தண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….!!!

.

.

சட்டசபை மொத்தம் 918 மணி நேரம் 31 நிமிடங்கள்
(கடந்த 5 ஆண்டுகளில்) நடந்துள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளிலும்
ஒரு கேள்வி கூட கேட்காத முக்கியமான நபர்கள் –
திருவாளர்கள் கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்,
துரைமுருகன், விஜய்காந்த் ஆகியோர்…..

kk plus stalin-2

durai

v.kanth

கடமையை பற்றி கவலைப்படாதே –
பலனை மட்டும் அனுபவிக்கத் தவறாதே …..

பொதுவாக இது நம் எல்லாருக்கும் பிடித்த பாலிசி தானே …!

நீங்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில்
எங்காவது வேலை செய்யாத
நாட்களுக்கு சம்பளம் கொடுப்பார்களா …?

எனவே சட்டுபுட்டென்று விஜய்காந்த் ஆதரிக்கும்
கூட்டணியில் ( அது எதாக இருந்தால் நமக்கென்ன ? )
சேர்ந்து சட்டசபைக்கு போகும் வழியை பார்ப்போமா…?

போனால் – அப்படி என்ன பெரிய்ய்ய்ய்ய சம்பளம்….
படிகள்………கிடைத்து விடும் என்று கேட்கிறீர்களா …?

வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையில்
ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் காலங்களில்
பெறுவது ….

மாதந்தோறும் சம்பளம் ரூ.8,000,
ஈட்டுப் படி ரூ.7,000,
தொலைபேசிப் படி ரூ.5,000,
தொகுதிப் படி ரூ.10,000,
அஞ்சல் படி ரூ.2,500,
தொகுப்புப் படி ரூ.2,500,
வாகனப் படிரூ.20,000

ஆக மொத்தம் ரூ.55,000 தரப்படுகிறது.

சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டால்,
நாளொன்றுக்கு ரூ.500 தினப்படி,
ரயிலில் 2 டயர் ஏஸி பெட்டியில்
பயணிக்க ஆண்டுக்கு ரூ.20,000,
அரசு பஸ்களில் ஒருவருடன் விலையில்லா பயணம்,
ரூ.250 மாத வாடகையில் சட்டமன்ற விடுதியில் அறை,
அரசு மருத்துவமனைகளில் குடும்பத்தினருக்குக்
கட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை, முக்கியமான
அறுவைச்சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரசு லெட்டர் பேடுகள், கவர்கள் என ஸ்டேஷனரி
பொருட்கள், விடுதியில் 24 மணிநேர மருந்தகம்,
ஏஸி ஜிம், சிறுவர் பூங்கா,
இறகுப் பந்து விளையாட்டுத் திடல், கார் பாஸ்கள்,
மரணமடைந்தால் எம்.எல்.ஏ குடும்பத்துக்கு
இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி,
குடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம்,

சரி -இவை உறுப்பினராக இருக்கும்போது கிடைப்பவை.
ஐந்து ஆண்டுகள் முடிந்து பதவி போய் விட்டால்
என்ன கிடைக்கப்போகிறது – ?

கவலையே பட வேண்டாம்…

ஐந்து ஆண்டு சர்வீசுக்கு…..(?)
ஆயுட்காலம் முழுவதும் அவர்களுக்கு கிடைக்கும்
பென்ஷன்…. படிகள் ….கீழே….!!!

முன்னாள் உறுப்பினருக்கு
மாத ஓய்வூதியம் – ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு நிதியாண்டும்
மருத்துவப் படியாக ரூ.12 ஆயிரம்,
தமிழகம் முழுவதும் ஒரு துணைவருடன் எங்கு வேண்டுமானாலும்
பேருந்தில் பயணம் செய்யும் சலுகை.

அ ம் பு டு தே ன்…………

– விஜய்காந்த் தயவில் எப்படியாவது
எம்.எல்.ஏ. ஆகிவிடலாமா என்று
இப்போது தோன்றுகிறதா… ? ஏற்கெனவே ஏகப்பட்ட தலைகள்
அவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன
Anyway – All the Best …:-) 🙂

பின் குறிப்பு –

இந்த இடுகையை வெளியிட்ட பிறகு,
நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களிடமிருந்து ஒரு
வீடியோ க்ளிப்பிங்க் வந்திருக்கிறது.
உண்மையை அற்புதமான நகைச்சுவையுடன்
டாக்டர் அன்புமணி விவரிக்கும் காட்சியை நண்பர்கள்
அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதால்,
அதனை இடுகையின் இந்த பகுதியிலேயே
பதிவு செய்கிறேன்……
நன்றி நண்பர் டுடேஅண்ட்மீ …!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to தண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….!!!

 1. இளைய பாரதி சொல்கிறார்:

  அய்யா,

  சம்பந்தப்பட்டவர்கள் நாந்து கொள்ளலாம்.
  ஆனால் சொரணை இருந்தால் தானே ?
  உங்கள் புகைப்பட தேர்வு அபாரம்.

