இன்னமும் திரு.விஜய்காந்த்துக்காக காத்திருக்கப் போகிறார்களா ….?

vk-p.kanchi

நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில்
திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களும், திருவாளர்
விஜய்காந்த் அவர்களும் பேசியதும், நடந்து கொண்ட விதமும் –

தமிழக அரசியலில், அருவருக்கத்தக்க ஒரு கலாச்சாரத்தை
உண்டுபண்ணி, வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்..

தமிழகத்தின், பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்
யாரும் இதுவரை இது குறித்து எந்தவித கருத்துக்களையும்
கூறவில்லை.

“சுயமரியாதை” உள்ள எந்த அரசியல் தலைவர்களும் இனியும்
விஜய்காந்த் தங்கள் கூட்டணிக்கு வருவார் என்று பேசுவதோ,
சொல்வதோ, எதிர்பார்ப்பதோ – அவமானகரமானது.
அது அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இனி விஜய்காந்த்துடன் ஒரே மேடையில் ஏறும் எந்த
அரசியல் தலைவர்களும் அவமானத்தையே சந்திப்பார்கள்.
ஆறேழு சதவீத ஓட்டுக்காக, அவருடன் கூட்டு சேர நினைக்கும்
அரசியல் கட்சிகள் / தலைவர்கள் இறுதியில் சாக்கடை நீரில்
குளித்த உணர்வையே பெறுவார்கள்.

அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் – விஜயகாந்திடமிருந்து தாங்கள் விலகி இருக்கிறோம்
என்று தங்கள் நிலையை வெளிப்படையாக தெளிவுபடுத்துவது
அவர்களது மரியாதையை கூட்டும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to இன்னமும் திரு.விஜய்காந்த்துக்காக காத்திருக்கப் போகிறார்களா ….?

 1. kalakarthik சொல்கிறார்:

  ka.mai ji
  ஒரு மூத்த தலைவரும் இதையே கேட்கிறார்.இந்த பெண்ணும் இதையே சொல்கிறார்.எவ்வளவு தவறு.நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்டதாகவும் பலரின் சுயலாபத்திற்காக அவரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகவும் செய்தி உண்டு. ஒரு பொது கூட்டத்தில் அவரே சொல்லியிருப்பார்.எனக்கும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு தாயாக குடும்பத் தலைவியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது .நடக்கவில்லை.என்று சொல்லியிருக்கிறார்.அவரின் சுயசரிதையை குமுதத்தில் (அப்போது நான் பள்ளி மாணவி ) படித்த காலத்தில் இருந்தே எனக்கு அந்த வேதனை உண்டு. எது எப்படியிருந்தாலும் அவரின் செல்வி ,குழந்தையின்மை பற்றி பேசுவது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம் .இது பற்றி இன்னும் எவ்வளவோ பேசலாம்.பேசினால் எத்தனை பேரின் மானம் காற்றில் பறக்கும் என்பதால் பேச வேண்டாம்
  kalakarthik
  karthik amma

 2. avudaiappan சொல்கிறார்:

  500 koodi kodathaal kudani beram padiyavillai ennum

 3. selvarajan சொல்கிறார்:

