இது தமிழர்களுக்கு பெருமை, தமிழ்நாட்டிற்கு – பெருமை …!!!

trichy-view from-rock-fort-

மத்திய பாஜக அமைச்சரவையில் சில அமைச்சர்களின்
செயல்பாடுகள் சிறப்பாகவும், பாராட்டத்தக்க வகையிலும்
உள்ளன.

திருவாளர்கள் பியூஷ் கோயல் (எரிசக்தி),
சுரேஷ் பிரபு (ரெயில்வே) மற்றும்
வெங்கையா நாயுடு (நகர்ப்புற வளர்ச்சி ) ஆகியோர்
மற்றவர்களிலிருந்து தனித்து தென்படுகிறார்கள்.

நிதின் கட்காரியையும் செயல்திறனைப் பொருத்தவரை
சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும் பல விஷயங்களில்
அவரது பின்னணி பயமுருத்துகிறது.

திரு.வெங்கையா நாயுடு, முதிர்ந்த வயதிலும் ஓயாமல்
உழைக்கிறார் ( குடியரசு துணைத்தலைவர் ஆன பிறகு –
அதிகப்படி உழைப்பு எல்லாவற்றிற்கும் சேர்த்து
ஓய்வெடுத்துக் கொள்ளலாம் – கவலைப்படாதீர்கள் சார்…!! )

அவரது நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பாக
மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் தான்
தூய்மையான / சுத்தமான நகரங்களை தேர்ந்தெடுத்து
ஊக்குவிப்பது.

அவரது இலாகா மேற்கொண்ட ஒரு நடவடிக்கை தான் –
இந்தியாவில், பத்து லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்ட
73 நகரங்களையும் பட்டியலிட்டு, அவற்றின் தூய்மை,
சுத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியது..

Quality Council of India நிறுவனத்தின் நூற்றுக்கும்
மேற்பட்ட நிபுணர்கள் இந்த 73 நகரங்களுக்கும் –
நேரடியாக விஜயம் செய்து –

திடக்கழிவு மேலாண்மை,
வீடுகள் மற்றும் பொது இடங்களில் கழிப்பறை வசதிகள்,
மொத்தமாக நகரத்தூய்மை போன்ற

பல்வேறு அடிப்படைகளின் – திறன், மற்றும் செயல்பாட்டை
எடைபோட்டு, மதிப்பெண்களை வழங்கி
இருக்கிறார்கள். ஒவ்வொரு நகரமும் பெற்ற மொத்த
மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் தரவரிசை ( rank )
தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற நகரங்கள்
முறையே –

மைசூரு,
சண்டிகார்,
திருச்சிராப்பள்ளி, ஆகியவை.

நான் இந்த எல்லா ஊர்களுக்கும் சென்றிருக்கிறேன் /
சில காலங்கள் இருந்தும் இருக்கிறேன்.
( திருச்சி எனது சொந்த ஊர் வேறு …! )
எனவே, இந்த தேர்வைப்பற்றி கருத்து சொல்ல
எனக்கு ஓரளவு உரிமை உண்டு என்றே நினைக்கிறேன்…!

என் மதிப்பீட்டில் – மைசூரு – தேர்வு சரியே.

சண்டிகார் – ( திருச்சியை விட சண்டிகார் ஒரே ஒரு
மதிப்பீட்டெண் அதிகம் பெற்றதன் அடிப்படையில் தான்
இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது ..)

சண்டிகார் – பிரெஞ்ச் நிபுணர் ஒருவரால் திட்டமிடப்பட்டு,
1940-களில் உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.
அகலமான, நீண்ட நேரான சாலைகளும்,
இருபுறமும் பசுமையான மரங்களும் அதன் அனுகூலம்.
ஆனால், என் அனுபவத்தில் சண்டிகார் ஒரு
அரை இருட்டு நகரம். பெரும்பாலும் –
சாலைகளில் பெரும்பகுதி, அரை இருட்டில் மூழ்கி இருக்கும்….
தெருவிளக்குகளிடையே இடைவெளி மிகவும் அதிகம்.
மேலும், சண்டிகாரின் ஒரு பகுதி மட்டுமே சுத்தமாக இருக்கும்.
மற்றொரு பகுதி, பழைய டில்லியைப் போல் தான் இருக்கும்.