  இளைய பாரதி

 2. இசக்கிமுத்து சொல்கிறார்:

  உங்கள் கணக்குப்படி 918.31 மணிநேரம்
  அதாவது ஒரு நாளைக்கு சாதாரணமாக பணி நேரம் 5 மணி என எடுத்துக் கொண்டால் ஐந்து வருடத்திற்கும் சேர்த்து 183.66 நாட்கள்
  அதாவது வருடத்திற்கு 36.7324 நாட்கள்,
  ஒரு மாதத்திற்கு 1.22 நாட்கள் வேலை செய்தால் மேற்படி அனைத்து பலனும் கூடவே ஓய்வூதியம் வேறே தமிழ்நாட்டில் உள்ள எல்லா எம்எல்ஏக்கு இது பொருந்தும். வருடத்திற்கு 210 நாட்கள் வேலை செய்யும் (கட்டாயம்) ஆசிரியர்களுக்கு மட்டும் பென்சன் கிடையாது. அவர்கள் சம்பள கமிசன் அமைக்க வேண்டி போராடினால் சம்பளத்தை கட் பண்னுவார்கள். அதனால் தான் எல்லோரும் அரசியலுக்கு போக விரும்புகிறார்கள்.

  மேலும் ஒரு வேண்டுகோள் இதேபோல போன சட்டமன்ற நிகழ்வையும் ஒரு கணக்கு போட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு தெளிவு பிறக்கும்

 3. M.Syed சொல்கிறார்:

  அம்மா ஆட்சியில் ஐய்யா சட்டசபைக்கு வரவில்லை என பட்டியலிடும் தாங்கள் ஐய்யா ஆட்சியில் அம்மா சட்டசபைக்கு எத்தனை நாட்கள் வந்தார்கள் என்ன கேள்விகள் கேட்டார்கள் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்று புள்ளிவிபரம் போட்டால் நல்லாஇருக்கும் பதிவு வருமா ?? பார்ப்போம் !!!!

  M. செய்யது
  Dubai

  • ThiyagaRajan சொல்கிறார்:

   I don’t think so, because here last few years no any news against admk. may be when they are not ruling govt Mr Kaveri maithan highlight their mistakes please wait, (I hope Mr kaverimaithan don’t mistaken me)

 4. இளைய பாரதி சொல்கிறார்:

  M. செய்யது
  Dubai,

  அய்யா செய்யது அவர்களே – செய்வன திருந்தச் செய் என்பார்களே
  பெரியோர்கள். “அய்யா” வுக்கு ” அம்மா” கணக்கு சரியாகிப் போனது.
  மு.க.இஸ்டாலின், தொரைமுருகன், விசயகாந்த்தூ இவர்களுக்கெல்லாம்
  இணையாக யாரைப் போடலாம் ?

  இளைய பாரதி

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  என்ன எழுதினாலும் இந்த அரசியல் சமூகம் மாற நீண்ட நாட்களாகும்.
  1. விஜயகாந்த் வரவில்லை என்றால் நாங்கள் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நிற்போம்.
  2. சு.சாமி,ஹச். ராஜா…இந்துக்களை ஆதரிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. (தினத்தந்தி) (மக்கள் சமுதாயத்துக்கு பயன்தராத ஒரு ஒளி-ஒலிதகடு வெளியிடு)
  3. ஒரு பெண் மற்றொரு பெண்ணை அநாகரிகமாக பேசியதை கண்டு கொள்ளாமல் இன்னும் கூட்டனிக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
  http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-is-much-confused-now-247477.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra
  ஐயோ ஐயோ ..

 6. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  yarukkum vetkamillai

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I want to die soon Mr.KM

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   என்ன வயதிருக்கும் உங்களுக்கு….?
   நிச்சயம் என்னை விட அதிகமாக இருக்காது என்றே
   நம்புகிறேன்.

   நானே – “இன்றில்லா விட்டாலும் – நாளையாவது மாறும் ”
   என்று நம்பிக்கையுடன் இருக்கையில், உங்களுக்கென்ன அவசரம்…?

   நீண்ட நாட்கள் வாழ்ந்து,
   தமிழக அரசியல் மாறுவதைக் கண்டு ஆனந்தப்பட –

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன் ஜி,

   ம்க்கும்…..
   எலெக்ஷன் வரும்முன்னதாக நடக்கும் கூத்துக்களுக்கே
   நீங்கள் இப்படி ஆகிவிட்டால் எப்படி? 🙂

   எலெக்ஷன் தேதி அறிவிக்கவேண்டும்.

   வேட்பாளர்கள் அறிவிக்கப்படவேண்டும்.

   கூட்டணிகள் அமைக்கப்படவேண்டும்.

   எந்த வேட்பாளரையும் வேறு கட்சிக்காரர்கள் கடத்திக்கொண்டோ அல்லது தூக்கிவிடாமலோ இருக்கவேண்டும்.

