அத்தனை தலைவர்களும் ஊமையாக இருப்பது ஏன்….?

girl children

உள்ளாட்சி அமைப்புகள் கட்சி சார்பற்று இயங்கக்கூடிய
காலம் கைகூடி வந்தால் தான் – உண்மையிலேயே
அதிகாரம் மக்கள் கையில் நேரடியாக போய்ச்சேரும்.

அரசியல் சார்பற்ற பொது மக்கள் நேரடியாக செயல்படும்போது
தான், உள்ளூர் மக்களுக்கான, தேவையான, நலம் சார்ந்த,
பயனுள்ள திட்டங்கள் செயலுக்கு வரும்.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம்
இடம் ஒதுக்கி சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்தே,
அரசியல் கட்சிகள் வேண்டா வெறுப்பாகவே இதில்
பங்கேற்றன.

பெரும்பாலான பதவிகளில், அரசியல்வாதிகள் வீட்டு பெண்களே
அதிகாரத்திற்கு வந்தனர். அவர்களின் பினாமி தகப்பனோ,
கணவனோ தான் உண்மையில் அதிகாரம் செலுத்தி வந்தனர்.

உண்மையிலேயே அரசியல் சார்பற்ற பெண்கள் உள்ளாட்சிகளில்
பதவிக்கு வருவது வரவேற்கத்தக்க ஒன்று. இன்றில்லா
விட்டாலும், நாளையாவது – அதாவது எதிர்காலத்திலாவது
இது நிச்சயம் இயல்புக்கு வரும். அந்த நாள் வரும்போது தான் –
கிராமங்களும், நகராட்சிகளும் – பயனுள்ள முறையில்
செயல்படத்துவங்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டம் இன்று
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் என்கிற
அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி
இன்று தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குரல் ஓட்டின் மூலம், எதிர்ப்பின்றி இந்த சட்டம் மன்றத்தில்
நிறைவேற்றப்பட்டாலும், இந்த சட்டத்தை வரவேற்று இதுவரை
ஒரு அரசியல் தலைவர் கூட கருத்து சொல்லவில்லை…. ஏன்…?

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு
உள்ளாட்சி அமைப்புகளிலும் சரி பாதி பங்கு கொடுப்பது
ஒரு முன்னேற்ற நடவடிக்கை தானே …?

பெண்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை –
முற்போக்கான கட்சிகள்,
முற்போக்கான தலைவர்கள் –
என்று நான் நம்புபவர்கள் கூட
இன்னமும் வரவேற்று கருத்து சொல்லாதது எனக்கு
ஏமாற்றமாக இருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அத்தனை தலைவர்களும் ஊமையாக இருப்பது ஏன்….?

 1. CHANDRAA சொல்கிறார்:

  Well let us remember that cho sir is against giving the due share to
  WOMEN………
  Probably all leaders might agree with cho sir
  Pl go through VIDURA NEEDHI ……
  Or CHANAKYAS sayings……ji

 2. LVISS சொல்கிறார்:

  Without waiting for legislation parties can encourage women to contest the elections for the local bodies —

 3. selvarajan சொல்கிறார்:

  பெண்ணினத்திற்கு பாடுபடுவதை போல பாவ்லா காட்டும் ” கருப்பு சட்டை — சிவப்பு சட்டைக்காரர்களும் ” — பீப் பாடலுக்கு வரிந்துகட்டி போராடிய பெண்ணுரிமை வாதிகளும் — பெண்களுக்கு அதிகபட்ச உரிமைகளை கொடுத்தவர்கள் தாங்கள்தான் என்று காதில் பூ சுத்தும் மஞ்சள் துண்டு பேர்வழிகளும் — முற்போக்கு சிந்தனாவாதிகள் என்று கூறிகொள்ளும் பிற்போக்காளர்களும் — நான் ” குடிப்பேன் — எது வேண்டுமானாலும் ” செய்வேன் என்று சம உரிமையை பற்றி ” நேருக்கு நேர் ” நிகழ்ச்சியில் பேசிய பெண்ணை பேட்டிகண்டு பத்திரிக்கையில் போட்டவர்களும் — விவாதங்கள் நடத்திய ஊடகங்களும் கூட — வாய் திறக்காமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை — ” ஏனென்றால் ஜெயலலிதா என்கிற பெண் கொண்டுவந்ததை பாராட்ட மனம் வரவில்லை ” — இந்த சட்டம் கடைசி சட்டமன்ற கூட்டத்தில் கொண்டு வர காரணம் — எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு என்று கொச்சைபடுத்தி தப்பித்து கொள்ள முயலுவதில் தான் மற்ற கட்சி தலைவர்கள் — முனைப்பாக செயலாற்றி ஜெயாவின் அரசுக்கு பெயர் போய்விட கூடாது என்று எண்ணி இனி அறிக்கைகள் விட்டு மக்களை குழப்பாமல் இருப்பார்களா … ? என்பது சந்தேகமே … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.