எனவே சண்டிகார் இரண்டாவது இடத்திற்கு தகுதியானதல்ல
என்பது என் அபிப்பிராயம்…( நான் சொன்னால் வெங்கையா
நாயுடு கேட்கவா போகிறார்…!!! )

திருச்சிராப்பள்ளி –
பொதுவாகவே நம்மிடம் ஒரு குணம்….
நம்மைச் சேர்ந்த மனிதர்களின்,
நம் ஊர்களின் – மதிப்பும் சிறப்பும் –
மற்ற இடங்களுக்குப் போகும்போதும்,
மற்றவற்றுடன் ஒப்பிடும்போது தான் நமக்கு உரைக்கிறது.

அந்த பட்டியலில் உள்ள நிறைய
( இருபதிற்கும் மேற்பட்ட ) நகரங்களுக்கு
நான் போயிருக்கிறேன்…

அதில் பெரும்பாலானவற்றுடன் ஒப்பிட்டால் நம் தமிழக
நகரங்கள் சொர்க்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
திருச்சியை தவிர தமிழ் நாட்டில்,
கோவை – 18-வது இடத்தையும்,
மதுரை – 26-வது இடத்தையும்,
தருமமிகு சென்னை -37-வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

தர வரிசையில் முதல் 37-க்குள் நான்கு நகரங்களை
பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ் நாடு மட்டும் தான்…!
இது நிச்சயமாக நமக்கு பெருமை தரும் விஷயம் தான்.

அண்மையில் உலகில் அவசியம் பார்க்க வேண்டிய
ஊர்களில் மதுரை இடம் பெற்ற செய்தி வெளி வந்தது
நினைவிருக்கலாம்…!
( உலகின் 24வது சிறந்த சுற்றுலாத்தலம் –
தமிழ்நாடு – மதுரை….!!! –
( vimarisanam.wordpress.com dated
2016/01/18 )
இது அதற்கடுத்த பெருமையான விஷயம்.

திருச்சியை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்….
திருச்சியில் வெட்கப்பட வேண்டிய நிலையில் இன்னமும் கூட
உள்ள சில இடங்கள் உண்டு…..
நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளும்,
பொது கழிப்பிடம் இல்லாததால், தெரு ஒரத்திலேயே
மூத்திரம் கழிக்கும் அவலமும்,
அடைத்துக் கொண்டு வெளியில் வழிந்தோடும் சாக்கடைகளும் –
நகரத்தின் முக்கிய பகுதிகளான –

சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றி
அரை கிலோமீட்டர் வரையிலான இடமும்,

காந்தி மார்க்கெட்டைச் சுற்றிய அரை கி.மீ. தூரமும்,

உறையூர் பஸ் நிலையத்தை சுற்றிய ஒரு கி.மீ. தூரமும் –

திருச்சிராப்பள்ளியின் திருஷ்டிப் பரிகாரங்களாக
இப்போதும் இருக்கின்றன. திருச்சி மாநகராட்சி மிக அவசரமாக
இந்த இடங்களை சீர்படுத்த வேண்டும். இல்லையேல் –
அடுத்த தடவை ஆய்வுக்காக வரும் சோதனையாளர்கள் –
ஏற்கெனவே 3-வது சிறந்த இடத்துக்காக கொடுத்த கேடயத்தை
திரும்ப பறித்துக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்….!!!
மாநகராட்சியும் இதை உணர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அதற்காக, திருச்சி இந்த தேர்வுக்கு தகுதியானது அல்ல
என்று யாரும் நினைத்து விட வேண்டாம்…!
( பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் இதை விட
மோசமான நிலையில் உள்ளன என்றே எடுத்துக் கொள்ள
வேண்டும்…..!!!)

