” உளறுவதில் எனக்கு மட்டும் பங்கு கிடையாதா என்ன ?” விஜய்காந்த் effect-ல் திரு.பொன்.ரா….!!!

புகைப்படத்தில், திரு.பொன்.ரா. அவர்களின் பின்புறத்தில், தாடி, தொப்பை சகிதமாக ஒரு பொம்மை நின்று கொண்டிருக்கிறதே - அது யாரின் உருவம் தெரியுமா....? அதன் பின்னணி தெரியுமா ...? suspense...!!!

புகைப்படத்தில், திரு.பொன்.ரா. அவர்களின் பின்புறத்தில்,
தாடி, தொப்பை சகிதமாக ஒரு பொம்மை நின்று
கொண்டிருக்கிறதே – அது யாரின் உருவம் தெரியுமா….?
அதன் பின்னணி தெரியுமா …? suspense…!!!

திரு.விஜய்காந்த் அவர்களின் effect – அவரோடு மட்டும்
நில்லாமல் அவரை நினைக்கும் அனைத்து
அரசியல்வாதிகளையும் உளற வைத்து விடுகிறது….!!!

முதலில் part 1 – ( நக்கீரன் செய்தி )

கடலில் மூழ்கும் கப்பலுக்கு
கேப்டன் செல்வாரா ?: பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், சிவகாசியில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் தயாரிப்போம் என்ற
கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

எந்தக் கட்சிக்கும் தனியே போட்டியிட விருப்பமில்லை.
பாரதீய ஜனதா கட்சியும் தமிழக தேர்தலில் கூட்டணி
அமைத்துத்தான் போட்டியிடும். விஜயகாந்த் நடத்தும் கட்சி
மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி
கடலில் மூழ்கும் கப்பலைப் போன்றது. இந்த கப்பலுக்கு
கேப்டன் (விஜயகாந்த்) செல்வாரா?.
என்றார்.

( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?
N=161043 )

———————————————

திரு.பொன்.ரா. கேட்டது மிகச்சரியே….
ஆனால் யாரைக் கேட்டிருக்க வேண்டும் ?

“மூழ்கும் கப்பல்” என்று சொல்வது திமுகவை தானே ?

மூழ்கும் கப்பலான திமுக வுடன், பாஜகவும், விஜய்காந்தும்
சேர்ந்து கூட்டணி வைக்கலாம் என்று யோசனை சொன்ன
பாஜக அறிஞர் சு.சுவாமி அவர்களிடம் அல்லவா இவர்
இதை கேட்டிருக்க வேண்டும்…?

————————-

அடுத்தது part-2 ( நக்கீரன் செய்தி )

அதிமுக – பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை :
பொன்.ராதாகிருஷ்ணன்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி
அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லை
மாவட்டம் தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
‘’வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும்’’என்றார்.

” அதிமுக-வுடன் கூட்டணி இருக்குமா “என்ற கேள்விக்கு
” தங்களுக்குள் விவாகரத்து நடக்கவில்லை “
என்று
பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?
N=161018

இவருக்கும் இதுவரை கல்யாணமாகவில்லை.
இவரது கட்சிக்கும் ( அதிமுகவுடன் ) கல்யாணம் ஆகவில்லை.
அப்படி இருக்கையில் “விவாகரத்து” எங்கிருந்து வரும் …?

கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலே
விவாகரத்து தான் ஆகவில்லையே
என்று யோசிக்கும் முதல் நபர் ….!!!

எல்லாம் விஜய்காந்த் effect …!
எங்கே விஜய்காந்த், திமுக பக்கம் போய் விடுவாரோ
என்கிற பயம் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது…!!!

இன்னமும் ஒரு மாதத்திற்கு விஜய்காந்த்
இப்படியே எந்த முடிவும் சொல்லாமல் இருந்தால் –
அதற்குள் யாரெல்லாம், என்னவெல்லாம்
ஆகப்போகிறார்களோ – ஆண்டவனே ….!!!

பின் குறிப்பு –

இன்று பதிப்பிக்க – வங்கிகள் தொடர்பாக இன்னொரு
இடுகை எழுதிக் கொண்டிருந்தேன். இடையில்,
இந்த செய்தியை பார்த்தேன்.

” இந்த செய்தி “ இன்று “இரவை” தாண்டினால் – ரசிக்காது…
அதனால் உடனடி பதிவு…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ” உளறுவதில் எனக்கு மட்டும் பங்கு கிடையாதா என்ன ?” விஜய்காந்த் effect-ல் திரு.பொன்.ரா….!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  Dr Swami does not care about the state bjp wing
  And the pon ra group out of fear does keep D r Swami ina distance
  out of fear
  As CHO SIR has pointed out that v kanth is
  INDISPENSABLE in tamil nadu politics even if he spits……………..i have used the exact words of Cho sir………Jeya ji is the only
  leader who could ignore vijaykanth iyyah…….. in the present scenario
  K m ji

 2. CHANDRAA சொல்கிறார்:

  K m ji another interesting challenge by mrs premalatha to jeya ji regarding
  the formation of aiadmk alliance
  only after dmdks announcement of allies……..
  I do find in Mrs premalatha a vibrant personality
  to addtress dmk as rowdy party
  All in arivalayam were bewildered
  by this statement km ji

 3. LVISS சொல்கிறார்:

  All this is happening because there is a perception , right or wrong, that Vijayakanth still commands a certain percentage of votes – -After the elections depending on the results his position in T Nadu politics will be strengthened or fully weakened –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.