி அலுவலகத்திற்கும், ரகசியமாக
    சட்டவிரோதமாக – BSNL தொலைதொடர்பு வசதியை பயன்படுத்தியது சம்பந்தமாக, ஆடிட்டர் திரு.குருமூர்த்தி அவர்கள்
    ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த புகாருக்கான
    விசாரணை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது –

    என்று உங்கள் பிரியத்திற்குரிய சிபிஐ- யிடம் கொஞ்சம்
    கேட்டுச் சொல்லுங்களேன்….!!!

    மக்கள் அதைப் போன்ற மற்ற வழக்குகளின் கதி என்ன
    என்றும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறார்கள்…
    அரசாங்க அதிகாரிகள் கொடுக்கும் புள்ளி விவரங்களைப் பற்றி அல்ல…

    இந்த புள்ளி விவரங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன
    என்பது 40 ஆண்டுகள் மத்திய அரசில் குப்பை கொட்டியவனுக்கு
    நன்றாகவே தெரியும்,

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 4. Narasimhan சொல்கிறார்:

  தன கீழ் பணியாற்றிய அதிகாரிகளை மிரட்டுவதாக தன மீது ரைடு நடத்தியவுடன் ப சி சொன்னார் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் . கருப்பு ஆடுகள் இருப்பதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு .

 5. LVISS சொல்கிறார்:

  Where in the letter does the word black sheep (karuppu adugal) appear — Mr Swami is asking the PMO to seek clarifications from the CBI whether they have taken any steps in the matter –
  A reminder by letter will serve as a record —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   டாக்டர் சு.சுவாமி போன்ற வெளிமனிதர்கள்,
   பிரதமர் மூலமாக பிஎம்ஓ-வுக்கு
   அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது …?

   இதை பிஎம்ஓ – தானாகவே செய்திருக்க வேண்டும் அல்லவா ?
   இந்த கடமை உணர்ச்சி அவர்களிடம் இல்லாததற்கு
   என்ன காரணம்…?
   (அவர்கள் யாருடைய நிர்வாகத்தின் கீழ் பணி புரிகின்றனர்…? )

   // A reminder by letter will serve as a record //
   – யாருக்கு record ?
   எதற்காக record ?
   அது சுவாமியின் வேலை அல்லவே,
   அதை அவர் செய்ய வேண்டுமென்று
   யாரும் எதிர்பார்க்கவும் இல்லையே –
   பிறகு அவருக்கு எதற்கு record ?

   பின்னால், ஒருவேளை பிரதமருடன் மோதக்கூடிய
   சூழ்நிலை ஏற்பட்டால், ” நான் அப்போதே எச்சரிக்கை செய்தேன் –
   அவர் செயல்படத்தவறி விட்டார் ” – என்று காட்டிக் கொடுக்கவா ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.