( எந்த ஊரு சென்றாலுமே –
அது நம்ம ஊரு போலாகுமா….. 🙂 🙂 😀 )

kallanai

srirangam

St-Lourdes-Church-Trichy

The_holy_Gumbaz_of_Hazrath_

trichy -rockfort

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to இது தமிழர்களுக்கு பெருமை, தமிழ்நாட்டிற்கு – பெருமை …!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  தமிழகத்து மையப்பகுதி என்ற சிறப்புடன் அனைத்து கட்சிகள் தலைவர்கள் பல திட்டங்கள் மூலம் நகருக்கு உதவியிருந்தாலும் குறுகியகால வாய்ப்பில் ரங்கராஜன் குமாரமங்கலம் நிறைவேற்றிய வசதிகள் இன்றைய சிறப்புக்கு வழிவகுத்தவை.

 2. CHANDRAA சொல்கிறார்:

  my parents would sometimes say vasishtar vayyal brahma rishi ……………..
  i am reminded of the above when kmji praises bjp ministers……..

  • thiruvengadam சொல்கிறார்:

   கா.மை அவர்கள் மோடியின் செயல்களில் சிறப்புடையவற்றை பலமுறை பாராட்டியுள்ளார். மற்றபடி சிலரின் எந்த நற்செயலும் அவர் கவனத்தை ஈர்க்காது. பிற ஒருவரின் எந்த தவறும் அவருடைய பதிவுகளில் இடம்பெறாது. அவர் கருத்துக்கள் மூலம் செய்திகள் பெற நமக்கு வாய்ப்பு. KM sir already informed this is his status that we have no choice.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப திருவேங்கடம்,

    மன்னிக்கவும்…. நீங்கள் விரும்பும் வண்ணமோ,
    உங்கள் style -லிலோ நான் எழுத ஆரம்பித்தால்,
    இந்த வலைத்தளத்தை நாம் இருவரும் மட்டும் தான்
    படித்துக் கொண்டிருப்போம்… 🙂

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரா,

   நல்ல மனிதர்கள்…
   நல்ல செயல்பாடு என்று என் மனதிற்கு தோன்றினால்,
   அவர்கள் எந்த கட்சி என்று நான் பார்ப்பதில்லை.
   மனதில் தோன்றுவதை எழுதி விடுகிறேன்.

   சில தவறுகள் என் கண்ணுக்குத் தெரியும்போதும்
   நான் விமரிசிப்பதில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.
   சட்டமன்ற தேர்தல்கள் முடியட்டும் – பிறகு சொல்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  At last Mr K M , you found some thing to laud in the govt – I still think you are biased against Mr Gadkari –Recently he took part in a programme Spotlight in RSTV where he spoke elaborately about the projects his ministry is undertaking all over India — His ministry scrapped toll collection in 62 plazas in 15 states for free flow of traffic -Mr Ravi Shankar Prasad Arun Jaitley and Sushma swaraj are going about their work –The PM is constantly reviewing the functioning of the ministries —
  Tamil Nadu has identifies 5 places in 5 districts for AIIMS –One of them will be chosen We may see an announcement about it in the budget —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   நல்லவர்கள். …,
   பாராட்டப்பட வேண்டிய செயல் –
   என்று என் மனதிற்கு தோன்றினால்,
   அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும்
   எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் பாராட்டி எழுதி விடுவேன்.
   (நான் முன்னதாக அவர்களை விமரிசனம் செய்திருந்தாலும் கூட )
   எந்த கட்சித்தலைமைக்கும்
   பதில் சொல்ல வேண்டிய அவசியத்தில் நான் இல்லை
   என்பதால் இது எனக்கு சாத்தியமாகிறது….!

   திரு.கட்காரி – நிச்சயம் ஒரு நல்ல செயல்வீரர் தான்.
   நான் கூட ஏற்கெனவே எழுதி இருப்பேன்….

   ஆனால், என் பயம் – அவரது செயல்பாடுகள்
   முடிந்த பிறகு,
   நாம் அதற்காக கொடுக்கப்போகும் விலை
   மிகவும் அதிகமாக இருக்குமோ என்பது தான்….!