  // எங்க கூட வருவது குறித்து கண்டிப்பாக விஜயகாந்த் பரிசீலிப்பார்.. வைகோ நம்பிக்கை
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-will-come-our-alliance-vaiko-247421.html … விஜயகாந்த்துடன் முதல் சுற்றுப் பேச்சு முடிந்து விட்டதாக தமிழிசை தகவல்!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-says-first-round-talks-with-dmdk-is-over-247420.html …. // இவர்களது இந்த அறிக்கையில் அதிக ” சுய மரியாதை ” சூடு – சொரணை எல்லாம் நிரம்பி வழிகிறது …… அடுத்து // வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-letter-his-party-members-247383.html … // என்ற செய்தியில் : அண்ணா கூறிய புடவை கதையில் ஆரம்பித்து — பத்திரிகா தர்மம் — பொய் வதந்திகள் — பழ மொழிகள் — கூட்டணி உருவாகாமல் இருக்க சதி —பிளவு ஏற்படுத்த முயற்சி போன்றவற்றை அடுக்கி கலைஞர் ஒரு கடிதம் ” மிக்க சுய மரியாதையுடன் … ? ” எழுதி இருப்பதும் இன்றைய ” தமாஷ்கள் ” ….!!! இவர்களுக்கு எல்லாம் சுய மரியாதை இருக்கோ … இல்லையோ— ஜெயலலிதாவின் மீது ஒரு ” பயம் ” இருக்கிறது தானே … ?

 4. ஒரு மானமுள்ள தமிழன் சொல்கிறார்:

  அய்யா,

  ” த்தூ ” என்று விஜய்காந்த் துப்பப்போகிற 6 அல்லது 7 சதவீத ஓட்டுக்கள்
  என்கிற எச்சிலையை எதிர்பார்த்து,
  ஏக்கத்துடன் காத்திருக்கும் “நாய்கள்” அவரது கூட்டணிக்காக ஏங்குகின்றன.
  அந்த எச்சில் இலையை
  போடாமலே தானே வைத்துக் கொண்டாலோ அல்லது
  இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு போட்டு விட்டாலோ அதன் பின்னர் இந்த
  இதர நாய்கள் அவரை எப்படி
  கடித்துக் குதறப்போகின்றன என்பதையும் காணத்தான்
  போகிறது இந்த தமிழகம்.
  இதில் வெற்றியா தோல்வியா என்று கவலைப்படாமல் 234 இடங்களிலும் வேட்பாளர்களை துணிந்து நிறுத்தி
  தன்னந்தனியே தெரிகிறான் ஒரு சுயமரியாதையுள்ள தமிழன்.
  ஆதரிக்கிறோமோ இல்லையோ அவனது துணிச்சலையும்,
  தன்னம்பிக்கையையும் நீங்கள் நிச்சயம் பாராட்டி எழுதுவீர்கள்
  என்று நம்புகிறேன். நன்றி.

 5. Sekaran சொல்கிறார்:

  Courtesy:Bharathiraja
  திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் – கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி,
  திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையும் – இளங்கோவன், குஷ்பு
  மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணையும் – மநகூ தலைவர்கள்.
  பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் – பாஜக தலைவர்கள்.
  இவை அனைதையும் பார்த்துவிட்டு விஜயகாந்த் மச்சான் சுதிஷ் இவனுங்க மூஞ்சில காரித்துப்பி செருப்பால அடிச்ச மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கான்.
  அதை முதல் கமெண்டில் பார்க்கவும். இதை பார்த்தும் உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சொரனை வரப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.
  நீங்களாம் எதுக்கு இத்தனை வருசமா கட்சி நடத்துரீங்க. பேசாம கலைச்சிட்டு போய்டுங்க. இதை எல்லாம் பார்த்தும் உங்க கட்சில தொண்டர்களா இருக்கானுங்க பாரு

  Picture:
  https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtl1/v/t1.0-9/12670856_958749640829540_8073808879640697501_n.jpg?oh=3c27d68c33dbca053506013414c2cd73&oe=5727BD07&__gda__=1465172410_261ccfc1e37ee3c37fc9635919df4b4c

 6. CHANDRAA சொல்கிறார்:

  Whatever be their intentions calciulations motives PMKS stand on
  contesting lonely in this election is certainly to be appreciated
  Vijaykanth alone cannot be blamed in this situation
  elangovans rahuls sudden preference for dmk
  and many recent happenings has made
  vijaykanths group feel that all these parties
  who opt for his alliance are pucca hypocretes………..WHO can deny prema:lathas statement that aiadmk has no guts to announce its candidates without knowing DMDKS STAND IN THIS ELECTION……