   எலெக்ஷன் ஒழுங்காகவும் நேர்மையாகவும் நடக்கவேண்டும்.

   அப்புறம் ரிசல்ட் அறிவிக்கவேண்டும்

   அதற்கப்புறம் வேட்டுசத்தம் கேட்கவேண்டும்.

   அதிலே யாராவது சுயேச்சை அல்லது கிட்டக்கிட்ட வெற்றி என்கிற நிலையில் மற்ற கட்சித்தலைவர்களின் கையில் மாட்டிவிடாமல் சில நாட்களாவது தலைமறைவாக இருக்கவேண்டும்.

   அத்தனைக்கும்பிறகு ஜெயித்தவர்கள் ஆட்சியமைக்கவேண்டும்.

   அப்புறமும்ஒருமாசத்துக்கு பின்புதானே எம்மெல்லே சம்பளம் வரும்…

   இத்தனை டும்டும்டும்-களைக் கேட்காமல்
   இப்படியெல்லாம் அவசரமாக ஆசைப்படக்கூடாது.
   யாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம்.

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I ask you to pl. tell what are the privileages of the leader of opposition party in TN..

  • thiruvengadam சொல்கிறார்:

   More are less equal to a Cabinet minister . I remember Vkanth already surrendered the Govt car. Reg financial acceptances have to be confirmed.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலகிருஷ்ணன்,

   இப்போதைக்கு என்னிடம் இருக்கும் உறுதி
   செய்யப்பட்ட தகவல்கள் –

   சட்டமன்ற துணை சபாநாயகர், தலைமை கொரடா
   ஆகியோருக்கு இணையான சம்பளமும், அந்தஸ்தும்,
   சலுகைகளும் – எதிர்க்கட்சித் தலைவருக்கு அளிக்கப்படுகிறது.

   மற்ற விவரங்கள் உறுதியாக கிடைத்தவுடன் தருகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //எனவே சட்டுபுட்டென்று விஜய்காந்த் ஆதரிக்கும் கூட்டணியில் ( அது எதாக இருந்தால் நமக்கென்ன ? ) சேர்ந்து சட்டசபைக்கு போகும் வழியை பார்ப்போமா…?//

  ஐயா இப்படி சட்டென்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அம்மா செய்ததை போட்டு உடைத்துவிட்டீர்களே!
  234 சட்ட சபை உறுப்பினர்கள் (இந்த 4 பேர்களை தவிர்த்து மற்றவர்கள்) புடுங்கிய ஆணிகள் என்னென்ன? புடுங்கிய அனைத்தும் தேவையில்லாத ஆணிகள்தானே!

  கடந்த பதிவில் அம்மா 50% பெண்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகளில்….) என்று சத்த சபை, இல்லையில்லை… அம்மாவின் ஜால்ரா சபையில் சட்டம் இயற்றினார்களே, முதலில் தங்களின் கட்சியில் இந்த 33%-ஐ அமல்படுத்தியிருக்கலாமே, ஒரு முன்மாதிரியாக.
  அதே மாதிரி ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் சத்தசபையில் இயற்றிய சட்டம் என்ன ஆச்சு? http://www.thehindu.com/news/national/tamil-nadu/all-7-convicts-in-rajiv-case-will-be-released-says-jayalalithaa/article5705217.ece

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அஜீஸ்,

   நீங்கள் எழுதியிருப்பதை மீண்டும் ஒருமுறை
   படித்துப் பாருங்கள்.
   இந்த இடுகைக்கு ஏற்றது தானா உங்கள் பின்னூட்டம் ..?

   உங்கள் கோபம் எதன் மீது ? யார் மீது ?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. selvarajan சொல்கிறார்:

  அய்யா… ! தங்களின் இடுக்கை ஒன்று // இந்த தேர்தலில் ……
  Posted on ஏப்ரல் 11, 2011 by vimarisanam – kavirimainthan // —- சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பதிவிட்டது …! அப்போதைய நிலைக்கும் — இப்போதைய நிலைக்கும் — [ தி.மு.க. + காங்கிரஸ் கூட்டாளிகள் மீண்டும் ] இனி கூட்டாளிகளாக ஆக போகிற கூட்டணி மாறுபாடு தவிர்த்து — உள்ள நிலவரம் …. ? தங்களுக்கு நேரமிருந்தால் விளக்கவும் … !!!

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  தேர்தலுக்கு இன்னும் குறைந்த பட்சம் இரண்டரை மாதங்கள்
  இருக்கின்றன. இனி நிறைய கூட்டணிகள் உருவாக இருக்கின்றன..
  நிறைய காட்சிகள் மாறவிருக்கின்றன.

  எனவே இன்னும் கொஞ்சம் காத்திருப்போம்…
  பார்த்திருப்போம்….
  அலசிக்கொண்டே இருப்போம்.
  முடிவுக்கு வர இன்னும் கொஞ்ச காலம் போகலாம்…!
  சரி தானே….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.