   ஏன் – ஆ.ராஜாவுக்கு என்ன குறை ?
   அதி புத்திசாலி…. சிறந்த செயல்வீரர்..
   இந்தியா பூராவும் செல்-பேசி செலவை
   மிகவும் மலிவு ஆக்கினார் …..ஆனால்…… ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    You will have more good things to say about the NDA govt when the efforts taken during its first two years begin to show results –All the promises wont be met for sure but a system for corruption free governance at the centre will be put in place before 2019 —

 4. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I may not have traveled like you have had….. Having known Trichy very well and comparing it with my last work place(Cochin), I would like to say few things…… When we say Cochin(as it is commonly known), the present day city is actually Ernakulam featuring all commercial and administrative activities…… Cochin = old Kochi + Ernakulam…… As you know very well this is a place with 3 months of continuous rainfall and another 30days of intermittent rains 2 months after monsoon, I have never seen water logging and affecting people’s day-today activities(it is not alone attributed to landscape that water flows down)……

  Credit goes to people…… Compared to Tamil Nadu, people here have more traffic sense and traffic rules are followed/obeyed/respected…… Cops are not that corrupt comparatively…… City is cleaned regularly….. No littering….. What I am trying to say is, though corporation is taking steps to clean the city, people are also cooperative in maintaining that by way of not littering and following rules…… Garbage collectors come to each home once in two days to collect garbage….. In my three years at Cochin, other than festival days, this garbage collection had not taken any excuse…… At nights, we can we see shops keeping outside their shops garbage bags, which will be collected very early in the morning…… Nowhere garbage is dumped or thrown improperly…..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   நான் கொச்சின்-எர்ணாகுளத்திற்கு வந்திருக்கிறேன்.

   நீங்கள் சொல்வது போல்,
   மிகவும் சுத்தமான,
   அழகிய ஊர் தான்.

   அது நிச்சயம் நல்ல இடத்திற்கு வந்திருக்க வேண்டும்.
   ஏன் வரவில்லை – என்ன காரணம் என்று தெரியவில்லை.

   ஒரு வேளை, inspection பண்ண வந்த குழுவினருக்கு
   தரப்பட்ட தகவல்களில் (data ) எதாவது தவறு இருந்ததோ என்னவோ ..

   கொச்சின் நகரை பார்த்தவர்கள் யாரும்,
   நீங்கள் சொல்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Most of Kerala is neat –For the amount of rains it receives (you will never know when it will rain) water logging is minimal –Have we heard of floods due to rain in Kerala —

    • ராஜராஜன் சொல்கிறார்:

     Mr. LVISS ,

     கேரளா பூகோள ரீதியாகவே கிழக்கே மலைச்சரிவுகளும்,
     மேற்கே கடலும், இடையில் குறுகிய நிலப்பிரதேசமாகவும்
     அமைந்திருக்கிறது. நீங்கள் நிறுத்தி வைக்க முயன்றால் கூட,
     மழை நீர் நிற்காது; நேராக கடலுக்கே சென்று விடும்.
     கே.எம்.சார் கொஞ்சம் எழுதியவுடன் கிடைச்சது சான்ஸ் என்று
     ஒரேயடியாக கேரளாவை தூக்கி வைக்கிறீர்களே ?

 5. selvarajan சொல்கிறார்:

  திருச்சிராப்பள்ளி என்றவுடன் தாங்கள் பதிவிட்ட பல இடுக்கைகள் மனதில் வந்து அலைமோதின — அதில் ” எம் .ஜி.ஆரும் ராகு காலமும் நடுவில் சிக்கிய நானும் ” என்ற 3 – பகுதிகளும் — ” கருப்பு — வெள்ளை — பொக்கிஷங்கள் [ பகுதி 1 ] ” – ல் மலைக்கோட்டையின் பல கோணங்களும் — “ஒரு நல்ல அப்பா ஆக … ” — ” ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ” போன்ற பலவற்றில் — மிகவும் ஸ்பெஷலான — இடுக்கை : — ” “”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி
  Posted on ஓகஸ்ட் 27, 2010 by yatrigan — [
  About yatrigaதமிழ், இலக்கியம், சமூகம், அரசியல் பற்றிய் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். ] முன்பு மற்றவர்களையும் உங்கள் இடுக்கையின் ஊடே எழுத அனுமதித்த திட்டத்தினால் வந்தது … சுவாரஸ்யமான பழைய பகுதிகள் — திருச்சி — திருச்சி தான் …. !!! திரு எம்.ஜி.ஆர். அன்று கூறியது போல் ” தலைநகரை திருச்சிக்கு மாற்றியிருந்தால் ” எப்படி இருந்து இருக்கும் …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ரொம்பவும் பயமுருத்துகிறீர்கள் –

   எம்ஜிஆர் சொன்னதுபோல்,
   தலைநகரை திருச்சிக்கு மாற்றினால் –

   “திருச்சி நாசமாகி விடும் “….