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப சந்திரா,

   தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அவரவர் தங்கள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கத்தான் செய்வார்கள். அறிவித்துத்தான் ஆகவேண்டும். இது கூட்டாட்சித் தத்துவத்தின் ஒரு கட்டாயமான நடைமுறை. இதைச் செய்வதற்கு கட்ஸ் என்கிற சப்ஜெக்டே தேவையில்லை. நேரம் வரும்போது எல்லாக்கட்சியினரும் செய்வதுதான். செய்துதான் ஆகவேண்டும்.

   அது காங்கிரசோ, பாஜகவோ, திமுகவோ, தேமுதிகவோ பாமகவோ, நாதவோ மநகூவோ அல்லது அதிமுகவோ ?

   அதிமுகவுக்கு கட்ஸ் இருக்கா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல பதிவு.

   அரசியல்வியாதிகளின் பேச்சு , நாகரிகம் இதைப்பற்றியது.

   ஆஙகிலேயர்களிடமிருந்து சுதந்திரமடைந்தும் தமிழர்களை என்னவிதமாக யாரால் அடிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய பதிவு.

   யோசிக்கவேமாட்டாத தமிழனைப் பற்றிய ஆதங்கம் என்பதை இங்கு பதிவுசெய்ய விரும்புறேன்.

 7. LVISS சொல்கிறார்:

  It is difficult to understand parties lining up to have alliance with his party –As one can see he has no vision for the future of TNadu –Now he says he would be the king and not the king maker — It implies that whichever party allies with his should accept him as CM -This election will conclusively give an indication of his vote bank – -It is a do or die election for his party —

 8. drkgp சொல்கிறார்:

  6 or 7 percent ?

  No, it is much lower now.

  It is a disgrace on the so called veterans in politics to stoop so low to
  placate a family which has no policy whatsoever except to extract
  maximum monetary benefit from the gullible during election times.

  Shame on the veterans, not on the family.

 9. today.and.me சொல்கிறார்:

  காமைஜி

  ரொம்ப டென்சனாகாதீங்க..
  இந்த வீடியோவப் பாருங்க ப்ளீஸ்.
  ————–
  இங்க வந்திருக்கற அனைவருக்கும் சரி
  தொலைக்காட்சி மூலம் லைவ் டெலிகாஸ்ட்ட பார்த்திருக்கிற அத்தனை மக்களுக்கும் நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள்

  லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சிகளுக்கு
  முற்றுப்புள்ளி வைப்போம்
  – பிரேமலதா
  ———————

  நாலுவரி எழுதிவைத்து தன் (குடும்ப) கட்சிக்கு மீட்டிங் போடக்கூட முடியாத இவர்கள்தான் தமிழகத்தை ஆள ஆசைப்படுகிறார்கள்.

  வௌங்கிடும்.

 10. இளைய பாரதி சொல்கிறார்:

  மேன்மை மிகு தமிழகத் தலைவர்கள்

  மு.க.
  ஸ்டாலின்,
  ஈவிகேஎஸ் இளங்கோவன்,
  பொன்.ரா.
  தமிழிசை அக்கா,
  வைகோ,
  திருமாவளவன் –
  பட்டியல் இன்னும் முடியவில்லை.
  டாக்டர் ராம்தாஸ், அதிமுக,, மற்றும், நாம் தமிழர் கட்சி தவிர
  தமிழக கட்சிகள் அனைத்துமே இந்த பட்டியலில்
  வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.,

  ஆகிய அத்தனை பேரும் விஜய்காந்த் வாந்தியெடுத்தால், நாங்கள்
  ஏந்திக் கொள்ளத்தயார் என்று நீட்டிய கையோடு
  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
  சொரணையற்ற, தன்னம்பிக்கையற்ற இந்த தலைவர்களை
  இதுவரை ஆதரித்து வந்த இப்போது கொஞ்சம் அவசியம் தொண்டர்கள்
  யோசிக்க வேண்டும். தலைவர்களை பின்பற்றி, தாங்களும் விஜயகாந்தின் வாந்தியை அள்ள வேண்டுமா
  அல்லது வேறு வழியை பார்த்துக் கொண்டு போகலாமா
  என்பது குறித்து…..