   அழகிய காவிரியும்,
   புராதன கோயில்களும்,
   நல்ல கல்விக்கூடங்களும்,
   இன்னமும் மனிதாபிமானத்துடன் இருக்கும் மனிதர்களும்,
   சுற்றிலும் பச்சைப்பசேலென்று வயல்களும்,
   ( வயலூர், கம்பரசம்பேட்டை பக்கம் நடந்து போயிருக்கிறீர்களா …? )
   திருச்சி இப்படியே இருக்கட்டும் – விட்டு விடுங்களேன் …!!!

   பி.கு. வீட்டில் சொல்லி வைத்திருக்கிறேன்.
   எங்கே செத்துப்போனாலும், என்னை –
   காவிரிக்கரையில் கொளுத்துங்கள் என்று.
   என் சாம்பல் காவிரியில் கரைய வேண்டுமென்று விரும்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா …! ” எப்படி இருந்து இருக்கும் … ? ” கேட்டதே உங்களின் கருத்தை அறியத்தான் … இப்பவே பல பழைய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகின்றன — அன்றைய மாம்பழ சாலையில் விற்ற பழங்களுக்கும் இன்று ” கார்பைட் கல்லை ” போட்டு பழுக்க வைப்பதும் — அய்யர் மாந்தோப்பு பழங்கள் காணாமல் போனதும் வேதனையானது தானே … முக்கொம்பு — புளியஞ்சோலை போன்ற இடங்களும் — திருவானைக்காவல் மங்கள விலாஸ் ” நெய் தோசையும் ” கூட பேர் சொல்ல இருக்காது —இன்னும் ஓரளவு கிடைக்கின்ற சுத்தமான காற்றும் — காவிரியும் கூட கூவமாக மாறியிருக்கும் என்பதெல்லாம் தெரிந்து தான் கேட்டேனே தவிர — பயமுறுத்த கேட்கவில்லை… !!!

 6. R Subramanian சொல்கிறார்:

  Dear KM,
  You have said
  தர வரிசையில் முதல் 37-க்குள் நான்கு நகரங்களை
  பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ் நாடு மட்டும் தான்…!

  Maharashtra has 5 cities – Pimpri-Chinchwad, Greater Mumbai, Pune, Navi Mumbai and Thane within top 20 cities.
  Gujarat has 5 cities – Surat, Rajkot, Vadodara and Ahmedabad.

  R Subramanian

 7. R Subramanian சொல்கிறார்:

  Gujarat has 4 not 5

  R Subramanian

 8. R Subramanian சொல்கிறார்:

  One more change. Maharashtra has one more Nagpur. Total 6 cities from first 20.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஆர்.சுப்ரமணியன்,

   குறையை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுக்கு,
   காவிரிமைந்தன்

 9. இளங்கோ சொல்கிறார்:

  தமிழ்நாட்டின் பெருமையை மறுப்பதில் உங்களுக்கு
  ஏன் சுப்ரமணியன் அவ்வளவு அவசரம் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இளங்கோ,

   திருவாளர் காவிரிமைந்தனுக்கு தமிழ்நாட்டின் பெருமையை
   உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதில் – அவசரம்
   அதனால் தவறு நிகழ்ந்தது.

   திருவாளர் சுப்ரமணியனுக்கு, தமிழ்நாடு அந்த பெருமைக்கு
   உரியது அல்ல என்பதைச் சொல்ல வேண்டும் என்பதில் -அவசரம்.
   அதனால் தவறு நிகழ்ந்திருக்கிறது ….. 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா…. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் காசிக்கு யாத்திரை சென்றிருந்தபோது கண்ட காட்சிகள் தமிழ்நாடு சொர்க்கம் என எனக்கு உணர்த்தியது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.