  சீச்சீ – தலைவர்களா இவர்கள் ?
  நாய் கூட பிழைக்காது இந்த பிழைப்பு.

  இளைய பாரதி

 11. today.and.me சொல்கிறார்:

  காமைஜி

  ரொம்ப டென்சனாகாதீங்க..
  இந்த வீடியோவப் பாருங்க ப்ளீஸ்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   யாம் பெறும் இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதால்,
   இந்த வீடியோ க்ளிப்பிங்கை, அதற்கு உரிய மரியாதை
   கொடுத்து தகுந்த இடத்தில் அமர்த்தி
   இருக்கிறேன். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. vignaani சொல்கிறார்:

  இளைய மருத்துவர் இவ்வளவு confidenceஉடன் பேட்டி கொடுப்பதை இப்போது தான் பார்க்கிறேன். இதற்காகவும்
  காப்டன் பின்பு துண்டுடன் ஓடாததற்குமே ஐந்து விழுக்காடு வாக்கு அதிகம் வரவேண்டும், சர்வே எதாவது செய்து அவர்கள் நிலை பலமாக இருப்பதாக கண்டுபிடித்து விட்டார்களா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரமௌலி வெங்கடசுப்ரமணியன்,
   நண்பர் விஞ்ஞானி –

   ” கூட்டணிப் பிச்சை போடுவார் யாராவது உண்டா ?” என்று
   வெட்கம் இல்லாமல் அலையும் கூவி அலையும்
   தமிழக அரசியல்வாதிகளிடையே –

   தனித்து நிற்போம் – என்று துணிச்சலுடனும்,
   தன்மானத்துடனும் நிற்கும் –

   பாட்டாளி மக்கள் கட்சியையும் – அதன் தலைமையையும்
   வியந்து பாராட்டவே தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. CHANDRAA சொல்கிறார்:

  Well kartic amma
  I understand your feelings
  Are you aware that when criticisms personal also were raised in ASSEMBLY there were occasions when JEYA JI burst into laughter
  Politicxal observers felt that the present heal:th minister was rewarded MINISTERS POST for his PROVACATIVE REMARKS QUERIES
  against the opposition leaders…….
  JEYA JI never tried to interfere also…………when aiadmk members had made many personal references against karuna ji also
  I do not welcome or support the speech of premalatha or vijaykanth…….
  But the standard of politics had reached the ROCK BOTTOM LEVEL…………….
  It is gratifying to note that leaders like PON RAA ELA GANESAN MUTHARASAN P C ……….maintain dignity in their criticisms

 14. kalakarthik சொல்கிறார்:

  chandra,
  who ever it is ,i strongly condemn such mean,indecent ,barbaric attacks .Def at that time i would have raised my voice but i might not have had net knowledge or (as usual i might have been with Karthik’s thoughts ,totally immune to the whole world.)Now too I write as the voice Karthik. I would imagine if karthik is alive how would he have reacted and thus comes my writing.
  again i assure you that whoever it is i strongly condemn barbaric attacks.
  and my thanks for having reacted to my comment.
  kalakarthik
  kathik amma

 15. செல்வதுரை சொல்கிறார்:

  “பாட்டாளி மக்கள் கட்சியையும் – அதன் தலைமையையும்
  வியந்து பாராட்டவே தோன்றுகிறது.”

  இறுதிவரை இந்த நிலைப்பாடு இருக்குமா?????

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   யார் கண்டது …?

   நாடகமே உலகம் –
   நாளை நடப்பதை யார் அறிவார்….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.